விஜய் & அருண் விஜய் & எமி இணைந்த படத்தின் டப்பிங் அப்டேட்

விஜய் & அருண் விஜய் & எமி இணைந்த படத்தின் டப்பிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘யானை’ படத்திற்குப் பிறகு நடிகர் அருண் விஜய் தற்போது இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘அச்சம் என்பது இல்லையே – மிஷன் சாப்டர் 1’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், ‘அச்சம் என்பது இல்லையே – மிஷன் சாப்டர் 1’ படத்தின் டப்பிங் பணியை நடிகர் அருண் விஜய் நிறைவு செய்தார்.

இதனை, அருண் விஜய் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

அச்சம் என்பது இல்லையே

arun vijay’s Mission Chapter 1 movie new update

நான் ஆடும்போது தான் ஆட்டக்காரர்களின் வலியை உணர்ந்தேன் – முனீஷ்காந்த்

நான் ஆடும்போது தான் ஆட்டக்காரர்களின் வலியை உணர்ந்தேன் – முனீஷ்காந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜா குருசாமி இயக்கத்தில் காளி வெங்கட், முனீஸ்காந்த் கதையின் நாயகர்களாக நடித்துள்ள படம் ‘காடப்புறா கலைக்குழு’.

இந்த படம் ஜூலை 7 தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜா குருசாமி பேசியதாவது…

“முதலில் என் தயாரிப்பாளர் இல்லாமல் நான் இல்லை , அவருக்கு நன்றி. படக்குழு அனைவருக்கும் நன்றி எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்துள்ளீர்கள் , முகச்சுளிப்பு இல்லாமல் இரத்தக் காட்சிகள் இல்லாமல், குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படமாக இந்தப் படம் இருக்கும், நீங்கள் பார்த்து விட்டு உங்கள் ஆதரவைத் தர வேண்டும் நன்றி.

நடிகர் முனிஸ்காந்த் பேசியதாவது…

இந்தப் படம் முண்டாசுப்பட்டி படம் போன்று ஒரு குழுவாகச் சேர்ந்து உருவாக்கியுள்ளோம், அனைவரும் இணைந்து கலகலப்பாகப் படப்பிடிப்பை நடத்தினோம்.

இயக்குநர் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார், இந்தப் படத்தின் மீது மிகவும் நம்பிக்கை வைத்து இரவு பகல் பாராமல் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். இப்படி ஒரு கலைப் படைப்பை உருவாக்கியுள்ள தயாரிப்பாளருக்கு நன்றி.

நான் இந்த படத்தில் கரகாட்டம் ஆட முயற்சி செய்துள்ளேன். அப்போதுதான் என்னால் கரகாட்டக்காரர்களின் நிஜமான வலியை உணர முடிந்தது.

அது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது , படம் கண்டிப்பாக வெற்றியடையும் வாழ்த்துகள்.

Munishkanth about his struggle in Kaadappura Kalaikuzhu

‘காடப்புறா கலைக்குழு’ பட டிரைலரை பார்த்து தனுஷ் பாராட்டினார் – காளி வெங்கட்

‘காடப்புறா கலைக்குழு’ பட டிரைலரை பார்த்து தனுஷ் பாராட்டினார் – காளி வெங்கட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜா குருசாமி இயக்கத்தில் காளி வெங்கட், முனீஸ்காந்த் கதையின் நாயகர்களாக நடித்துள்ள படம் ‘காடப்புறா கலைக்குழு’.

இந்த படம் ஜூலை 7 தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் காளி வெங்கட் பேசியதாவது…

எனக்கு இது மிக முக்கியமான படம், இயக்குநர் குறும்படம் எடுத்த காலத்திலிருந்தே எனக்குப் பழக்கம். ராஜா குருசாமி எனக்கு நெருங்கிய நண்பர். அவர் படம் செய்தது எனக்கு மகிழ்ச்சி. அவருக்குப் படம் தந்ததற்காகத் தயாரிப்பாளருக்கு நன்றி.

தயாரிப்பாளர் புரொடக்சனில் தேவைப்படும் அத்தனையும் வாங்கி வைத்து விட்டார். கண்டிப்பாகத் தொடர்ந்து படம் எடுப்பார். அவருக்கு வாழ்த்துக்கள்.

ஹென்றி மிக எளிமையாக அனைவருக்கும் பிடிக்கும் படி இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தில் முனீஷ்காந்த் இங்கு ஆடியதை வீடியோவில் பார்த்தேன் அவருடன் தொடர்ந்து பணியாற்றுவது மிக மகிழ்ச்சி. லோகேஷனில் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்தார்கள் அவருக்கு நன்றி. தனுஷ் சார் இந்தப்படத்தின் டிரெய்லர் பார்த்துப் பாராட்டினார். உங்களுக்கும் படம் பிடிக்கும் நன்றி.

Dhanush praises Kaadappura Kalaikuzhu trailer says Kaali Venkat

‘முண்டாசுப்பட்டி’-க்கு பிறகு ‘காடப்புறா கலைக்குழு’ தான்.. – சூப்பர் குட் சுப்ரமணி

‘முண்டாசுப்பட்டி’-க்கு பிறகு ‘காடப்புறா கலைக்குழு’ தான்.. – சூப்பர் குட் சுப்ரமணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜா குருசாமி இயக்கத்தில் காளி வெங்கட், முனீஸ்காந்த் கதையின் நாயகர்களாக நடித்துள்ள படம் ‘காடப்புறா கலைக்குழு’.

இந்த படம் ஜூலை 7 தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி பேசியதாவது…

நான் பல படங்களில் நடித்துள்ளேன், ஆனால் எனக்கு மிகப்பெரிய அடையாளம் கொடுத்தது முண்டாசுப்பட்டி படம்.

அதன் பிறகு அப்படி ஒரு படம் எனக்கு அமையவில்லை. அதை இந்தப்படம் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்.

இயக்குநர் உடல் அளவிலும் மனதளவிலும் அதிக மெனக்கெடல் செய்துள்ளார், அவரது உழைப்பிற்கு இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும் நன்றி.

நடிகை சுவாதி முத்து பேசியதாவது…

முதலில் கடவுளுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், இது எனக்கு முதல் படம் படக்குழு அனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்தப் படம் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டிய படம். உங்கள் அனைவருக்கும் நன்றி, என் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நன்றி அவர்கள் இல்லாமல் நான் இல்லை, படத்திற்கு உங்கள் ஆதரவு வேண்டும் நன்றி.

After Mundasuppatti movie Kaadappura Kalaikuzhu says Subramani

சினிமா ஆர்வத்தால் ‘காடப்புறா கலைக்குழு’ படத்தை தயாரித்த ரியல் சயின்ஸ்ட்

சினிமா ஆர்வத்தால் ‘காடப்புறா கலைக்குழு’ படத்தை தயாரித்த ரியல் சயின்ஸ்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sakti Ciinee Productions Pvt Ltd சார்பில், டாக்டர் முருகானந்தம் வீரராகவன், டாக்டர் சண்முகப்பிரியா முருகானந்தம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜா குருசாமி இயக்கத்தில் உருவான படம் ‘காடப்புறா கலைக்குழு’.

முனீஸ்காந்த், காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, கிராமத்துக் கரகாட்ட கலையின் பின்னணியில் உருவாகியுள்ளது. திரைப்படம் ‘காடப்புறா கலைக்குழு’.

வரும் ஜூலை 7 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கை சந்திப்பு இனிதே நடைபெற்றது.

தயாரிப்பாளர் டாக்டர் முருகானந்தம் வீரராகவன் பேசியதாவது…

எங்கள் விழாவிற்கு வருகைக்குத் தந்துள்ள அனைவருக்கும் நன்றி. நான் அறிவியல் துறையில் பணியாற்றி வந்தவன், ஆனாலும் என்னிடம் கலை ஆர்வம் குறையவே இல்லை.

எனவே என் துறையில் சாதித்த பிறகு எனக்குப் பிடித்த துறைக்கு வந்துள்ளேன். சினிமா எனக்கு இன்ஸ்பிரேஷன். எனது ஆர்வம் தான் உங்கள் முன் என்னைத் தயாரிப்பாளராக நிறுத்தியுள்ளது. ‘காடப்புறா கலைக்குழு’ படத்தில் உங்களை ரசிக்க வைக்கும் அனைத்து அம்சங்களும் உள்ளது. தொடர்ந்து எங்கள் நிறுவனம் மூலம் நல்ல படைப்புகளை தருவோம். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

நடிகை ஶ்ரீலேகா ராஜேந்திரன் பேசியதாவது….

எல்லோரும் மிகக் கடினமாக உழைத்துள்ளார்கள். நான் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் தான் நடித்துள்ளேன், ஆனால் மனதுக்கு நிறைவான கதாபாத்திரம். இப்போது பழமையான கலைகள் அழிந்து வருகிறது. நான் செத்தாலும் ஆயிரம் பொன் என ஒரு படம் நடித்தேன், அதில் ஒப்பாரி அழிந்து போவதைப் பற்றி எடுத்தார்கள்.

இந்தப்படத்தில் கரகாட்டத்தை எடுத்துள்ளார்கள். இயக்குநர் காலில் அடிபட்டாலும் கட்டுப்போட்டுக் கொண்டு இயக்கினார். இந்தப் படம் கண்டிப்பாக ஜெயிக்கும். தயாரிப்பாளர் கலையின் மீதான அன்பில் இப்படத்தை எடுத்துள்ளார். உங்கள் ஆதரவை இந்தப்படத்திற்குத் தாருங்கள் நன்றி.

டெலிபோன் ராஜா பேசியதாவது….

இன்றைய காலகட்டத்தில் ஜாதியை வச்சுத்தான் படம் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படியான காலகட்டத்தில் கலையை வைத்து எடுத்துள்ளார்கள்.

முனிஷ்காந்த் சார் இந்த படத்தில் இந்த உடம்பை வைத்துக்கொண்டு பம்பரமாக ஆடியிருக்கிறார். காளி வெங்கட்டும் அசத்தியிருக்கிறார். ஆயிரம் பேரின் உழைப்பு இது. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

Scientist Muruganandam became producer of Kaadappura Kalaikuzhu

சிவகார்த்திகேயன் பட பாடலை விஜய்க்காக காப்பியடித்த அனிருத்.; அப்போ ரஜினி நிலைமை.?

சிவகார்த்திகேயன் பட பாடலை விஜய்க்காக காப்பியடித்த அனிருத்.; அப்போ ரஜினி நிலைமை.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி ‘லியோ’வில் இடம் பெற்ற ‘நா ரெடி…’ என்ற பாடல் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.

இந்த படம் இணையத்தில் ரசிகர்களை கவர்ந்து வந்தாலும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் சிவகார்த்திகேயன் பட பாடலை காப்பி அடித்துள்ளதாக ரசிகர்கள் அனிருத்தை வறுத்து எடுத்து வருகின்றனர்.

பொன்ராம் இயக்கத்தில் இமான் இசையில் உருவான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற படத்தில் ‘நாங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்…’ என்ற பாடல் இடம் பெற்று இருந்தது.

அந்தப் பாடலின் மெட்டுக்களைப் போலவே நான் ரெடி என்ற பாடலும் இருப்பதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜூலை 6ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘காவலா….’ என்ற பாடல் வெளியாக உள்ளது.

இந்தப் படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்துள்ளார். எனவே ஜெயிலர் படத்தின் நிலைமை என்ன ஆகுமோ.? என ரசிகர்கள் டென்ஷனில் உள்ளனர்.

Naa Ready song copy cat of Varuthapadatha Valibar Sangam

More Articles
Follows