தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சார்பட்டா பரம்பரை மற்றும் நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களை தொடர்ந்து ‘தங்கலான்’ படத்தை இயக்கி வருகிறார் பா ரஞ்சித்.
சீயான் விக்ரம் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க முக்கிய வேடத்தில் பசுபதி நடித்திருக்கிறார்.
ஸ்டூடியோ கீரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த படம் ‘கேஜிஎஃப்’ பாணியில் கோலார் தங்கவயல் பற்றிய கதைக்களம் ஆகும்.
‘தங்கலான்’ பட டீசர் நவம்பர் 1ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளன.
இந்த நிலையில் இன்று அக்டோபர் 27ஆம் தேதி மாலை 5 மணிக்கு ‘தங்கலான்’ பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்து ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பை நடிகர் விக்ரம் வெளியிடுவார் எனவும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.
‘தங்கலான்’ டீசர் குறித்து ஜிவி பிரகாஷ் சொல்லும்போது சம்பவம் உறுதி என தெரிவித்திருந்தார். அதுபோல ‘தங்கலான்’ படம் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ஒரு புதிய மைல் கல்லை எட்டும் என்றும் விக்ரம் நடிப்புக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் எனவும் தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்திருந்தார்.
மேலும் திட்டமிட்ட பட்ஜெட்டை விட மிகப் பெரிய பட்ஜெட்டில் ‘தங்கலான்’ உருவாகி உள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Thangalaan release date will be unveiled by Vikram