‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் எமி ஜாக்சனின் தோற்றத்தை வெளியிட படக்குழு…!

‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் எமி ஜாக்சனின் தோற்றத்தை வெளியிட படக்குழு…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘யானை’ படத்திற்குப் பிறகு நடிகர் அருண் விஜய், இயக்குநர் விஜய்யுடன் இணைந்து ‘அச்சம் என்பது இல்லை’ படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் நிமிஷாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், சமூக ஊடகங்களில் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஜனவரி 31 அன்று படத்தில் இருந்து நடிகரின் முதல் தோற்றத்தை வெளியிட்டனர்.

நேற்று எமி ஜாக்சனின் பிறந்தநாளை கொண்டாடிய படக்குழுவினர் படத்திலிருந்து அவரது தோற்றத்தை வெளியிட்டனர்.

மேலும், எமி ஜாக்சன் இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு மீண்டும் வரவுள்ளார்.

எமி ஜாக்சன்

Makers reveal Amy Jackson’s look from ‘Achcham Enbathu Illayae’

2 தோல்விக்கு பிறகு நம்பிக்கையுடன் விஜய்சேதுபதியுடன் இணைந்த பிரபல நிறுவனம்

2 தோல்விக்கு பிறகு நம்பிக்கையுடன் விஜய்சேதுபதியுடன் இணைந்த பிரபல நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேஷன் ஸ்டுடியோஸ் இந்த வருடம் 2023-ல் பல படங்களுக்கான திட்டங்களை கைவசம் வைத்துள்ள நிலையில், தற்போது அதன் புதிய புராஜெக்ட் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘புரொடக்‌ஷன் நம்பர் 20’ எனத் தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள இதில் விஜய்சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ‘குரங்கு பொம்மை’ படப்புகழ் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் எளிய பூஜையுடன் தொடங்கியது. நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

சில முன்னணி நடிகைகளிடம் கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்தப் படத்தில் கதாநாயகன் போலவே எதிர்கதாநாயகன் கதாபாத்திரமும் வலுவானதாக இருப்பதால் அதில் முக்கிய நடிகர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்க வேண்டும் என்பதில் படக்குழு தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.

கதாநாயகி மற்றும் எதிர்கதாநாயகன் யார் என்பது குறித்து தயாரிப்புத் தரப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்.

இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படம் முழுக்க முழுக்க க்ரைம் மற்றும் த்ரில்லர் களத்தைக் கொண்ட ஆக்‌ஷன் ட்ராமாவாக உருவாக உள்ளது.

*தொழில்நுட்பக் குழு விவரம்:*

கன்னடத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான பி. அஜ்னீஷ் லோக்நாத் ‘காந்தாரா’ பட வெற்றிக்குப் பிறகு இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இவர் நித்திலனின் ‘குரங்கு பொம்மை’ படத்திற்கும் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபிலோமின் ராஜ் (மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், தளபதி 67) இந்தப் படத்தின் படத்தொகுப்பாளர். ’லவ் டுடே’ மற்றும் ‘விலங்கு’ இணையத்தொடர் மூலம் விஷூவல் மேஜிக் கொடுத்த தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார்.

‘இயற்கை’, ‘பேராண்மை’, ‘மதராசப்பட்டினம்’ மற்றும் பல படங்களில் அற்புதமான செட் வொர்க் செய்த செல்வகுமார் கலை இயக்குநராக இதில் பணியாற்றுகிறார்.

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜி. ஜெயராம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

‘சீதக்காதி’ மற்றும் ‘அனபெல் சேதுபதி’ ஆகிய படங்களுக்குப் பிறகு 3வது முறையாக இந்தப் படம் மூலம் விஜய்சேதுபதியுடன் இணைகின்றனர்.

சீதக்காதி’ மற்றும் ‘அனபெல் சேதுபதி’ ஆகிய இரு படங்களும் தோல்வியை தழுவிய நிலையில் நம்பிக்கையுடன் வெற்றி கொடுக்க இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

விஜய்சேதுபதி

2 Famous company associated with Vijay Sethupathi after failure

மம்மூட்டியுடன் காதல்.. ‘ஸ்ரீ’ ராஜ்குமாரின் ரசிகை நான்.; ஜோதிகா நெகிழ்ச்சி

மம்மூட்டியுடன் காதல்.. ‘ஸ்ரீ’ ராஜ்குமாரின் ரசிகை நான்.; ஜோதிகா நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருமணத்திற்குப் பிறகு கதையின் நாயகி வேடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்களில் நடித்து வருகிறார் ஜோதிகா.

தற்போது தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

மலையாளத்தில் மம்மூட்டியுடன் இணைந்து ’காதல்’ (Kaathal: The Core) என்ற படத்தில் நடித்துள்ளார்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார். ‘ஸ்ரீ’ என்ற இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது.

இப்படம் ஸ்ரீகாந்த் பெல்லா என்ற தொழிலதிபரின் வாழ்க்கை கதை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஜோதிகா நெகிழ்ச்சியான பதிவை பதிவிட்டுள்ளார்.

அதில்…, ‘ஸ்ரீ’ படத்துக்கான எனது பகுதிகளை மூடிவிட்டேன். இக்குழுவினரிடமிருந்து கனத்த இதயத்தோடு விடைபெறுகிறேன்.

இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த துஷார்-க்கு நன்றி. இப்படத்தின் நடிகர் ராஜ்குமார் ராவின் தீவிர ரசிகை நான். இப்படக்குழுவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்’ என தெரிவித்துள்ளார்.

Love with Mammootty.. I am a fan of ‘Sri’ Rajkumar says Jyothika

கமல்ஹாசனுடன் இணைந்த காஜல்.; எங்கேன்னு தெரியுமா.??

கமல்ஹாசனுடன் இணைந்த காஜல்.; எங்கேன்னு தெரியுமா.??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காஜல் அகர்வால் கடைசியாக தமிழில் ‘ஹே சினாமிகா’ படத்தில் நடித்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரலில் ஆண் குழந்தை பிறந்து மகப்பேறு ஓய்வில் இருந்த காஜல் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார்.

காஜல் அகர்வால் முன்னதாக படத்திற்கான படப்பிடிப்பை நவம்பரில் மீண்டும் தொடங்கினார்.

செப்டம்பரில் தனது பாத்திரத்தின் ஒரு பகுதியாக குதிரை சவாரி செய்யத் தொடங்கிய காஜல் அகர்வால், படத்தின் படப்பிடிப்பிற்காக நேற்றிரவு ஆந்திராவில் உள்ள புரோட்டத்தூருக்கு வந்திருந்தார்.

கமல்ஹாசனுடன் ஆந்திராவில் உள்ள காந்திகோட்டா படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். கமல்ஹாசன் ஹெலிகாப்டரில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2

Kajal Aggarwal joins the shooting of Kamal’s ‘Indian 2’

OFFICIAL – 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய்க்கு ஜோடியாக திரிஷா

OFFICIAL – 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய்க்கு ஜோடியாக திரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வாரிசு’ படத்திற்குப் பிறகு ‘தளபதி 67’ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

‘வாரிசு’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்ற செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

காஷ்மீரில் நடக்கும் 2வது கட்ட படப்பிடிப்புக்காக ‘தளபதி 67’ படக்குழுவினர் நேற்று ஜனவரி 31 காலை தனி விமானத்தில் சென்றுள்ளனர்.

இதில் விஜய்யுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இளம் நடிகர் மேத்யூ தாமஸ், நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி, நடிகை பிரியா ஆனந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.

இவர்களுடன் முக்கிய வேடத்தில் இயக்குநர் மற்றும் நடிகர்களான கெளதம் வாசுதேவ மேனன், அர்ஜுன் ஆகியோர் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது 14 வருடங்களுக்கு பிறகு நடிகை திரிஷா இந்த படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே ஆதி கில்லி திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் விஜய்யுடன்
த்ரிஷா இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கம் – லோகேஷ் கனகராஜ்
இசை – அனிருத்
ஒளிப்பதிவு – மனோஜ் பரஹம்சா
ஆக்‌ஷன் – அன்பறிவ்
படத்தொகுப்பு – பிலோமின் ராஜ்
கலை – சதீஷ் குமார்
நடனம் – தினேஷ்
வசனம் – லோகேஷ் கனகராஜ், ரத்ன குமார், தீரஜ் வைத்தி

திரிஷா

OFFICIAL – Trisha paired with Vijay again after 14 years

தெறிக்கவிட்ட ‘தளபதி 67’ அப்டேட்.: எதிர்பார்த்த நடிகர்களும்.. எதிர்பார்க்காத அஜித் பட நடிகையும்

தெறிக்கவிட்ட ‘தளபதி 67’ அப்டேட்.: எதிர்பார்த்த நடிகர்களும்.. எதிர்பார்க்காத அஜித் பட நடிகையும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிக்கும் அவரின் 67 வது படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார்.

படத்தில் விஜய்யுடன் நடிக்கும் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

காஷ்மீரில் நடக்கும் 2வது கட்ட படப்பிடிப்புக்காக ‘தளபதி 67’ படக்குழுவினர் நேற்று ஜனவரி 31 காலை தனி விமானத்தில் சென்றுள்ளனர்.

இதனை படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் விமான டிக்கெட்டுடன் பகிர்ந்தும் இருந்தார்.

மேலும் ‘தளபதி 67’ படத்தில் இணைந்து பணியாற்றும் நடிகர்களையும் படத் தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டது.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இளம் நடிகர் மேத்யூ தாமஸ், நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி, நடிகை பிரியா ஆனந்த் ஆகியோர் பெயர்களை அடுத்தடுத்து வெளியிட்டனர்.

இயக்குநர் மற்றும் நடிகர்களான கெளதம் வாசுதேவ மேனன், அர்ஜுன் ஆகியோர் பெயர்களை வெளியிட்டு, ‘இத்துடன் நேற்றைய ‘தளபதி 67’ அப்டேட்ஸ் முடிவு அடைகிறது” என குறிப்பிட்டது.

பிரியா ஆனந்த்…

“தளபதி 67 படத்தில் நடிப்பது த்ரில்லாக உள்ளது. ஒரு அற்புதமான படக்குழுவினருடன் பணிபுரிவதை எதிர்நோக்கி உள்ளேன்”

(அஜித் – ஸ்ரீதேவி நடித்த ‘இங்கிலீஷ் விங்கிலீஸ்’ படத்தில் பிரியா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது)

நடன இயக்குநர் சாண்டி..

“இது ஒரு ஸ்பெஷல் ஃபீலிங். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படி ஒரு பிரம்மாண்டமான படத்தில் நான் நடிப்பது எனக்கே ஒரு புது அனுபவமாக உள்ளது.

தளபதி விஜய் உடன் நடிக்க உள்ளதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை” என கூறியிருப்பதாக போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மிஷ்கின்…

“21 வருடங்களுக்கு முன் விஜய் நடித்த படத்தில் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்தேன். இத்தனை வருடங்களில் ஒரு விஷயம் மாறாமல் உள்ளது. அது விஜய்க்கும் எனக்கும் உள்ள பிணைப்பு..

மன்சூர் அலிகான்…

“யானும் இணைந்தேன். தளபதி 67இல் லோகேஷ் நீ ஆர்ப்பரித்து எழு; திரையில் விரைவில் சந்திப்போம் மக்களே” என அந்த போஸ்டரில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்…

“இந்த நேரத்தில் கேமரா முன் மற்றும் திரைத்துறையில் கைதேர்ந்தவர்களுடன் தோள்சேர்ந்து நிற்கிறேன். தளபதி 67ல் தானும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி”

இயக்குநரும் நடிகருமான அர்ஜுன், ”ஒரு அற்புதமான கேப்டனால் (லோகேஷ் கனகராஜ்) வழிநடத்தப்படும் கப்பலில் ஏறுகிறேன்”.

இவ்வாறு படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகள் ‘தளபதி 67’ குறித்த தங்களின் கருத்தை தெரிவித்திருந்தனர்.

‘Thalapathi 67’ Update: Expected Actors…Unexpected Ajith Movie Actress

More Articles
Follows