ஆணுறை பற்றி கூறி ஜாதிக்கு அருண்ராஜா காமராஜ் விளக்கம்

ஆணுறை பற்றி கூறி ஜாதிக்கு அருண்ராஜா காமராஜ் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arunraja Kamarajகபாலியின் நெருப்புடா பாடல் புகழ் அருண்ராஜா காமராஜ் திரைப்படங்களில் பாடல்களை எழுதி, பாடுவதோடு மட்டுமில்லாமல் படங்களில் நடித்தும் வருகிறார்.

இவர் அவ்வப்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் சற்றுமுன், சாதி என்றால் என்ன? என்பதை இப்படி சொல்லியிருக்கிறார்.

இவர் எதற்காக? யாருக்காக? இதை பதிவிட்டார் என்று தெரியவில்லை.

Arunraja Kamaraj ‏@Arunrajakamaraj 4m4 minutes ago
ஆணுறை அணிந்து புனைவதற்கும் அணியாமல் புனைவதற்கும் இடைப்பட்ட வேறுபாடுதான் சாதி #சாதீயம்

Arunraja Kamaraj tweet about Caste and condom

arunraja

சசிகலாவுக்கு சப்போர்ட் வேண்டாம் – நடிகர் விசு

சசிகலாவுக்கு சப்போர்ட் வேண்டாம் – நடிகர் விசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

visu and sasikalaதமிழக முதல்வர் ஆவதற்கு சசிகலாவை ஆதரிக்க வேண்டாம் என இயக்கனர் விசு கூறியுள்ளார்.

“எங்க வாழ்க்கை உங்க கையில் இருக்கிறது எம்.எல்.ஏ.க்களே…

கண்டிப்பாக முதல்வர் ஓ.பி.எஸ்.ஸிற்கு சப்போர்ட் செய்யுங்கள். சசிகலாவிற்கு சப்போர்ட் வேண்டாம்.

நான் ஜெயா டிவியில் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியை நடத்திய போது ஒரே ஒரு தடவை மட்டும் தான் மேடம் ஜெ.வைச் சந்தித்தேன்.

அதன் பிறகு என்னை சந்திக்க விடவில்லை. யார் யாரோ வருவார்கள். இப்போது சசிகலாவை ஆட்சி அமைக்க விட்டாலும் அதே தான் நடக்கும்.

ஆளுநர் 5 மணிக்கு முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு அனுமதி அளித்துள்ளார். 5 என்றால் பஞ்ச பூதங்கள் உள்பட நல்ல விஷயங்கள்.

அதுவே சசிகலாவுக்கு ஏழரை மணிக்கு. ஏழரை என்றால் என்ன என்று உங்களுக்கே தெரியும்”
என்றார் திரைப்பட இயக்குநர் விசு.

கௌதம் மேனனின் முடிவால் கார்த்தியை முந்திய தனுஷ்

கௌதம் மேனனின் முடிவால் கார்த்தியை முந்திய தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush in ENPTதனுஷ்-கௌதம் மேனன் கூட்டணில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதன் டீசர் சரியான வரவேற்பை பெறவில்லை என்றாலும், இந்த கூட்டணியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இப்படத்தின் பாடல்கள் காதலர் தின விருந்தாக பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது.

ஆனால் அன்றைய தினம் மணிரத்னம் இயக்கி, கார்த்தி நடித்துள்ள காற்று வெளியிடை படத்தின் ஒரு பாடல்கள் வெளியாகிறதாம்.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

எனவே இந்த தேதியை மாற்றி நாளை (பிப்ரவரி 10) தேதி வெளியிட தனுஷ் பட பாடல்களை வெளியிடவிருக்கிறாராம் கௌதம் மேனன்.

நெகட்டிவ் டைட்டிலை விட்டு ‘தலைவர்’ பெயரில் விஜய் ஆண்டனி

நெகட்டிவ் டைட்டிலை விட்டு ‘தலைவர்’ பெயரில் விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay antony‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’ மற்றும் ‘எமன்’ ஆகிய நெகட்டிவ் படத்தலைப்புகளில் நடித்து மாபெரும் வெற்றியை ஈட்டியவர் விஜய் ஆண்டனி.

இவரின் அடுத்த படத்தலைப்பும் வித்தியாசமான தலைப்புடன் வந்தாலும், ஒரு பாசிட்டிவ்வாக, மாபெரும் தலைவரின் பெயரை அவர் படத்திற்கு வைத்துள்ளார்.

தமிழக மக்களின் உள்ளத்தில் வாழ்ந்து வரும் தலைச் சிறந்த தலைவரான ‘அண்ணாதுரை’ யின் பெயரை வைத்திருக்கிறார்.

‘ஐ பிச்சர்ஸ்’ சார்பில் ஆர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் தயாரிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் ஸ்ரீனுவாசன் இயக்கவிருக்கிறார்.

இவர் இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கும் அண்ணாதுரையின் வாழ்க்கைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என கூறப்படுகிறது.

மற்ற நடிகர் – நடிகைகள் மற்றும் ஏனைய தொழில் நுட்ப கலைஞர்களின் விவரங்களை விரைவில் வெளியிடவிருக்கிறார்களாம்.

இன்னும் இரண்டு வாரத்தில் விஜய் ரசிகர்களுக்கு விருந்து

இன்னும் இரண்டு வாரத்தில் விஜய் ரசிகர்களுக்கு விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijayவிஜய் நடித்த பைரவா படம் வெளியாகி ஒரு மாதம் நிறைவடையவுள்ளது.

இப்படம் ரூ. 100 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படும் நிலையில், விஜய் ரசிகர்களுக்கு மற்றொரு இனிப்பான செய்தி வந்துள்ளது.

ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன் நடித்த துப்பாக்கி படத்தின் சிறப்பு காட்சியை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் திரையிட உள்ளதாம்.

வருகிற பிப்ரவரி 23ம் தேதி இதற்கான காட்சி நடைபெறும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Jazz Cinemas plan for special screening of Thuppakki on Feb 23d 2017

JAZZ CINEMAS (@jazzcinemas)
A treat for all #Thalapathy fans!Mass re-entry of #Thuppakki as #Playback winner! @actorvijay @MsKajalAggarwal @ARMurugadoss @Jharrisjayaraj

ரஜினியை நடிக்க வைக்க ராஜமௌலியின் ராஜதந்திரம்

ரஜினியை நடிக்க வைக்க ராஜமௌலியின் ராஜதந்திரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Rajamouliபாகுபலி2 படத்தை தொடர்ந்து இந்தியாவின் மாபெரும் இதிகாசமான மகாபாரதம் கதையை ராஜமௌலி இயக்கவுள்ளதாக வந்த செய்தியை முன்பே பார்த்தோம்.

இந்த படத்தில் இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைக்கவிருக்கிறாராம்.

பாலிவுட்டில் இருந்து அமீர்கான், மல்லுவுட்டில் இருந்து மோகன்லாலை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.

மேலும் தமிழ்நாட்டில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிக்க வைக்க இயக்குனர் ராஜதந்திரம் செய்துவருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

அப்படியானால், இப்படத்தின் பட்ஜெட் ரூ. 500 கோடியை தொடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

SS Rajamouli plans to commit Rajinikanth for his Mega project

More Articles
Follows