உதயநிதி – தான்யா படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டரை வெளியிட்ட அருண்ராஜா

உதயநிதி – தான்யா படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டரை வெளியிட்ட அருண்ராஜா

உதயநிதி ஸ்டாலின் நடிக்க இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார் என்று அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து இருந்தது.

இந்த நிலையில் தற்போது “நெஞ்சுக்கு நீதி” என இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகி இணையதளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றது.

இது ஆர்ட்டிக்ள் 15 ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

இப்படத்தின் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார்.

முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர்.

மேலும் மயில் சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இசை – திபு நினன் தாமஸ்
ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்
படத்தொகுப்பு – ரூபன்
கலை – வினோத் ராஜ்குமார், லால்குடி இளையராஜா
சண்டைப்பயிற்சி – Stunner சாம்

Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects வழங்க ராகுல் அவர்களின் ROMEOPICTURES இப்படத்தை வெளியிடுகின்றது.

வெகு வேகமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Udhayanidhi Tanya Arunrajas film titled Nenjukku Needhi

FILMISTREET NEWS now OFFICIAL விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ரித்திகா சிங்.; டெரர்ரான டைட்டில் லுக் வெளியீடு

FILMISTREET NEWS now OFFICIAL விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ரித்திகா சிங்.; டெரர்ரான டைட்டில் லுக் வெளியீடு

பாலியல் தொழிலாளியாக பூஜா நடித்த படம் ‘விடியும் முன்’. அந்த படத்தை இயக்கியவர் பாலாஜி குமார்.

இவர் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் ஒரு படத்தை இயக்கியுள்ளார்.

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்து வருகிறார். முக்கிய வேடத்தில் ராதிகா & மீனாட்சி சவுத்ரி நடிக்கின்றனர்.

கொரோனா ஊரடங்குக்கு முன்பே இப்பட குறித்த தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் இப்படத்திற்கு ‘கொலை’ என தலைப்பு வைத்து டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

INFINITE & LOTUS நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

அக்னி சிறகுகள், காக்கி மற்றும் பிச்சைக்காரன் 2 ஆகிய படங்கள் விஜய் ஆண்டனி கைவசம் உள்ளது.

இந்த தகவலை நம் தளத்தில் 2021 மார்ச் 29ல் பதிவிட்டு இருந்தோம். தற்போது இந்த தகவலின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் லிங்க் இதோ…

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ரித்திகா சிங்..; இயக்குனர் இவரா? https://www.filmistreet.com/cinema-news/vijay-antony-and-ritika-singh-teams-up-for-ott/

Vijay Antony and Ritika Singh teams up for KOLAI

செம்மரம் வெட்டும் தொழிலாளர்களின் வாழ்வியலைச் சொல்லும் RED SANDAL

செம்மரம் வெட்டும் தொழிலாளர்களின் வாழ்வியலைச் சொல்லும் RED SANDAL

மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படங்களுக்கு எப்போதும் ரசிகர்களிடம் வரவேற்பு உண்டு.

அப்படி ஒரு வலுவான கதைக் களத்தோடு உருவாகும் படம் ’ரெட் சேன்டில்’. (RED SANDAL)

இதில் நாயகனாக வெற்றி நடித்துள்ளார். இவர் ‘ஜீவி’, ‘ 8 தோட்டாக்கள்’ போன்ற படங்களில் நடித்தவர். நாயகியாக தியா மயூரி நடிக்கிறார்.

வில்லனாக ‘கே.ஜி.எஃப்’ புகழ் கருடா ராம் நடிக்கிறார். முக்கியமான வேடங்களில் எம்.எஸ்.பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராம், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், மாரிமுத்து, ‘கபாலி’ விஷ்வாந்த், மாரி விநோத், ‘கர்ணன்’ ஜானகி உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

‘கழுகு’ சத்ய சிவாவிடம் பணியாற்றிய குரு ராமானுஜம் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

படம் குறித்து இயக்குனர் குருராமானுஜம் கூறியதாவது…

இது ஆக்ஷன் கலந்த த்ரில்லர் ஜானரில் உருவாகும் படம். 2015 ல் நடந்த உண்மைச் சம்வத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளேன்.

அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்களின் உயிர் போலீஸ் தோட்டக்களுக்கு இரையானது என்பது வரலாறு.

உண்மையில் இதுப் போன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் வறுமையை பயன்படுத்தி மூளைச் சலவை செய்து இந்த தொழிலில் ஈடுபட வைக்கிறார்கள.

கதை ரேணிக்குண்டாவில் நடக்கிறது. செம்மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களின் விளிம்பு நிலை வாழ்க்கையை பற்றி சொல்லும் இந்தப் படம் கமர்ஷீயல் அம்சங்களோடு உருவாகியுள்ளது.

வனப் பகுதியில் நடக்கும் கதை என்பதால் காட்டில் உள்ள சிறிய உயிரினங்கள் முதல் பெரிய விலங்குகள் வரை அனைத்து மிருகங்களின் ஓசையையும் நுட்பமாக படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர்.

‘ஆஸ்கார்’ நாயகன் ரசூல் பூக்குட்டி சாரிடம் படத்தைக் காண்பித்தபோது, ‘இது விருதுகளுக்கு தகுதியானப் படம்‘ என்று வாழ்த்தியதோடு அவரே சவுண்ட் டிசைனிங் பணிகளை மேற்கொள்வதாக சொல்லிய அந்த தருணம் பெருமைக்குரியது.

சாம்.சி.எஸ், யுகபாரதி கூட்டணியில் பாடல்கள் அற்புதமாக வந்துள்ளன.

JN சினிமா நிறுவனம் சார்பில் மிகப் பிரம்மாண்டமாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார் பார்த்தசாரதி.

அடித்தட்டு மக்களின் வாழ்வியலைச் சொல்லும் இந்தப் படம் அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் விதமாக பொழுதுப்போக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ளதே இதன் தனிச் சிறப்பு’ என்றார்.

அனைவருக்கும் இனிய விஜய தசமி வாழ்த்துகள்!

நன்றி!

குருராமானுஜம் (இயக்குநர்)

ப்ரியா (மக்கள் தொடர்பாளர்)

8 Thottakkal & Jiivi Hero Vetri’s #RedSandal First Look Poster released

எல்லா ஜாதியிலும் பெரிய திருடன்ங்க இருக்காங்க..; அரசை எதிர்த்து வழக்கு போட்ட சூர்யா

எல்லா ஜாதியிலும் பெரிய திருடன்ங்க இருக்காங்க..; அரசை எதிர்த்து வழக்கு போட்ட சூர்யா

சூர்யா நாயகனாக நடிக்க டி ஜே ஞானவேல் இயக்கும் ‘ஜெய் பீம்’ படத்தை சூர்யா – ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் பரபரப்பான டீஸரை ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது.

சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று ஜெய் பீம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அமேசனின் ஸ்ட்ரீமிங் சேவையில் வெளியாகிறது.

தங்களுக்கென சொந்தமாக நிலம் இல்லாத, தலைக்கு மேல் ஒழுங்காக ஒரு கூரையில்லாத, ஆனால் எளிமையில் சந்தோஷம் காணும் ஒடுக்கப்பட்ட அப்பாவிப் பழங்குடி மக்களின் கடின உழைப்பு நிறைந்த வாழ்க்கையைப் பற்றிய கதையை ஜெய் பீம் விவரிக்கிறது.

சமூக அநீதியும், மனிதர்களின் மிருகத்தன்மையும் இந்த அப்பாவி உயிர்களை பாதிக்க, வழக்கறிஞர் சந்துரு (சூர்யா) இவர்களின் மனித உரிமைகளுக்காகப் போராடுகிறார்.

விறுவிறுப்பான, மிகத் தீவிரமான ஒரு கதைக்கரு மனதைப் பிசையும், அதே சமயம் நெகிழவும் செய்யும் ஒரு களத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இதற்கான முன்னோட்டத்தை இந்த டீஸர் காட்டியுள்ளது. வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தை நடிகர் சூர்யா மிக நேர்த்தியாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார்.

இந்த டீசரில்… “எல்லா ஜாதியிலும் பெரிய பெரிய திருடன்ங்க இருக்காங்க….

நாம போலீசை எதிர்த்து வழக்கு பாடல்.. நம்ம அரசாங்கத்தை எதிர்த்து வழக்கு போடுறோம்” என சூர்யா பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளது.

ஜெய் பீம் திரைப்படத்தின் இணைதயாரிப்பை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் கவனிக்க, ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் எஸ் ஆர் கதிர், படத்தொகுப்பு ஃபிலோமின் ராஜ், கலை இயக்கம் கதிர்.

நவம்பர் 2ஆம் தேதி, , தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜெய் பீம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது

Actor Suriya takes on the government to protect a tribal woman

FILMI STREET NEWS now OFFICIAL நயன்தாராவுடன் இணைகிறார் ‘லிப்ட்’ கவின்

FILMI STREET NEWS now OFFICIAL நயன்தாராவுடன் இணைகிறார் ‘லிப்ட்’ கவின்

Rowdy pictures சார்பில் நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் தமிழ் சினிமாவுலகில் அடுத்தடுத்து பல ஆச்சர்யமான படைப்புகளை அறிவித்து வருகின்றனர்.

உலகமெங்கும் விருதுகளை அள்ளி குவித்து வரும் “கூழாங்கல்” மற்றும் இரத்தமும் சதையுமாக, அதிர்ச்சி மிகுந்த படைப்பாக உருவாகியுள்ள “ராக்கி” ஆகிய படங்கள் Rowdy pictures சார்பில் வெளியீட்டுக்கு தயராகி வருகிறது.

இந்நிலையில் இந்நிறுவனம் தனது புதிய படைப்பாக “ஊர்குருவி” படத்தினை அறிவித்துள்ளது.

ஒரு புறம் மெலோ டிராமாவாக உருவாகியுள்ள ‘கூழாங்கல்’ இன்னொரு புறம் க்ரைம் திரில்லராக உருவாகியிருக்கும் ‘ராக்கி’ என இரு வித்தியாசமான படைப்புகளை வெளியிடும் இந்நிறுவனம் முழுக்க முழுக்க காமெடி டிராமாவாக “ஊர்குருவி” படத்தினை உருவாக்கவுள்ளது.

சமீபத்திய வெளியீடான “லிப்ட்” படம் மூலம் மிகச்சிறந்த நடிகர் என பாரட்டுக்களை குவித்து, வெற்றி பெற்றிருக்கும், நடிகர் கவின் இப்படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவனின் உதவியாளராக ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திலும், இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் ‘டிமாண்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள்’ படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய அருண் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியதாவது…

அருண் என்னிடம் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அவரது ஐடியாக்களும் அவரின் தெளிவான சிந்தனையும் என்னை எப்போதும் ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்கும்.

Rowdy pictures சார்பில், “ஊர்குருவி” படம் மூலம் அவரை இயக்குநராக அறிமுகம் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது.

இப்படத்தில் நடிக்க தமிழின் முக்கியமான பெரிய நட்சத்திரங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும்.

இப்படம் முழுமையாக தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. நேர்த்தியான, தரமான கதைகளின் மீது Rowdy pictures எப்போதும் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கிறது.

ஊர்குருவி ரசிகர்களுக்கு இன்பமயமான ஒரு அனுபவத்தை தரும் என்றார்.

இந்த செய்தியை நாம் 2 வாரங்களுக்கு முன் நம் தளத்தில் பதிவிட்டு இருந்தோம்..

அந்த லிங்க் இதோ..

நயன்தாரா – விக்னேஷ்சிவன் கூட்டணியில் இணையும் கவின். https://www.filmistreet.com/cinema-news/actor-kavins-next-project-with-nayanthara-and-vignesh-shivan/

*Posted on 5th Oct*. ???

Kavin’s next film with Nayanthara and Vignesh Shivan combo

OFFICIAL ‘நெற்றிக்கண்’ இயக்குனருடன் இணையும் ‘பாகுபலி’ வில்லன்

OFFICIAL ‘நெற்றிக்கண்’ இயக்குனருடன் இணையும் ‘பாகுபலி’ வில்லன்

‘பாகுபலி’ புகழ் நடிகர் ராணா டகுபதி, தசரா பண்டிகை கொண்டாட்டத்தை ஒட்டி, தன் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளார்.

அவரது அடுத்த திரைப்படம் தெலுங்கு & இந்தி மற்றும் தமிழ் என பன்மொழிகளில் பிரமாண்ட இந்திய திரைப்படமாக உருவாகிறது.

இப்படத்தினை Gruham, The House Next Door, அவள் மற்றும் நயன்தாரா நடித்த நெற்றிக்கண் படைப்புகளை உருவாக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் எழுதி, இயக்குகிறார்.

இத்திரைப்ப்டத்தின் பணிகள் 2022 துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தினை Spirit Media நிறுவனம் Viswasanti Pictures மற்றும் Veedansh Creative Works நிறுவனஙகளுடன். இணைந்து வழங்குகிறது. கோபிநாத் அச்சந்தா, அர்ஜூன் தஷ்யன் மற்றும் ராம்பாபு சோடிஷெட்டி இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்த இனிய செய்தி முதன்முதலில் டிவிட்டரில் @VISWASANTIPICTS பக்கத்தில் வெளியிடப்பட்டது.

பின்னர் இதனை @RanaDaggubati தனது பக்கத்தில் டிவிட் செய்தார். Viswasanti Pictures தெலுங்கு திரையுலகில் 30 வருடங்களாக, கொடிகட்டிப்பறக்கும் தயாரிப்பு நிறுவனம் ஆகும்.

இந்நிறுவனம் ஜம்பலக்கடி பம்பா மற்றும் அஞ்சலி சிபிஐ போன்ற ப்ளாக்பஸ்டர் ஹிட்களை தந்துள்ளது

இந்த இனிய அறிவிப்பை அடுத்து, தயாரிப்பாளர் அச்சந்தா கோபிநாத் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அனைத்து தகவல்களும், எங்கள் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கமான @VISWASANTIPICTS வழியாக வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Rana Daggubati to star in Milind Rau story/direction in new movie

More Articles
Follows