அருள்நிதி மிரட்டிய ‘கழுவேத்தி மூர்க்கன்’ ஓடிடி ரிலீஸ் அப்டேட்

அருள்நிதி மிரட்டிய ‘கழுவேத்தி மூர்க்கன்’ ஓடிடி ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’.

இப்படத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த், சரத் லோஹிதஸ்வா, ராஜ சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

கடந்த மே 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘கழுவேத்தி மூர்க்கன்’ படம் ஜூன் 23ம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

கழுவேத்தி மூர்க்கன்

arulnithi’s kazhuvethi moorkan on amazon prime from june 23

விக்ரம் கௌதம் இணைந்த ‘துருவ நட்சத்திரம்’ ஹாட் அப்டேட் இதோ..

விக்ரம் கௌதம் இணைந்த ‘துருவ நட்சத்திரம்’ ஹாட் அப்டேட் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இந்த படத்துக்கான படப்பிடிப்பு ஒத்திகையின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது.

தற்போது பூரண குணம் அடைந்து படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’.

இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ரீத்து வர்மா கதாநாயகியாக நடிக்க, பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

இப்படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது.

சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் ‘விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்’ என்றும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் 3 பாடல்களை ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

vikram’s dhuruva nakshatram movie new update

JUST IN ரத்தம் தெறிக்க.. சுத்தியலை சுழற்றும் விஜய்.; வெறித்தனமான ஆக்சனில் ‘லியோ’

JUST IN ரத்தம் தெறிக்க.. சுத்தியலை சுழற்றும் விஜய்.; வெறித்தனமான ஆக்சனில் ‘லியோ’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க லலித் குமார் தயாரித்து வருகிறார்.

லோகேஷின் முந்தைய படத்தை போன்று இதிலும் எல்சியு இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இன்று ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு முதல் பாடலை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

நா ரெடி…’ என எனத் தொடங்கும் பாடலின் ப்ரோமோவை வெளியிட்டிருந்தனர்.

நா ரெடி தான் வரவா..
அண்ணா இறங்கி வரவா… என்று இந்த பாடல் தொடங்குகிறது.

இந்தப் பாடலை பாடியவர் உங்கள் #விஜய் எனவும் வாசகம் இடம் பெற்று இருந்தது.

Leo #NaaReady Promo is here!

https://t.co/THQz04oVyU

#Leo l #filmistreet

இந்த நிலையில் இன்று ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு மிக சரியாக 12 மணிக்கு ‘லியோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் மற்றும் லோகேஷ் வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரில் ரத்தம் தெறிக்க தெறிக்க கையில் சுத்தியலை வைத்துக்கொண்டு விஜய் சுழற்றுகிறார்.

இது முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருக்கும் என நம்பலாம்.

இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் சமூக வலகத்தளங்களில் வெறித்தனமாக பகிர்ந்து வருகின்றனர்.

Lokesh Kanagaraj launched Leo first look on Vijays Birthday

மிட் நைட்டில் விஜய் ரசிகர்களுக்கு பர்த் டே ட்ரீம் வைக்கும் லோகேஷ்

மிட் நைட்டில் விஜய் ரசிகர்களுக்கு பர்த் டே ட்ரீம் வைக்கும் லோகேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

இப்படத்தின் ‘நா ரெடி’ முதல் பாடல் விஜய்யின் பிறந்த நாளான நாளை (ஜூன் 22) வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

‘நா ரெடி தான் வரவா.. அண்ணா இறங்கி வரவா’ பாடலின் புரோமோ வீடியோவை நேற்று வெளியிட்டு விஜய்க்கு லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்.

அந்த புரோமோ வீடியோ ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

இத்துடன் நள்ளிரவு சரியாக 12 மணிக்கு லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

vijay’s leo FirstLook will be unveiled at 12 AM

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை கல்யாணி பிரியதர்ஷன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை கல்யாணி பிரியதர்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் பிரியதர்ஷன்–நடிகை லிஸி தம்பதியின் மகள் கல்யாணி பிரியதர்ஷன்.

தமிழில் ‘ஹீரோ’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளார். சிம்புவின் ‘மாநாடு’ படத்திலும் நடித்து இருக்கிறார்.

மலையாளத்தில் இவர் நடித்து கடந்த வருடம் வெளியான ‘ஹ்ருதயம்’ வரவேற்பைப் பெற்றது.

தற்போது ஜோஷி இயக்கும் ‘ஆண்டனி’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், செம்பன் வினோத், விஜயராகவன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

கடந்த மே மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.

‘ஆண்டனி’ படத்துக்காக சமீபத்தில் ஆக்‌ஷன் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.

இந்த நிலையில், டூப் போடாமல் கல்யாணி பிரியதர்ஷன் நடித்தார்.

அப்போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

இதுபற்றி வீடியோ வெளியிட்டுள்ள கல்யாணி பிரியதர்ஷன் அவர், “சண்டைக் காட்சிகள் உடல் பலவீனமானவர்களுக்கு அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

actress kalyani priyadarshan injured in shooting spot accident

ஜூன் 23ல் 8 ரிலீஸ் ஒரு பார்வை.: கமல் விக்ரம் சுந்தர் பசுபதி வசந்த்ரவி சுனைனா லியோ படங்கள்

ஜூன் 23ல் 8 ரிலீஸ் ஒரு பார்வை.: கமல் விக்ரம் சுந்தர் பசுபதி வசந்த்ரவி சுனைனா லியோ படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த வாரம் 2023 ஜூன் 23ஆம் தேதி தமிழ் சினிமாவில் ஏழு படங்கள் ரிலீஸாகிறது.

இத்துடன் கமல் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ படமும் ரீ-ரிலீஸ் ஆகிறது.

இந்த படங்கள் பற்றிய ஒரு முன்னோட்டம் இதோ..்

1)
விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’.

இதில் வாணிபோஜன், தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை கார்த்திக் அத்வைத் தயாரித்து இயக்கியுள்ளார்.

2) அறிமுக இயக்குநர் ராம் சங்கய்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தண்டட்டி’.

இதில் பசுபதி, ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிக்க சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

தென் மாவட்டங்களில் வயதான பெண்மணிகள் அணிந்திருக்கும் தண்டட்டியை பின்னணியாக வைத்து இப்படம் உருவானது.

‘சிங்கம் 2, சர்தார், ரன் பேபி ரன் படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

3) சுனைனா நடிப்பில் உருவான படம் ‘ரெஜினா’.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தை ‘பைப்பின் சுவத்திலே பிராணாயம்’ மற்றும் பிரித்விராஜ், ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் வெளியான ‘ஸ்டார்’ ஆகிய மலையாள படங்களை இயக்கிய டொமின் டி சில்வா இயக்கியுள்ளார்.

4) சீனு ராமசாமியின் துணை இயக்குநரும் தம்பியுமான ஆர்.விஜயகுமார் இயக்கத்தில் உருவான படம் ‘அழகிய கண்ணே’.

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இதில் சஞ்சிதா ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

5) இயக்குனராக அடையாளம் காணப்பட்ட சுந்தர் சி முதன்முறையாக ஹீரோவாக நடித்த படம் ‘தலைநகரம்’.

இந்த படத்தில் ரைட் என்ற கேரக்டர் நடித்திருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார் சுந்தர் சி.

ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை துரை என்பவர் இயக்கி இருக்கிறார். இவர் முகவரி, தொட்டி ஜெயா, நேபாளி ஆகிய படங்களை இயக்கியவர்.

6) தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி முக்கிய வேடத்தில் நடித்த படம் ‘அஸ்வின்ஸ்’.

இந்த படத்தில் விமலா ராமன், சிம்ரன் பரீக், முரளிதரன், சரஸ்வதி மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனம் தயாரித்துள்ளது.

7) ஆதர்ஷ் மதிகாந்தம் என்பவர் தயாரித்து இயக்கிய படம் ‘நாயாடி’.

கேரளாவில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனமான நாயாடிகளின் (வேட்டைக்காரர்கள் என்று பொருள்) கதையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

இதில் நாயகியாக காதம்பரி நடிக்க அருண் என்பவர் இசையமைத்துள்ளார்.

கடந்த கடந்த வாரமே இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென தள்ளிப்போனது. தற்போது இந்த வாரம் ஜூன் 23 ரிலீஸ் ஆகிறது.

கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான படம் ‘வேட்டையாடு விளையாடு.’

இத்திரைப்படம் வசூலைக் குவித்து வெற்றி பெற்றது. கமலுடன் இந்தப் படத்தில் ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. தற்போது இந்த படம் டிஜிட்டல் செய்யப்பட்டு ரீ ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

June 23 on Theater release 8 movies list here

More Articles
Follows