2வது திருமணம் செய்துக் கொண்ட இயக்குனரும் நடிகருமான அருண்ராஜா காமராஜ்

2வது திருமணம் செய்துக் கொண்ட இயக்குனரும் நடிகருமான அருண்ராஜா காமராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் அருண் ராஜா காமராஜ்.

ரஜினி நடித்த ‘கபாலி’ படத்தில் இவர் பாடிய ‘நெருப்புடா….’ பாடல் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

சிவகார்த்திகேயன் நடித்த ‘கனா’ மற்றும் உதயநிதி நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ ஆகிய படங்களை இயக்கியவர் இவர்.

இந்த இரு படங்களும் அருண் ராஜா காமராஜுக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.

இவரின் மனைவி சிந்துஜா கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காலமானார்.

இந்த நிலையில் இவரது மனைவி இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் தற்போது அருண் ராஜா காமராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த திருமணம் ஓரிரு தினங்களுக்கு முன் அதாவது அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்றதாம்

விரைவில் தனது 2வது திருமணம் பற்றிய அறிவிப்பை அருண்ராஜா காமராஜ வெளியிடுவார் என கூறப்படுகிறது.

‘தியாகி பாய்ஸ்’ ரெடியா.?; ‘காஃபி வித் காதல்’ குழுவுடன் FDFS பார்க்க ப்ரீ சான்ஸ்

‘தியாகி பாய்ஸ்’ ரெடியா.?; ‘காஃபி வித் காதல்’ குழுவுடன் FDFS பார்க்க ப்ரீ சான்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தர் சி இயக்கத்தில் குஷ்பூ தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காஃபி வித் காதல்’.

இந்த படம் நவம்பர் 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்தப் படக்குழுவினர் ரசிகர்களுக்கு ஒரு நடனப் போட்டியை அறிவித்துள்ளனர்.

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘தியாகி பாய்ஸ்…’ என்ற பாடலை ரீல்ஸ் செய்து வருகிற நவம்பர் 3ம் தேதிக்குள் பட குழுவினருக்கு அனுப்பினால் அதற்கு அடுத்த நாள் ‘காஃபி வித் காதல்’ பட குழுவினருடன் காபி அருந்திக் கொண்டே முதல் நாள் முதல் காட்சி பார்க்கலாம் என தெரிவித்துள்ளனர்.

‘காஃபி வித் காதல்’ படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகி பாபு, மாளவிகா ஷர்மா, அம்ரிதா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, திவ்ய தர்ஷினி, சம்யுக்தா சண்முகம், ரெட்டின் கிங்ஸ்லி என பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

‘தியாகி பாய்ஸ்’ பாடலை யுவன் சங்கர் ராஜாவும் ஹிப்ஹாப் ஆதியும் சேர்ந்து இப்பாடலை பாடியுள்ளனர். (இதற்கு முன்னதாக இருவரும் அன்பறிவு படத்தில் இடம்பெற்ற ”அரக்கியே” எனும் பாடலை இருவரும் சேர்ந்து பாடினர் என்பது குறிப்பிடத்தக்கது).

இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

உங்களை தியாகம் செய்ய ரெடியா..?

நயன்தாராவை அடுத்து காஜலுடன் இணைந்த யோகிபாபு.; வைரலாகும் ‘கோஸ்டி’ டீசர்

நயன்தாராவை அடுத்து காஜலுடன் இணைந்த யோகிபாபு.; வைரலாகும் ‘கோஸ்டி’ டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘குலேபகவாலி’, ‘ஜாக்பாட்’ & ‘ஷூ’ ஆகிய காமெடி படங்களை இயக்கியவர் கல்யாண்.

இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘கோஸ்டி. (GHOSTY)

இந்த படத்தில் காஜல் அகர்வால், யோகி பாபு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

(இதற்கு முன்பு முன்னணி நடிகையான நயன்தாராவுடன் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார் யோகி பாபு என்பது குறிப்பிடத்தக்கது.)

இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி, ஆடுகளம் நரேன், சந்தான பாரதி, சுரேஷ் மேனன், தங்கதுரை, மயில்சாமி, மொட்டை ராஜேந்திரன், தேவதர்ஷினி, சத்யன், ஸ்ரீமன், சுப்பு பஞ்சு, மனோபாலா, அஜய் ரத்தினம் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஜாகோப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மேற்கண்ட கதாபாத்திரங்கள் இடம் பெற்று இருந்தனர். அதன் பின்னணியில் பாராளுமன்ற போஸ்டரும் இடம் பெற்றிருந்தது.

இதனையடுத்து திரையுலகில் பரபரப்பு உண்டானது.

இந்த நிலையில் இன்று இப்பட டீசரை தற்போது வெளியிட்டுள்ளனர்

 

அஜித்தின் ‘துணிவு’.; அப்டேட் கொடுத்த ஹீரோயின் மஞ்சு வாரியர்

அஜித்தின் ‘துணிவு’.; அப்டேட் கொடுத்த ஹீரோயின் மஞ்சு வாரியர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘துணிவு’ படம் அடுத்த ஆண்டு 2023 பொங்கல் தினத்தில் வெளியாகிறது.

ஜீ ஸ்டூடியோஸ் சார்பாக இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

ஜிப்ரான் இசையமைத்து வரும் இந்த படத்தில் நாயகியாக மஞ்சு வாரியார் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி ஸ்டாலின் பெற்றிருக்கிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக பட குழுவினர் அறிவித்தனர்.

தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தன் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக நாயகி மஞ்சு வாரியார் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘நம்மாழ்வார்’ விருது : ‘பிக்பாஸ்’ இப்படி இருந்தா நாடு உருப்படும்.; மன்சூர் அலிகான் செம ஐடியா

‘நம்மாழ்வார்’ விருது : ‘பிக்பாஸ்’ இப்படி இருந்தா நாடு உருப்படும்.; மன்சூர் அலிகான் செம ஐடியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும், அதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் பற்றியும் சோசியல் மீடியாவில் தகவல்கள் வைராகி கொண்டிருக்கிறது.

ஆனால், இவை அனைத்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான். கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விட, அதில் பங்கேற்க இருப்பதாக சொல்லப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் பற்றிய தகவல்கள் தான் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அதிலும், ”நான் வந்தா பிக் பாஸாக தான் வருவேன்” என்ற அவரது பஞ்ச் பிக் பாஸ் வீட்டையே ஆட்டம் காண செய்துவிட்டது.

பிக் பாஸ் போட்டியில் பலமான போட்டியாளர்களும், பிரபலமான முகங்களும் இல்லாத காரணத்தால், அனைத்தையும் சமாளித்து அதிரடி காட்டும் ஒருவரை தேடிய நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் நடிகர் மன்சூர் அலிகானை தேர்வு செய்து அவரை அணுகியதாக சொல்லப்படுகிறது.

ஆனால், நம்ம அதிரடி மன்னன் மன்சூர் அலிகான், தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருவதால் 6 மாதங்களுக்கு தன்னிடம் தேதி இல்லை, என்று சொல்லியிருக்கிறார்.

அப்படியே ஒருவேளை தேதிகளை சரிசெய்து பிக் பாஸ் போட்டியில் பங்கேற்க நான் சம்மதித்தாலும், நான் தான் பிக் பாஸாக இருந்து போட்டியை நடத்துவேன், என்று சொல்லியதோடு, 100 ஏக்கர் பொட்டல் நிலத்தை என்னிடம் கொடுங்கள், போட்டியாளர்களை வைத்து அந்த இடத்தை விவசாய நிலமாக மாற்றி, அதில் விளைச்சல் செய்து காட்டுவது தான் போட்டி. இதில் வெற்றி பெறுபவர்களை வெற்றியாளராக அறிவிக்க வேண்டும். இப்படி ஒரு நிகழ்ச்சியாக தான் நான் பிக் பாஸ் போட்டியை நடத்துவேன், என்றும் கூறியிருக்கிறார்.

மன்சூர் அலிகானின் இந்த ஐடியாவை பிக் பாஸ் நிகழ்ச்சி குழுவினர் ஏற்றுக் கொண்டார்களோ, இல்லையோ, ஆனால் தற்போது சோசியல் மீடியாவில் மன்சூர் அலிகானின் பிக் பாஸ் நிபந்தனை தான் வைரலாகி வருகிறது. மன்சூர் அலிகான் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்க போகிறார், என்ற செய்தியை தாண்டி தற்போது மன்சூர் அலிகான், பிக் பாஸ் நிகழ்சிக்கே போட்டியாக, பல கருத்துக்களை வைரலாகி வருகிறார்.

இந்த நிலையில், புதிய வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்றை நடத்தப்போவதாக்க நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்திருப்பது பிக் பாஸ் ரசிகர்களிடமும், டிவி சேனல்கள் ஏரியாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது உண்மையா?, புதிய பிக் பாஸ் நிகழ்ச்சி சாத்தியமா? என்பது குறித்து நடிகர் மன்சூர் அலிகானையே தொடர்பு கொண்டு கேட்டபோது,

”பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கேற்க மாட்டேன், என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். அப்படி இருந்தும் தொடர்ந்து நான் அதில் பங்கேற்கப் போவதாக செய்திகள் பரவியது. அதனால் தான் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் பிக் பாஸாக போட்டியை நடத்துவேன், என்று கூறினேன். நான் கூறியது வைரலாகி இப்போது அதுபற்றி என்னிடம் ரசிகர்க்களும், மக்களும் கேட்க தொடங்கிவிட்டார்கள்.

எனவே, இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், மக்களுக்கும் நாட்டுக்கும் பயன்படும் வகையில் வித்தியாசமான ஒரு நிகழ்ச்சியாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியிருக்கிறது. இதை வித்தியாசமான, புதிய வகை பிக் பாஸ் என்று எடுத்துக்கொண்டாலும் தவறில்லை.

நான் சொல்லும் யோசனைபடி பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்தால் இயற்கை விவசாய புரட்சி ஏற்படும். விவசாயிகள் மகிழ்ச்சியடைவார்கள். இங்கு வெற்றியாளர், தோல்வியடைந்தவர் என்று இருக்காது. அனைவருக்கும் விருது வழங்கப்படும். நம்மாழ்வார் உள்ளிட்ட விவசாயத்திற்காக பாடுபட்டவர்களின் பெயரில் விருதுகள் வழங்கப்படும்.

நான் குதிரை மீது வந்து தான் போட்டியில் பங்கேற்பேன். எலிமினேஷன் ஆகிறவர்கள் எருமை மாட்டை குளிப்பாட்ட வேண்டும். மாடுகளை வளர்க்க வேண்டும், யானைகளை கட்டி போரடிக்க வேண்டும். இப்படி பல வகையான போட்டிகளை நடத்துவேன்.

இந்த போட்டியில் உள்ளூர் போட்டியாளர்கள் மட்டும் அல்ல வெளிநாட்டில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்துக்கொள்ளலாம். இதன் மூலம் வெளிநாட்டினரின் அதிநவீன விவசாய கருவிகள் நம் நாட்டுக்கு வரும். மரம் ஏறுவதற்கு சரியான கருவி இல்லாமல் நாம் கஷ்ட்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு போட்டி நடத்தினால் நமக்கு பல அதிநவீன கருவிகளும், கண்டுபிடிப்பாளர்களும் கிடைப்பார்கள்.

மேலும், விவசாயத்தின் மீது தற்போதைய தலைமுறைக்கு ஆர்வம் ஏற்படுவதோடு, இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட ஒரு வழியாகவும் இந்த போட்டி அமையும். இதன் மூலம் நாட்டில் மிகப்பெரிய இயற்கை விவசாய புரட்ச்சி ஏற்படும்.

இன்று விற்கப்படும் காய்கறிகள் அனைத்தும் செயற்கைத்தன்மை வாய்ந்ததாகவும், ஹைப்ரீட் வகைகளாகவும் இருக்கிறது. இதனால் சிறுவயதில் பல நோய்களுக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, இப்படி ஒரு போட்டி மூலம் இயற்கை முறையில் காய்கறி வளர்த்தலையும், இயற்கை உணவு சமைத்தல் போன்றவற்றை கொண்டு புதிய வகையிலான நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தினால், அது வியாபார அளவில் மட்டும் இன்றி மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் வழி வகுக்கும்.” என்றார்.

ஆஹா…அட்டகாசமான ஐடியாவா இருக்கே, இந்த புதிய வகை பிக் பாஸ் நிகழ்ச்சியை எந்த டிவி-க்காக நடத்தப் போறீங்க? என்று அவரிடம் கேட்க, “இது என் யோசனை என்பதால் இதை நான் தான் நடத்த வேண்டும் என்பதில்லை, இதை யார் வேண்டுமானாலும் நடத்தலாம். இப்படி நடந்தால் நல்லா இருக்கும் என்று சொல்கிறேன். அப்படி இந்த போட்டியை என்னை வைத்து நடத்த எந்த தொலைக்காட்சி முன் வந்தாலும் அவர்களுக்காக நான் ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன்.

கதையின் நாயகனாகவும், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களின் படங்கள் என்று நான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சிக்காக தேதிகளை ஒதுக்க தயாராகவே இருக்கிறேன். காரணம், இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தினால், அது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மட்டும் இன்றி, டிவி முன்பு உட்கார்ந்து நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கும் பயன் தரும்.” என்று பட்டாசு வெடித்தது போல் பதில் கூறினார் மன்சூர் அலிகான்.

Mansoor Ali Khan

JUST IN உங்க பாட்டுல எது பிடிக்கும்? கிருத்திகாவிடம் கேட்டு சிக்கிய ‘நித்தம் ஒரு வானம்’ நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்

JUST IN உங்க பாட்டுல எது பிடிக்கும்? கிருத்திகாவிடம் கேட்டு சிக்கிய ‘நித்தம் ஒரு வானம்’ நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் ரா. கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள படம் ‘நித்தம் ஒரு வானம்’.

ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.

பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்க வித்து அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வியாகாம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

மலையாளத்தில் ‘ஆகாசம்’ என்ற தலைப்பில் இப்படம் வெளியாகிறது.

இந்தப் படத்தின் பெரும்பாலான பாடல்களை கிருத்திகா என்பவர் எழுதியிருக்கிறார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் & டிரைலர் அனைவரையும் கவர்ந்துள்ளது.

‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந்தேதி வெளியாக உள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி தற்போது சென்னை வடபழனி ஃபோரம் மாலில் நடந்து வருகிறது.

இந்த விழாவில் பட குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது பாடலாசிரியை கிருத்திகாவிடம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஆர் ஜே விக்னேஷ் ஒரு கேள்வி கேட்டார்.

“இந்தப் படத்துல நீங்க எழுதுன பாட்டுல எது உங்களுக்கு பிடிக்கும்? என்ற கேள்வியை கேட்டார்.

அதற்கு கிருத்திகா பதிலளிக்கையில்…

“உங்கள் அம்மாவிடம் நீங்கள் பெற்ற குழந்தைகளில் எந்தக் குழந்தை பிடிக்கும்? என்று கேட்டால்.. உங்கள் அம்மா என்ன சொல்லுவாரோ அதுவே என் பதில் என நெத்தியடியாக பதில் அளித்தார் கவிஞர்.

More Articles
Follows