தன் காதலியை கரம் பிடித்தார் ‘குக் வித் கோமாளி’ நடிகர் புகழ்

தன் காதலியை கரம் பிடித்தார் ‘குக் வித் கோமாளி’ நடிகர் புகழ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவி-யில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப் போவது யாரூ & குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் புகழ்.

இந்த சீசனில் கிடைத்த புகழால் வெள்ளித்திரையிலும் இவருக்கு வாய்ப்புகள் வந்தன.

இதனையடுத்து அஜித் அஜித்துடன் வலிமை,சந்தானத்துடன் சபாபதி, அஸ்வின் உடன் என்ன சொல்லப் போகிறாய், சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், அருண் விஜய் உடன் யானை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்

சின்னத்திரையை போல வெள்ளித்திரையில் இவரது காமெடி பெரிதாக எடுபடவில்லை என்றாலும் இவருக்கு வாய்ப்புகள் அவ்வப்போது வருகின்றன.

இந்த நிலையில் பென்சியா என்பவரை காதலித்து வருவதாக சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

அதன்படி இன்று செப்டம்பர் 1 ஆம் தேதி புகழ் – பென்சியா காதல் ஜோடியின் திருமணம் திண்டிவனம் பகுதியில் உள்ள தீவனூர் விநாயகர் கோயிலில் எளிமையாக நடைபெற்றது.

வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரியவந்துள்ளது.

புகழ்

Cook With Comali Pugazh married his girl friend Benziya

*1 NEWS 1 MIN: Exclusive Video* தன் காதலியை மணந்தார் ‘குக் வித் கோமாளி’ புகழ் Cook With Comali Pugazh ? filmistreet ?

https://youtube.com/shorts/LctC2CSTKpc?feature=share

தனது குருநாதர் விக்ரமன் மகனை ஹீரோவாக்கிய கேஎஸ் ரவிக்குமார்

தனது குருநாதர் விக்ரமன் மகனை ஹீரோவாக்கிய கேஎஸ் ரவிக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெனாலி, கூகுள் குட்டப்பா படங்களுக்கு பிறகு, RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது “ஹிட்லிஸ்ட்”.

RK Celluloids சார்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், மூத்த இயக்குநர் விக்ரமன் அவர்களின் மகன் விஜய் கனிஷ்கா நடிகராக அறிமுகமாகும் திரைப்படம் “ஹிட்லிஸ்ட்”.

நடிகர் சரத்குமார் முக்கிய கதாப்பத்திரம் ஏற்றிருக்கும் இப்படத்தின் அறிமுக விழா மற்றும் பூஜை, இன்று எண்ணற்ற திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் புது வசந்தம் புதிய சரித்திரம் படைத்து பல புதிய இளம் இயக்குநர்கள் உருவாக காரணாமாயிருந்த இயக்குநர் விக்ரமன் அவர்களின் மகன் விஜய் கனிஷ்கா திரையுலகில் நடிகராக அறிமுகமாகிறார்.

ஹிட்லிஸ்ட்

கமர்ஷியல் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை கமர்ஷியல் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் RK Celluloids நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இயக்குநர்கள் சூர்யகதிர், கார்த்திகேயன் இணைந்து இயக்குகிறார்கள்.

இப்படத்தின் பூஜையில் இன்று திரை பிரபலங்கள் RB சௌத்திரி, சத்யஜோதி தியாகராஜன், PL தேனப்பன் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் எழில் கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன், எஸ் ஏ சந்திரசேகர், மனோபாலா, லிங்குசாமி, ஏ ஆர் முருகதாஸ், சீனு ராமசாமி, வெற்றிமாறன், பிரபு சாலமன், பாண்டியராஜன், ஆர் கண்ணன், சரண், ரமேஷ் கண்ணா, பேரரசு, ராஜகுமாரன், தேவயானி, ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் கலந்துகொண்டு, நடிகர் விஜய் கனிஷ்காவை வாழ்த்தியதுடன், படம் வெற்றிபெற படக்குழுவினரை வாழ்த்தினர்.

ஹிட்லிஸ்ட்

இப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஜனரஞ்சகமாக, காமெடி ஆக்சன் கமர்ஷியல் என அனைத்து அம்சங்களும் நிறைந்த திரைப்படமாக உருவாகவுள்ளது.
படம் குறித்த மற்ற விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Vikraman son Vijay Kanishka debut in Hit List

யோகி பாபுவை ‘யானை முகத்தான்’ ஆக மாற்றிய மலையாள இயக்குனர்

யோகி பாபுவை ‘யானை முகத்தான்’ ஆக மாற்றிய மலையாள இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள திரையுலகில் முன்னணி இயக்குநரான ரெஜிஷ் மிதிலா, “யானை முகத்தான்” படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இதில் யோகிபாபு நாயகனாக நடிக்கிறார். ரெஜிஷ் மிதிலா எழுதி, இயக்கி, தயாரிக்கும் இத்திரைப்படம் முழுக்க, முழுக்க ஃபேன்டஸி திரைப்படமாக உருவாகி வருகிறது.

‘யானை முகத்தான்’ இப்படத்தில் கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார்.

அதே கணேஷ் கதாபாத்திரத்தில் ஆட்டோ டிரைவராக ரமேஷ் திலக் நடிக்கிறார்.

இவர் விநாயகர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட தீவிர பக்தர். ஏறக்குறைய தான் சந்திக்கும் அனைத்து நபர்களிடமும் கடன் வாங்கி விடுவார். பிறகு, வாங்கிய கடனைத் திருப்பி கொடுக்க முடியாமல் திணறுவார்.

இவரிடம், யோகி பாபு தன்னை விநாயகர் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அத்துடன் ரமேஷ் திலக்கிடம் ஒரு நிபந்தனையை முன்வைக்கிறார். இப்படி லூட்டி அடிக்கும் இவர்களை சுற்றி நடக்கும் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. இதை சுவாரசியமாக இயக்கியுள்ளார் டைரக்டர்.

இவர்களது அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளராக மல்லியக்கா கேரக்டரில் ஊர்வசியும், சிறிய பான் மசாலா கடை நடத்தும் மைக்கேலாக கருணாகரனும் நடிக்கிறார்கள்.

யோகிபாபு, ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா ( ‘மருது’ பாட்டி ), நாகவிஷால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் எளிய ஆரம்பமாகி, ராஜஸ்தான் பகுதிகளில் நடந்தது.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து, இயக்கம் : ரெஜிஷ் மிதிலா
தயாரிப்பாளர்கள்: ரெஜிஷ் மிதிலா, லிஜோ ஜேம்ஸ்:
தயாரிப்பு நிறுவனம்: தி கிரேட் இந்தியன் சினிமாஸ்
ஒளிப்பதிவு : கார்த்திக்Sநாயர்
படத்தொகுப்பு : சைலோ
இசையமைப்பாளர்: பரத் சங்கர்
ஆடை வடிவமைப்பாளர்: குவோச்சாய்.S
ஒப்பனை: கோபால்
நிர்வாக தயாரிப்பு : சுனில் ஜோஸ்
தயாரிப்பு மேற்பார்வை : ஜெயபாரதி
முதன்மை இணை இயக்குனர்: நிதிஷ் வாசுதேவன்
இணை இயக்குனர்: கார்த்தி
இணை இயக்குனர்: அகில் V மாதவ்
உதவி இயக்குனர்கள்: பிரஜின் MP,
தண்டேஷ் D நாயர், வந்தனா:
விளம்பர வடிவமைப்பாளர்: சிவகுமார்
ஸ்டில்ஸ்: ஜோன்ஸ்

Rejishh Midhila will direct Yogibabu for Yaanai Mugathaan

இளையராஜா – வெற்றிமாறனின் ‘விடுதலை’ கூட்டணியில் இணைந்த உதயநிதி

இளையராஜா – வெற்றிமாறனின் ‘விடுதலை’ கூட்டணியில் இணைந்த உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ & ‘கோ’ ஆகிய மாபெரும் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, Red Giant Movies & RS Infotainment ஆகிய நிறுவனங்கள் மீண்டும் இணைந்து ‘விடுதலை’ படத்தினை வழங்குகின்றனர் .

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும் ‘கோ’ போன்ற பிளாக் பஸ்டர் வெற்றிகளை தந்த கூட்டணியாக Red Giant Movies & RS Infotainment நிறுவன தயாரிப்பாளர்கள்
உதயநிதி ஸ்டாலின் மற்றும் எல்ட்ரெட் குமார் மீண்டும் இணைந்து ‘விடுதலை’ படத்தை வழங்குகிறார்கள்.

விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ள இறுதிக்கட்டத்தை எட்டி, பரபரப்பாக தயாராகி வருகிறது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

பிரமாண்டமாக உருவாகியுள்ள விடுதலை படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இத்திரைப்படம் ஏற்கனவே அதன் பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும் நம்பிக்கைக்குரிய நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் திரை ஆரவலர்களிடையே பெரிய அளவினில் அலைகளை உருவாக்கியுள்ளது.

மேலும், Red Giant Movies வெளியீடு
தற்போது பல திரைப்படங்களுக்கு வெற்றியின் முகவரியாக மாறியிருப்பதால், விடுதலை திரைப்படமும் பெரும் வெற்றியாக அமையுமென தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமார் நம்புகிறார்.

Udhayanidhi Joins with ilaiyaraaja and Vetrimaaran in Viduthalai

‘கோப்ரா’ மீது ரசிகர்கள் கோபம்.; அதிரடி முடிவெடுத்த விக்ரம் & படக்குழுவினர்

‘கோப்ரா’ மீது ரசிகர்கள் கோபம்.; அதிரடி முடிவெடுத்த விக்ரம் & படக்குழுவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி, மிருளாளிணி, ரோபோ சங்கர், மீனாட்சி, இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்த கோப்ரா திரைப்படம் நேற்று ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீஸ் ஆனது.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பாக லலித் குமார் தயாரித்திருந்தார்.

ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்திருந்தது.

இந்த படத்தில் விக்ரமின் நடிப்பை பலர் பாராட்டி வந்தாலும் படத்தின் நீளமே எல்லோர் மனதிலும் பெரிய குறையாக காணப்பட்டது.

இதனையடுத்து ரசிகர்கள் வேண்டுகோளின் படி இன்று முதல் படத்தின் இருபது நிமிட காட்சிகளை படத்திலிருந்து நீக்கி இருக்கிறோம் என பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதன் மூலம் இன்று முதல் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

கோப்ரா

Fans are angry with ‘Cobra’.; Vikram & the crew

‘ஆத்தா உன் கோவிலிலே’ பட நாயகன் ரவி ராகுல் இயக்குனராகிறார்.; சித்தார்த் நடிக்கிறார்

‘ஆத்தா உன் கோவிலிலே’ பட நாயகன் ரவி ராகுல் இயக்குனராகிறார்.; சித்தார்த் நடிக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990-களில் வெளியான கஸ்தாரி ராஜா இயக்கிய ‘ஆத்தா உன் கோவிலிலே’ படத்தில் நாயகனாக நடித்தவர் ரவி ராகுல்.

அதன் பின்னர்தமிழ் பொண்ணு, மிட்டா மிராசு ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார் ரவி ராகுல்.

இவர் தற்போது சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் “ரவாளி” என்ற படத்தை இயக்கியுள்ளார்.

ஆர்.சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, பாம்பே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் நைரசா கதாநாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் ஜெயபிரகாஷ், ரியாஸ் கான், பப்லு, கஞ்சா கருப்பு, அப்புக்குட்டி, சுஜாதா, ஆத்மா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஏழை பையனை பணக்கார பெண் காதலிக்கிறாள். வீட்டில் எதிர்ப்பு வர, வெளிமாநிலம் இழுத்துச் சென்று, கோவிலில் திருமணம் செய்கிறாள்.

தாலி கட்டிய கையோடு வேலை தேடி வெளியே சென்ற காதலன் காணாமல் போகிறான். அவனை தேடுவது தான் மீதி கதை.

கதை, திரைக்கதை எழுதி, ரவி ராகுல் இயக்கியுள்ளார். வினோத் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஜெய் ஆனந்த், ஏ.எஸ்.மைக்கேல் யாகப்பன் இருவரும் இணைந்து இசையமைத்து உள்ளனர். வளர் பாண்டியன் எடிட்டிங் செய்ய, இளைய கம்பன், கு.கார்த்திக் பாடல்கள் எழுத, சந்திரிகா நடனம் அமைத்துள்ளார். ஹரி முருகன் சண்டைக் காட்சிகளை தத்ரூபமாக அமைத்துள்ளார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் “ரவாளி” திரைப்படம் குற்றாலத்தில் தொடங்கி, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய ஊர்களில் படப்பிடிப்பு நடத்தி, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது” என்கிறார் இயக்குனர் ரவி ராகுல்.

More Articles
Follows