அதர்வா & நிமிஷா-வின் DNA..; ‘ஒரு நாள் கூத்து’ இயக்குனருடன் கூட்டணி

அதர்வா & நிமிஷா-வின் DNA..; ‘ஒரு நாள் கூத்து’ இயக்குனருடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

’மனம் கொத்தி பறவை’, ’டாடா’, ’கழுவேத்தி மூர்க்கன்’ போன்ற பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றிப் பெற்ற பல படங்களைக் கொடுத்த ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத் குமார், இப்போது தனது அடுத்த படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

க்ரைம்-டிராமா ஜானரில் உருவாக இருக்கும் இந்தப் படத்திற்கு ’டிஎன்ஏ’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் முதல் முறையாக அதர்வா முரளியுடன் இந்தப் படத்தின் மூலம் இணைகிறது.

‘ஒரு நாள் கூத்து’, ’மான்ஸ்டர்’ மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’ஃபர்ஹானா’ போன்ற சிறந்தப் படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்டோபர் 11, 2023) பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

DNA

குடும்ப பார்வையாளர்களின் மனதை வென்ற நடிகர் அதர்வா முரளிக்கு இந்தத் திரைப்படம் மற்றுமொரு பாராட்டுக்குரியதாக நிச்சயம் இருக்கும்.

சமீபத்தில் வெளியான ‘சித்தா’ படத்தில் தனது அசத்தலான நடிப்பால் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் இதயங்களை வென்ற நடிகை நிமிஷா சஜயன், இந்தப் படத்தில் அதர்வா முரளிக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்கிறார்.

முழு படமும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது மற்றும் திட்டமிட்டபடி குறுகிய காலத்தில் விரைவாக முடிவடையும். மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

DNA

Atharva and Nimisha Sajayan starrer DNA

‘வடசென்னை’ ரீ-ரீலீஸ்.; பாதி விலைக்கு 8000 டிக்கெட்டுகளை விற்ற பிரபல தியேட்டர்

‘வடசென்னை’ ரீ-ரீலீஸ்.; பாதி விலைக்கு 8000 டிக்கெட்டுகளை விற்ற பிரபல தியேட்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2018-ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வட சென்னை’.

இந்த படத்தில் இயக்குனர் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தனுஷ் தயாரிந்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

வட சென்னை பகுதியில் உள்ள மக்களை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வடசென்னை

‘வட சென்னை’ திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ளது.

இந்நிலையில், சென்னை கமலா திரையரங்கில் டிக்கெட் விலை ரூ.49 என வரும் 12-ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு மாலை மற்றும் இரவு காட்சிகள் திரையிடப்பட உள்ளது.

இதுவரை இப்படத்திற்காக 8,000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கமலா திரையரங்கம் தனது X ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

kamala cinemas

dhanush’s ‘Vada Chennai’ movie up for a grand re-release in kamala cinemas

LEO FDFS 4AM SHOW மீடியாக்களில் பொய் செய்தி.; தமிழக அரசு என்ன சொல்கிறது.?

LEO FDFS 4AM SHOW மீடியாக்களில் பொய் செய்தி.; தமிழக அரசு என்ன சொல்கிறது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அனிருத் திசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.

இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் டிரைலர் அக்டோபர் 5 தேதி மாலை 6.30 மணிக்கு வெளியானது.

‘லியோ’ படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. எனவே தியேட்டர் உரிமையாளர்களும் ரசிகர்களும் சிறப்பு அதிகாலை காட்சி வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் சில முன்னனி மீடியாக்களே அதிகாலை 4 மற்றும் 7 மணி காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது என பொய் செய்தி பரப்பி வருகின்றனர்.

ஆனால் நம் FILMISTREET தளத்தில் அப்படி எந்த செய்தியும் பதிவாகவில்லை.

ஏனென்றால் ‘லியோ’ படத்திற்கு அதிகாலை 4 மற்றும் 7 மணி காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது.

‘ஜெயிலர்’ படத்தை போல ‘லியோ’ படத்திற்கும் தமிழகத்தில் முதல்காட்சி 8 – 9am மணியளவில் மட்டுமே தொடங்கும் என கூறப்படுகிறது.

ஆக ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட்டு கொள்ளலாம்.

லியோ

கூடுதல் தகவல்கள்…

சினிமாஸ் – தமிழ்நாடு சினிமாஸ் (ஒழுங்குமுறை) விதிகள், 1957 “LEO” திரைப்படத்தின் தலைப்பை 19 அக்டோபர் 2023, 20 அக்டோபர் 2023, 21 அக்டோபர் 2023, 22 அக்டோபர் 2023, 23 அக்டோபர் 2023 மற்றும் அக்டோபர் 24 ஆகிய தேதிகளில் அனுமதிக்கப்பட்ட திரையரங்குகள் முழுவதும் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு – உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உள்துறை (சினிமா) துறை

நாள்: 10.10.2023

1. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோவில் இருந்து, கால் ஃபிளிக் பிரைவேட் லிமிடெட்டின் யூனிட், சென்னை பிரதிநிதித்துவம், தேதியிட்டது

2. கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையரிடமிருந்து

வருவாய் நிர்வாகம், சென்னை-5, கடிதம் 15,65,616br.6.1.9(1)/e-5671184/2023, தேதி 21.09.2023.

ஆர்டர்:

மேலே முதலில் வாசிக்கப்பட்ட பிரதிநிதித்துவத்தில், Seven Screen Studio, Unit of Kal Flick Private Limited Chennai கூறியுள்ளது, தளபதி விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா மற்றும் பலர் நடித்த “LEO” என்ற தமிழ் படத்தின் தயாரிப்பாளர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் இயக்கியவர்கள். இந்த திரைப்படம் 19 அக்டோபர் 2023 அன்று பூஜா விடுமுறைக்காக உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் 19.10.2023 அன்று அதிகாலை 4.00 மணிக்கு 2 (இரண்டு) சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்குமாறு கோரியுள்ளனர். & 7.00 ஏ.எம். மற்றும் 1 (ஒன்று) சிறப்புக் காட்சி 20.10.2023 முதல் 24.10.2023 வரை காலை 7.00 மணிக்கு

2. மேலே இரண்டாவதாக வாசிக்கப்பட்ட கடிதத்தில், மேற்கண்ட பிரதிநிதித்துவம் குறித்த தனது கருத்துக்களை வழங்க ஆலோசிக்கப்பட்ட வருவாய் நிர்வாக ஆணையர், அரசு மட்டத்தில் முடிவெடுக்கும் அதிகார வரம்பு சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகள் மற்றும் சிறப்புக் காட்சிகள் நேரத்தை அதிகப்படுத்துவதால் சுகாதாரக் கேடு ஏற்படாமல், திரையரங்குகளில் கூட

நிமிடத்திற்கு முன்பு

தமிழ்நாடு சினிமாஸ் (ஒழுங்குமுறை) விதிகள், 1957 ” Leo”,
திரையரங்கத்தை சுகாதாரமான முறையில் சுத்தம் செய்யவும் பராமரிக்கவும் போதிய அவகாசம் அளித்து, பொதுமக்களும் பார்வையாளர்களும் சிரமமின்றி உள்ளே சென்று வெளியேறும் வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து சிறப்புக் காட்சிகளைத் திரையிட அனுமதி வழங்க வேண்டும்.

3. அரசு, கவனமாக பரிசீலித்த பிறகு, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, கல் ஃபிளிக் பிரைவேட் லிமிடெட், சென்னையின் யூனிட்டின் கோரிக்கையை ஏற்று, 19.10.2023 அன்று “LEO” படத்தின் தலைப்புக்கான சிறப்புக் காட்சியை நடத்த அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. 20.10.2023, 21.10.2023, 22.10.2023, 23.10.2023 மற்றும் 24.10.2023 (அதாவது ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஐந்து காட்சிகள்), நிபந்தனை 14-ஏ படிவம் ‘சி’ உரிமத்தின் தளர்வு, உரிமதாரர்கள் நிபந்தனைக்கு உட்பட்டு இருக்க வேண்டும் கண்காட்சி நடைபெறும் இடத்தின் மீது அதிகார வரம்பைக் கொண்ட உரிமம் வழங்கும் அதிகாரிகள் மற்றும் பிற வரி விதிக்கும் அதிகாரிகளை முன்கூட்டியே தெரிவிக்கவும்.

(ஆளுநர் உத்தரவின்படி)

பி. அமுதா

அரசாங்கத்தின் முதன்மைச் செயலாளர்

தி செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவிற்கு, கால் ஃபிளிக் பிரைவேட் லிமிடெட் யூனிட், 37/4, பாட்டர்ஸ் ஸ்ட்ரீட், சைதாப்பேட்டை, சென்னை – 15. அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் (சென்னை கலெக்டர் தவிர). காவல் ஆணையர், சென்னை – 7. வருவாய் நிர்வாக ஆணையர், சென்னை – 5.

நகல்: மாண்புமிகு தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சரின் சிறப்புத் தனி உதவியாளர், சென்னை-9. அரசின் முதன்மைச் செயலாளரின் தனிச் செயலாளர், உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை, சென்னை-9. SF/SC.

//அனுப்பப்பட்டது / ஆர்டர் மூலம்//

10/10/2023 பிரிவு அதிகாரி

லியோ

No 4am shows for Leo movie TN Govt Announces

சில்க் ஸ்மிதாவை மீண்டும் பார்க்கணுமா.? ‘மார்க் ஆண்டனி’ ஓடிடி ரிலீஸ் அப்டேட்

சில்க் ஸ்மிதாவை மீண்டும் பார்க்கணுமா.? ‘மார்க் ஆண்டனி’ ஓடிடி ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.

இப்படத்தில் ரித்து வர்மா, அபிநயா, செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, தெலுங்கு நடிகர் சுனில் வர்மா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படம் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘மார்க் ஆண்டனி’ படம் வருகிற 13-ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இதனை படக்குழு போஸ்டரை ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.

மார்க் ஆண்டனி

Vishal and SJ Suryah’s ‘Mark Antony’ OTT release date announcement

விஜய் – பிரசாந்த் – பிரபுதேவா ஆடிய பாடலை படமாக்கிய இயக்குநர்

விஜய் – பிரசாந்த் – பிரபுதேவா ஆடிய பாடலை படமாக்கிய இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம், ‘லியோ’.

இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படம் வரும் 19-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இதையடுத்து, விஜய் அவர்கள் வெங்கட் பிரபு இயக்கும் ‘தளபதி 68’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில், பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம் , சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதில், விஜய் 2 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. முதலில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

இந்நிலையில், நட்பு பற்றிய இந்தப் பாடலில், விஜய், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் இணைந்து பங்கேற்றுள்ளனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது.

மேலும், ‘தளபதி 68’ படத்தின் அடுத்த ஷெட்யூல் விரைவில் சென்னையில் தொடங்க இருக்கிறது.

vijay’s ‘Thalapathy 68’ song shoot wrapped up

அஜித்துடன் இணைந்த சிவகார்த்திகேயன் – உதயநிதி பட ஹீரோயின்

அஜித்துடன் இணைந்த சிவகார்த்திகேயன் – உதயநிதி பட ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான நடிகை ரெஜினா கெசண்ட்ரா.

இவர் தமிழை விட தெலுங்கு படங்களில் அதிக எண்ணிக்கையில் நடித்துள்ளார். மேலும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, லோகேஷ் இயக்கிய ‘மாநகரம்’, உதயநிதி நடித்த ‘சரவணன் இருக்க பயமேன்’ உள்ளிட்ட பல படங்களின் நடித்திருக்கிறார்.

ரெஜினா கெசண்ட்ரா

இந்த நிலையில் இவர் தற்போது அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தில் இணைகிறார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த வாரம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரெஜினா கெசண்ட்ரா

Regina Cassandra joins Ajiths Vidaa Muyarchi

More Articles
Follows