வசந்தபாலனின் துணை இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் உருவாகும் ஹாரர் படம்

வசந்தபாலனின் துணை இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் உருவாகும் ஹாரர் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விண்டோ பாய்ஸ் எனும் நிறுவனம் சார்பாக R.சோமசுந்தரம் எனும் அறிமுக தயாரிப்பாளர் முதன்முறையாக ஒரு வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாகிக் கொண்டிருக்கும் சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கலந்த ஹாரர் படமொன்றை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கிய அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில் போன்ற சிறந்த படங்களிலும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய், காஷ்மோரா போன்ற படங்களிலும் உதவி மற்றும் துணை இயக்குநராக பணியாற்றிய ரமேஷ் பழனிவேல் என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.

பிரபுதேவா நடித்த குலேபகாவலி மற்றும் ஜோதிகா நடித்த ஜாக்பாட் படங்களின் ஒளிப்பதிவாளரான R.S.ஆனந்தகுமார் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணீயாற்றிக் கொண்டிருக்கிறார்
விஜய் ராஜன் கலை இயக்குநராகவும் M.ரவிக்குமார் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்ணனி கோர்ப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

எல்லா காலகட்டங்களிலும் ஹாரர்,சஸ்பென்ஸ்,திரில்லர் வகை திரைப்படங்கள் சரியாக சொல்கிறபட்சத்தில் பெரிதும் வெற்றியடந்துள்ளன.

பீட்ஸா,ராட்சஸன் போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம்.அப்படியான ஒரு புதிய முயற்சியாக சஸ்பென்ஸ் திரில்லர் திகில் என எல்லாம் கலந்து சற்றும் சுவாரஸ்யம் குறையாத வகையில் உணர்வுப்பூர்வமான படமாக இப்படம் உருவாகியுள்ளது.

ராதிகா அவர்களின் ராடன் நிறுவனம் தயாரித்து சரத்குமார் பிரகாஷ்ராஜ் சேரன் நடிப்பில் வெளிவந்த சென்னையில் ஒருநாள் படத்தில் பார்வதி மேனனுக்கு ஜோடியாக நடித்த சச்சின் இப்படத்தின் நாயகனாக நடித்துள்ளார்.

G.V.பிரகாஷ்குமார் நடிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவர தயாராக இருக்கும் ஜெயில் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள அபர்நதி கதைநாயகியாக நடித்துள்ளார்.

இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிளை தொடரின் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கும்கி அஸ்வின் மற்றும் சுருதி பெரியசாமி எனும் அறிமுக நடிகையும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பரபரப்பான திரைக்கதை வித்தியாசமான காட்சியமைப்புகளோடு உருவாகிக் கொண்டிருக்கும் இப்படம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக திரையரங்குகளில் விரைவில் வெளிவருகிறது.

Director Vasantha Balan associate Ramesh Pazhanivel new film launched

திருமணமானபின் 40 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் சாயிஷா

திருமணமானபின் 40 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் சாயிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

balakrishnaகஜினிகாந்த் படத்தில் நடித்தபோது ஆர்யாவுடன் காதல் கொண்டார் சாயிஷா சைகல்.

இதனையடுத்து இருவரும் பெற்றோர் சம்மதம் பெற்று திருமணம் செய்துக் கொண்டனர்.

தற்போது ஆர்யாவுக்கு ஜோடியாக டெடி என்ற படத்திலும் நடித்து வருகிறார் சாயிஷா.

அப்போதே ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் கிட்டத்தட்ட 15 வயது வித்தியாசம் என்ற பேச்சும் ரசிகர்களிடையே எழுந்தது.

தற்போது தன்னைவிட 40 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் சாயிஷா.

போயபடி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

61 வயதாகும் பாலகிருஷ்ணாவுக்கு 23 வயதான சாயிஷா ஜோடியா? என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Sayyeshaa to play female lead in Telugu actor Bala Krishna’s next film

ரகிட ரகிட பாடலை அடுத்து அனிருத் குரலுக்கு தனுஷின் புஜ்ஜி ஆட்டம்

ரகிட ரகிட பாடலை அடுத்து அனிருத் குரலுக்கு தனுஷின் புஜ்ஜி ஆட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bujji song jagame thanthiramதனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’.

ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் தனுஷ் உடன் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரித்துள்ளார்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்ற ‘ரகிட ரகிட’ பாடல் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ளது.

இந்நிலையில், மற்றொரு பாடலான புஜ்ஜி என்ற பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளனர்.

அனிருத் பாடியுள்ள இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார்.

இப்பாடலில் மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் நடன அசைவுகளுக்கு தனுஷ் ஆடுவது போல உள்ளது-

Bujji song video from Jagame Thanthiram is out now

எம்ஜிஆர்-ரஜினி பாணியில் விஜய் ஆண்டனி படத்துக்கு தலைப்பு

எம்ஜிஆர்-ரஜினி பாணியில் விஜய் ஆண்டனி படத்துக்கு தலைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.

இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்திற்கு “கோடியில் ஒருவன்” என பெயர் வைத்துள்ளனர்.

அரசியல் திரில்லராக இந்த படத்தை உருவாக்கி வருகின்றனர்.

நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க டிடி ராஜா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

எம்ஜிஆர் நடிப்பில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்ற படம் 1965ல் வெளியானது.

ரஜினிகாந்த் நடிப்பில் ‘லட்சத்தில் ஒருவன்’ என்ற படம் 1987ல் வெளியானது.

தற்போது ‘கோடியில் ஒருவன்’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Antony’s new film is titled Kodiyil Oruvan

kodiyil oruvan

சூர்யாவுக்கு தேசிய விருது கொடுக்கலேன்னா போராட்டம்..; சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர் அறிவிப்பு

சூர்யாவுக்கு தேசிய விருது கொடுக்கலேன்னா போராட்டம்..; சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KJR Rajeshசுதா கொங்கரா தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் நேற்று நேரடியாக ஆன்லைனில் அதிகாரப்பூர்வமாக வெளியானது.

இப்படத்தை பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் பட தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் அவர்களும் ‘சூரரைப் போற்று’ படத்தைப் பாராட்டியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: “சூரரைப் போற்று எல்லாத் துறைகளிலும் உயர பறந்து கொண்டிருக்கிறது. ஒரு கோவக்கார இளைஞன், ஆர்வமிகு இளம் தொழில் அதிபர், அன்பான கணவன் என அனைத்துக் காட்சிகளிலும் சூர்யா சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். அபர்ணா பாலமுரளி நடிப்பு அபாரமாக உள்ளது. தான் தோன்றும் ஒவ்வொரும் காட்சியிலும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை படம் முழுவதும் அற்புதம். ஊர்வசியின் நடிப்பு அற்புதம்.

இது சூரரைப் போற்று அல்ல, சூர்யாவின் போற்று. அவர் மாறாவாகவே வாழ்ந்துள்ளார். இந்த ஆண்டுக்கான தேசிய விருது உங்களுக்காக காத்திருக்கிறது. இல்லையெனில், நான் அதற்காகப் போராடுவேன்.

சுதா கொங்கரா, தொலைநோக்கு பார்வை கொண்ட பெண்.. சல்யூட்”. இவ்வாறு கே.ஜே.ஆர் ராஜேஷ் நீண்ட பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

Producer K Rajesh about Suriya’s Soorarai Pottru film

தளபதியின் தீபாவளி தரிசனம்.; தியேட்டரில் மாஸ்டரின் மெகா ட்ரீட்

தளபதியின் தீபாவளி தரிசனம்.; தியேட்டரில் மாஸ்டரின் மெகா ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

master teaserவிஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.

இவர்களுடன் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார்.

இப்பட டீசர் நாளை தீபாவளி தினத்தில் மாலை 6 மணிக்கு யூடியூப்பில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து திரையரங்கிலும் ’மாஸ்டர்’ டீசரை வெளியிட வேண்டும் என விஜய் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை படக்குழுவினர் ஏற்றுள்ளனர்.

அதன்படி நாளை மாலை 6 மணிக்கு யூடியூபிலும் 6.30 மணிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள திரை அரங்கிலும் ’மாஸ்டர்’ டீசர் திரையில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.

Master teaser to be screened in theatres from tomorrow

More Articles
Follows