எப்போதும் ஜெய் ப்ரேம்ஜி மாதிரி ஆட்களுடனேயே நடித்தேன்..; வைபவ்வின் ‘ஆலம்பனா’ அலப்பறை

எப்போதும் ஜெய் ப்ரேம்ஜி மாதிரி ஆட்களுடனேயே நடித்தேன்..; வைபவ்வின் ‘ஆலம்பனா’ அலப்பறை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாரி கே விஜய் இயக்கத்தில் வைபவ், பார்வதி, லியோனி, காளிவெங்கட், முனீஸ்காந்த் உள்ளிட்ட நடித்துள்ள படம் ‘ஆலம்பனா’.

இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற

நடிகர் முனீஷ்காந்த் பேசியதாவது…

இயக்குநர், தயாரிப்பாளர், ஹீரோ ஹீரோயின் அனைவருக்கும் என் நன்றி. KJR Studios தயாரிப்பு நிறுவனம் என் சொந்த நிறுவனம் போல அவர்களின் அனைத்து படங்களிலும் நான் நடித்துள்ளேன். இந்தப்படம் நீங்கள் மனம் விட்டு சிரித்து மகிழும் படமாக இருக்கும். இப்படம் குழந்தைகள் ரசிக்கும் படமாக இருக்கும். இயக்குநருக்கும், என்னை அழகாக காட்டிய ஒளிப்பதிவாளருக்கும் நன்றி. படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் வைபவ் பேசியதாவது…

இப்படத்தின் கதையை KJR லிருந்து சொன்ன போதே, சூப்பராக இருந்தது. யார் ஹீரோ என்றேன் நீ தான் என்றார் தயாரிப்பாளர். சந்தோஷமாக இருந்தது. எப்போதும் ஜெய், ப்ரேம்ஜி மாதிரி ஆட்களுடனேயே நடித்துவிட்டேன்.

இப்படத்தில் முனீஷ்காந்த், காளிவெங்கட் போன்ற சீனியர்களுடன் நடித்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. இப்படத்தில் இசைக்காக ஹிப்ஹாப் ஆதியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றபோது நான் பேசினேன்.

பூதம் கதை என்றவுடன் உங்களுக்கு பூதம் கேரக்டர் சூப்பராக இருக்கும் என அவரும் என்னைக் கலாய்த்து விட்டார். இந்தப்படத்திற்கு சிறப்பான இசையைத் தந்துள்ளார். படத்தில் உண்மையிலேயே சிரித்து மகிழும் அளவு காமெடி இருக்கும். இந்தப்படம் எனக்குப் புதுவிதமான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.

நடிகர்கள்: வைபவ், பார்வதி, முனிஷ்காந்த், யோகி பாபு, காளி வெங்கட், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், திண்டுக்கல் I லியோனி, பாண்டியராஜ், முரளி சர்மா, கபீர் சிங்

தொழில் நுட்ப குழு விபரம்
இயக்குநர்: பாரி K விஜய்
இசையமைப்பாளர்: ஹிப்ஹாப் தமிழா
ஒளிப்பதிவு : வினோத் ரத்தினசாமி
எடிட்டிங் : ஷான் லோகேஷ்
கலை: கோபி ஆனந்த்
சண்டைக்காட்சிகள்: பீட்டர் ஹெய்ன்
பாடல் வரிகள் -பா.விஜய், கபிலன் வைரமுத்து
நடனம்: ஷெரிப்
ஆடை வடிவமைப்பாளர் – கீர்த்தி வாசன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Mostly acted with Jai and Premji says Vaibhav

நான் நடிச்ச படங்களை விட ‘ஆலம்பனா-வில் எனக்கு செம வெயிட்.. – லியோனி

நான் நடிச்ச படங்களை விட ‘ஆலம்பனா-வில் எனக்கு செம வெயிட்.. – லியோனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KJR Studios வழங்கும் Koustubh Entertaiment தயாரிப்பில் இயக்குநர் பாரி K விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி நடிப்பில், கலக்கலான ஃபேண்டஸி காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையார் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில்..

திண்டுக்கல் I லியோனி பேசியதாவது…

முன்னதாக இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அதைவிட ஆலம்பனா படத்தில் மிகப்பெரியதொரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் எல்லோரையும் விட எனக்குத் தான் அதிக காஸ்ட்யூம், அந்தளவு பெரிய கேரக்டர். நிறைய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர். முனீஷ்காந்திற்கு ரசிகன் நான் அவரது காமெடியை சிரித்து ரசிப்பேன். காளி வெங்கட் அட்டகாசமாக நடித்துள்ளார்.

எனது பேரனாக வைபவ் நடித்துள்ளார். மிக நல்ல மனிதர் எனக்கு பெரும் ஆதரவாக இருந்தார். இப்படத்தில் சாதாரணமாக வந்து போகும் கேரக்டர் இல்லை. டான்ஸர்களோடு டான்ஸ் ஆடும் தாத்தா கேரக்டர். படத்தில் என்னை டான்ஸ் ஆட வைக்க, அவ்வளவு கஷ்டப்பட்டார் இயக்குநர். படம் நன்றாக வந்துள்ளது குழந்தைகளோடு பார்க்ககூடிய அருமையான படம். ஆதரவு தாருங்கள். நன்றி.

நடிகர் காளி வெங்கட் பேசியதாவது…

முண்டாசுபட்டி உதவி இயக்குநர் பாரி தான் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார். நாங்கள் எல்லாம் ஆரம்பத்தில் ஒரே செட்டாக இருந்து பணிபுரிந்தவர்கள். இப்போது அவருடன் இணைந்து பணிபுரிந்த படம், திரைக்கு வருவது மகிழ்ச்சி. இப்படத்தில் இருக்கும் காமெடி, படம் எடுக்கும் போது இருந்ததை விட, பார்த்த போது இன்னும் சிறப்பாக வாய்விட்டு சிரிக்க முடிந்தது.

நண்பர் முனீஷ்காந்துடன் நடித்தது மகிழ்ச்சி. வைபவ், பார்வதி ஆகியோருடன் வேலை பார்த்தது சந்தோசம். இயக்குநர் தயாரிப்பாளருக்கு என் நன்றிகள்.

நடிகர் கபீர்சிங் பேசியதாவது…

இயக்குநருக்கு நன்றி. இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. கதை சொன்ன போதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வைபவ்,பார்வதி இருவருடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். இது மிக நல்ல படம். படத்தைத் தியேட்டரில் பார்க்கும் போது, நீங்கள் உணர்வீர்கள், படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் வினோத் பேசியதாவது…

இந்தப்படத்தில் கதைக்கு தேவையான அளவில் அத்தனை நடிகர்களை ஒருங்கிணைத்ததே பெரிய வெற்றி தான். எல்லோரும் தங்கள் படம் போல் வேலைப்பார்த்தார்கள். ஆரம்பம் முதல் இறுதிவரை படம் செம்ம காமெடியாக இருக்கும். முனீஷ்காந்த் கலக்கியிருக்கிறார். ஆர்ட் டைரக்டர் எனக்குப் பெரிய உதவியாக இருந்தார். அவருக்கு நன்றி. படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

கபிலன் வைரமுத்து பேசியதாவது..

நண்பர் பாரி K விஜய்யுடைய நீண்ட நாள் கனவு. பல காலமாக இந்தப்படம் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம். இப்போது இறுதியாக இப்படம் திரைக்கு வருவது மகிழ்ச்சி. எனக்கு வைபவ் காமெடி சென்ஸ் மிகவும் பிடிக்கும். ஒரு காதாநாயகனாக குறிப்பிட்ட எல்லைக்குள் அவர் செய்யும் காமெடி மிக நன்றாக ஒர்க் அவுட்டாகியிருக்கிறது. இந்தப்படத்தில் ஹிப் ஹாப் ஆதி இசையில் 4 பாடல்கள் எழுதியுள்ளேன்.

இயக்குநர் பாரியிடம், யாருக்கு படமெடுக்கிறேன் என்கிற தெளிவு இருக்கிறது. அவரின் மனதிற்கு இந்தப்படம் பெரியதாக ஜெயிக்க வேண்டும். சென்னை வெள்ளத்தால் நாம் தற்போது மிக சோகமான காலகட்டத்தில் சிக்கியுள்ளோம் அதிலிருந்து நம்மை மீட்டு சிரிக்க வைக்கும் படமாக இப்படம் இருக்கவேண்டும். அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் பாரி K விஜய் பேசியதாவது…

இந்தக் கதையைத் தயாரிப்பாளரிடம் சொன்ன போது, தயாரிப்பாளர் இந்தக்கதை, நல்ல கதை, நன்றாக எடுத்தால் ஓடும் என்றார். அவர் நான் நினைத்ததை விட, கேட்டதை விட இப்படத்திற்காக அதிகம் செலவழித்தார். அவரால் தான் இத்திரைப்படம் நன்றாக வந்துள்ளது. எழுதியதை விட, எடுப்பது கஷ்டம் ஆனால் அதை மகிழ்ச்சியோடு உழைத்து எடுத்துள்ளோம்.

வைபவ், பார்வதி இருவரும் என்னைப் புரிந்து கொண்டு எனக்கு ஆதரவாக நடித்து தந்தார்கள். அதே போல் பூதம் என யோசித்த போதே முனீஷ் காந்த் தான் மனதில் இருந்தார். நன்றாக நடித்துள்ளார். ஆனந்த்ராஜ், பாண்டியராஜன், காளிவெங்கட் எல்லோரும் கடினமாக உழைத்துள்ளனர். படத்தில் தாத்தா கேரக்டர் என்ற போதே திண்டுக்கல் ஐ லியோனி தான் ஞாபத்திற்கு வந்தார். அவரும் சிறப்பாக செய்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி அட்டகாசமாக இசையமைத்துள்ளார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் ஆக்சனை குழந்தைகளும் ரசிக்கும் படி தந்துள்ளார். படத்தை மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கினோம் தற்போது திரைக்கு வருகிறது. ஊடக மக்கள் இப்படத்தை அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

நடிகை பார்வதி பேசியதாவது…

என் ஃபேவரைட் ஜானர் , ஃபேண்டஸி காமெடி தான். எனக்கு அந்த ஜானரில் ஆலம்பனா படத்தின் வாய்ப்பு வந்தது மிக்க மகிழ்ச்சி.

இந்தப்படத்தில் முனிஷ் காந்த், காளி வெங்கட் , ஆனந்த்ராஜ் என மிக நல்ல மனிதர்களோடு வேலைபார்த்தது சந்தோஷமாக இருந்தது. வைபவ் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். இந்தப்படம் சிறு வயது முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் ரசித்து சிரிக்கும் படமாக இருக்கும். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் .

I have big character in Aalambana says Leoni

கேப் இல்லாமல் டக்கு டக்கு வரும் ‘டங்கி டிராப்ட் 5’..; ஷாரூக் வெளியிட்ட க்ளிம்ப்ஸ்

கேப் இல்லாமல் டக்கு டக்கு வரும் ‘டங்கி டிராப்ட் 5’..; ஷாரூக் வெளியிட்ட க்ளிம்ப்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் டங்கி டிராப் 1, டங்கி டிராப் 2 லுட் புட் கயா, டங்கி டிராப் 3 நிக்லே தி கபி ஹம் கர் சே மற்றும் டங்கி டிராப் 4, டிரெய்லர் என வரிசையாக டங்கி அப்டேட்கள் மூலம் பார்வையாளர்களுக்கு விருந்தளித்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.

ராஜ்குமார் ஹிரானி உருவாக்கிய அன்பான, அழகான திரை உலகத்தைப் பார்ப்பதற்கான எதிர்பார்ப்பை இது நிச்சயமாக அதிகரித்துள்ளது.

தற்போது ரசிகர்களின் உற்சாகத்தை கூட்டும் வகையில், தயாரிப்பாளர்கள் இப்போது டங்கி டிராப் 5, ஓ மஹி பாடலை வெளியிட தயாராகி வருகின்றனர்.

இந்த பாடலின் வீடியோவை வெளியிடுவதற்கு முன்னதாக அதிலிருந்து ஒரு கிளிம்ப்ஸே வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

டங்கி டிராப்ட் 5

சமீபத்திய #AskSRK அமர்வில், கிங் கான் இந்தப் பாடலைத் திரைப்பட ஆல்பத்தில் இருந்து தனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாகக் குறிப்பிட்டார்.

எனவே ரசிகர்கள் இப்பாடலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு ‘டங்கி’ திரைப்படத்தில் நடித்துள்ளது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகிறது.

https://x.com/iamsrk/status/1734028995552067585?s=46&t=5RIwNRycJ8MV9YSxIBI6Fg

Shahrukh starrer Dunki Drop5 glimpse release

தீய சக்தியை எதிர்க்கும் சிவனடியார்.; டிவி நடிகர் சித்து அறிமுகம்

தீய சக்தியை எதிர்க்கும் சிவனடியார்.; டிவி நடிகர் சித்து அறிமுகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் இல்லம் தேடி மக்கள் மனதில் அமர்ந்திருக்கும் ஒரு நடிகராக வளர்ந்திருப்பவர் சித்து.

இவர் நடித்த திருமணம், ராஜா ராணி போன்ற தொடர்கள் மிகவும் புகழ் பெற்றவை. இவர் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அகோரி’.

இதுவரை சின்னத்திரை மூலம் தனது திறமையை வெளிப்படுத்திய இவர், பெரிய திரை உலகில் காலடி எடுத்து வைத்துள்ளதால், தான் அறிமுகம் ஆகியுள்ள இந்தப் படத்தைப் பெரிதும் நம்பி யிருக்கிறார்.

‘பாரதி’ படத்தின் மூலம் பாரதியாகவே மக்கள் மனதில் அழுத்தமாக இடம் பிடித்த சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பிலும் ‘அகோரி ‘என்கிற படம் உருவாகியிருக்கிறது.

இவர்களைப் போலவே தங்களது நடிப்பின் மூலம் முந்தைய படங்களின் வழியாகச் சிறந்த நடிப்புக் கலைஞர்களாகத் தடம் பதித்த குணச்சித்திர நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.

அகோரி

மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனன் தயாரித்திருக்கிறார். படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குநர் D.S. ராஜ்குமார் .சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை.

இது ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படம் . ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினருக்குமான வணிக அம்சங்கள் படத்தில் இருக்கும் படி உருவாகியிருக்கிறது.

இப்படத்தில் ஹரித்துவார் செட் அமைத்து அகோரிகளுடன் சாயாஜி ஷிண்டே நடித்த காட்சி, மற்றும் கேரளாவின் காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு அகோரிகள் நடித்த காட்சிகளும்
படமாக்கப்பட்டன.

படத்தில் இடம்பெறும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை மிரளவைக்கும்படி இருக்கும்.தெலுங்கில் ‘சஹா ‘படத்தின் மூலம் புகழ் பெற்ற ஜக்குல்லா பாபு தமிழில் வில்லனாக இப்படத்தில் வருகிறார்.

இவரது உயரம் 6.5 ” ஆகும். நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடித்திருக்கிறார். இவர் கர்நாடக மாநில அரசின் விருது பெற்றவர்.இவர் ‘144’ பட நாயகியும் கூட.

இவர்களுடன் மைம் கோபி, டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி, கார்த்தி, ‘கலக்கப்போவது யாரு’ சரத், டிசைனர் பவன் ஆகியோரும் நடித்துள்ளனர். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற புதிய கலைஞர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

அகோரி

அகோரி படத்துக்கு ஒளிப்பதிவு வசந்த். இவர் ஈகோ , கள்ளத்துப்பாக்கி படங்களின் ஒளிப்பதிவாளர். இசை ஃபோர் மியூசிக். இவர்கள் அண்மையில் கேரளாவில் புகழ் பெற்று வருகிறார்கள்.

நான்கு இசையமைப்பாளர்களின் கூட்டணி இது. கிராபிக்ஸ் காட்சிகள் மிரட்டலாக வந்திருப்பதாகப் படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ராட்சசன் படத்தின் CG டீமின் அக்ஷயா ஸ்டுடியோஸ் அசோக் குமார் இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர்.
ஆர்ட் டைரக்டர் ஜெயச்சந்திரன்.

‘ அகோரி’ படம் பார்த்த சென்சார் அதிகாரிகள் நல்ல பொழுதுபோக்குடன் அமைந்த திகில் கதையாக இருக்கிறது என்று பாராட்டி உள்ளனர்.
குழந்தைகள் பெரியவர்களுடன் பார்க்கும்படியாக இருப்பதால் யூ / ஏ சான்றிதழ் கொடுத்துள்ளார்கள்.

இப்படத்தைத் திரையரங்குகளில் PVR சினிமாஸ் வெளியிடுகிறது. பிரம்மாண்டமான பல வெற்றிப் படங்களை வெளியிட்ட பி விஆர் சினிமாஸ் இப்படத்தை வெளியிடுவதில் இருந்து படத்தின் நம்பகத்தன்மையும் வணிக மதிப்பும் அதிகரித்துள்ளன.

▶️https://youtu.be/H_AY_ePF0cc?si=Lhu08UnBluSGFnFP

AGHORI is all set to haunt your senses on 15th December

தமிழகம் & கேரளாவில் ஷாருக்கானின் ‘டங்கி’ படத்தை வெளியிடும் பிரபல நிறுவனம்

தமிழகம் & கேரளாவில் ஷாருக்கானின் ‘டங்கி’ படத்தை வெளியிடும் பிரபல நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜவான்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, மிகுந்த எதிர்பார்ப்பிலிருக்கும் ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப்படத்தினுடைய கேரளா மற்றும் தமிழ்நாட்டு விநியோக உரிமையை வாங்கியுள்ளது, ஸ்ரீ கோகுலம் மூவிஸ். இதில் ஷாருக்கான் அனைவரையும் மயக்கும் அட்டகாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாராகி, இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி எழுதி, இயக்கி, எடிட்டிங் செய்திருக்கும் இப்படம் டிசம்பர் 21 முதல், திரையரங்குகளில் வெளியாகிறது.

ட்ரீம் பிக் பிலிம்ஸ் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ‘டங்கி’ படத்தின் விநியோக பங்குதாரராக இணைந்துள்ளது.

கிங் கான் ஷாருக்குடன் மீண்டுமொரு படத்தில் நாங்கள் இணைவதில் பெருமிதம் கொள்கிறோம். மேலும் அவருடன் இன்னும் பல படங்கள் இணைந்து பணியாற்றுவோம் என நம்புகிறோம்” ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தை கேரளா மற்றும் தமிழ்நாட்டில் விநியோகம் செய்துள்ளது ஸ்ரீ கோகுலம் மூவிஸ். ‘ஜவான்’ படத்திற்கு பிறகு ‘டங்கி’ படத்தையும் விநியோகம் செய்கிறோம் என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.

2023 வது வருடம் ஷாருக்கானின் பிரமாண்டமான கம்பேக் வருடம் ஆக அமைந்துள்ளது.

ஜனவரி-யில் ‘பதான்’, செப்டம்பரில் ‘ஜவான்’, தற்போது டிசம்பரில் ‘டங்கி’. பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார் மற்றும் அனில் குரோவர் போன்ற பாலிவுட் திறமைகள் இணைந்துள்ள ‘டங்கி’ இதயம் வருடும் அழகான படமாக இருக்கும் என்பதை படத்தின் பாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன. ராஜ்குமார் ஹிரானி, கௌரி கான் மற்றும் ஜோதி தேஷ்பாண்டே ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

அபிஜத் ஜோஷி மற்றும் கனிகா தில்லானுடன் இணைந்து ராஜ்குமார் ஹிரானி வசனம் எழுதியுள்ளார். மும்பை, ஜபல்பூர், காஷ்மீர், புடாபெஸ்ட், லண்டன், ஜெட்டா மற்றும் நியோம் என உலகின் பல இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு அமன் பந்த் பின்னணி இசையமைத்துள்ளார் மற்றும் ப்ரீதம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். CK.முரளிதரன், மனுஷ் நந்தன், அமித் ராய் ஆகியோர் இப்படத்தின் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

Sri Gokulam movies releases Dunki in Tamilnadu and Kerala

நிகிலா & சன்னி இணைந்த ‘பேரில்லூர் பிரீமியர் லீக்’ வெப் சீரிஸ் ரிலீஸ் அப்டேட்

நிகிலா & சன்னி இணைந்த ‘பேரில்லூர் பிரீமியர் லீக்’ வெப் சீரிஸ் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சமீபத்தில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள ஒரிஜினல் சீரிஸான ​​’பேரில்லூர் பிரீமியர் லீக்’ சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது.

அரசியலை இதயம் வருடும் நகைச்சுவை கலந்து சொல்லும் அட்டகாசமான சீரிஸ் “பேரில்லூர் பிரீமியர் லீக்”.

இந்த சீரிஸ் வரும் 2024 ஜனவரி 5 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.

இரண்டு நிமிடங்கள் கொண்ட இந்த டிரெய்லர், ஒரு கிராமம் அதன் மனிதர்கள் அவர்களிடையேயான உறவுகள், அரசியல் வேடிக்கைகள், வெடித்துச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை என அதிரடியான விருந்தளிக்கிறது “பேரில்லூர் பிரீமியர் லீக்”.

நிகிலா விமல் மற்றும் சன்னி வெய்னுடன், இந்தத் தொடரில் விஜயராகவன், அஜு வர்கீஸ், அசோகன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இந்த சீரிஸில் நடித்துள்ளனர் மற்றும் திறமையான தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு பேரில்லூர் பிரீமியர் லீக்கை உண்மையிலேயே ரசிக்க வைக்கிறது.

பேரில்லூர் பிரீமியர் லீக்

E4 என்டர்டெயின்மென்ட் பேனரில் முகேஷ் R மேத்தா மற்றும் CV சாரதி தயாரித்துள்ள ‘பேரில்லூர் பிரீமியர் லீக்’ சீரிஸை புகழ் பெற்ற இயக்குநர் பிரவீன் சந்திரன் இயக்கியுள்ளார், தீபு பிரதீப் இந்த சீரிஸை எழுதியுள்ளார்.

ஒளிப்பதிவு இயக்குநரான அனூப் வி ஷைலஜா, கிராமப்புற கேரளாவின் சாரத்தை அசத்தலான காட்சிகளுடன் படம்பிடித்துள்ளார், அதே நேரத்தில் பவன் ஸ்ரீ குமாரின் தலைசிறந்த எடிட்டிங் இக்கதையைத் திரையில் அழகாக உயிர்ப்பிக்கிறது. முஜீப் மஜீதின் இசை இந்த சீரிஸை மெருகேற்றுகிறது.

‘பேரில்லூர் பிரீமியர் லீக்’ ஏழு வெவ்வேறு மொழிகளில் (மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி மற்றும் பெங்காலி) ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது, இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்கள் தங்கள் சொந்த மொழியில் இந்த நகைச்சுவை சீரிஸை ரசிக்க முடியும்.

YT Link : https://www.youtube.com/watch?v=QPuOLNzPR7k

Malayalam original series Perilloor Premier League to stream from 05/01/2024

More Articles
Follows