‘மரகத நாணயம் 2’ படத்திற்கு ரெடியான டைரக்டர் ஏஆர்கே சரவணன்

‘மரகத நாணயம் 2’ படத்திற்கு ரெடியான டைரக்டர் ஏஆர்கே சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

maragatha naanayamஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்த்ராஜ், அருண்ராஜா காமராஜ், முனிஷ்காந்த், கோட்டா சீனிவாசராவ் உள்ளிட்டோர் நடித்த படம் ‘மரகத நாணயம்’.

காமெடி பேண்டஸி திரைப்படமாக உருவான இப்படத்தை இயக்குனர் ஏஆர்கே சரவணன் உருவாக்கியிருந்தார்.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தை உருவாக்கி இருந்தனர்.

இந்த நிலையில் இரண்டாம் பாகத்துக்கான கதையை ஆக்செஸ் ஃபிலிம்ஸ் டில்லி பாபுவிடம் கூறியிருக்கிறார் இயக்குனர் சரவணன்.

தயாரிப்பாளரும் இரண்டாம் பாகத்தை தயாரிக்க அவர் ஓகே சொல்லியுள்ளார்.

சமூக வலைதளத்தில் இதனை உறுதிப்படுத்தி உள்ளார் சரவணன்.

மரகத நாணயம் 2 படத்திற்கு முன்பாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படம் இயக்கவிருக்கிறாராம் சரவணன்.

maragatha naanayam 2 is on cards ?

ஹிட் கொடுத்த இயக்குனர்களுக்கு டிக் போடும் நடிகர் தனுஷ்

ஹிட் கொடுத்த இயக்குனர்களுக்கு டிக் போடும் நடிகர் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushநடிகர் விவேக் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு “எப்போவாச்சும் ஹிட் கொடுத்தா ஓகே.. எப்போதுமே ஹிட் கொடுத்தா எப்படி..?” என தனுஷிடம் கேட்டு இருந்தார்.

அண்மைக்காலமாக தனுஷின் படங்கள் சூப்பர் ஹிட் வரிசையில் இணைந்து வருவதால் இப்படி கேட்டு இருந்தார் விவேக்.

தனுஷின் கதை தேர்வும் இயக்குனர்களும் தேர்வும் அதற்கு மிகப்பெரிய காரணம் எனலாம். மேலும் ஓரிரு ஹிட் பட தரும் அறிமுக டைரக்டர்களை தேடி பிடித்து அவர்களை டிக் செய்கிறாராம் தனுஷ்.

காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடிப் பேசவும் ஆகிய ஹிட் படங்களை கொடுத்த பாலாஜி மோகனுக்கு மாரி பட வாய்ப்பை கொடுத்தார் தனுஷ்.

ஹரி ஓம் என்கிற ஒரு குறும்பட இயக்குனர் பரத்பாலாவுக்கு ‘மரியான்’ பட வாய்ப்பை கொடுத்தார்.

எதிர்நீச்சல் & காக்கிச் சட்டை பட இயக்குனர்
துரைசெந்தில் குமாருக்கு கொடி, பட்டாஸ் என 2 பட வாய்ப்பை கொடுத்தார் தனுஷ்.

வெற்றிமாறனை பற்றி சொல்ல வேண்டாம். அவர் கதை சொன்னால் உடனே ஓகே சொல்லிடுவார் தனுஷ்.

பரியேறும் பெருமாள் படம் வெளியான சமயத்தில் மாரி செல்வராஜை பாராட்டி தனக்கான ஒரு கதை ரெடி செய்ய சொன்னார் தனுஷ்.

அதன்படியே தாணு தயாரிப்பில் ‘கர்ணன்’ படம் உருவானது.

தனுஷின் அடுத்த டிக் யாருக்கோ..?? நீங்களே யூகித்து கொள்ளுங்கள்..

Updates on actor Dhanush next film director

தனது மகனுக்கு GUCCI என பெயர் வைத்த திருமணமாகாத நடிகை வரலட்சுமி

தனது மகனுக்கு GUCCI என பெயர் வைத்த திருமணமாகாத நடிகை வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பலரது வீட்டில் செல்லப்பிராணி என்றால் அது நாய்தான்.

பலரது வீட்டில் நாய்கள் வளர்ப்பதை பார்த்திருப்போம்.

அதுவும் நடிகர் – நடிகைகளுக்கும் நாய்க்கும் உள்ள பாசம் உறவு நாடறிந்த ஒன்றாகும்.

தெரு நாய்களுக்காக நடிகை த்ரிஷா நடிகர் விஷால் என பலரும் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகை வரலட்சுமி, எனது மகன் என்று தனது வளர்ப்பு நாயை அறிமுகப்படுத்தி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

தனது நாய்க்கு Gucci என்று பெயர் வைத்துள்ளார்.

அந்த நாயை பின்தொடர Guccivaralaxmi என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் அக்கௌண்ட்டும் தொடங்கியுள்ளார் வரலட்சுமி.

Actress Varalaxmi revealed her son name

Varalaxmi

‘ஜகமே தந்திரம்’ பட ட்ரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழுவினர்

‘ஜகமே தந்திரம்’ பட ட்ரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழுவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜ் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’.

இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தை திரையரங்கில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர்.

இயக்குனர் கார்த்தி்க்கும் நடிகர் தனுஷூம் தியேட்டர் வெளியீட்டையே எதிர்பார்ப்பதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

ஆனால் கொரோனா ஊரடங்கால் இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது.

ஆனால் தயாரிப்பாளர் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

அதன்படி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18-ம் தேதி ரிலீசாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில் படத்தின் ட்ரைலர் வரும் ஜூன் 1-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Dhanushs Jagame Thandhiram trailer release announcement

‘மாநாடு’ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் அடுத்த பட அப்டேட்

‘மாநாடு’ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் அடுத்த பட அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தை இயக்கி வருகிறார் வெங்கட்பிரபு.

யுவன் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் மாநாடு படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் டி.முருகானந்தத்தின் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் வெங்கட் பிரபு.

அவர் இயக்கும் 10-வது படமாக இது உருவாகவிருக்கிறது.

Director Venkat Prabus next movie update

கொரோனா ஊரடங்கால் முடங்கி கிடக்கும் பட்ஜெட் படங்கள்.; முழு விவரம் இதோ..

கொரோனா ஊரடங்கால் முடங்கி கிடக்கும் பட்ஜெட் படங்கள்.; முழு விவரம் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த வருடம் பொங்கல் சமயத்தில் விஜய்யின் ‘மாஸ்டர்’ & சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஆகிய படங்கள் ரிலீசானது.

இவையிரண்டும் தியேட்டருக்கு ரசிகர்களை குடும்பம் குடும்பமாக வரவழைத்தது.

பின்னர் சட்டமன்ற தேர்தல் பரபரப்பில் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகவில்லை.

இதனையடுத்து ஏப்ரல் மாதத்தில் தனுஷின் ‘கர்ணன்’ கார்த்தியின் ‘சுல்தான்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாகி வெற்றி பெற்றன.

கொரோனா உச்சத்தை தொட ஆரம்பித்த உடன் படங்களின் ரிலீசுக்கு தடை வந்தது. சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் வந்தாலும் தியேட்டர்கள் திறப்பது என்பது இப்போது நடக்காத காரியம்.

ஆகஸ்ட் அல்லது செப்டம்பரிலேயே தியேட்டர்கள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் 40க்கும் மேற்பட்ட சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீசுக்கு ரெடியாக உள்ளன.

அந்த விவரம் வருமாறு…

காகித பூக்கள், உழைக்கும் கரங்கள், சினிமா கனவுகள், இளஞ்ஜோடிகள், இது கதை அல்ல நிஜம், வீரமகன், இளவரசி, வைரி, சில்லாட்ட, பூதமங்கலம் போஸ்ட் , டம்மி ஜோக்கர், பிரம்மபுரி, வாழ்க ஜனநாயகம், இரவா இரவு , உத்ரா, கபாலி டாக்கீஸ், எல்லைக்காவலன், பிறர்தர வாரா, சின்ன பண்ணை பெரிய பண்ணை, நெஞ்சாக்கூட்டில், வெற்றித்திருமகன்,
ஆகிய படங்கள் உட்பட 40 படங்கள் திரை அரங்குகள் திறக்கும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

கொரோனா பிரச்சினை முடிந்த உடன் படங்களை ரிலீஸ் செய்வது குறித்து தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து பேச வேண்டும் என்று திரையுலகினர் எதிர்பார்க்கின்றனர்.

40 Tamil Movies is ready for Theatrical release

More Articles
Follows