தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுக்கும் பல நடிகர்களுக்கு அது வொர்க் அவுட் ஆவதில்லை.
ஆனால் அஜித்துக்கு வில்லனாக நடித்து தற்போது வேகமாக முன்னணி ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார் அருண் விஜய்.
இவர் தற்போது ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ஆக்ஷன் காட்சியில் விபத்து ஏற்பட்டு தான் காயம் அடைந்துள்ளதாக புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது போன்ற பல காயங்கள் எனக்கு ஏற்கனவே இருந்துள்ளன. ஆனாலும் டூப் இல்லாமல் நடிப்பதையே நான் விரும்புகிறேன்.. உங்கள் அன்புக்கு நன்றி என பதிவிட்டுள்ளார் அருண் விஜய்.
இதுதான் நடிகரின் வாழ்க்கை.. யாராலும் தடுக்க முடியாது என ஹேஷ் டேக் போட்டு பதிவிட்டுள்ளார்.
விஜய் இயக்கி வரும் ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க எமி ஜாக்சன் நாயகியாக நடிக்கிறார்.
இவருடன் நிமிஷா சஜயனும் நடிக்கிறார்.
ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகி வருகின்றது.
Behind all my hard-core actions you’ll see on screen there are plenty of bruises like these… But still love doing my own stunts..? Wait for the next on screen..??
Luv you all..❤️
#AchchamEnbadhuIllayae
#actorslife #nothingcanstop https://t.co/UqTcsOhuiS
Arun Vijay got injury at shooting spot