OFFICIAL அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ பட ரிலீஸ் தேதி

OFFICIAL அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ பட ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’.

இப்படத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த், சரத் லோஹிதஸ்வா, ராஜ சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் என்றும், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் அருள்நிதி தனது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், ’கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் போஸ்டரை பட குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

மேலும், ’கழுவேத்தி மூர்க்கன்’ படம் மே 26 ஆம் தேதி வெளியாகும் என்று போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கழுவேத்தி மூர்க்கன்

arulnidhi’s Kazhuvethi Moorkkan release from may 26

உடற்பயிற்சி செய்ய முடியாமல் நீங்க பிஸி.? வந்துட்டு மொபைல் ஆப்.; டான்ஸ் மாஸ்டருக்கு கமல் ஆதரவு

உடற்பயிற்சி செய்ய முடியாமல் நீங்க பிஸி.? வந்துட்டு மொபைல் ஆப்.; டான்ஸ் மாஸ்டருக்கு கமல் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சூது கவ்வும்’ தொடங்கி பல்வேறு வெற்றி படங்களில் நூற்றுக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவராக உள்ள ஷெரீஃப்,.

எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் உறுதியை பேணுவதற்கு உதவும் வகையிலான புதிய முயற்சி ஒன்றை தொழில்நுட்பத்தின் உதவியோடு தொடங்கியுள்ளார்.

தனது ஜூபாப் ப்ரோ ஸ்டூடியோ (JOOPOP Pro Studio) மூலமாக வின்சென்ட் அடைக்கலராஜின் முதலீட்டோடு ஷெரீஃப் உருவாக்கியுள்ள ஜூபாப் (JOOPOP) நடன செயலியை உலக நாயகன் கமல்ஹாசன் துவக்கி வைத்தார்.

இந்த செயலியின் செயல்முறை விளக்கம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் நாளை (மே 12) நடைபெற உள்ளது.

ஜூபாப் செயலி குறித்து பேசிய ஷெரீஃப்…

“உடற்பயிற்சியின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்ததே. ஆனால், இன்றைய உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவரவர் பணிகளில் பிசியாக இருப்பதால் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை.

இதை கருத்தில் கொண்டு, ஒரு நாளைக்கு வெறும் ஐந்து முதல் பத்து நிமிடங்களிலேயே எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் நலத்தை பேணுவதற்காக இந்த செயலியை உருவாக்கி உள்ளோம்,” என்று கூறினார்.

கமல்ஹாசன்

தொடர்ந்து பேசிய அவர்…

“பள்ளி குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் நடனத்தை தொழிலாக மேற்கொள்ள விரும்புவோருக்கு என மூன்று விதமாக இந்த செயலி பிரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயனர்கள் தங்களுக்கு தேவையான பகுதியை தேர்வு செய்து கொண்டு அவர்களுக்கு உரிய நடன பயிற்சிகளை மிகவும் எளிதாக மேற்கொள்ளலாம்,” என்றார்.

பள்ளிகள் இந்த செயலியை பயன்படுத்துவது குறித்து விளக்கிய ஷெரீஃப்…

“சுமார் 450 பள்ளிகளில் இந்த செயலியை ஏற்கனவே வெற்றிகரமாக பரிசோதித்துள்ளோம். அந்த பள்ளிகள் அனைத்தும் ஜூபாப் நடன செயலியை பெரிதும் வரவேற்றுள்ளன.

ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நடன பயிற்சிகளை வகுப்புகள் தொடங்குவதற்கு முன்னர் ஐந்து முதல் பத்து நிமிடம் வரை மேற்கொண்டால் மாணவர்களுக்கு உடற்பயிற்சி கிடைப்பதோடு அவர்கள் உள்ளங்களும் உற்சாகமடையும்,” என்று கூறினார்.

ஜூபாப் நடன செயலி குறித்து விளக்கிய போது உலகநாயகன் கமல்ஹாசன் மிகவும் பாராட்டியதாக கூறிய ஷெரீஃப், செயலியை துவக்கி வைத்ததற்காக அவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

இது குறித்து மேலும் விவரங்களுக்கு திரைப்பட நடன இயக்குநர் ஷெரீஃப்பை 9843261718 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கமல்ஹாசன்

Kamal launches dance fitness app JOOPOP initiative by choreographer Sherif

விஜய்யின் ‘லியோ’ படத்தில் அர்ஜூன் சீன்ஸ் & மேக்அப் அப்டேட்ஸ்

விஜய்யின் ‘லியோ’ படத்தில் அர்ஜூன் சீன்ஸ் & மேக்அப் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு கடந்த மாதம் காஷ்மீரில் முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

சென்னையில் 25 நாட்கள் ஷெட்யூல் நடக்கும் என்று கூறப்படுகிறது.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இரண்டு நாட்களுக்கு முன்பு புதிய தோற்றத்துடன் காணப்பட்டார். இவருக்கு கேரக்டர் டெஸ்ட் எடுக்கப்பட்டிருக்கிறது.

அதில் அர்ஜுனுக்கு செயற்கையான மேக்கப் பயன்படுத்தியுள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அர்ஜுன் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் இணைகிறார்.

மேலும், அர்ஜுனைத் தொடர்ந்து, சஞ்சய் தத் மற்றும் ப்ரியா ஆனந்த் மீண்டும் நடிகர்களுடன் இணைவார்கள் மற்றும் அவர்களின் பாகங்களின் படப்பிடிப்பை முடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Arjun Scenes & Makeup Updates in Vijay’s ‘Leo’

கிரிக்கெட் ப்ளேயரை காதலிச்சேன்.; விஜய் & அபிஷேக் பிடிக்கும்.; அதுமட்டும் செய்ய மாட்டேன் – ஐஸ்வர்ய லட்சுமி

கிரிக்கெட் ப்ளேயரை காதலிச்சேன்.; விஜய் & அபிஷேக் பிடிக்கும்.; அதுமட்டும் செய்ய மாட்டேன் – ஐஸ்வர்ய லட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி.

இவர் 2017 ஆம் ஆண்டு மலையாள படத்தின் மூலம் தான் திரையலகிற்கு அறிமுகமானார்.

தமிழில் விஷாலின் ‘ஆக்ஷன்’, தனுசுடன் ‘ஜெகமே தந்திரம்’, ஆர்யாவின் ‘கேப்டன்’ படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி

விஷ்ணு விஷாலுடன் நடித்த ‘கட்டா குஸ்தி’ என்ற திரைப்படத்தில் அதிரடி நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பூங்குழலி என்ற கேரக்டர் அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.

இந்த நிலையில், ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்தில் பேட்டி அளித்தார். அதில், “தான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை மனதளவில் காதலித்ததாகவும் ஆனால் தற்போது தனக்கு கிரிக்கெட் பார்க்க நேரமில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

விஜய் மற்றும் அபிஷேக் பச்சன் தனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் அவர்களின் படங்கள் அதிகமாக பார்ப்பேன் என்று கூறினார்.

மேலும், எந்த கேரக்டரிலும் நடிக்க நான் தயார் என்றும் ஆனால் அதே நேரத்தில் வில்லி கேரக்டரில் மட்டும் நடிக்க மாட்டேன் என்று ஐஸ்வர்யா லட்சுமி கூறினார்.

யுவராஜ் சிங்

aishwarya lakshmi who fell in love with cricketer yuvaraj singh

‘கஸ்டடி’ படத்திற்கு கிடைத்த சென்சார் சர்ட்டிஃபிகேட் என்ன தெரியுமா??

‘கஸ்டடி’ படத்திற்கு கிடைத்த சென்சார் சர்ட்டிஃபிகேட் என்ன தெரியுமா??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’.

இப்படத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த்சாமி, சரத்குமார், பிரியாமணி, பிரேம்ஜி அமரன், பிரேமி விஷ்வநாத், வென்னேலா கிஷோர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரித்துள்ள, இப்படத்துக்கு இளையராஜா – யுவன்சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கில் மொழிகளில் உருவாகியுள்ளது.

‘கஸ்டடி’ திரைப்படம் நாளை மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், ‘கஸ்டடி’ படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது.

கஸ்டடி

Naga Chaitanya’s ‘Custody’ got U/A certificate

கமல்ஹாசன் படத்தில் இணையும் சிம்பு? வெளிவந்த சூப்பர் தகவல் !

கமல்ஹாசன் படத்தில் இணையும் சிம்பு? வெளிவந்த சூப்பர் தகவல் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் ஹாசன் மற்றும் மணி ரத்னம் இணையும் புதிய படத்திற்கு ‘KH234’ என பெயரிட்டுள்ளனர்.

சமீபத்திய தகவலின் படி, நடிகர் சிம்பு விடம் KH234 இல் ஒரு முக்கியமான பாத்திரத்திற்காக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படம் கோலிவுட்டின் மற்றொரு வலுவான மல்டிஸ்டாரராக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சிலம்பரசன் டிஆர் ஏற்கனவே கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தில் இயக்குனர் தேசிங் பெரியசாமியின் ‘எஸ்டிஆர் 48’ படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Simbu to share screen space with Ulaganayagan Kamal Haasan?

More Articles
Follows