தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சார்பட்டா பரம்பரை மற்றும் நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களை தொடர்ந்து ‘தங்கலான்’ படத்தை இயக்கி வருகிறார் பா ரஞ்சித்.
ஸ்டூடியோ கீரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சியான் விக்ரம் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் ‘கேஜிஎஃப்’ பாணியில் கோலார் தங்கவயல் பற்றிய கதைக்களம் ஆகும்.
சமீபத்தில் இந்த பட அப்டேட் குறித்து ரஞ்சித் தெரிவித்து இருந்தார். இன்னும் பத்து நாட்களில் ‘தங்கலான்’ பட டீசர் வெளியாகும் என தெரிவித்தார்.
இந்த நிலையில் விக்ரம் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தின் டீசரை பார்த்த தனஞ்ஜெயன் பாராட்டு.
தமிழ் சினிமாவில் ‘தங்கலான்’ படம் ஒரு மைல் கல்லாக இருக்கும். ரஞ்சித் படைப்புகளில் சிறந்த படைப்பாகவும் இருக்கும். விக்ரம் நிறைய விருதுகளை பெறுவார் என தெரிவித்துள்ளார் தனஞ்ஜெயன்.
Thangalaan will be milestone in kollywood says Dhananjayan