தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமா கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் தேசிய விருதுகள் கடந்த 64 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
இன்று 65வது ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.
இதில் தமிழ் சினிமா துறையை சார்ந்தவர்களுக்கு 4 விருதுகள் கிடைத்தன.
ஏஆர். ரஹ்மான் 2 விருதுகளையும், பின்னணி பாடகி சாஷா திரிபாதி அவர்கள் ஒரு விருதையும் இன்னும் திரைக்கு வராத டூ லெட் படம் சிறந்த பட விருதையும் வென்றுள்ளது.
சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுகளில் இதுவரை இளையராஜா 5 தேசிய விருதுகளை வென்றிருந்தார். ரஹ்மான் 4 விருதுகளை மட்டுமே வென்றிருந்தார்.
இன்று இரண்டு விருதுகள் ஏஆர். ரஹ்மானுக்கு கிடைத்துள்ளதால், இளையராஜாவை முந்திவிட்டார். தற்போது அவருக்கு 6 விருதுகள் கிடைத்துள்ளது.
இதற்கு முன்பு இளையராஜா பெற்ற தேசிய விருதுகள் மற்றும் ஆண்டு
31வது ஆண்டு சகார சங்கமம் தெலுங்கு படம் 1983
33வது ஆண்டு சிந்து பைரவி தமிழ் படம் 1985
36வது ஆண்டு ருத்ர வீணா தெலுங்கு படம் 1988
57வது ஆண்டு பழசிராஜா மலையாள படம் 2009
63வது ஆண்டு தாரை தப்பட்டை தமிழ் படம் 2015
ஏஆர்.ரஹ்மான் பெற்ற விருதுகள்.. (ஏப்ரல் 13, 2018 வரை)
40வது ஆண்டு ரோஜா தமிழ் படம் 1992
44வது ஆண்டு மின்சார கனவு தமிழ் படம் 1996
49வது ஆண்டு லகான் ஹிந்தி படம் 2001
50வது ஆண்டு கன்னத்தில் முத்தமிட்டால் தமிழ் படம் 2002
65வது ஆண்டு மாம் ஹிந்தி படம் 2017
65வது ஆண்டு காற்று வெளியிடை தமிழ் படம் 2017
AR Rahman beat Ilaiyaraja in Number of National awards