தனுஷ் இயக்கி நடிக்கும் #D50 படத்தின் ஷூட்டிங் அப்டேட்

தனுஷ் இயக்கி நடிக்கும் #D50 படத்தின் ஷூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் டிசம்பர் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்திற்காக தனுஷ் நீண்ட தலைமுடி தாடி வளர்ந்து வந்ததை பார்த்தாலே இந்த படத்தை பார்க்க வேண்டும் என ஆவல் ஏற்பட்டது.

எனவே இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதை நாம் அறிவோம்.

இந்த நிலையில் தனுஷ் 50-வது படத்தின் புதிய அப்டேட்டுகள் கிடைத்துள்ளன. இதில் தனுஷ் உடன் சந்திப் கிஷன், செல்வராகவன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நாயகியாக துஷாரா விஜயன் நடித்த வருகிறார்.

தனுஷ் இயக்கி நடித்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தற்காலிகமாக ‘தனுஷ் 50’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

நவம்பர் மாத இறுதிக்குள் இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடையும் என கூறப்படுகிறது.

தனுஷ் 50

Dhanush 50 movie shooting schedule updates

மகேஷ்பாபு பட இயக்குநருடன் வித்தியாசமான வேடத்தில் இணையும் ஷாம்

மகேஷ்பாபு பட இயக்குநருடன் வித்தியாசமான வேடத்தில் இணையும் ஷாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 20 வருடங்களுக்கு மேலாக தனது திரையுலக பயணத்தில் சீராக பயணித்து வருபவர் நடிகர் ஷாம். குறிப்பாக கடந்த சில வருடங்களாக செலக்டிவான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் பிஸியான நடிகராக வலம் வருகிறார்.

இந்த வருட துவக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ திரைப்படத்தில் விஜய்யின் சகோதரராக சற்று வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார் ஷாம்.

இந்த நிலையில் தற்போது தெலுங்கில் பிரபல இயக்குநர் சீனு வைட்லா இயக்கி வரும் புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார் ஷாம்.

குறிப்பாக இப்படத்தில் இதுவரை தான் ஏற்று நடித்திராத ரா ஏஜென்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஷாம்.

கடந்த 20 நாட்களாக இத்தாலி நாட்டில் உள்ள மிலன், மடேரா மற்றும் ரோம் உள்ளிட்ட நகரங்களில் இதன் படப்பிடிப்பு வந்தது.

இதில் ஷாம் பங்குபெற்ற விறுவிறுப்பான அதிரடியான மூன்று ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து படக்குழுவினர் தற்போது இந்தியா திரும்பியுள்ளனர்.

இப்படத்தில் கோபிசந்த், காவியா தாப்பர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ‘தூக்குடு’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்குனர் சீனு வைட்லா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனு வைட்லா

Shaam plays a Raw Agent in filmmaker Srinu Vaitla next

வைபவ் – அதுல்யா ஜோடியை இயக்கும் இரட்டை இயக்குநர்கள்

வைபவ் – அதுல்யா ஜோடியை இயக்கும் இரட்டை இயக்குநர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

BTG UNIVERSAL நிறுவனம் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தை விக்ரம் ராஜேஸ்வர் – அருண் கேசவ் என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்குகின்றனர்.

கதாநாயகனாக வைபவ் நடிக்க, கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்கிறார். மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, இளவரசு, பி.எல் தேனப்பன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்கிறார்.

வைபவ் - அதுல்யா

படத்தொகுப்பை சுரேஷ் A பிரசாத் கவனிக்க கலையை அருண் சங்கர் துரையும் சண்டை பயிற்சியை டான் அசோக்கும் மேற்கொள்கின்றனர்.

தயாரிப்பு நிறுவனம் : BTG UNIVERSAL
(BOBBY TOUCH GOLD UNIVERSAL PVT LTD)
தயாரிப்பாளர் : பாபி பாலச்சந்திரன்
வியூகத் தலைலை (BTG) : மனோஜ் பினோ
இயக்கம் : விக்ரம் ராஜேஸ்வர் – அருண் கேசவ்
இசை : D. இமான்
நடிகர் : வைபவ்
நடிகை : அதுல்யா ரவி
நடிகர்கள் : மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, இளவரசு, பி.எல் தேனப்பன்
ஒளிப்பதிவு : டிஜோ டோமி
படத்தொகுப்பு ; சுரேஷ் A பிரசாத்
கலை ; அருண் சங்கர் துரை
சண்டை ; டான் அசோக்
தயாரிப்பு நிர்வாகி ; வேணுகோபால்
உடைகள் ; தாக்ஷா தயாள்
மக்கள் தொடர்பு ; ரியாஸ் K அஹ்மத்
டிசைன்ஸ் ; ஷைனு

வைபவ் - அதுல்யா

*பாபி பாலச்சந்திரன் பற்றி…

கோவையை தலைமையிடமாகக் கொண்டு 12 நாடுகளில் 600 க்கும் மேற்பட்ட வல்லுநர்களுடன் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக எக்ஸ்டெரோ (EXTERRO} என்கிற மாபெரும் மென்பொருள் சாம்ராஜ்யத்தை நடத்தி வருபவர் பாபி பாலச்சந்திரன். திருநெல்வேலியின் அருகில் உள்ள நாசரேத்தை சேர்ந்த இவரது நிறுவனத்தின் மென்பொருட்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட தலைசிறந்த நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக வெளிநாடுகளில் அரசு, உளவு, ராணுவம் போன்ற துறைகளில் இந்நிறுவனத்தின் மென்பொருளை பயன்படுத்தி எண்ணற்ற குற்றங்களை தடுத்தும் குறைத்தும் பாதுகாத்து வருகிறார்கள்.

தாய்நாடு மட்டுமல்லாமல் இதர நாடுகளிலும் தொண்டு நிறுவனங்களை துவங்கி சமூகப் பணியையும் செய்து வரும் பாபி பாலச்சந்திரன் மென்பொருள் துறை மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் தடம் பதித்துள்ளார். அந்த வகையில் தற்போது சினிமா தயாரிப்பிலும் இறங்கியுள்ளார் பாபி பாலச்சந்திரன்.

வைபவ் - அதுல்யா

Vaibhav and Athulya staring new movie

சட்டத்திற்கு கட்டுப்படாத அணியை அமைத்து விக்ரம் – கௌதமேனன் கூட்டணி

சட்டத்திற்கு கட்டுப்படாத அணியை அமைத்து விக்ரம் – கௌதமேனன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற படம் பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இடையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்த படம் சமீபத்தில் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி நவம்பர் 24ஆம் தேதி திரைக்கு வருகிறது.

‘லியோ’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ரித்து வர்மா, பார்த்திபன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அக்டோபர் 24 ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியானது. இந்த ட்ரெய்லரில் சட்டத்திற்கு கட்டுப்படாத ஒரு அணியை விக்ரம் தலைமையில் அமைப்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் நாட்டிற்கு எதிரான தீய சக்திகளை அழிப்பதாக காட்சிகள் உள்ளது. ஜான் என்ற கதாபாத்திரத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ளார்.

“ஹே பாடு. நான் வரேன்டா…” என அவர் பேசும் வசனத்துடன் இந்த ட்ரெய்லர் முடிகிறது.

Vikram starrer Dhruva Natchathiram Trailer goes viral

விஜய் பாடி சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் மீண்டும் கூட்டணி

விஜய் பாடி சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் மீண்டும் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரிகளில் ஒருவர் மதன் கார்க்கு. இவர் சில படங்களுக்கு வசனங்களையும் எழுதி வருகிறார்.

இந்த நிலையில் இவர் தற்போது தளபதி 68 படத்தில் பாடல் எழுத உள்ளார்.

இது குறித்து அவர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டதுள்ளதாவது…

அஸ்கு லஸ்க்கா.. கூகுள் கூகுள்.. செல்பி புள்ள ஆகிய பாடல்களை தொடர்ந்து தற்போது தளபதி 68 படத்திற்காக விஜய்யுடன் மீண்டும் இணைகிறேன். இது தொடர்பாக வெங்கட் பிரபு & யுவன் ஆகியாரை சந்தித்தது மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.

Google google பண்ணிப்பார்த்தேன்… செஃல்பி புள்ள… ஆகிய பாடல்களை விஜய் பாடி இருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

எனவே விரைவில் விஜய் – மதன் கார்க்கி கூட்டணியில் ஒரு அருமையான சூப்பர் ஹிட் பாடலை ரசிகர்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

Famous lyricist teams up with Vijay in Yuvan music

சந்தோஷத்தில் என் இதயம் துடிக்கிறது.; அமிதாப்புடன் இணைந்த ரஜினி நெகிழ்ச்சி

சந்தோஷத்தில் என் இதயம் துடிக்கிறது.; அமிதாப்புடன் இணைந்த ரஜினி நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெயிலர்’ படத்தை முடித்துவிட்டு ‘லால்சலாம்’ படத்தில் நடித்தார் ரஜினிகாந்த் .

இப்படம் அடுத்த ஆண்டு 2024 பொங்கல் தினத்தில் வெளியாகிறது. தற்போது ஞானவேல் இயக்கும் ‘தலைவர் 170’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், பகத் பாசில், ரானா டகுபதி, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

இதன் படப்பிடிப்பு கேரள மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்றது. அப்போது அந்தப் பகுதி மக்கள் ரஜினியை மகிழ்ச்சியுடன் வரவேற்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தற்போது ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இதற்காக ஓரிரு தினங்களுக்கு முன் ரஜினிகாந்த் அங்கு சென்றார்.

இந்த நிலையில் இன்று அக்டோபர் 25ஆம் தேதி அமிதாப்பச்சனின் உடன் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இது குறித்து தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளதாவது…

” 33 வருடங்களுக்குப் பிறகு எனது வழிகாட்டி அமிதாப்பச்சனுடன் நடிக்கிறேன். என் இதயம் சந்தோஷத்தில் துடிக்கிறது” என ரஜினிகாந்த் அமிதாப்பச்சயுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தனது நெகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

அமிதாப்- ரஜினி

Rajini excited with Amithab at Thalaivar 170 spot

More Articles
Follows