தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நட்சத்திர குடும்பம் என்று சொன்னால் அதில் சினிமாவில் ஒரு சிலருக்கு தான் 100% பொருந்தும்.
அதில் முக்கியமான குடும்பம் நடிகர் விஜயகுமாரின் குடும்பம். இவரின் குடும்பத்தில் நடிக்காதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைவரும் நடிகர் நடிகைகளாகி விட்டனர்.
தற்போது அவரது பேரனையும் நடிக்க வைத்து விட்டார் விஜயகுமார்.
சினிமா சீரியல் என பிசியாக வரும் விஜயகுமார் நேற்று ஆகஸ்ட் 29ல் தன் 80ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.
இதனையொட்டி குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார் விஜயகுமார்.
அவருடன் மனைவி, அவரது மகன் அருண் விஜய், மகள்கள் ப்ரீத்தா, ஸ்ரீதேவி, மருமகன் இயக்குனர் ஹரி மற்றும் பேரன், பேத்திகள் ஆகியோரும் சென்றுள்ளனர்.
ரசிகர்கள், திரையுலகினர் பிரபலங்கள் என பலரும் விஜயகுமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தனது அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி சாமி தரிசனம் போட்டோக்களை பகிர்ந்துள்ளார் அருண் விஜய்.