உதயநிதி ஸ்டாலினின் ‘நெஞ்சுக்கு நீதி’ பட டப்பிங் அப்டேட்

உதயநிதி ஸ்டாலினின் ‘நெஞ்சுக்கு நீதி’ பட டப்பிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் “நெஞ்சுக்கு நீதி”.

Zee Studios மற்றும் அஜித்தின் ‘வலிமை’ பட தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களின் Bayview Projects வழங்க ராகுல் அவர்களின் ROMEOPICTURES இப்படத்தை வெளியிடுகின்றது.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளங்களிலும், வலைத் தளங்களிலும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியது, உதயநிதி ஸ்டாலின் இப்படத்திற்காக இன்று டப்பிங் செய்தார்.

இப்படத்தின் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார்.

முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர். மேலும் மயில் சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இசை – திபு நினன் தாமஸ்
ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்
படத்தொகுப்பு – ரூபன்
கலை – வினோத் ராஜ்குமார், லால்குடி இளையராஜா
சண்டைப்பயிற்சி – Stunner சாம்

“நெஞ்சுக்கு நீதி” படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.

Udhay’s Nenjukku Needhi film update

கட்டாயம் வந்திருப்பேன்.. கவலைப்படாதே கண்ணா..; ரஜினி வீடியோ வைரல்

கட்டாயம் வந்திருப்பேன்.. கவலைப்படாதே கண்ணா..; ரஜினி வீடியோ வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தை தாண்டியும் ரஜினிகாந்துக்கு இந்தியளவில் ரசிகர்கள் உள்ளனர்.

எனவே தான் இவர் ஒரு இந்திய சூப்பர் ஸ்டாராக பார்க்கப்படுகிறார்.

பிரதமர் மோடி முதல் பாலிவுட் கான்கள் வரை ரஜினியை தலைவா என்றே அழைக்கின்றனர்.

இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த ஒரு ரசிகரின் மகள் சௌமியாவுக்கு உடல்நிலை சரியில்லை என ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் அவர் ரஜினியை சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே தன் ரசிகருக்கு வீடியோ மூலம் பேசியுள்ளார் ரஜினிகாந்த்.

அந்த வீடியோவில்… ‛‛சௌமியா கண்ணா எப்படி இருக்க,? கவலைப்படாத.. தைரியமாக இரு.. கொரோனாவால் என்னால் நேரில் வர முடியவில்லை, எனக்கும் சற்று உடல்நலம் சரியில்லை. இல்லையென்றால் கட்டாயம் வந்திருப்பேன். அழகா இருக்க.. நல்லா சிரிக்கிற… உனக்காக ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன். எல்லாம் சரியாகிவிடும்” என ஆறுதலாக பேசியுள்ளார் ரஜினிகாந்த்.

இந்த வீடியோவை ரஜினி ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

தலைவா.. நீங்க நல்லா இருக்கனும் எனவும் வாழ்த்தி வருகின்றனர்.

Rajinikanth’s video message to his little fan

ஹர்பஜன்சிங் இர்ஃபான் பதானை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஸ்ரீசாந்த்

ஹர்பஜன்சிங் இர்ஃபான் பதானை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஸ்ரீசாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் நடிக்க கிரிக்கெட் உலகின் பல பிரபலங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பிரெண்ட்ஷிப் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் ஹர்பஜன் சிங். பின்னர் சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

இவரைத் தொடர்ந்து இர்பாஃன் பதானும் விக்ரமின் கோப்ரா படத்தில் நடித்துள்ளார்.

தற்போது இவர்களின் வரிசையில் இணைந்துள்ளார் அடுத்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாரம் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்.

இவர் ஏற்கெனவே மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட சில மொழி படங்களில நடித்துள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Cricketer Sri Santh to debut in tamil film

அருண்விஜய்யின் பார்டரை முடித்துவிட்டு மாதவனுடன் இணையும் இயக்குனர்

அருண்விஜய்யின் பார்டரை முடித்துவிட்டு மாதவனுடன் இணையும் இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மாதவன் முதன்முறையாக இயக்கியுள்ள படம் ராக்கெட்ரி. இதில் அவரே நாயகனாகவும் நடித்துள்ளார்.

தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகியுள்ளது.

இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இயக்குனர் அறிவழகன் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம் மாதவன்.

குற்றம் 23 படத்தை தொடர்ந்து அறிவழகன் அவர்கள் அருண் விஜய் இணைந்துள்ள படம் பார்டர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

எனவே அடுத்ததாக மாதவன் நடிக்கவுள்ள படத்தை அவர் இயக்கப் போகிறாராம் அறிவழகன்.

Madhavan’s next with Arun Vijay’s hit film director

சொல்லப்படாத காதலை சொல்லும் ‘ஐஸ்வர்யா முருகன்’.; சூப்பர் சிங்கர் முத்து சிற்பியும் இணைந்தார்

சொல்லப்படாத காதலை சொல்லும் ‘ஐஸ்வர்யா முருகன்’.; சூப்பர் சிங்கர் முத்து சிற்பியும் இணைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரேணிகுண்டா’ படம் மூலம், திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம். இவரது இயக்கத்தில், மாஸ்டர் பீஸ் திரைப்பட நிறுவனத்தின் சார்பில் ஜி.ஆர்.வெங்கடேஷ் மற்றும் கே.வினோத் தயாரித்துள்ள திரைப்படம் ‘ஐஸ்வர்யா முருகன்’.

காதலின் பெருமைகளை சொல்லும் தமிழ் சினிமா சரித்திரத்தில் அதன் வேறு பக்கத்தை காட்டும் படமாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது. ஒரு காதலால், காதலர்களின் குடும்பங்களில் என்னென்ன துன்பத்தை தருமென அதன் வலிகளை அழுத்தி பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் மூன்றாவது பாடலான “எங்கிருந்தோ கத்துதம்மா செங்குருவி..” எனும் – மனதை உலுக்கும் காட்சியாக உருவான இப்பாடல் தற்போது வெளியாகியுள்ளது. காதலர்களின் பார்வையிலிருந்து விலகி, காதலால் இரு குடும்பத்தினர் படும் துயரங்களை வலி மிகுந்த வார்த்தைகளிலும் மனதை உருக்கும் இசையிலும் தந்திருக்கிறது இந்தப்பாடல்.

“காதலும் சாவோடும் முடிவதில்லை..” எனும் அழுத்தம் மிகுந்த வரிகள் தமிழ் சினிமாவின் சொல்லப்படாத பக்கத்தை பேசும் விதமாக அமைந்துள்ளது.

பாடலின் காட்சி அமைப்பில், புதுமுக ஹீரோ அருண் பன்னீர்செல்வம் நடிக்க அவரது பெற்றோர்களாக இளங்கோ, கவுசல்யா மற்றும், ஹீரோயின் வித்யா பிள்ளை பெற்றோர்களாக புதுமுகம் தெய்வேந்திரன், நிமிஷா போன்றோர்கள் நடித்து அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளார்கள்.

இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா இசையில், விஜய் சூப்பர் சிங்கர் புகழ் முத்து சிற்பி கிராமத்து மணம் வீசும் குரலில் இப்பாடலை பாடியுள்ளார். வெளியான நொடியில் இசை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பை இப்பாடல் பெற்றுள்ளது.

“வீணானதே தாய் தந்த பாலும்.. ” போன்ற வரிகளால் அர்த்தமுள்ளப் பாட்டாக படைத்திருந்தார் கவிஞர் யுகபாரதி.

அருண் பன்னீர்செல்வம், வித்யா பிள்ளை ,ஹர்ஷ் லல்வானி.ஜி, சாய் சங்கீத், குண்டு கார்த்திக், தீனா, ராஜா, சங்கீதா, ராஜன், தெய்வேந்திரன் ,நாகேந்திரன் என முற்றிலும் புதுமுகங்களின் ஆக்கிரமிப்பில் இப்படம் அனைவரையும் கவனிக்க வைக்கும் படமாக உருவாகியுள்ளது.

படத்திற்கு ஒளிப்பதிவு அருண் ஜெனா . இவர் பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் .

இசை -கணேஷ் ராகவேந்திரா. இவர், ஏற்கெனவே ‘ரேணிகுண்டா’ படத்திற்கு இசையமைத்தவர்.

எடிட்டிங் ஆண்டனியின் உதவியாளரான ஜான் ஆபிரகாம்.

கலை – முகமது.

சண்டைப்பயிற்சி -தினேஷ். இவர் சண்டை இயக்குநர் ராஜசேகரின் உதவியாளர்.

நடனம் – தஸ்தா.

மனதை உலுக்கும் பாடல்! மீண்டும் ஒரு கிராமிய பாடகர் அறிமுகம்! #முத்துசிற்பி
“எங்கிருந்தோ கத்துதம்மா செங்குருவி..”
#ஐஸ்வர்யாமுருகன்
மூன்றாவது பாடல் வெளியீடு!
#iswaryamurugan #muthusirpi

youtu.be/3UY6mh1jMe8

Super Singer fame Muthu Sirpi joins Iswarya Murugan

மீண்டு(ம்) வரும் சிட்டிசன் பட டைரக்டர்.; எஸ்ஏசி நாஞ்சில் சம்பத் ரங்கராஜ் பாண்டே வாழ்த்து

மீண்டு(ம்) வரும் சிட்டிசன் பட டைரக்டர்.; எஸ்ஏசி நாஞ்சில் சம்பத் ரங்கராஜ் பாண்டே வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹீரோ சினிமாஸ். சி.மணிகண்டன் வழங்க கதிரவன் கதாநாயகனாக நடிக்கும் படம் மீண்டும். இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி சரவணன் சுப்பையா இயக்கி உள்ளார். இவர் அஜீத்குமார் நடிப்பில் பரபரப்பாக பேசப்பட்ட வெற்றிப்படமான சிட்டிசன் படத்தை இயக்கியவர்.

மீண்டும் படத்தில் கதிரவன் ஜோடியாக அனகா நடித்திருக்கிறார். இவர் டிக்கிலோனா, நட்பே துணை படங்களில் நடித்தவர். பிரணவ் ராயன், அனுராதா, துரை சுதாகர், சுபா பாண்டியன், அபிதா செட்டி, யார் கண்ணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, சுப்ரமணியம் சிவா, தர்ஷினி, இந்துமதி, மணிகண்டன், கேபிள் சங்கர், ஆதர்ஷ், மோனிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்,

கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதி உள்ளார். நரேன் பாலகுமாரன் இசை அமைத்திருக்கிறார். சீனிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜா முகமது எடிட்டிங் செய்திருக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சி அளித்திருக்கிறார். மணிமொழியன் ராமதுரை அரங்கம் அமைத்திருக்கிறார்.

நடனத்தை ஐ ராதிகா அமைத்துள்ளார். பி.ஆர். ஒ டைமண்ட் பாபு. விஜய் நடித்த புலி படத்தை தயாரித்த பி.டி.செல்வகுமார் மீண்டும் படத்தை வர்த்தகம் செய்துள்ளார்.. தமிழகமெங்கும், காமதேனு பிலிம்ஸ் சார்பாக பாலாஜி விநியோகிக்கிறார்.

இரண்டு தந்தை, ஒரு பெண் ஒரு குழந்தை என்ற மாறுபட்ட கதையம்சமுள்ள இப்படத்தில் கடற்படையினரிடம் சிக்கி தமிழ் மீனவர்கள்படும் சித்ரவதையை தத்ரூபமாக்கி படமாக்கி உள்ளனர். இந்தியா மீது மறைமுக தாக்குதல் நடத்தும் இலங்கை, சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விஞ்ஞான ரீதியான் தாக்குதலையும் இப்படத்தில் சொல்லியிருக்கின்றனர்.

பட கதாநாயகன் கதிரவன் இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளில் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார். இதற்காக ஆறு நாட்கள் நிர்வாணமாக சித்ரவதை செய்யப்படும் காட்சிகளில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது,

மீண்டும் படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பாடல்கள் முன்னோட்டம் நேற்று சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி, பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, திரைப்பட இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பேரரசு முன்னிலை வகித்து படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டனர்.

விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது:

மீண்டும் சரவணன் சுப்பையா. திறமையுள்ளவர்கள் எல்லாம் ஏன் நடுவில் கொஞ்சம் சினிமாவை விட்டு ஒதுங்கிட்டீங் களா? சினிமா ஒதுக்கி விட்டதா என்று தெரியவில்லை. சரவண சுப்பையா இயக்கிய சிட்டிசன் படம் யாரும் நினைத்துப்பார்க்க முடியாத விஷயங்களை பேசியது. சினிமா பொழுது போக்காக எடுக்கிறோம் அதில் சில நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு சிலர்தான். சிட்டிசன் படத்தில் தனது திறமையை நிரூபித்தவர் இயக்குனர் சரவண சுப்பையா. 70. 80 களில் வெற்றியும் கொடுப்போம், தோல்வியும் கொடுப்போம்

ஆனால் வெற்றியை மட்டும் மனதில் வைத்துக் கொள்வார்கள். வாய்ப்புகள் தொடர்ந்து வரும். இப்போது ஒவ்வொரு படமும் சோதனையானது. ஒரு படம் சறுக்கினாலும் அவ்வளவுதான் நம்மை மறந்துவிடுவார்கள். சரவணன் சுப்பையா மீண்டும் படம் மூலம் மீண்டும் வந்திருக்கிறார். சிட்டிசன் இயக்குனராக மீண்டும் உங்களை கொண்டு வந்து நிறுத்தும்.

படத்தின் டிரைலர் ரொம்ப நன்றாக இருந்தது. படத்தில் ஹீரோவை கொடுமைபடுத்தும் காட்சியும் இருக்கிறது, ஒரு குழந்தையை வைத்து சென்டிமென்ட் காட்சியும் இருக்கிறது. ஹீரோ கதிரவன் மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார். நன்றாக உழைப்ப வனை சினிமா விடாது. சினிமாவை காதலித்தால் உண்மையான காதலிபோல் அது நம்மை கைவிடாது. ஏதாவது ஒருவிதத்தில் நம்மை பிடித்து இழுத்துக்கொண்டே இருக்கும். இங்கு லியோனி வந்திருக்கிறார். முதன்முறை யாக அவரை நான் சினிமாவுக்கு அழைத்து வந்தேன்.

செந்தூரப்பாண்டி படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு காதலா வீரமா என்ற தலைப்பை வைத்து பட்டிமன்றம் நடத்திக்கொடுத்தார். அதேபோல் நாஞ்சில் சம்பத் இங்கு வந்திருக்கிறார். அவர் இருக்கும் மேடையில் நீ எப்படி தைரியமா பேசற என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளவேண்டி உள்ளது. அடுத்து பாண்டே வந்திருக்கிறார்.

திறமையானவர் ஆனால் வழிதவறி எங்கேயோ போய்கொண்டிருக்கிறாரோ என்று நினைக்கிறேன். இவர் தமிழகத்துக்கு தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்தால் நல்லது.

நாஞ்சில் சம்பத் பேசியதாவது:

அனைவரையும் கலையால் வணங்குகிறேன் தமிழால் ஆராதிக்கிறேன். எனக்கு இப்படியொரு வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று நேற்று முதலே நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். நண்பர் சரவனன் சுப்பையா திருவள்ளூரில் நடந்த பட்டிமன்றத்தில் எனக்கு எதிர் திசையில் பேசினார் அன்றைக்கு அவர் மீது நான் கடும் கோபத்திலிருந்தேன். முரணான தகவலாக பேசுகிறாரே என்று எண்ணினேன். ஒருநாள் சந்திப்பில் அவர் உள்ளத்தில் நான் விழுந்திருக்கிறேன். நேற்று என்னை அழைத்த மாத்திரத்தில் இந்த விழாவில் கலந்துகொள்ள இசைவு கொடுத்தேன்.

அதேபோல் பி டி செல்வகுமார் கலப்பை அமைப்பு மூலம் பல குடும்பங்களுக்கு உதவியவர். மீண்டும் என்ற திரைப்படம் சரவணன் சுப்பையா இயக்கத்தில் வரவிருக்கிறது. அனகாவின் நடிப்பும், கதிரவன் நடிப்பும் கண்டு என் உடம்பு சில்லிட்டுப் போனது, என்னுடைய எலும்பையே உருக்கி விட்டது. மீண்டும் படத்தின் கதை அமைப்பு சமூக பிரக்ஞ்னை, சமகால சமூகத்தில் நிகழ்கின்ற சம்பவத்தை புள்ளியாக வைத்துக்கொண்டு அதில் கோலமாக விரித்து தந்திருக்கின்றன் சரவணன் சுப்பையா. ஒரு மிகப் பெரிய கலைஞனாக மீண்டும் படம் மூலம் அவதாரம் எடுத்திருக்கிறார். சமூக நீதியை நோக்கி சினிமா நகர்ந்து வருகிறது என்று இன்றைக்கு தமிழ் இந்துவில் செய்திக் கட்டுரை படித்தேன். நானும் இன்றைக்கு சினிமாவை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறேன். எல் கேஜி படத்தில் நான் நடித்தபிறகு சினிமாவால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை தெரிந்துக்கொண்டேன். மீண்டும் படம் பெரிய வெற்றி படமாக அமையும்.

ரங்கராஜ் பாண்டே பேசியதாவது:

திரையுலகம் எப்போதுமே மிகப்பெரிய ரீச்சை கொண்டதாக இருக்கிறது. 23 ஆண்டுகள் பத்திரிகை மீடியாவில் கிடைத்தைவிட நேர்கொண்ட பார்வை படத்தில் அஜீத்துடன் நடித்த பிறகு பெரிய வரவேற்பு கிடைத்தது.

சினிமா அவ்வளவு பெரிய வலிமை கொண்டது. ரஜினி அரசியலுக்கு வந்தால் தங்கள் கட்சி என்னவாகும் என்று பலர் கவலைப்பட்டதற்கு காரணம் திரையுலகம் அவரை பிரபலப்படுத்தி வைத்திருந்தது.

அப்படிப்பட்ட வீரியம் திரையுலகுக்கு இருக்கிறது. அதனாலேயே சமூக கருத்தை வலியுறுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. இன்றைக்கு சினிமா எடுப்பது சவாலாகிவிட்டது. சினிமாக்காரர்கள் எல்லாம் சமூக விஷயத்திலும் தலையிட ஆரபித்து விட்டார்கள்..

சினிமாவைப் பற்றி அரசியல்வாதிகள் நிறைய விமர்சனம் செய்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அரசியலுக்கு உள்ளே இவர்கள் நேரடியாக வருவதால் ஒரு கேரக்டருக்கு பெயர் வைப்பதற்கு கூட நிறைய யோசிக்க வேண்டி உள்ளது. மீண்டும் பட டிரைலர் பார்த்தபோது இது த்ரில்லர் படமா, சமூக பிரச்னையை பேசும் படமா என்று யோசித்தேன். சவாலான விஷயத்தை இதில் சரவணன் சுப்பையா கையாண்டிருக்கிறார். இது சரவண சுப்பையாவுக்கு ஒரு கம்பேக் ஆக, மிகப்பெரிய உயரத்துக்கு இட்டுச்செல்லும் மைல்கல்லாக இருக்கும். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும்.

இயக்குனர் ரவிமரியா பேசியதாவது:

திண்டுக்கல் லியோனி, நாஞ்சில் சம்பத் ஆகியோரின் பேச்சை கேட்க வந்திருக்கிறேன். அதேபோல் ரங்கராஜ் பாண்டே ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்தவர் என்று சொன்னார். பி டி செல்வகுமார் இன்றைக்கு ஆபத் பாண்டவராக இருக்கிறார்.. ஜெயில் படம் வெளிவரமுடியாத சூழல் இருந்தபோது அதை வெளிக்கொண்டு வர எல்லா உழைப்பும் தந்தவர். மீண்டும் பட ஹீரோவை பற்றி சொல்லி ஆக வேண்டும் கிட்டதட்ட முழுநிர்வாணமாக இந்த படத்தில் கதிரவன் நடித்திருக்கிறார். டிரைல்ரை பார்க்கும்போது கண்கலங்கிவிட்டேன்.

அவருக்கு பெரிய இடம் சினிமாவில் காத்திருக்கிறது. அதேபோல் படத்தின் ஒளிப்பதிவு திருப்பதி லட்டு மாதிரி இருக்கிறது. தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களெல்லாம் மீண்டும் படத்தை பார்த்து இயக்குனர் சரவணன் சுபையாவை பாராட்டிவிட்டார்கள். இந்த படத்தில் இரண்டு அப்பாக்கள் ஒரு அம்மா என்ற கதை அம்சம் கொண்டது. மீண்டும் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும்.

இவ்வாறு பேசினார்கள்.

Celebrities wishes to citizen director’s Meendum movie

More Articles
Follows