தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பீப்பிள் மீடியா ஃபேக்டரி, விஸ்வ பிரசாத் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்துள்ளத் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.
பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடிகர் ஆர்யா…
“’பாஸ் என்கிற பாஸ்கரன்’ படம் நடிக்கும்போது எனக்கும் சந்தானத்திற்கும் ஒரே கேரவன் தான். அப்போது கேரவனுக்குள்ளேயே சந்தானத்தைப் பார்க்க ரசிகர் ஒருவர் வந்துவிட்டார். அந்த அளவுக்கு சந்தானம் மீது ரசிகர்கள் அன்பாக உள்ளனர்.
நிச்சயம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஹிட்டாகும். இயக்குநர் கார்த்திக்கும் அதன் மீது நம்பிக்கை வைத்துள்ளார். இந்தப் படத்தைத் தயாரித்துள்ள விஸ்வா தெலுங்கில் நிறைய ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். தமிழில் இந்தப் படமும் அவருக்கு ஹிட் கொடுக்கும். 65 நாட்கள் ஷூட்டிங் என்றதும் ஹெல்த் டிப்ஸ் எல்லாம் கேட்டார். நானும் சொன்னேன்.
பிறகு கேட்டால் அவர் மேகா ஆகாஷூடன் ஷெட்டில் ஆடிக் கொண்டிருக்கிறேன் என்றார். அந்த அளவுக்கு ஹெல்த் கான்ஷியஸ் அவருக்கு உண்டு. படத்தில் அனைவரும் சிறப்பாக உழைப்பைக் கொடுத்துள்ளனர். நானும் சந்தானமும் இணைந்து அட்வென்ச்சர் ஃபேண்டஸி கதையில் கார்த்திக் யோகி இயக்கத்தில் சீக்கிரம் நடிக்க இருக்கிறோம்” என்றார்.
நடிகர் சந்தானம்..
“எப்பவுமே ஆர்யா என்னை பார்த்தால் என் உடம்பை தான் முதலில் பார்ப்பான். என் இங்கே சதை போட்டு இருக்குன்னு திட்டுவான். ஒருமுறை புத்தாண்டு பார்ட்டிக்கு செல்லலாம் என யோசித்து ஆர்யாவுக்கு தெரியாமல் கால் செய்துவிட்டேன்.
புது வருஷம் அதுவுமாக என்னை ஜிம் போக வைத்துவிட்டான். எந்தவொரு ஃபைனான்ஸியரை பார்க்கப் போனாலும் ஆர்யா எப்படி இருக்கிறார் என என்னிடம் கேட்பார்கள். ஆர்யா போனால் சந்தானம் எப்படி இருக்கிறார் என கேட்பார்கள். நலம் விசாரிக்க அல்ல! நாங்க ரெண்டு பேரும் அந்த அளவுக்கு கடன் வாங்கியிருக்கோம்.
ஏதாவது படம் நடிக்கிறோமோ, படம் ஓடுதா, பணம் வருமான்னு தான் விசாரிப்பாங்க. தங்க முட்டை போடுற வாத்து ஒன்னு கிடைச்சிருக்குன்னு ஆர்யா ஒருமுறை சொல்லி விட்டு ஒருத்தரிடம் அழைத்துச் சென்றான்.
வாத்து முட்டை போடுதான்னு பின்னாடியே கை வச்சு பார்த்தா எங்களுக்குத் தான் பின்னாடி ரத்தம் வருது. அந்த வாத்து யாருன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க” என்றார்.
இயக்குநர் கார்த்திக் யோகி…
“’டிக்கிலோனா’ படத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவுதான் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஆரம்பிக்கக் காரணம். இதன் பட்ஜெட் ரொம்பவே பெருசு. தயாரிப்பாளர் விஸ்வா கதைக் கேட்டதும் பிடித்துப் போய் சம்மதித்தார். எனக்கு சிறப்பாக ஒத்துழைப்புக் கொடுத்த என்னுடைய உதவி இயக்குநர்களுக்கு நன்றி. ’டிக்கிலோனா’ படத்திற்கு சந்தானம் அண்ணன் கொடுத்த ஆதரவு பெரிது. மீண்டும் மீண்டும் சந்தானம் அண்ணாவுடன் படம் செய்வேன். அந்த அளவுக்கு அவர் என் மேல் அன்பு வைத்துள்ளார். படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்”.
Every time Santhanam ask me healthy tips says Arya