சினிமாவை தாண்டும் வெப்சீரிஸ்.. நமக்கான அடையாளத்தை சொல்லும் லேபில்.. – சாம் சி.எஸ்.

சினிமாவை தாண்டும் வெப்சீரிஸ்.. நமக்கான அடையாளத்தை சொல்லும் லேபில்.. – சாம் சி.எஸ்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோர் நடித்த ‘லேபில்’ ஒரிஜினல் சீரிஸை, நவம்பர் 10, 2023 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.

இதனையொட்டி பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்காக “லேபில்” சீரிஸின் நான்கு எபிசோடுகள், சிறப்புத் திரையிடல் செய்யப்பட்டது.

இந்த சிறப்புத் திரையிடலைத் தொடர்ந்து, லேபில் வெப்சீரிஸ் குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் சாம் C S பேசியதாவது…

ஹாட்ஸ்டாருக்கு நான் செய்யும் இரண்டாவது சீரிஸ் இது. சீரிஸ் என்றாலே டிவி நாடகத்துக்கு அடுத்த கட்டம் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் இது சினிமாவை தாண்டிய அடுத்த கட்டம், வரும் காலத்தில் சினிமாவை விட வெப் சீரிஸ் தான் பெரிதாக இருக்கும். நான் செய்து வரும் சீரிஸ்களே அதற்குச் சாட்சி, அதில் ஒன்று தான் லேபில். நமக்கு என்று ஒரு அடையாளம் தேவை என்பதை எல்லோருமே நினைப்போம், அது மாதிரி அடையாளப் பிரச்சனையைச் சொல்லும் சீரிஸ் தான் இது. இப்போது பார்த்த எபிசோட் உங்களுக்குப் பிடித்திருக்குமென நம்புகிறேன்.

இதில் மூவி மாதிரி தான் வேலை பார்த்தோம், பாடல் எல்லாம், ஒரு கமர்ஷியல் படம் போலவே இருக்கிறது. எங்கள் டீமின் உழைப்பு உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறேன். அருண் ராஜாவுடன் உழைத்தது மிக மகிழ்ச்சி. ஜெய் உடன் படம் செய்திருக்கிறேன்.

ஆனால் இந்த சீரிஸில் அவர் தன்னை அந்தக்கதாபாத்திரமாகவே மாற்றி நடித்திருக்கிறார். தினேஷ் மிக அழகான விஷுவல்ஸ் தந்துள்ளார், எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளனர். மிகச்சிறப்பான சீரிஸாக இருக்கும். எல்லோருக்கும் நன்றி.

எழுத்தாளர் ஜெயசந்திர ஹாஸ்மி பேசியதாவது…

எனக்கு முதல் மேடை, ஒரு மேடை கிடைப்பது அரிது, இந்த மேடையை அமைத்துத் தந்ததற்காக அருண் ராஜாவிற்கு நன்றி. இயக்குநர் ஆவது தான் என் கனவு. அருண்ராஜாவின் படங்கள் மிகவும் பிடிக்கும், இந்த சீரிஸ் அவருடன் வேலை பார்த்தது சிறந்த அனுபவம், தப்பித்தவறி கூட ஒரு சமூகத்தைத் தப்பாக அடையாளம் காட்டிவிடக்கூடாது, என்பதில் மிகத்தெளிவாக இருந்தார். அது தான் அவரிடம் பிடித்த விசயம். நாங்கள் என்ன எழுதினோமோ அதை திரையில் கொண்டு வந்தார் ஜெய். லேபில் நம் மீது சமூகம் வைக்கும் முத்திரையை உடைத்து, நமக்கான அடையாளத்தைத் தேடிப் போகும் ஒருவனின் கதை தான். தமிழில் ஒரு சிறந்த சீரிஸாக இது இருக்கும் நன்றி.

நடன இயக்குநர் அசார் பேசியதாவது…

ஒரு வெப் சீரிஸில் பாட்டா ? என எல்லாரும் யோசிப்பார்கள், ஆனால் அது தான் அருண்ராஜா மாஸ்டர். சீரிஸில் பாட்டு வைத்ததற்கு அவருக்கு நன்றி. சீரிஸில் பாட்டு எடுப்பது வித்தியாசம், ஆனால் அதில் நிறையப் புதுசாக செய்துள்ளோம். மாண்டேஜாக நிறைய எடுத்தோம். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.

நடிகர் ஹரி சங்கர் பேசியதாவது…

இது எனக்கு மிகவும் முக்கியமான சீரிஸ், இதில் வாய்ப்பு தந்ததற்கு அருண் ராஜா அவர்களுக்கு நன்றி. நெருப்புக் குமாராக எனக்கு ஒரு அடையாளம் தந்துள்ளார்கள். மகேந்திரன் என் நீண்ட கால நண்பன், எனக்காக அவன் பெருமைப்படுவான், அவனுக்காக நான் பெருமைப்படுவேன். தீபாவளிக்கு வீட்டிலிருந்து இந்த லேபிலை கொண்டாடுங்கள் நன்றி.

நடிகர் ஹரீஷ் குமார் பேசியதாவது…

எனக்கும் இது ஒரு மிக முக்கியமான அடையாளம், 6 வருடம் கழித்து என்னை மேடை முன்னே நிற்க வைத்துள்ளீர்கள், நான் தொலைத்த இடத்தைத் தந்து என்னைப் பாராட்ட வைத்துள்ளீர்கள், அருண் ராஜாவிற்கு நன்றி. ஒளிப்பதிவாளர் தினேஷ் என்னை மிக அழகாகக் காட்டியதற்கு நன்றி. ஜெய் பிரதர் எனக்கு மிக சப்போர்ட்டாக இருந்தார் நன்றி.

முத்தமிழ் படைப்பகம் நிறுவனத்திற்கு நன்றி. மகேந்திரன் எங்குப் பார்த்தாலும் என்னைப் பாராட்டுவான் தேங்க்யூ தம்பி. எல்லோரும் என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். இதில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். எங்களைக் கொண்டு சேர்க்கும் டிஸ்னி ஹாட்ஸ்டாருக்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி.

Web series is bigger than Movies says Music composer Sam CS

2024 பொங்கலில் மோதும் ரஜினி – தனுஷ் – சிவகார்த்திகேயன் – ஆர்யா.; யாரை விலக சொல்லுவார் உதயநிதி.?

2024 பொங்கலில் மோதும் ரஜினி – தனுஷ் – சிவகார்த்திகேயன் – ஆர்யா.; யாரை விலக சொல்லுவார் உதயநிதி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடுத்த வருடம் 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நிறைய தமிழ் படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

ஒரு சில படங்கள் தங்களது ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டன. அதன்படி லைக்கா தயாரிப்பில் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ‘லால் சலாம்’ படம் திரைக்கு வருகிறது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர்.

இதனையடுத்து ரவிக்குமார் இயக்கியுள்ள ‘அயலான்’ படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இதில் சிவகார்த்திகேயன், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மேலும் சுந்தர் சி தயாரிப்பில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘அரண்மனை 4’ படமும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரண்மனை ஒன்று இரண்டு மூன்று என படங்களை தொடர்ந்து இந்த படம் வெளியாவதால் பெண்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் நேற்று நவம்பர் 8ம் தேதி திடீரென தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படமும் 2024 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த படத்தை சத்யஜோதி நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இத்துடன் கேப்டன் மிலர் படத்தின் வெளிநாட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட படங்களில் லால் சலாம், அயலான் மற்றும் அரண்மனை 4′ ஆகிய படங்களை வெளியிட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

3 படங்களையும் ஒரே நாளில் வெளியிடும்போது தியேட்டர் எண்ணிக்கையில் சிக்கல்கள் வரும்.

இந்த சூழ்நிலையில் தான் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு கூடுதல் திரையரங்குகளில் ஒதுக்க படக்குழு முடிவு செய்துள்ளது. எனவே இது உதயநிதிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது.

எனவே தன்னுடைய ரெட்ஜெயன்ட் நிறுவனம் ஏதாவது ஒரு படத்தை பொங்கல் ரேஸிலிருந்து விலகச் சொல்லுவார் உதயநிதி எனக் கூறப்படுகிறது.

மேலும் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அகமத் இயக்கியுள்ள ‘சைரன்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

காத்திருப்போம்…

2024 பொங்கல்

Big movies clash on Pongal Sankranti 2024

தள்ளிப்போனது ‘கேப்டன் மில்லர்’ ரிலீஸ்.; இன்ப அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்

தள்ளிப்போனது ‘கேப்டன் மில்லர்’ ரிலீஸ்.; இன்ப அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷின் வித்தியாசமான தோற்றத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’.

மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் தனுஷூடன் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் மலையாள நடிகர் விநாயகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் ஜான் கொக்கேன், நாசர், பாலசரவணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்தப் படம் இந்த வருடம் 2023 டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் முடிவடையாத காரணத்தினால் தற்போது அடுத்த ஆண்டு 2024 பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

பொங்கல் தினம் என்றாலே நிறைய தினங்கள் விடுமுறை இருக்கும். எனவே இந்த நாட்களில் கேப்டன் மில்லரை பார்த்து கொண்டாடலாம் என இன்ப அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள் காத்திருக்க தொடங்கிவிட்டனர்.

Dhanush starrer Captain Miller release postponed

மீண்டும் ஜெய் – ஐஸ்வர்யா ஜோடியை இணைத்த ‘அறம்’ படம் இயக்குநர்

மீண்டும் ஜெய் – ஐஸ்வர்யா ஜோடியை இணைத்த ‘அறம்’ படம் இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா லாக்டவுனுக்கு முன் 2017 ஆம் ஆண்டில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘அறம்’. இந்த படத்தை கோபி நயினார் என்பவர் இயக்கி இருந்தார்.

அதன் பிறகு இவர் ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுஷி’ என்ற படத்தில் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது பின்னர் எந்த அப்டேட்டும் இல்லை.

இந்த நிலையில் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கோபி நயினார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருப்பர் நகரம்’.

இதில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜேடி சக்ரவர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர். இதன் டைட்டில் அறிவிப்பு போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே ஜெய் & ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்த ‘தீராக் காதல்’ படம் லைக்கா தயாரிப்பில் வெளியானது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லேபில்’ வெப்சீரிஸ் வரும் நவம்பர் 10-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

கருப்பர் நகரம்

Jai and Aishwarya Rajesh starrer Karuppar Nagaram

ஜிவி பிரகாஷ் குரலில் பட்டுராம் செந்தில் & ஆதேஷ் பாலா கூட்டணியில் ‘லஞ்சபூமி’

ஜிவி பிரகாஷ் குரலில் பட்டுராம் செந்தில் & ஆதேஷ் பாலா கூட்டணியில் ‘லஞ்சபூமி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பட்டு ராம் செந்தில் என்பவர் இயக்கி தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ‘லஞ்ச பூமி’.

நடிகர் ஆதேஷ் பாலா இதில் முக்கியமான வேடமேற்று நடித்துள்ளார்.

சுதாகர், சரண்ராஜ் அனுகிருஷ்னா, சாஸ்திர ரோஸ், நகைச்சுவை நடிகர் அமிர்தலிங்கம் & கே கே பாலா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ஆர் செந்தில்குமார் என்பவர் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் தொழில் நுட்ப கலைஞர்களாக மோகன்ராம் மற்றும் ஆனந்த ஜோதி ஆகியோரும் பணிபுரிந்துள்ளனர்.

தீபாவளி ரேசில் ஜப்பான், கிடா ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ரெய்டு உள்ளிட்ட படங்கள் திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் லஞ்சபூமி திரைப்படமும் தீபாவளி வெளியீடாக வருகிறது.

லஞ்சபூமி

ஆனால் இந்த படம் நேரடியாக மூவி வுட் என்ற ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்தப் படத்தின் ப்ரோமோ வீடியோவை நடிகர் ஜே எஸ் கே கோபி, சம்பத் ராம் சார்லி மற்றும் வையாபுரி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

ஜிவி பிரகாஷ் பாடியுள்ள பாடலின் வரிகள் இதோ…

“என் பாரதிய காட்டப்போறேன்

நான் பகுத்தறிவு ஊட்டப்போறேன்..
யோகா உள்ள சேர்க்கப் போறேன்..

நல்ல எதிர்காலம் காட்டப்போறேன்”

Lanja Boomi movie release in OTT as Diwali 2023 special

மீண்டும் கமல் – ரஜினி ரசிகர்கள் மோதலை தொடங்கி வைக்கும் சந்தானம்

மீண்டும் கமல் – ரஜினி ரசிகர்கள் மோதலை தொடங்கி வைக்கும் சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

90ஸ் கிட்ஸ் 2கே கிட்ஸ் என கெத்தாக வலம் வரும் இந்த காலத்தில் 80ஸ் கிட்ஸ்களுக்கு கெத்து காட்ட ஒரு கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் டைரக்டர் கல்யாண்.

இவர் தற்போது உருவாக்கியுள்ள ’80ஸ் பில்டப்’ என்ற படத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ளார்.

‘நாயகியாக ராதிகா பிரீத்தி நடிக்க இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, முனீஸ்காந்த், கூல் சுரேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க ஜாக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஃபேண்டஸி டிராமாக உருவாகியுள்ள ’80ஸ் பில்டப்’ படத்தை நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளனர்.

இந்தப் படத்தின் டீசர் நவம்பர் 4 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியானது. இந்த படத்தில் சந்தானம் கமல் ரசிகராக நடித்துள்ளார்.

1980 களில் கமல் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே நிறைய மோதல்கள் இருந்தன. அவையெல்லாம் தற்போது உள்ள 90ஸ் கிட்ஸ் 2கே கிட்ஸ்களுக்கு தெரியாது. தற்போது ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் மோதலை மீண்டும் நினைவுபடுத்துவதாக இந்த படம் வருகிறது எனலாம்.

கமல் நடித்த விக்ரம் மற்றும் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ ஆகிய இரண்டு படங்களும் வெவ்வேறு மாதங்களில் வெவ்வேறு ஆண்டுகளில் வெளியானாலும் இரண்டு படங்கள் வசூலை ஒப்பிட்டு ரசிகர்கள் மோதியது குறிப்பிடத்தக்கது.

இன்று நவம்பர் 8ம் தேதி வெளியான 80ஸ் பில்டப் என்ற போஸ்டரில் கமல் – ரஜினி படத்தை குறிப்பிட்டு ரசிகர்கள் போர் என்ற வாசகத்தை டிசைன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்னடபடி மீண்டும் கமல் – ரஜினி ரசிகர்கள் மோதல் ஆட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார் சந்தானம் எனலாம்.

Santhanam started Rajini Kamals fans war again

More Articles
Follows