லோகேஷ் கனகராஜூடன் இணைந்த ஆர்.ஜே.பாலாஜி.; வைரலாகும் போட்டோ

லோகேஷ் கனகராஜூடன் இணைந்த ஆர்.ஜே.பாலாஜி.; வைரலாகும் போட்டோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக மாறியவர் ஆர்.ஜே.பாலாஜி.

ஆர்.ஜே.பாலாஜி தற்போது கதாநாயகனாக நடித்து வரும் படம் ‘சிங்கப்பூர் சலூன்’.

இந்த படத்தை ‘ரவுத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.

ஆர்.ஜே.பாலாஜியுடன் நடிகர் ஜீவா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருவரும் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜுடன், ஆர்.ஜே.பாலாஜி எடுத்துக் கொண்ட புகைப்படமும் ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், லோகேஷ் கனகராஜ், ஆர்.ஜே.பாலாஜி புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் - ஆர்.ஜே.பாலாஜி

Lokesh Kanagaraj cameo role in ‘Singapore Saloon’

21 Years of Dhanush.; ஜூன் – ஜூலையில் ‘கேப்டன் மில்லர்’ ட்ரீட்

21 Years of Dhanush.; ஜூன் – ஜூலையில் ‘கேப்டன் மில்லர்’ ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் மற்றும் நிவேதிதா சதீஷ் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தொடரி, மாறன், பட்டாஸ் படங்களைத் தொடர்ந்து 4வது முறையாக தனுஷ் நடிக்கிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்நிலையில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் தேதியை அறிவித்துள்ளது.

‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஜூன் மாதம் வருவதாகவும், படத்தின் டீசர் வரும் ஜூலை மாதம் வரும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், தனுஷ் திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்ததை தனுஷ் ரசிகர்கள் இன்று கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் மில்லர்

captain miller first look and teaser release date announced

தமிழகம் முழுவதும் சிறந்த மாணவ – மாணவிகளை தேர்ந்தெடுக்கும் விஜய்

தமிழகம் முழுவதும் சிறந்த மாணவ – மாணவிகளை தேர்ந்தெடுக்கும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்துள்ளன. அதில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியாகின.

10 வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

இதில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று வரலாற்று சாதனை படைத்தார் திண்டுக்கல் மாணவி நந்தினி.

இதனையடுத்து ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.

மேலும் நந்தினிக்கு விருது வழங்கி கௌரவித்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

இந்த நிலையில் தமிழக மாவட்ட வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பட்டியலை தயார் செய்ய நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை மாவட்ட வாரியாக தேர்வு செய்து உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளாராம் விஜய்.

அதற்காக மாணவ – மாணவிகளின் தேர்வு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு ஆவணங்களை தயார் செய்து விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப மாவட்ட இயக்கங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

விரைவில் சிறந்த மாணவர்களை சந்தித்து விஜய் இன்ப அதிர்ச்சி அளிக்கவுள்ளார்.

Vijay selects the best students across Tamil Nadu

20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் ரன் ஜோடி !

20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் ரன் ஜோடி !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மீரா ஜாஸ்மின் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வரப்போகிறார் என்ற நல்ல செய்தி வந்துள்ளது.

தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் ‘டெஸ்ட்’ படத்தில் மீரா ஜாஸ்மின் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

‘டெஸ்ட்’ படத்தில் ஆர்.மாதவன் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

தமிழில் திருப்புமுனையாக அமைந்த லிங்குசாமி இயக்கிய ‘ரன்’ படத்தில் மீரா ஜாஸ்மின் அவருடன் நடித்தார்.

பின்னர் 2004 ஆம் ஆண்டு வெளியான மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.

20 வருடங்களுக்கு பிறகு இந்த ஜோடி இணைந்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.

Meera Jasmine reunites with Madhavan after 20 years

காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த ரஜினியின் குடும்பம் …

காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த ரஜினியின் குடும்பம் …

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முத்த நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, இளைய மகள் சௌந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளார்கள்.

இந்த நிலையில், இன்று (மே 10) ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது சொகுசு காரின் சாவி தொலைந்து விட்டதாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ஏப்ரல் 23ஆம் தேதி கோபாலபுரத்தில் உள்ள போயஸ் கார்டன் வீட்டில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு காரில் சென்றேன்.

அப்போது எனது ரேஞ்ச் ரோவர் காரில் சென்று கொண்டிருந்தபோது காரின் மற்றொரு சாவி பவுச்சுடன் காணாமல் போனதாக சௌந்தர்யா ரஜினிகாந்த் புகார் அளித்துள்ளார்.

கூடுதல் தகவல்.. ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனது வீட்டில் உள்ள லாக்கரில் வைத்திருந்த தங்க, வைர நகைகளைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்திருந்தார். போலீஸ் விசாரணையில் ஈஸ்வரி & வெங்கடேசன் இருவரும் ஐஸ்வர்யா வீட்டில் நகைகளை திருடியது தெரிய வந்தது.

soundarya rajinikanth missed her range rover car key

விருது பெற ஆசை.. பொறுப்பற்ற செயல்.; தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கே ஆர் கண்டனம்

விருது பெற ஆசை.. பொறுப்பற்ற செயல்.; தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கே ஆர் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் கே ஆர் இன்று வெளியிட்ட அறிக்கை:

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை வெளிவந்த தமிழ் படங்களில் சிறந்த படம், சிறந்த நடிகர் நடிகைகள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 10 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவையும், அதே காலகட்டத்தில் வெளியான படங்களில் மானியம் பெற தகுதியான சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதி அரசர் தலைமையில் 14 பேர் அடங்கிய ஒரு குழுவையும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

அதற்காக மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம் அரசு அறிவித்துள்ள இரண்டு குழுக்களிலும் யார் தலைவர் மற்றும் உறுப்பினராக இருக்கிறார்கள் என்பதை எப்போதுமே ரகசியமாக வைத்திருப்பது தான் மரபு.

விருது மற்றும் மானியத்திற்கு உரியவர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் போது தான் அதை தேர்வு செய்தவர்கள் யார் என்பதே தெரியவரும்‌.

தேசிய திரைப்பட விருது தேர்வு குழு மற்றும் சர்வதேச திரைப்பட விருது தேர்வு குழுக்களில் நான் தலைவர் மட்டும் உறுப்பினராக பங்கேற்ற அனுபவத்தில் இதை குறிப்பிடுகிறேன்.

ஆனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இரண்டு தேர்வுக் குழுவிலும் இடம் பெற்றிருக்கும் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெயர்களை சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.

இது விளம்பரப்படுத்துவதற்கான அறிக்கை அல்ல. உறுப்பினர்கள் மூலம் அந்த செய்தி பல வாட்ஸ் அப் குரூப் களிலும் பகிரப்பட்டு சோசியல் மீடியாக்கள் வரை வந்துவிட்டது.

இது மிகவும் தவறான முன்னுதாரணம்.்ஏனென்றால் ஒவ்வொரு நடிகருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் தங்களுக்கும் தங்கள் படங்களுக்கும் விருது கிடைக்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும் .

அத்துடன் ஒரு படத்திற்கு அரசாங்கம் ரூ. 7 லட்சம் மானியமாக வழங்குவதால் அந்த தொகையை பெற வேண்டும் என்ற ஆர்வம் நிச்சயமாக இருக்கும். இதனால் சிலர் சம்பந்தப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு கொண்டு ஆதிக்கம் செலுத்தவோ நிர்பந்தப்படுத்தவோ அல்லது வேறு வழிகளில் முயற்சி செய்யவோ வாய்ப்பு இருக்கிறது.

ஒரு சிலர் இதை தவறாக பயன்படுத்தி தயாரிப்பாளர்களை ஏமாற்றவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

இப்படி ஒரு சூழல் உருவாக காரணமாக இருந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பொறுப்பற்ற செயல் கண்டிக்கத்தக்கது.

ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களின் நலனுக்காக இன்னும் மூன்று ஆண்டுகள் நீங்கள் செயல்பட வேண்டி இருப்பதால்
அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடனும் பொறுப்புணர்வுடனும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று சங்க நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

கேயார்

Irresponsible act.; KR Condemns Producers Association

More Articles
Follows