அருள்நிதி படங்களில் காதல் இருக்காது.; மனம் திறந்த துஷாரா விஜயன்

அருள்நிதி படங்களில் காதல் இருக்காது.; மனம் திறந்த துஷாரா விஜயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை துஷாரா விஜயன் ‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ போன்ற படங்களில் தனது திறமையான நடிப்பால் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களை கவர்ந்தார்.

அவரது நடிப்புத் திறமைக்கு அப்பால், அவர் ஏற்று நடித்த அந்த கதாபாத்திரங்களுக்கு ஆன்மாவை கொடுப்பதற்காக மிகுந்த அர்ப்பணிப்பினை கொடுத்தார் துஷாரா. அருள்நிதிக்கு ஜோடியாக அவர் கதாநாயகியாக நடித்துள்ள, வரவிருக்கும் படமான ‘கழுவேத்தி மூர்க்கன்’ படம் தனக்கு மற்றுமொரு நம்பிக்கைக்குரிய ஒன்றாக இருக்கும் என பதிவு செய்துள்ளார்.

இப்படம் உலகம் முழுவதும் இன்று (மே 26, 2023) திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், இந்தப் படத்தில் தனது கதாபாத்திரம் மற்றும் அணியுடன் பணிபுரிந்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

துஷாரா விஜயன் கூறும்போது…

“எனது படங்கள் தேர்வு குறித்து எப்போதுமே நான் கவனமாக இருப்பேன். அதில் என்னுடைய கதாபாத்திரம் எளிதில் என்னுடன் கனெக்ட் ஆக வேண்டும்.

‘கழுவேத்தி மூர்க்கன்’ கவிதா என் மனதிற்கு நெருக்கமாக நான் உணர்ந்த அப்படிப்பட்ட ஒரு பாத்திரம்.

திண்டுக்கல்லில் உள்ள ஒரு வழக்கமான கிராமத்து பெண். நான் அதே பின்னணியில் இருந்து வந்ததால், இந்த கேரக்டரை செய்வது எளிதாக இருந்தது. அவள் அப்பாவித்தனம் கொண்ட ஒரு பெண்.

இந்தப் படத்திற்குப் பிறகும் பார்வையாளர்கள் அவளை நினைவில் வைத்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

நடிகர் அருள்நிதியுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், “அருள்நிதி ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகர் மற்றும் சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார்.

பொதுவாக, அவரது படங்களில் காதல் காட்சிகள் பெரிதாக இருக்காது. ஆனால், இந்தப் படத்தில் எனக்கும் அருள்நிதி சாருக்கும் இடையிலான சில அழகான காட்சிகளை இயக்குநர் கௌதம ராஜ் கொடுத்துள்ளார்” என்றார்.

அருள்நிதி – துஷாரா விஜயன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த், சரத்லோகித் சாவா, ராஜ சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தை சை கௌதம ராஜ் (ஜோதிகாவின் ‘ராட்சசி’ புகழ்) எழுதி இயக்கியுள்ளார். இமான் இசையமைக்க ஒலிம்பியா பிக்சர்ஸ் எஸ். அம்பேத் குமார் தயாரித்துள்ளார்.

Dushara Vijayan talks about Arul Nithi films

இளசை பிடித்த பழசு .. 60 வது வயதில் 2ஆம் திருமணம் செய்த ஆசிஷ் வித்யார்த்தி

இளசை பிடித்த பழசு .. 60 வது வயதில் 2ஆம் திருமணம் செய்த ஆசிஷ் வித்யார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

60 வயதான பிரபல வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி நேற்று இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ரூபாலி பருவாவுடனான தனது திருமணத்தை வெளிப்படுத்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இது ஒரு நீதிமன்ற திருமணம் மற்றும் அவர்களின் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே தனிப்பட்ட விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஷிஷ் வித்யார்த்தியை ரூபாலி முதன்முதலில் சந்தித்தது ஒரு பேஷன் ஷூட்டில் தானாம். பின்னர் இருவரும் நெருக்கமாக பழகி வந்ததோடு டேட்டிங்கும் செய்து வந்துள்ளனர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Ashish Vidyarthi gets married to fashion entreprenuer at 60

கிழக்கே போகும் ரயில் சுதாகர் ஐசியூ வில் அனுமதி.. என்னாச்சு அவருக்கு?

கிழக்கே போகும் ரயில் சுதாகர் ஐசியூ வில் அனுமதி.. என்னாச்சு அவருக்கு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மற்றும் தெலுங்கில் கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சுதாகர். தமிழில் கிழக்கே போகும் ரயில், சுவரில்லாத சித்திரங்கள் ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இதனிடையே அவருக்கு உடல் நலம் சரி இல்லாததாகவும் அதனால் அவர் ஐசியூ வில் அனுமதிக்க பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே நேற்று பிற்பகல் ஒரு வீடியோவை வெளியிட்டார் நடிகர் சுதாகர். அதில் அவர் உடல்நிலை குறித்த வதந்திகளை மறுத்தார்.

அந்த வீடியோவில், சுதாகர் மகிழ்ச்சியான முகத்துடனும் ஆரோக்கியமான உடலுடனும் காணப்படுகிறார்.

Actor Sudhakar refutes the rumours on his health condition

‘லூசிஃபர் & புலி முருகன்’ ரெக்கார்டுகளை பெரு வெள்ளத்தில் அடித்துச் சென்ற ‘2018’

‘லூசிஃபர் & புலி முருகன்’ ரெக்கார்டுகளை பெரு வெள்ளத்தில் அடித்துச் சென்ற ‘2018’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மே 5-ம் தேதி ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான மலையாள படம் ‘2018’.

நோபின் பால் இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த 2018-ல் கேரளா சந்தித்த பெரும் வெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவானது.

இந்த படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், கலையரசன், நரேன், அபர்ணா பாலமுரளி, லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் வெளியான முதலே மக்களின் அமோக ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அதுபோல வசூல் வேட்டையும் பன்மடங்காக உயர்ந்து வருகிறது.

இதற்கு முன் மோகன்லால் நடித்த ‘லூசிஃபர்’ படம் 12 நாட்களில் 100 கோடியை கடந்து இருந்தது. அதனை முறியடித்து பத்தே நாட்களில் 2018 படம் 100 கோடியை வேகமாக கடந்து முன்னேறி உள்ளது.

இந்த நிலையில் அடுத்த சாதனையாக புலி முருகன் பட வசூலையும் 2018 படம் முறியடித்துள்ளது.

அதாவது ‘புலிமுருகன்’ படம் ரூ.136 கோடியை வசூலித்து மலையாளத்தின் அதிகபட்ச வசூலை எட்டியிருந்தது.

தற்போது ‘2018’ படம் வெளியாகி 18 நாட்களில் உலக அளவில் ரூ.140 கோடி வரை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Malayalam film 2018 crossed lucifer and puli murugan box office collection

234 தொகுதிகளையும் ஒரே நேரத்தில் குறி வைக்கும் விஜய்.; மே 28ல் தளபதி விருந்து.!

234 தொகுதிகளையும் ஒரே நேரத்தில் குறி வைக்கும் விஜய்.; மே 28ல் தளபதி விருந்து.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்கம் பிசியான நடிகராக இருந்தாலும் தன்னுடைய அரசியல் பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் நடிகர் விஜய்.

விரைவில் தமிழக முழுவதும் உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 1500 மாணவர்களை விஜய் சந்திக்க உள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் தரப்பில் இருந்து ஓர் அறிக்கை வெளியாகி உள்ளது.

அதில் வருகிற மே 28ஆம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு்தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் மூலம் வரும் 28 ஆம் தேதி 234 தொகுதிகளிலும் காலை 11 மணியில் இருந்து இலவச மதிய உணவு வழங்கப்பட உள்ளது.

மே-28 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) உலக பட்டினி தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இலவச மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Makkal Iyakkam provide food to poor people

பிச்சைக்காரர்களுடன் செல்ஃபி எடுத்த விஜய் ஆண்டனி.. நெட்டிசன்கள் பாராட்டு..

பிச்சைக்காரர்களுடன் செல்ஃபி எடுத்த விஜய் ஆண்டனி.. நெட்டிசன்கள் பாராட்டு..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி, காவ்யா தாப்பர் ஜோடியாக நடித்துள்ள பிச்சைக்காரன் 2 படம் மே 19ஆம் தேதி திரைக்கு வந்தது. நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸில் திடமான வருவாயைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று மதியம் விஜய் ஆண்டனி புரமோஷன் நிகழ்ச்சிக்கு திருமலை சென்றார். அங்கு பிச்சைக்காரர்களுடன் விஜய் ஆண்டனி எடுத்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தெலுங்கில் இப்படம் எதிர்பார்ப்பை தாண்டி வெற்றி பெற்று, வாங்குபவர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்ட வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது.

Pichaikkaran 2: Vijay Antony takes a selfie with beggars

More Articles
Follows