ரிலீசுக்கு வரிசை கட்டிய 5 படங்கள்..; அண்ணாமலையாரிடம் ஆசி பெற்ற அருண்விஜய்

ரிலீசுக்கு வரிசை கட்டிய 5 படங்கள்..; அண்ணாமலையாரிடம் ஆசி பெற்ற அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அருண்விஜய்.

படத்திற்குப் படம் தனது தனித்துவமான நடிப்பாலும் தன்னார்வ தொண்டு செயல்களினாலும் பல ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் நடிகர் அருண்விஜய்.

தனது நடிப்பில் உருவான ‘சினம்’, ‘அக்னிசிறகுகள்’, ‘அருண்விஜய்யின் ‘பார்டர்’, ‘யானை’, ‘ஓ மை டாக்’ படங்கள் திரைக்கு வரத் தயாராகி வருவதைத் தொடர்ந்து நேற்று (6/02/2022) திருவண்ணாமலை கோயிலில் அண்ணாமலையாரை தரிசித்தார்.

இறைவனின் அருளோடு அனைத்து படங்களும் வெற்றி பெற்று தமிழ் திரையுலகம் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டும் என வேண்டிக் கொண்டதாகப் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

நேற்று முன் தினம் இரவு (05/02/2022) ரசிகர்களுடன் இணைந்து நடிகர் அருண் விஜய் கிரிவலம் மேற்கொண்டார்.

Arun Vijay visits Annamalaiyar temple for worship

முதல் ஆளாய் களத்தில் இறங்கினார் கமல்ஹாசன்.; மக்கள் மனநிலை என்ன.?

முதல் ஆளாய் களத்தில் இறங்கினார் கமல்ஹாசன்.; மக்கள் மனநிலை என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

எனவே பிரபல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட தயாராகி வருகின்றன.

கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

மநீம சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை ஏற்கனவே கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

அதன்படி அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று (பிப்ரவரி 6) பிரச்சாரத்தை தொடங்கினார்.

சென்னை மந்தைவெளி விசாலாட்சி தோட்டம் பகுதியில் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

அதன்பின்னர் மதியம் 2 மணியளவில் சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் கட்சியின் அனைத்து வேட்பாளர்களை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் சந்தித்தார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக பிரசாரத்தை கமல் துவங்கியதை மக்களுக்கு கொண்டுச் சேர்க்கும் விதமாக மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் #மய்ய_வேட்பாளர்கள் #VOTE_FOR_TORCHLIGHT என்கிற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர் மநீம தொண்டர்கள் மற்றும் கமல் ரசிகர்கள்.

சட்டசபை தேர்தலில் கமல் உள்ளிட்ட மநீம வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. இந்த தேர்தலில் மக்கள் மனநிலை என்ன? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

#மய்ய_வேட்பாளர்கள்
#Vote_for_Torchlight

Kamal Haasan started the election campaign to support the contestant in Chennai

JUST IN ‘பாரத ரத்னா’ லதா மங்கேஸ்கர் காலமானார்.; அவரது வாழ்க்கை குறிப்பு

JUST IN ‘பாரத ரத்னா’ லதா மங்கேஸ்கர் காலமானார்.; அவரது வாழ்க்கை குறிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வென்ற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலமானார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை மரணமடைந்தார். இவருக்கு தற்போது 92 வயதாகிறது.

ஜனவரி 8 ம் தேதி மும்பையில் உள்ள Breach Candy மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பல நாட்களாக ஐசியு.,வில் சிகிச்சை பெற்று வந்தார் லதா மங்கேஷ்கர்.

பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், பிரபலங்கள் அனைவரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
லதா மங்கேஷ்கர் பற்றி சில தகவல்கள்…

4 வயதில் பாடத் தொடங்கிய இவர் சுமார் 20 மொழிகளில் பாடியிருக்கிறார். எனவே இவர் இந்திய ரசிகர்களால் “இசைக் குயில்” எனவும் போற்றப்படுகிறார்.

பிரபல பாலிவுட் பாடகி ஆஷா போன்ஸ்லே அவர்களின் சகோதரி ஆவார்.

இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா விருது”, “பத்ம பூஷன் விருது”, “பத்ம விபூஷன்” விருதுகளைப் பெற்றது மட்டுமல்லாமல், தேசிய விருது, தாதாசாகேப் பால்கே விருது, நான்கு முறைக்கு மேல் ஃபிலிம்பேர் விருதுகள் என மேலும் பல விருதுகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

கிட்டத்தட்ட 65 ஆண்டுகளைக் கடந்து, சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தன் இசையால் இந்தியர்களை கட்டிப் போட்டுள்ளார்.

1929 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் நாள் மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள “இந்தூர்” என்ற இடத்தில் பிறந்தார்.

லதா மங்கேஷ்கரின் தந்தை ஒரு கிளாசிக்கல் பாடகர் மற்றம் நாடக கலைஞராகவும் இருந்தார். இதனால் தன்னுடைய ஐந்து வயதிலேயே தந்தையிடம் இசைப் பயிலத் தொடங்கினார். பிறகு, புகழ் பெற்ற அமான் அலி கான் சாகிப் மற்றும் அமநாத் கான் ஆகியோரின் கீழ் இசைப்பயிற்சி மேற்கொண்டார்.

1942 ஆம் ஆண்டு சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், முதன் முதலாக “கிதி ஹசால்” என்ற மராத்தி பாடலைப் பாடினார். அதே ஆண்டில் அவருடைய தந்தையும் இறந்து விடவே, குடும்பம் கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளானது.

அந்த நேரத்தில் இசையமைப்பாளர் குலாம் ஹைதர் என்பவர் “மஜ்பூர்” என்ற திரைப்படத்தில் பாட வாய்ப்பு அளித்தார். இது அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம். இதனை தொடர்ந்து வந்த ‘மகால்’, ‘அந்தாஸ்’, ‘பர்சாத்’, ‘துலாரி’ போன்ற படங்கள் இவருக்கு பெரும் புகழை ஈட்டிக்கொடுத்தது.

1942 முதல் சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், அனில் பிஸ்வாஸ், ஷங்கர் ஜெய்கிஷன், நவ்ஷத், எஸ்.டி. பர்மன், சி. ராம்சந்த்ரா, ஹேமந்த் குமார், சலீம் சவ்திரி, கய்யாம், ரவி, சஜ்ஜத் ஹூசைன், ரோஷன், கல்யாண்ஜி, ஆனந்த்ஜி, வசந்த் தேசாய், சுதிர் பாட்கே, ஹன்ஸ்ராஜ் பெல், மதன் மோகன், மற்றும் உஷா கன்னா, ராகுல் தேவ் பர்மன், ராஜேஷ் ரோஷன், அனு மாலிக், ஆனந்த் மிலிந்த், ஷிவ் ஹரி, ராம் லட்சுமண், இளையராஜா மற்றும் ஏ.ஆர் ரகுமான், உள்ளிட்ட இசையமைப்பளர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.

முக்கியமான சில படங்கள்

‘சஜா’ (1951), ‘பைஜு பவ்ரா’ (1952), ‘ஆக் ஆஹ்’ (1953), ‘ஸ்ரீ 420’ (1955), ‘தேவதாஸ்’ (1955), ‘கதவு எண் 44’ (1955), ‘சோரி சோரி’ (1956), ‘முகல் ஆஸம்’ (1960), ‘கோஹினூர்’ (1960), ‘சோடே நவாப்’ (1961), ‘பரஸ்மணி’ (1963), ‘பூத் பங்களா’ (1965), ‘பட்னி பட்னி’ (1966), ‘அபிலாஷா’ (1969), ‘ கேரவன்’ (1971), ‘காதி பதங்’ (1971), ‘ அமர் பிரேம்’ (1972), ‘ஆன்ந்தி’ (1975), ‘சாந்தினி’ (1989), ‘லம்ஹே’ (1991), ‘தர்’ (1993), ‘யேஹ் தில்லகி’ (1994), ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ (1995), ‘ஹை தலாக் தில்’ (1997), ‘மொகபத்தீன்’ (2000), ‘முஜ்சே ரோஸ்ட்டி கரோகே’ (2002), ‘சாரா’ (2004), ‘தில் சே’ (1998), ‘ஒன் 2 க 4 ‘ (2001), ‘புகார்’ (2000), ‘ஜுபைதா’ (2001), ‘ரங் தே பசந்தி (2006), ‘லகான்’ (2001), ‘அனார்கலி’, ‘அல்பேலா’, ‘ஆஷா’, ‘அடாலட்’, ‘ரயில் மேடை’, ‘சாச்சா ஜிந்தாபாத்’ போன்ற திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் பலரையும் கவர்ந்தது எனலாம்.

தமிழில் இவர் பாடிய “வலையோசை கல.. கலவென….” (கமல் நடித்த சத்யா படம்) பாடல் இன்றவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

1958 ஆம் ஆண்டு சலீம் சவுத்ரி இசையமைத்து வெளிவந்த “மதுமதி” என்ற திரைப்படத்தில், இவர் பாடிய “ஆஜா ரெ பரதேசி” என்ற பாடல், இவருக்கு முதல் ஃபிலிம்பேர் விருதினை பெற்றுத்தந்தது.

பிறகு, 1961 ல் ஹேமந்த் குமார் இசையமைத்த “பீஸ் சால் பாத்” திரைப்படத்தில் “கஹின் தீப் ஜலே கஹின் தில்” என்ற பாடல் இவருக்கு இரண்டாவது ஃபிலிம்பேர் விருதினை பெற்றுத்தந்தது. 1973 ஆம் ஆண்டு, ஆர்.டி பர்மன் இசையமைத்து வெளிவந்த “பரிஜாய்” என்ற திரைப்படதில் இவர் பாடிய “பீதி நா பிட்டை” என்ற பாடல் சிறந்த பின்னனி பாடகருக்கான முதல் “தேசிய விருதை” பெற்றுத்தந்தது.

லதா அவர்கள், 1970 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் திரைப்படம் சாராத சில ஆல்பங்களையும் வெளியிட்டார். காலிப் கஜல், மராத்திய நாட்டுப்புற இசையில் ஒரு ஆல்பமும், சாந் துக்காராம் பற்றிய “அபாங்க்ஸ்” என்ற ஆல்பமும் இதில் அடங்கும்.

தயாரிப்பு மற்றும் இசைத் துறையில் ஈடுபாடு

ஒரு பின்னணி பாடகராக மட்டுமல்லாமல், இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கியுள்ளார். 1953 ஆம் ஆண்டு “வாடல்” என்ற மராத்தி மொழித் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார். பிறகு, அதே ஆண்டு சி. ராமச்சந்திராவுன் இணைந்து ‘ஜஹாஞ்ச்கார்’, ‘காஞ்சன்’ (1955) மற்றும் ‘லேகின்’ (1990) என்ற இந்தித் திரைப்படத்தையும் வெளியிட்டார்.

மகராஷ்டிர மாநில அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை “சதி மனசே” என்ற திரைப்படத்திற்காகவும், “ஐராநிச்ய தேவா துலா” என்ற பாடலுக்காக சிறந்த பாடகர் விருதையும் பெற்றார். 1960ல் “ராம் ராம் பவ்ஹான” என்ற திரைப்படத்தின் மூலம் இசையாமைப்பாளராக கால்பதித்த அவர், 1963ல் ‘மராத்தா டிட்டுகா மேல்வாவ’ மற்றும் ‘மொஹித்யஞ்சி மஞ்சுளா’, ‘சதி மானசே’ (1965), ‘தம்படி மதி’ (1969) போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

1999 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட லதா மங்கேஷ்கர், 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசால் வழங்கி கெளரவிக்கப்பட்டார். 2001 ஆம் ஆண்டு மாஸ்டர் தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையினை புனேவில் நிறுவினார்.
விருதுகளும் அங்கீகாரங்களும்

• 1969 ஆம் ஆண்டு “பத்ம பூஷன் விருது” வழங்கப்பட்டது.
• 1972 ஆம் ஆண்டு பீட்டி நா பிடாய் ரெய்னா (பரிஜாய்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.
• 1974 ஆம் ஆண்டு உலகளவில் அதிக பாடல்களை பாடியதற்காக “கின்னஸ் புத்தகத்தில்” இடம் பிடித்தார்.
• 1975 ஆம் ஆண்டு ரூதே ரூதே பியா (கோரா காகஸ்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.
• 1989 ஆம் ஆண்டு “தாதா சாஹேப் பால்கே விருது” வழங்கப்பட்டது.
• 1990 ஆம் ஆண்டு யாரா சீலி சீலி (லேகின்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.
• 1993 ஆம் ஆண்டு பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது.
• 1996 ஆம் ஆண்டு ஸ்டார் ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருது.
• 1997 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி விருது.
• 1999 ஆம் ஆண்டு “பத்ம விபூஷன் விருது” வழங்கப்பட்டது.
• 1999 ஆம் ஆண்டு என்.டி.ஆர் விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளருக்கான ஜீ சினிமா விருது.
• 2000 ஆம் ஆண்டு லண்டனிலுள்ள ஐ.ஐ.எப்.ஏ மூலம் வாழ்நாள் சாதனையாளர் விருது.
• 2001 ஆம் ஆண்டு ஹீரோ ஹோண்ட மற்றும் ஸ்டார்டஸ்ட் இதழ் மூலமாக சிறந்த பின்னனி பாடகருக்கான மில்லேனியம் விருது வழங்கப்பட்டது.
• 2001 ஆம் ஆண்டு “நூர்ஜஹான் விருது” வழங்கப்பட்டது.
• 2001 ஆம் ஆண்டு “மகாராஷ்டிரா ரத்னா விருது” வழங்கப்பட்டது.
• 2001 ஆம் ஆண்டு “பாரத் ரத்னா விருது” வழங்கப்பட்டது.
• ஆஜா ரெ பர்தேசி (மதுமதி 1958), கஹி தீப் ஜலே கஹி தில் (பீஸ் சால் பாத் 1962), தும்ஹீ மேரே மந்திர் தும்ஹீ மெரி (க்ஹண்ட 1965), ஆப் முஜிகே அசே லக்னே லகே (ஜீனே கி ராஹ் 1969), தீதி தேரா தீவார் தீவானா (ஹம் ஆப்கே ஹே ஹைன் கோன் 1994) போன்ற பாடலுக்காக ஃபிலிம்பேர் விருது வழங்கப்பட்டது

‘Bharat Ratna’ Veteran Singer Lata Mangeshkar passed away

இணையத்தை பற்ற வைத்து வெற்றி-யின் ‘ஜோதி’ டீசர் சாதனை

இணையத்தை பற்ற வைத்து வெற்றி-யின் ‘ஜோதி’ டீசர் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் AV கிருஷ்ண பரமாத்மா இயக்கத்தில் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜோதி’.

இப்படத்தின் டீசரை சமீபத்தில் நடிகர்கள் யோகி பாபு, RJ பாலாஜி, ரியோ ராஜ், இயக்குனர் அஜய் ஞானமுத்து, தயாரிப்பாளர்கள் கலைப்புலி S தாணு, சுரேஷ் காமாட்சி, G.தனஞ்செயன் நடிகை சாக்ஷி அகர்வால் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டனர்.

இது வெளியான சில நிமிடங்களிலேயே இந்த டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து திரையுலக பிரபலங்களும் ‘ஜோதி’ படக்குழுவினரை பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து டீசரை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வந்தனர்.

இந்த நிலையில் ‘ஜோதி’ டீசர் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதன் மூலம் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இப்படத்தில் ‘திரௌபதி, மண்டேலா’ திரைப்படத்தின் நாயகி ஷீலா ராஜ்குமார், ‘கோலிசோடா 2’ திரைப்படத்தின் நாயகி கிரிஷா குரூப், ‘ராட்சசன்’ திரைப்படத்தின் வில்லன் நான் சரவணன் மற்றும் இளங்கோ குமரவேல், மைம்கோபி, சாய் பிரியங்கா ருத் முக்கிய கதாப்பாத்திரத்தில் SP ராஜா சேதுபதி நடித்துள்ளனர்.

செசி ஜெயா ஒளிப்பதிவு செய்திருக்கும் இத்திரைப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைக்க, சத்ய மூர்த்தி படத்தொகுப்பை மேற்கொண்டிருக்கிறார்.பாடல்களை பின்னணி பாடகர்கள் K J ஜேசுதாஸ், பல்ராம், கார்த்திக், மற்றும் ஆர்த்தி பாடியிருக்க, பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார்.

SPR STUDIOS சார்பில் சதுரங்க வேட்டை திரைப்பட படத்தொகுப்பாளர் SP ராஜா சேதுபதி தயாரித்துள்ளார்.

Vettris Jothi teaser crossed 1 million views

சீனப் பெருஞ்சுவரில் ஒலிம்பிக் தீபம் ஏந்தி ஓடிய ஜாக்கி சான்

சீனப் பெருஞ்சுவரில் ஒலிம்பிக் தீபம் ஏந்தி ஓடிய ஜாக்கி சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீனாவில் (குளிர்கால) ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிவிட்டது.

வருகிற பிப்ரவரி 20ம்தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ளது.

எனவே இதற்கான ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டம் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் போட்டிக்கு முன்னர் தொடங்கியது.

இந்த தீபம் சீனப் பெருஞ்சுவர் உள்ளிட்ட சீனாவின் முக்கிய அடையாளங்களில் கொண்டு செல்லப்பட்டது.

இந்த ஒலிம்பிக் தீபம் ஓட்டத்தின் இரண்டாம் நாளில் உலக ஆக்சன் ஹீரோ ர் ஜாக்கிசான் கலந்துக் கொண்டார்.

அவர் ஒலிம்பிக் தீபத்தை கையில் ஏந்தியபடி சீனப் பெருஞ்சுவரில் ஓடினார்.

அப்போது அவருடன் இணைந்து ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள விளையாட்டு வீரர்களும், பொதுமக்களும் ஓடினார்கள்.

இதற்கு முன்பே 3 ஒலிம்பிக் தீப ஓட்டங்களில் பங்கேற்று இருக்கிறாராம் ஜாக்கி சான் என்பது குறிப்பிடத்தக்கது.

Jackie Chan carried Olympic Torch at Great Wall of China

விக்ரம் பிரபுக்கு வில்லனாக மாறிய ‘பிக்பாஸ்’ சக்தி

விக்ரம் பிரபுக்கு வில்லனாக மாறிய ‘பிக்பாஸ்’ சக்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வெள்ளைக்கார துரை’ படத்தில் ஜோடியாக நடித்த விக்ரம் பிரபு மற்றும் ஸ்ரீதிவ்யா மீண்டும் இணைந்து நடிக்கும் படம் ‘டைகர்’.

கார்த்திக் என்பவர் இந்த படத்தை இயக்க மற்றொரு நாயகியாக ஆனந்திகா நடிக்கவுள்ளார்.

இயக்குனர் முத்தையா இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதுகிறார்.

இந்த நிலையில் இப்படத்தில் வில்லனாக ‘பிக்பாஸ்’ புகழ் ஷக்தி நாயகனாக நடிக்கவிருக்கிறாராம். இவர் பிரபல இயக்குனர் பி. வாசுவின் மகன் ஆவார்.

சின்னத்தம்பி, ரிக்சா மாமா உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷக்தி. பின்னர் தொட்டால் பூ மலரும் படத்தில் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார்.

நினைத்தாலே இனிக்கும், சிவலிங்கா உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். ஆனால் இவருக்கு பெரிதாக சினிமா வாய்ப்புகள் வரவில்லை.

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசனிலும் இவர் போட்டியாளராக பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss fame Shakthi became baddie in Tiger

More Articles
Follows