தடம் படத்தில் நாயகியின் உதட்டை பதம் பார்த்த அருண் விஜய்

arun vijayதடையற தாக்க, மீகாமன் படங்களை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தடம்.

கிட்டதட்ட 2 வருடங்களுக்கு மேலாக இப்படம் சில பிரச்சினைகளால் நீண்டது.

இதில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் அருண் விஜய்.

இவருடன் தான்யா ஹோப், வித்யா பிரதீப், ஸ்மிருதி வெங்கட், சோனியா அகர்வால் உள்ளிட்ட 4 நாயகிகள் நடித்துள்ளனர்.

ரெதான் சினிமாஸ் சார்பில் இந்தர் குமார் தயாரிக்க, புதிய இசையமைப்பாளர் அருண் ராஜ் என்பவர் இசையமைத்துள்ளார்.

இதன் இசை வெளியீட்டு விழாவில்…

இப்படம் பற்றி மகிழ்திருமேனி பேசும்போது ‘தடையற தாக்க என் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அந்த படத்துக்கு பின்னர் 2-வது முறையாக அருண்விஜய்யுடன் பணி புரிந்தது மகிழ்ச்சி. அவர் ஒரு இயக்குனருக்கான நடிகர்.

நான் படித்த ஒரு செய்தி என் மனதை பெரிதாக பாதித்தது. அதனை இப்போது படமாக உருவாகி இருக்கிறேன்.

அருண் விஜய் கேரியரில் இந்த படம் தடத்தை பதிக்கும். அதுபோல் 4 நாயகிகள். நால்வருக்கும் நல்ல பெயரை இப்படம் பெற்றுத் தரும்.

அருண் விஜய் பேசும்போது… ’எனக்கு இப்படத்தில் லிப் லாக் சீன் உள்ளது. நான் நடிக்க மறுத்தேன். வீட்டில் பிரச்சினை உருவாகும் என்றேன்.

ஆனால் நீங்கள் ஒரு நடிகர். நடித்துதான் ஆக வேண்டும் என டைரக்டர் கேட்டுக் கொண்டார். அதன் விளைவுகளை இன்றும் அனுபவிக்கிறேன். என்று பேசினார்.

இடையில் குறுக்கிட்டு மகிழ்திருமேனி பேசியதாவது.. ‘அவரிடம் முத்தம் கொடுக்க சொன்னேன். ஆனால் அவர் நாயகி உதட்டை கடித்து விட்டார்.

எந்த நாயகியின் உதடு என்பதை படம் வரும்போது பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்” என்றார்.

Overall Rating : Not available

Latest Post