நடிகர் அருண்விஜய் நடிக்கும் படங்கள் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ள படங்களாக மாறி வருகிறது

நடிகர் அருண்விஜய் நடிக்கும் படங்கள் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ள படங்களாக மாறி வருகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AV 31அந்த வகையில் இயக்குநர் அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து பெரும் பொருட்செலவில் படத்தை தயாரிக்கவுள்ளார் ‘ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா. ‘செக்கச்சிவந்த வானம்’, ‘தடம்’ ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியால் சக்சஸ் நாயகனாக வலம்வரும் வரும் அருண் விஜய், இந்தப் படத்திற்காக பக்காவாக தயாராகி நடிக்கிறார். ஹீரோயினாக ரெஜினா கஜண்ட்ரா நடிக்க, மற்றுமொரு நாயகியாக ஸ்டெபி பட்டேல் அறிமுகமாகிறார். நடிகர் பகவதி பெருமாள் படத்தில் முக்கிய வேடமேற்றிருக்கிறார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

அருண் விஜய்யை வைத்து ‘குற்றம் 23’ என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய அறிவழகன், இம்முறை ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை இயக்குகிறார். பெரும் பொருட்செலவில் இந்தப் படம் தயாராகிறது. அறிவழகன் இயக்கத்தில் உருவான படங்களில் இது தான் பொருட்செலவில் அதிகம். சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.இந்தப் படம் தொடர்பாக அறிவழகன், “‘குற்றம் 23’ படத்துக்குப் பிறகு மீண்டும் அருண் விஜய் சாரை இயக்கவிருப்பதில் மகிழ்ச்சி. தமிழ் திரையுலகில் இதுவரை வந்திராத புதுமையான ஒரு ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் கதை. எனது முந்தைய படங்களை விட இதில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம். கண்டிப்பாக அது பேசப்படும்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் டெக்னிஷியன்ஸ் டீமும் ஸ்ட்ராங்காக அமைந்துள்ளது. அறிவழகனின் நெருங்கிய நண்பராக B.ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். இவர் ‘ஆர்யா 2’, ‘ஆரஞ்ச்’ உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் பணிபுரிந்தவர். தற்போது இசையமைப்பில் தனிமுத்திரை பதித்து வரும் சாம் சி.எஸ் இசையமைப்பாளராக பணிபுரிகிறார். ‘குற்றம் 23’ படத்துக்கு கலை இயக்குநராக பணிபுரிந்த சக்தி வெங்கட்ராஜ் இதிலும் கலை இயக்குநராக ஒப்பந்தமாகியுள்ளார். எடிட்டராக வல்லினம் படத்திற்க்கு தேசிய விருது வென்ற வி.ஜே சாபு ஜோசப் பணிபுரிய இருக்கிறார், ரெட் டாட் பவன் பப்ளிசிட்டி பொறுப்பை ஏற்றுள்ளார்.

இன்று பூஜையோடு துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய், இயக்குநர் அறிவழகன் உள்ளிட்ட படக்குழுவினரும், நடிகர் விஜய குமார் உள்பட பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்

மீண்டும் ரஜினியுடன் மோத அஜித்தின் ‘வலிமை’யான ப்ளான்

மீண்டும் ரஜினியுடன் மோத அஜித்தின் ‘வலிமை’யான ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and Ajith movies clash on 2020 Diwaliரஜினி நடிக்கவுள்ள தலைவர் 168 படத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இமான் இசையமைக்கவுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சூரி ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது.

விரைவில் இப்பட சூட்டிங் துவங்கவுள்ளது. இப்படத்தை அடுத்து ஆண்டு 2020 தீபாவளி சமயத்தில் ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்துடன் மோதும் வகையில் அஜித்தின் வலிமை படமும் 2020 தீபாவளிக்கு வெளியாகிறது.

போனி கபூர் தயாரிக்கவுள்ள இந்த படத்தை வினோத் இயக்குகிறார்.

வலிமை பட சூட்டிங் வருகிற டிசம்பர் 13ல் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது.

இந்த 2019 ஆண்டில் ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் மோதின.

Rajini and Ajith movies clash on 2020 Diwali

BREAKING என் மீது மக்கள் வச்ச நம்பிக்கை வீணாகாது…; ரஜினி ஓபன் டாக்

BREAKING என் மீது மக்கள் வச்ச நம்பிக்கை வீணாகாது…; ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I wont disappoint peoples trust on me says Rajini at Darbar eventதர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா, தற்போது சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது-

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தை லைகா தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த விழாவிற்கு வழக்கம்போல நயன்தாரா வரவில்லை.

இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது…

ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய ரமணா படம் எனக்கு பிடித்தது. பின்னர் கஜினி படம் பார்த்தேன்.

அவர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் அப்போது அவர் பிசியாக இருந்தார். ஒரு ஒன் லைன் சொன்னார். ஆனால் அதை திரைக்கதையாக அமைக்க 3 மாதம் வேண்டும் என்றார். மேலும் கஜினி இந்தி படத்தை இயக்கி வருவதாக கூறினார்.

அப்போது நான் சிவாஜி படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அதன்பின்னர் எந்திரன் படம் பண்ண ஆரம்பித்து விட்டேன்.

இப்போதுதான் தர்பார் படம் எங்களுக்கு கிடைச்சிருக்கு.

இயக்குநர் பாலசந்தர் ஒரு நல்ல நடிகனுக்கு தான் இந்த பெயர் வைக்க வேண்டும் என நினைத்தார். எனக்கு அந்த பெயரை வைத்தார்.
அவருடைய நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன்.

ரஜினியை வைத்து படம் எடுத்தால் நஷ்டம் அடையாது என தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

அந்த நம்பிக்கை காப்பாற்றியுள்ளேன். அது போல் மக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது.

தற்போது நெகட்டிவ்வாக பேசிறார்கள். அதிகம்பேர் எதிர்மறையாக பேசுகிறார்கள்.

ஆனால் அவர்களிடமும் நாம் அன்பாக இருப்போம். என்னுடைய பிறந்தநாள் இந்த வருடம் முக்கியமான பிறந்த நாள், 70வது பிறந்தநாள். ரசிகர்கள் ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம், அதற்கு பதிலாக ஏழைகளுக்கு உதவுங்கள்.

இவ்வாறு ரஜினி பேசினார்.

I wont disappoint peoples trust on me says Rajini at Darbar event

BREAKING சிவனோட சிட்டிங்… எமனோட கட்டிங் போட்டவர் ரஜினி… விவேக் பேச்சு

BREAKING சிவனோட சிட்டிங்… எமனோட கட்டிங் போட்டவர் ரஜினி… விவேக் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Viveks punch dialogue at Darbar Audio launchமுருகதாஸ் இயக்கி ரஜினி நடித்துள்ள படம் தர்பார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விவேக் கலந்துக் கொண்டு பேசியதாவது…

இந்த மேடைக்கு வந்த உடனே ரஜினி ஸ்டைல் வந்துட்டு.

நான் 3 எழுத்து சொல்றேன். அதை கேட்டால் இந்த அரங்கமே 10 நிமிடம் அதிரும். ஏனா இங்க இருப்பது ரஜினி ரசிர்கர்கள் இல்ல. ரஜினி வெறியர்கள்.

ரஜினி உடல்நிலை சரியில்லாதபோது அவர் மீண்டு வர கடவுளிடம் எல்லாரும் செய்த பிரார்த்தனைகள் தான் காரணம்.

ரஜினி சார் சிவனிடம் சிட்டிங்கும் போடுவார். எமனிடம் கட்டிங்கும் போடுவார். அதான் எமனிடம் கட்டிங் போட்டுவிட்டு வந்திருக்கிறார்.

இதை முருகதாஸ் முடிந்தால் தர்பாரில் பன்ச் டயலாக்காக வைக்க வேண்டும்” என பேசினார் விவேக்.

Actor Viveks punch dialogue at Darbar Audio launch

BREAKING தர்பார் இசை விழாவில் சீமானை கிழித்து தொங்கவிட்ட லாரன்ஸ்

BREAKING தர்பார் இசை விழாவில் சீமானை கிழித்து தொங்கவிட்ட லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrance slams Seema at Darbar audio launchரஜினியின் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்துக் கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது…

இந்த கூட்டத்தில் கடைசியாக நிற்க வேண்டிய என்னை இன்று முதல் வரிசையில் உட்கார வைத்தவர் என்றால் அது தலைவர் ரஜினி தான்.

தன்னுடைய குடும்பத்தை கூட 2வது வரிசையில் தான் அமர வைத்துள்ளார்.

யார் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் ரஜினியைப்போல் தன்னடக்கம், அமைதி வராது.

அவர் யாருக்காவது துரோகம் செய்து பார்த்திருக்கிறீர்களா? யாராவது 100வது படத்தில் ஆன்மீகத்தை சொல்வார்களா? தங்கள் 100வது படம் மாஸ் ஆக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் ரஜினிகாந்த் ராகவேந்திரா மூலம் சொன்னார்.

அற்புதம் அதிசயம் என்ற வார்த்தைகள் சாதாரணமானவை. ஆனால் அது ரஜினி சொன்ன பிறகுதான் அது பெரிதாக பேசப்படுகிறது.
அந்த அதிசயமே அற்புதமே ரஜினி சார்தான்.

ரஜினி பேசினால் படத்தின் பப்ளிசிட்டிக்காக பேசுகிறார் என்று சொல்கிறார்கள்; டேய் பப்ளிசிட்டிக்கு பெயரே சூப்பர் ஸ்டார் தான்.
தற்போது ஒருவருக்கு அரசியல் நாகரீகம் என்பதே கிடையாது. ரஜினி ஒருவரை கூட தவறாக பேச மாட்டார்.

ஆனால் அவரை பற்றி ஒருவர் தவறாக எப்போதும் பேசிக் கொண்டே இருக்கிறார். அவரின் பெயரை கூட சொல்ல கூட எனக்கு தோனல.

நான் பதவிக்கு வந்தால் எல்லாரையும் கொன்றுவிடுவேன் என்கிறார். இதுதான் தலைமையா?

நான் இதுபற்றி பேச கூடாது என நினைத்தேன். ஆனால் இது சரியான நேரம். அதான் பேசுகிறேன்.

நான் தலைவர் வீட்டூக்கு அடிக்கடி போன் பண்ணி பேசுவேன். இதன்பின்னர் என்னிடம் தலைவர் என்னிடம் பேசாவிட்டாலும் பரவாயில்லை.

என் தலைவன பத்தி பேசுனா நானும் பேசுவேன் என சீமானை சீண்டினார் லாரன்ஸ்.

மேலும் பேசியதாவது…

நான் சின்ன வயதில் கமல் போஸ்டர் மீது சாணி அடித்தீருக்கிறேன். அது அந்த வயசு. பிறகுதான் ரஜினி கமல் நட்பு தெரிந்தது” என்றார்.

Raghava Lawrance slams Seema at Darbar audio launch

எம்ஜிஆர் சாயல் ரஜினிட்ட இல்ல.. ரஜினி சாயல் எல்லார்ட்டயும் இருக்கு – முருகதாஸ்

எம்ஜிஆர் சாயல் ரஜினிட்ட இல்ல.. ரஜினி சாயல் எல்லார்ட்டயும் இருக்கு – முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

In Indian cinema all actors follow Rajini style says Murugadoss“தர்பார்” படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்று வருகிறது.

அப்போது முருகதாஸ் பேசியதாவது…

நான் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன். இங்கு அமர்ந்திருப்பவர்களை விடவும் சினியர் ரசிகன் நான்.

நிலாவை காட்டி சாப்பாடு ஊட்டுவார்கள், ஆனால் ரஜினிகாந்தை இயக்கியது நிலாவில் இறங்கி சாப்பிட்டது போல இருந்த்து

எம்ஜிஆருக்கு பிறகு ரஜினி தான் என்பார்கள். ஆனால் எம்ஜிஆரின் சாயல் ரஜினியிடம் இல்ல.

ஆனால் ரஜினி சாயல் எல்லா நடிகர்களிடமும் உள்ளது. ஹிந்தி தமிழ் தெலுங்கு என அனைத்து நடிகர்களிடமும் இருக்கும்” என பேசினார் முருகதாஸ்.

In Indian cinema all actors follow Rajini style says Murugadoss

More Articles
Follows