மீண்டும் டபுள் ரோலில் கார்த்தி.; மீண்டும் சிவகார்த்திகேயன் பட இயக்குனருடன் இணைகிறார்.!

மீண்டும் டபுள் ரோலில் கார்த்தி.; மீண்டும் சிவகார்த்திகேயன் பட இயக்குனருடன் இணைகிறார்.!

director ps mithranமணிரத்னம் இயக்கத்தில் ’பொன்னியின் செல்வன்’ மற்றும் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ’சுல்தான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.

இந்த நிலையில் இரும்புத்திரை’ மற்றும் ’ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் கார்த்திக்கு இரட்டை வேடம் கொடுக்க போகிறாராம் மித்ரன்.

ஏற்கெனவே ’சிறுத்தை’ & ‘காஷ்மோரா’ ஆகிய படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் கார்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்யராஜ் கண்ணன் (ரெமோ) & மித்ரன் (ஹீரோ) ஆகிய இருவரும் கார்த்தியை இயக்குவதற்கு முன் சிவகார்த்திகேயனை இயக்கினர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Actor Karthi to play dual role in Ps Mithrans next

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட தயாராகும் நமக்கு நாமே அணி!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட தயாராகும் நமக்கு நாமே அணி!

Namakku Naamae teamநமக்கு நாமே குழுவின் சார்பாக அரசு விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் தயாரிப்பாளர் எஸ் விஜயசேகரன் அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த 10 ஆண்டுகளாக பதவி வகித்த நிர்வாகிகள் சரியாக செயல்படாத காரணத்தினால் அனைத்து தயாரிப்பாளர்களும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். மேலும் தயாரிப்பாளர்கள் சந்தித்து வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் விதமாக இனி வரும் தேர்தலில் இதுவரை பதவி வகித்தவர்கள் மீண்டும் பதவிக்கு வராமல் தடுக்க புதியவர்கள் தலைமேயேற்று நல்ல நிர்வாகம் அமைய கலந்துரையாடப்பட்டது.

இந்த சிறப்பு கூட்டத்தில் விஜயசேகரன், எஸ்டி சுரேஷ்குமார், ராமச்சந்திரன் தயாளன், தங்கம் சேகர், திருப்பூர் செல்வராஜ், திருநெல்வேலி ஜெயக்குமார், அமல்ராஜ், தன சண்முக மணி, வெங்கடேஷ் துருவா மற்றும் பல தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். கூடிய விரைவில் அனைத்து தயாரிப்பாளர்களையும் ஒருங்கிணைத்து ஆலோசித்த பிறகு முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என்று புதிய அணியினர் தெரிவித்துள்ளனர்.

Namakku Naame team to contest in TFPC election

‘சிங்கம்’ பட ஹீரோவாக தன்னை நினைக்கும் போலீஸ்க்கு மோடி அட்வைஸ்

‘சிங்கம்’ பட ஹீரோவாக தன்னை நினைக்கும் போலீஸ்க்கு மோடி அட்வைஸ்

modi singam suriyaஐதராபாத்தில் நடைபெற்ற தேசிய போலீஸ் அகாடெமி காணொளி காட்சி மூலம் பேசினார் பிரதமர் மோடி.

அவர் பேசும்போது… ’ காக்கிச் சட்டை அணியும் நீங்கள் பெருமை கொள்ள வேண்டும். அதற்கான மரியாதையை ஒருபோதும் இழக்கவேண்டாம்.

போலீஸ் அதிகாரிகள் ஏரியாவில் உள்ள ரவுடிகள் பயப்பட வேண்டும் என நினைக்கின்றனர்

‘சிங்கம்’ போன்ற போலீஸ் படங்களைப் பார்த்துவிட்டு தங்களை அவர்கள் பெரிய அளவில் நினைக்கின்றனர்.” இவ்வாறு மோடி பேசினார்.

தமிழில் சூர்யா நடித்த ’சிங்கம்’ படம் ஹிந்தியில் அஜய்தேவ்கான் நடிப்பில் ரீமேக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

PM Modi advises INDIAN POLICE SERVICE officers not to act like SINGHAM police

எல்ரெட் குமார் தயாரிப்பில் இணையும் தனுஷ் – வெற்றிமாறன்

எல்ரெட் குமார் தயாரிப்பில் இணையும் தனுஷ் – வெற்றிமாறன்

elred kumar vetri maaranபொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என நான்கு படங்களிலும் தனுஷை இயக்கியிருந்தார் வெற்றிமாறன்.

இவை அனைத்துமே தமிழ் சினிமாவின் தரமான படைப்புகள் என்று பெயர் பெற்றன.

இந்த வெற்றி கூட்டணி மீண்டும் வடசென்னை பார்ட் 2 படத்திற்காக இணையவுள்ளது.

இதனிடையில் இந்த வெற்றி கூட்டணியை தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இணைக்கவுள்ளதாக அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.

சூரி நாயகனாக நடிக்கும் ஒரு படத்தையும் சூர்யா நடிப்பில் வாடிவாசல் ஆகிய படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன்.

இதனையடுத்து விஜய்யை இயக்க காத்திருப்பதாக அறிவித்தார் வெற்றிமாறன்.

இந்த அறிவிப்புக்கு இடையில் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி 5-வது முறையாக இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Actor Dhanush to work with Vetrimaaran again, confirms Elred Kumar

மங்காத்தா 2…: வெங்கட் பிரபுக்கே தெரியாமல் அப்டேட் தரும் மீடியாஸ்

மங்காத்தா 2…: வெங்கட் பிரபுக்கே தெரியாமல் அப்டேட் தரும் மீடியாஸ்

ajith venkat prabhuஅஜித், அர்ஜீன், த்ரிஷா, வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம் ’மங்காத்தா 2’.

வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்திற்கு யுவன் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தின் பார்ட் 2 பற்றி வெங்கட் பிரபுவிடம் அஜித் ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

அவரும் அஜித் சம்மதித்தால் மங்காத்தா 2 ரெடியாகும் என தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் சில தினங்களாக சில மீடியாக்களில் மங்காத்தா 2 பற்றி செய்திகள் வெளியானது.

இது உண்மைதானா என ரசிகர் ஒருவர் வெங்கட்பிரபுவிடம் கேட்டுள்ளார்.

வெங்கட் பிரபுவே ஆச்சர்யத்தில் மூழ்கியிருக்கிறார்.

எனக்கே தெரியாமல் எப்படி ‘மங்காத்தா 2’ என அவர் யோசிப்பது போல ஒரு எமோஜியை ட்விட்டரில் போட்டுள்ளார்.

Director Venkat Prabhu’s brother joins fans as they demand ‘Mankatha 2’ from the director

சென்னையில் ‘அண்ணாத்த’ செட்.; டிசம்பர் மாத சூட்டிங்கில் ரஜினி பங்கேற்பு?

சென்னையில் ‘அண்ணாத்த’ செட்.; டிசம்பர் மாத சூட்டிங்கில் ரஜினி பங்கேற்பு?

rajinikanth annaatthe shootingசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அண்ணாத்த படத்திற்காக இயக்கி வருகிறார் சிறுத்தை சிவா.

இமான் இசையைமக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது-

இதில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இந்தப் படத்தை இந்தாண்டு 2020 தீபாவளிக்கு வெளியிட நினைத்து விறுவிறுப்பாக படத்தை படமாக்கினார் சிவா.

ஆனால் கொரோனா பிரச்சினையால் சூட்டிங் நிறுத்தப்பட்டது.

தற்போது 6 மாதத்திற்கு பிறகு சூட்டிங் நடத்த அரசு அனுமதியளித்துள்ளதால் சென்னையில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

எனவே கிழக்குக் கடற்கரைச் சாலையில் செட் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் ரஜினி இல்லாத காட்சிகளை எடுக்கவிருக்கிறார்களாம்.

அதன்படி கீர்த்தி சுரேஷ் – நயன்தாரா இருவரும் தோன்றும் காட்சிகளை படமாக்கவுள்ளனர்.

அண்ணாத்தே படப்பிடிப்பில் டிசம்பர் அல்லது ஜனவரியில் ரஜினி பங்கேற்பார் என கூறப்படுகிறது.

எல்லாம் திட்டமிட்டப்படி நடந்தால் 2021 கோடை விடுமுறையில் படத்தை வெளியிடலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

இதனிடையில் தன் அரசியல் கட்சி அறிவிப்பு, மதுரை மாநாடு, தமிழகளவில் பிரச்சாரம், தேர்தல் களம் என ரஜினிகாந்த் தீவிர அரசியலில் ஈடுபடலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Rajini’s ‘Annaatthe’ To Resume Shooting In december

More Articles
Follows