உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த ஐஸ்வர்யா

உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த ஐஸ்வர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம் கடந்த நான்கு வருடங்களாக உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது.

இந்தியா தன்னிறைவு அடைந்ததாக சொல்லப்பட்டாலும், இன்றும் இந்நாட்டில் உணவற்று தவிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

உலக பட்டினி குறியீட்டில் இன்றும் இதனை மாற்றும் முனைப்பில் திரு ஆலன் அவர்கள் இந்த தொண்டு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார். உணவற்ற ஏழைகளுக்கு ஒரு வேளை உணவளிக்க வெறும் 35 ரூபாய் தான் செலவாகிறது. நாம் மனது வைத்தால் உணவில்லாமல் தவிப்பவர்கள் நிலையை மாற்ற முடியும்.

இந்நிறுவனத்தின் சார்பில் உலக உணவு தினத்தன்று வருடா வருடம் ஒரு நிகழ்வு நடத்தப்படுகின்றது.

உணவளிக்கும் திட்டம்

இந்த நிகழ்வில் 5,000 க்கு பேருக்கு பிரியாணி உணவு சமைத்து காஞ்சிபுரம், செங்கல் பட்டு, சென்னை சுற்றுவட்டார பகுதிகளில், 150க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவன செயல்பாட்டாளர்கள் வாகனங்கள் மூலம் நேரில் சென்று உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவளித்து வருகிறார்கள்.

ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நடத்திய இந்த வருட நிகழ்வினில்.. ஜெர்மனியி அரசு ஆலோசகர் ஜெனரல் மைக்கேலா குச்லர், காவல் உதவி ஆணையர் (அடையாறு வட்டம்) – திரு. நெல்சன், துணை ஆட்சியர் – திருமதி ப்ரீத்தி பார்கவி, நடிகர் சந்தோஷ் பிரதாப் மற்றும் நடிகை சனம் ஷெட்டி ஆகியோருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துக் கொண்டு, கொடியசைத்து இந்நிகழ்வை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வினில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது…

உணவளிக்கும் திட்டம்

ஆலனை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும், ஆரம்பத்தில் சில விசயங்களை இணையத்தில் பகிரச்சொல்லி கேட்பார். பின்னர் அவர் செய்யும் விசயங்கள் பார்த்து பிரமித்தேன்.

அதன் பின் நானாகவே எனக்கு தெரிந்தவர்களிடம் ஆலனின் ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேசன் பற்றிப் பகிர்ந்துகொள்ள ஆரம்பிதேன். இன்றைய சமூகத்தில் நமக்கு 35 ரூபாய் என்பது வெகு சாதாரணமான பணம் அது 35 ஆயிரம் கோடியாக தேவைப்படுபவர்களுக்கு சென்று சேர்வது ஆச்சர்யம்.

ஆனால் அந்த ஆச்சர்யம் நிகழ வேண்டுமெனில் அதற்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். 100, 200 ரூபாய் கூட இல்லை வெறும் 35 ரூபாய் தான் நாம் கொடுக்கப்போகிறோம்.

இந்த நல்ல விசயம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதால் தான் இதில் கலந்துகொள்ள சம்மதித்தேன். இன்று மொய் விருந்து நடைபெறுகிறது. மிக எளிமையானவர்களுக்கு தேடிச்சென்று உணவளிக்கும் இந்த மாபெரும் செயல்பாட்டில் ஆலன் பல காலமாக இயங்கி வருகிறார். அவரது இந்த சமூகச்செயல்பாட்டை அனைவரும் பாராட்ட வேண்டும், அவர் என் நண்பர் என்பது பெருமையாக உள்ளது. எல்லோருக்கும் உணவளிக்கும் இந்த மிகப்பெரிய செயல்பாட்டில் நாம் அனைவரும் நம்மால் முடிந்த ஆதரவைத் தர வேண்டும். நான் என்றும் ஆலனுக்கு துணையாக இருப்பேன் அனைவருக்கும் நன்றி.

உணவளிக்கும் திட்டம்

World food day Aishwarya Rajesh news updates

இவர் காமெடியன் அல்ல ரியல் ஹீரோ.. 4வது ஆம்புலன்ஸ் வழங்கிய பாலா

இவர் காமெடியன் அல்ல ரியல் ஹீரோ.. 4வது ஆம்புலன்ஸ் வழங்கிய பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலா. இவர் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் செய்த காமெடிகள் இவரை பிரபலம் ஆக்கியது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் இவர் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

மேலும் சில படங்களிலும் இவர் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘தில்லு இருந்தா போராடு’ என்ற படத்தில் வனிதா விஜயகுமாருடன் இவர் நடித்திருந்தார்.

ஏழ்மை நிலையில் இருந்து வந்து பாலா வறுமையின் நிலை உணர்ந்து பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார்.

நிறைய ஏழை மாணவர்களை படிக்க வைத்து உதவி செய்கிறார். மேலும் வசதி இல்லாத மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் உதவியும் செய்து வருகிறார்.

இந்த செய்திகளை நாம் ஏற்கனவே நம் FILMISTREET தளத்தில் பார்த்து இருந்தோம்.

இந்த சூழ்நிலையில் சென்னை கோயம்பேட்டிலுள்ள உணர்வுகள் அறக்கட்டளைக்கு, தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸை வழங்கினார் நிகழ்ச்சித் தொகுப்பாளரும் நடிகருமான பாலா.

தொண்டு அமைப்புக்கு இவர் ஆம்புலன்ஸ் வழங்குவது இது 4-ம் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா

Comedy Actor Kpy Bala donated Ambulance to Trust

விஜய் படத்துக்கு காம்போ ஆஃபர்.; ‘லியோ’ டிக்கெட் கட்டணம் மீது நடவடிக்கை வருமா.?

விஜய் படத்துக்கு காம்போ ஆஃபர்.; ‘லியோ’ டிக்கெட் கட்டணம் மீது நடவடிக்கை வருமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் ரசிகர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள சினிமாஸ் என்ற திரையரங்கில் ‘லியோ’ டிக்கெட் விலை 450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒரு டிக்கெட் விலை 200 ரூபாய் என்றாலும் பாப்கார்ன் மற்றும் குளிர்பானங்கள் சேர்த்து 450 க்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதை ரசிகர்கள் தட்டி கேட்ட போது.. இஷ்டம் இருந்தால் வாங்குங்க என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஒரு படத்திற்கான டிக்கெட் விலையை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது என அரசுகள் அறிவித்துள்ள நிலையில் தற்போது இதுபோன்ற நடவடிக்கைகளில் சில திரையரங்குகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த கோம்போ ஆஃபர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Leo Tickets combo offer makes issue

விஜய்யின் ‘லியோ’ படத்திற்காக கடவுளிடம் கோரிக்கை வைத்த ரஜினிகாந்த்

விஜய்யின் ‘லியோ’ படத்திற்காக கடவுளிடம் கோரிக்கை வைத்த ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் தற்போது ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார்.

ஞானவேல் இயக்கி வரும் இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், பகத்பாசில், ராணா, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் பங்கேற்கும் சூட்டிங் தளத்தின் வீடியோ காட்சிகள் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

கேரளாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் அதன் பிறகு திருநெல்வேலி பகுதி படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தற்போது தூத்துக்குடி சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்..

ரஜினிகாந்த்

“45 வருடங்களுக்கு முன்பு புவனா ஒரு கேள்விக்குறி என்ற படத்தின் படப்பிடிப்புக்காக இங்கு வந்தேன். தற்போது இங்கு மீண்டும் வந்துள்ளேன்.

இங்குள்ள மக்கள் அன்பானவர்கள். அனைவரிடமும் போட்டோ எடுக்க முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது.

பிறகு விஜயின் லியோ படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது.. “லியோ படம் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்” என தெரிவித்தார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த்

Rajinikanth prayers of Vijays Leo success

திருநங்கையாக கலக்கும் பிரபல யூடியுபர் நடிகர் ஜி பி முத்து

திருநங்கையாக கலக்கும் பிரபல யூடியுபர் நடிகர் ஜி பி முத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிக்டாக், யூடியுப் மூலம் பிரபலம் அடைந்தவர் ஜி.பி.முத்து.

தனியார் நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள், சின்னத்திரை நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலங்களில் ஒருவராக வலம் வர தொடங்கினார்.

இதையொட்டி புகழின் உச்சிக்கு சென்ற ஜி.பி.முத்து சினிமாவில் அறிமுகமாகி நடிக்க தொடங்கினார்.

இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவரது புகழ் மேலும் அதிகரித்து சினிமா வாய்ப்புகள் வரிசையாக வரத்தொடங்கின.

இந்நிலையில், ஜி.பி.முத்து தற்போது ‘ஆர்வன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஜி.பி.முத்து திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த போஸ்டரை ஜி.பி.முத்து தனது வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆர்வன்

gp muthu playing Transgender roll

24 Carat Gold iPhone-ஐ தவறவிட்ட நடிகை வைத்த கோரிக்கை

24 Carat Gold iPhone-ஐ தவறவிட்ட நடிகை வைத்த கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சிங் சாப் தி கிரேட்’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா.

அதன்பின்னர் பெங்காலி, இந்தி, கன்னட மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

தமிழில் லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்து ஊர்வசி ரவுத்தேலா தமிழும் பிரபலமடைந்தார்.

தற்போது பல இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

ஊர்வசி ரவுத்தேலா அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை கூறி ட்ரோல்களில் மாட்டிக் கொள்வார்.

அகமதாபாத், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இரு தினங்களுக்கு முன்பு இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண திரைப்பிரபலங்கள் பலர் வந்தனர்.

இதில் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவும் பார்வையாளராக வந்திருந்தார்.

அப்போது ஊர்வசி ரவுத்தேலா தனது 24 கேரட் கோல்டு ஐ போனை (i phone) தவறவிட்டுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக ஊர்வசி, அகமதாபாத் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இந்த புகார் மனுவை ஊர்வசி ரவுத்தேலா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், யாராவது தனது ஐபோனை (i phone) பார்த்தால் தன்னை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊர்வசி ரவுத்தேலா

urvashi Rautela lost her 24 carat real gold iPhone in India vs Pakistan match

More Articles
Follows