அருண் விஜய் – அறிவழகன் இணையும் ‘பார்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்

அருண் விஜய் – அறிவழகன் இணையும் ‘பார்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அருண் விஜய் தொடர்ச்சியாக வெற்றிப்படைப்புகளை தந்து கவனம் ஈர்த்து வருகிறார். அவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியான யானை திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக, ஓடிடியில் வெளியான தமிழ்ராக்கர்ஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இரண்டு படைப்புகளும் ரசிகர்களிடத்திலும், விமர்சகர்களிடத்திலும் ஒருங்கே பாராட்டை குவித்துள்ளது.

தொடர் வெற்றிகளால் வர்த்தக வட்டாரங்களிடையே அருண் விஜய் படங்களுக்கு பெரிய மதிப்பு ஏற்பட்டுள்ளது.

All in Pictures T. விஜயராகவேந்திரா வழங்கும், இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடித்துள்ள “பார்டர்” படம் அறிவிக்கப்படதிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்பாக வெளியான இப்படத்தின் டிரெய்லர் அனைவரது ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் அக்டோபர் 5, 2022 அன்று உலகம் முழுவதும் இப்படம் திரைக்கு வரும் என்று தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் அகில இந்திய திரையரங்க உரிமையைப் பெற்றுள்ள 11:11 Production Dr. பிரபு திலக் கூறுகையில்…

தமிழ் திரையுலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான அருண் விஜய் சாரின்” பார்டர்” படத்தை 11:11 Productions சார்பில் வெளியிடுவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் 11:11 Productions ல் எப்பொழுதும் உள்ளடக்கத்தில் சிறந்த திரைப்படங்களை தயாரித்து வெளியிடவே விரும்புகிறோம், சிறந்த பொழுதுபோக்குடன் பார்வையாளர்களின் இதயம் கவரும் படங்களை வெளியிடுவதே எங்கள் நோக்கம். சந்தேகத்திற்கு இடமின்றி, பார்டர் படம் அனைத்து காரணிகளையும் ஒருங்கே கொண்டுள்ளது.

தனித்துவமான திரைக்கதைகள் மூலம் தமிழ் திரையுலகில் மதிப்பு மிக்கவராக போற்றப்படும் இயக்குநர் அறிவழகன், இப்படத்தில் உச்சம் தொட்டுள்ளார்.

இந்த திரைப்படத்தில் ஈடுபட்டுள்ள தொழில் நுட்ப திறமையாளர்களின் அருமையான உழைப்பு, அருண் விஜய் சாரின் அற்புதமான நடிப்பு படத்தினை மிகச்சிறந்ததாக மாற்றியுள்ளது. நாங்கள் இப்படத்தினை மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

இயக்குநர் அறிவழகன் எழுதி இயக்கியுள்ள “பார்டர்” படத்தில் அருண் விஜய், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஸ்டெஃபி படேல் என ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளது.

T.விஜயராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்தை 11:11 Production Dr. பிரபு திலக் வெளியிடுகிறார்.

மற்றும் தொழில் நுட்ப குழுவில் சாம் CS (இசை), B ராஜசேகர் (ஒளிப்பதிவு), சாபு ஜோசப் (எடிட்டிங்), ஷக்தி வெங்கட்ராஜ் M (கலை இயக்கம்), ஹீரா அறிவழகன் (ஆடை வடிவமைப்பாளர்), விவின் S.R. (நிர்வாகத் தயாரிப்பாளர்), உமேஷ் பிரணவ் (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்), & Sync Cinema (ஒலி வடிவமைப்பு) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

“பார்டர்” திரைப்படம் உலகமெங்கும் 2022 அக்டோபர் 5 வெளியாகிறது.

இளையராஜா எழுதி மெட்டமைத்த ‘இதயமே.. இதயமே..’ பாடலை பாடிய யுவன்

இளையராஜா எழுதி மெட்டமைத்த ‘இதயமே.. இதயமே..’ பாடலை பாடிய யுவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்க, ஆதிராஜன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வரும் படம் “நினைவெல்லாம் நீயடா”.

இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வரும் இதில் பிரஜன் நாயகனாக நடிக்க, நாயகியாக மனிஷா யாதவ் வித்தியாசமான வேடத்தில்‌ நடித்திருக்கிறார்.

மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகம் ஆகிறார். இளம் நாயகன் நாயகியாக ரோகித்-யுவலட்சுமி ஜோடி அறிமுகமாகிறது.

இவர்களுடன் முக்கிய இடத்தில் ரெட்டின் கிங்ஸ்லி காமெடியில் கலக்கியிருக்கிறார். மற்றும் மனோபாலா முத்துராமன் மதுமிதா ரஞ்சன் குமார் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் தமிழ்செல்வி ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

மனநல மருத்துவராக முக்கிய வேடத்தில் பிரபல இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் முத்திரை பதித்திருக்கிறார்.

ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவை கையாள ஆசிஸ் ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார். பிரதீப் தினேஷ் மாஸ்டர் சண்டை காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

கலையை முனிகிருஷ்ணா கவனிக்க பாடல்களை பழனி பாரதி, சினேகன் எழுதியிருக்கிறார்கள்.

“இதயமே… இதயமே” என்று தொடங்கும் ஒரு பாடலை இளையராஜா எழுதி கொடுத்திருக்கிறார். அந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியிருக்கிறார்.

மாஸ்டர்கள் தினேஷ், தினா ஆகியோர் நடன காட்சிகளை ரசனையாக வடிவமைத்திருக்கின்றனர்‌‌. தயாரிப்பு நிர்வாகம்: இளங்கோ.

பள்ளிப் பருவத்தில் தோன்றும் முதல் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தை சென்னை கொடைக்கானல் திருப்போரூர் திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் 41 நாட்களில் படமாக்கி முடித்திருக்கிறார் ‌இயக்குநர் ஆதிராஜன்.

இத‌ற்காக தயாரிப்பாளர் ராயல் பாபு இயக்குநருக்கு பாராட்டு தெரிவித்தார்.

இறுதி நாள் படப்பிடிப்பு சென்னையை அடுத்த ஈவிபி ஸ்டுடியோவில் நடைபெற்றது.

கொட்டும் மழையில் பிரஜன், சினாமிகா, யுவலட்சுமி மற்றும் மாணவியர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

மாலையில் வெற்றிகரமாக படப்பிடிப்பை முடித்து பூசணிக்காய் உடைக்கப்பட்டது. இந்த மகிழ்ச்சியை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

தற்போது படத்தின் டப்பிங் நடந்து வருகிறது. படத்தை நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ரசிகர்களை சீட்டிங் செய்ய ‘திருட்டுப் பயலே’ ஜீவன் & ‘சதுரங்க வேட்டை’ நட்டி கூட்டணி

ரசிகர்களை சீட்டிங் செய்ய ‘திருட்டுப் பயலே’ ஜீவன் & ‘சதுரங்க வேட்டை’ நட்டி கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“யாயா” படத்தை தொடர்ந்து நல்ல விமர்சனங்களை கொடுத்த படம் “பக்ரீத்”.

இப் படத்தை “M10 PRODUCTIONS” சார்பில்
தயாரித்த M.S.முருகராஜ் தயாரிக்கும் மூன்றாவது பிரமாண்ட படத்திற்கு “சிக்னேச்சர்” என்று பெயரிட்டுள்ளார்.

நாம் வைக்கிற ஒவ்வொரு கை நாட்டும் எவ்வளவு முக்கியமானது. அந்த கை நாட்டை பயன்படுத்தி, அவங்க தலையெழுத்துல தாளம் போடுறது தான் இந்த “சிக்னேச்சர்”.

சாமானிய மக்களோடு பழகி அவங்க ரகசிய டேட்டா வை திருடும் கேரக்டரில் “திருட்டுப்பயலே” ஜீவன் நடிக்கிறார்.

அதே டேட்டா வை பயன்படுத்தி மக்களை வேட்டையாடு பவராக, “சதுரங்கவேட்டை” நட்டி நடிக்கிறார்.

இவர்கள் இணைந்து செய்யும் ‘சீட்டிங்’ தான் படத்தின் திரைக்கதை சுவாரசியம்.

இவர்களுடன் இளவரசு, ஹரிஷ் பெராடி, மன்சூர் அலிகான், ஜார்ஜ், மாறன் மற்றும் பலர் நடிக்கின்றனர். கதா நாயகி தேர்வு நடை பெற்று வருகிறது.

இதில் மேலும் ஒரு சிறப்பு அம்சமாக முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார்.

இத்திரைப்படத்தை “பக்ரீத்” படத்தை இயக்கிய ஜெகதீசன் சுபு இயக்குகிறார்.

ஒளிப்பதிவு- சீனிவாசன் தயாநிதி,
சண்டைப்பயிற்சி- திலீப் சுப்பராயன்,
நடனம்- கல்யாண், தினேஷ்,
படத்தொகுப்பு- கலை,
திரைக்கதை- பொன் பார்த்திபன்,
கலை இயக்குநர்- மைக்கேல்,
ஆகியோர் பணிபுரிகிறார்கள்.

விநாயகர் சதுர்த்தி இன்று பூஜையுடன் படபிடிப்பு ஆரம்பமானது. முதல் நாள் படபிடிப்பில் நாயகர்கள் ஜீவன், நட்டி கலந்து கொண்டார்கள்.

தொடர்ந்து ஒரே கட்ட படபிடிப்பாக சென்னை, மும்பை மற்றும் துபாய் போன்ற பல இடங்களில் நடைபெறுகிறது. பூஜையில் டைரக்டர் ஹரி, நடிகர் ஹரிஷ் பேரடி கலந்து கொண்டார்கள்.

அடுத்த தகவல் விரைவில்..

signature

ரசிகர்களுக்கு ‘கிக்’ கொடுக்க விளம்பர மோதலில் சந்தானம் – தான்யா ஹோப்

ரசிகர்களுக்கு ‘கிக்’ கொடுக்க விளம்பர மோதலில் சந்தானம் – தான்யா ஹோப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு #கிக் என்று பெயரிட்டுள்ளார்கள்.

இதன் படபிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் ஆரம்பமானது.

தொடர்ந்து ஒரே கட்டமாக சென்னையில் நடந்து இதன் படபிடிப்பு பாங்காங்கில் 15 நாட்கள் நடந்து படபிடிப்பு முடிவடைந்தது.

இப்படத்தை பார்டியூன் பிலிம்ஸ் ( FORTUNE FILMS ) பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.

இப்படமூலம், கன்னட பிரபல டைரக்டர் பிரசாந்த்ராஜ் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் கன்னடத்தில் ஹிட்டான லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் போன்ற பல படங்களை இயக்கி ஸ்டார் டைரக்டராக உள்ளார்.

இதில், சந்தானம் ஜோடியாக தடம் மற்றும், ‘தாராள பிரபு’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்த தான்யா ஹோப் ( tanya hope) நடிக்கிறார்.

மேலும், தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, Y.G.மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, முத்துகாளை, ராகிணி திவேதி, ஷகிலா, கிரேன் மனோகர், கிங்காங், கூல் சுரேஷ், சேது, அந்தோணி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கிக் தான். விளம்பர நிறுவனத்தில் வேலை செய்யும் கதாநாயகனின் ஒவ்வொரு செயலிலும் கிக்க்காக செய்ய நினைப்பவன்.

வேறு விளம்பர நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகியுடன் தொழில் முறை போட்டியில் கிக்-காக எலியும் பூனையுமாக மோதிக் கொள்கிறார்கள்.

இவர்களுக்குள் நடக்கும் யுத்தத்தை முழு நீள நகைச்சுவையுடன் ‘சந்தானம்’ பாணியில் டைரக்டர் உருவாக்கி இருக்கிறார்.

இரண்டு பாடல்களுக்காக 12 வித விதமான செட் அமைத்து அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக படமாக்கி உள்ளார்கள்.

இது ஒரு சந்தானம் அக்மார்க் திரைப்படம். குடும்பத்துடன் ஜாலியாக கொண்டாடும் விதத்தில் கதை அமைந்துள்ளது.

தயாரிப்பு: நவீன் ராஜ் ( Naveen Raj )

இசை: அர்ஜூன் ஜன்யா ( Arjun Janya )

ஒளிப்பதிவு: சுதாகர் ராஜ் ( Sudhakar Raj )

கலை: மோகன் பி.கேர் ( ( Mohan B.Kere )

எடிட்டிங்: நாகூரா ராமசந்த்ரா ( ‘DON’ fame Nagoorah Ramachandrah )

ஸ்டண்ட்: Dr.ரவி வர்மா ( Dr.Ravi Varma ),
டேவிட் காஸ்டில்லோ ( David Castillo )

நடனம்: குலபுஷா, சந்தோஷ் சேகர் ( Kulabhushah, santhosh Shekar )

Pro: ஜான்சன் ( Johnson )

தயாரிப்பு: நவீன் ராஜ் ( Naveen Raj )

சர்வதேச விருதுகளைக் குவித்த ’21 கிராம்ஸ்’ பைலட் பிலிம்

சர்வதேச விருதுகளைக் குவித்த ’21 கிராம்ஸ்’ பைலட் பிலிம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

52 நிமிடங்களில் ஒரு முழு நீளத் திரைப் படத்தின் அனுபவம்:17 சர்வதேசத் திரைப்பட விழா விருதுகளைக் குவித்த ’21 கிராம்ஸ்’ பைலட் பிலிம்.

இப்போது வருகிற எந்தப் படத்தைப் பார்த்தாலும் வெட்டு, குத்து, ரத்தம் என்று மனித உயிரை மலிவாகக் காட்டும் வகையில் காட்சிகள் வருவது சகஜமாகி வருகிறது.

இந்த நிலையில் உயிரின் விலை மதிப்பற்றது. மனிதன் ஒருவனின் உயிரை எடுக்க யாருக்கும் உரிமையோ அதிகாரமோ கிடையாது என்கிற கருத்தை வலியுறுத்தும் வகையில் வித்தியாசமான யாரும் சொல்லாத கோணத்தில் உருவாகியுள்ள படம் தான் ’21 கிராம்ஸ்’.

இந்தப் படத்தை யான் சசி இயக்கி உள்ளார். அவர் ஏற்கெனவே சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

 yaan sasi

இந்தப் படத்தில் கதாநாயகனாக மோகணேஷ் என்கிற அறிமுக நடிகர் நடித்துள்ளார். அண்மையில் காலமான குணச்சித்திர நடிகர் பூ ராமு ஓர் அழுத்தமான கதாபாத்திரத்தின் மூலம் இந்த படத்தில் நடித்து, படம் பார்ப்பவர்கள் மனதில் நிறைகிறார்.

இப்படத்திற்கு சௌந்தர்ராஜன், அன்பு டென்னிஸ் என்கிற இருவர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்த இருவருக்கும் சில படங்களிலும் இணைய தொடர்களிலும் விளம்பரப் படங்களிலும் பணியாற்றிய அனுபவம் உண்டு.

இப்படத்திற்கு இசையமைத்துள்ள விஜய் சித்தார்த், ராக்கி புகழ் நடிகர் வசந்த் ரவி நடித்துள்ள புதிய படத்திற்கு இசையமைத்து வருகிறார். அந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்தப் படம் பற்றிய அனுபவத்தை இயக்குநர் யான் சசி கூறும் போது,

” முழு நீளத்திரைப்படம் இயக்குவது தான் எனது கனவு . அப்படி நான் ஒரு படத்திற்காகப் பேசி ஒரு பெரிய நிறுவனத்தால் எனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.படம் துவங்க வேண்டிய நேரத்தில் கொரோனா காலம் வந்து விட்டது.

தாமதமாகிக் கொண்டே வந்தது. இடையில் ஏதாவது செய்யலாம் என்று ஒரு சிறு முயற்சியாக 15 நிமிடத்தில் ஓடக்கூடிய ஒரு பைலட் பிலிம் போல் இதை உருவாக்குவது எனத் திட்டமிட்டேன். ஆனால் அதன் கதை வளர்ந்து விரிவாகி, அந்தக் கதை தானே பெருக்கிக் கொண்டு ஒரு முழு நீளப் படமாக 52 நிமிடங்களில் ஓடக்கூடிய படமாக உருமாறி உருவாகியுள்ளது.

21 கிராம்ஸ்

நான் எடுத்துக்கொண்ட கதை அதன் வீரியத்தால் பல பிரச்சினைகளைத் தாண்டி முழுப் படமாக வடிவம் பெற்று இன்று பார்த்தவர்கள் எல்லாம் பாராட்டுகிறார்கள். அதைப் திரையிட்டுக் காட்டிய போது அனைவரும் இப்படிக் கூட இதைச் சொல்ல முடியுமா என்று வியந்து பாராட்டினார்கள். திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிய போது பல இடங்களில் விருதுகளைப் பெற்றுள்ளது.

கல்கட்டா சர்வதேச கல்ட்டு திரைப்பட விழாவில் இப்படத்திற்கு சிறந்த படம், சிறந்த நடிகர் , சிறந்த இயக்குனர்,சிறந்த ஒளிப்பதிவு என மொத்தம் நான்கு விருதுகளைப் பெற்றது.

அந்தத் திரைப்பட விழாவில் தான் விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்திற்கும் விருதுகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது .

அதேபோல தாகூர் சர்வதேச திரைப்பட விழா, சிங்கப்பூர் திரைப்பட விழா, டோக்கியோ, இத்தாலி ரோம்,அமெரிக்கன் கோல்டன் பிக்சர்ஸ் திரைப்பட விழாக்கள் என்று சர்வதேச திரைப்பட விழாக்களில் இதுவரை 17 விருதுகள் இந்த படத்திற்கு கிடைத்திருக்கின்றன.

52 நிமிடங்களில் ஒரு முழு படத்திற்கான திருப்தியை இப்படம் பார்வையாளர்களுக்கு வழங்கும் வகையில் இது உருவாகி உள்ளது.

இப்படத்தில் அறிமுகம் ஆகியுள்ள கதாநாயகனுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது .இந்தப் படத்தில் இன்னொரு கதாநாயகனாக நடித்துள்ள பூ ராமு அவர்களின் நடிப்பும் பேசப்படும் .

நாங்கள் ஒரு புது படக் குழுவாக இருந்தாலும் கதையையும் இந்த முயற்சியையும் ஊக்கப்படுத்தும் வகையில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்களுக்கு அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது .அவரது இறப்பு எங்களைப் போல வளரும் இளம் இயக்குனர்களுக்கு பெரிய இழப்புதான்.

படத்தை முடித்து திரையிட்டுக் காட்டிய போது
பலரும் கொடுத்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் எங்களுக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்தன. திரையிடப்படும் திரைப்பட விழாக்களில் கிடைத்து வரும் விருதுகளும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை எனக்கு அளித்து வருகிறது.” என்கிறார் இயக்குநர் யான் சசி.

21 கிராம்ஸ்

Director – yaan sasi
Actors – poo ramu / moganesh
Dop – sounderrajan / anbu dennis
Music director – vijay siddharth
Editor – pk

’21 Grams’ pilot film bagged international awards

JUST IN ரூ 6 கோடி கேட்டு மிரட்டிய அமலாபாலின் Ex.; ஓ இவ்வளவு விஷயம் நடந்துடுச்சா.??

JUST IN ரூ 6 கோடி கேட்டு மிரட்டிய அமலாபாலின் Ex.; ஓ இவ்வளவு விஷயம் நடந்துடுச்சா.??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலாபால்.

இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து செய்தார்.

இயக்குனர் விஜய்க்கு மறுமணம் நடந்து விட்டாலும் அமலாபால் மறு திருமணம் செய்து கொள்ளவில்லை.

இந்நிலையில் அமலா பாலுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக அவரது முன்னாள் காதலன் (பாய் பிரண்ட்) பவ்நீந்தர் சிங் இன்று கைது செய்யப்பட்டார். இவர் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல பாடகரும் தனது நண்பருமான பவிந்தர் சிங்கை அமலா பால் காதலிப்பதாக கூறப்பட்டது.

ஒரு கட்டத்தில் இருவரும் மணக்கோலத்தில் இருந்த படங்களை பவிந்தர்சிங்
தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு அது பரபரப்பாகவே பின்னர் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமலாபால்

அமலா பால் அளித்த புகாரின்பேரில் காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

தனது காதலனை கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில் தன்னை துன்புறுத்தியதாக புகார் அளித்து இருந்தார்.

தன்னை ஏமாற்றி, அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசிடம் புகார் அளித்திருந்தார்.

பவ்நீந்தர் சிங்குடன் இணைந்து திரைப்பட நிறுவனம் தொடங்கி நடத்தி வந்ததாகவும் அமலாபால் தகவல் அளித்துள்ளார்.

புதுச்சேரி பகுதியில் பாவந்தர் சிங் தத்தை கைது செய்து விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை அமலா பாலுக்கு ராஜஸ்தானில் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், அந்த புகைப்படங்களை வெளியிடுவேன் என ரூ.6 கோடி கேட்டு பவிந்தர்சிங் மிரட்டியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

பவ்நீந்தர் சிங்

Amala Paul’s ex-lover held for trying to extort money

More Articles
Follows