தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ, வருகிற அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் விநியோகம் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அதன் விவரம்…
- கோவை ஏரியாவின் விநியோக உரிமை – திருப்பூர் சுப்பிரமணியம்
- திருச்சி மற்றும் தஞ்சாவூர் – பிரான்சிஸ் அடைக்கலராஜ்
- வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு – ஜி.ஸ்ரீனிவாசன்
- மதுரை மற்றும் ராமநாடு – ஜி.என்.அழகர் சாமி
- திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி – பிரதாப் ராஜா
ஆகியோர் பெற்று இருக்கிறார்கள் என்பதை பார்த்தோம்.
இந்த விநியோகஸ்தர்கள் அனைவரும் மினிமம் கியாரண்டி அடிப்படையில் படத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சில வருடங்களாகவே டாப் ஹீரோக்களின் படங்கள் என்றாலும் கூட மினிமம் கியாரண்டிக்கு வாங்க விநியோகஸ்தர்கள் தயங்குகிறார்கள்.
படத்தை விநியோகம் செய்து கமிஷனை மட்டுமே வாங்கிக் கொள்கிறார்களாம்.
ஆனால் ரெமோவுக்கு விநியோகஸ்தர்களே மினிமம் கியாரண்டி அடிப்படையில் வாங்கியிருப்பது திரையுலகினரை ஆச்சர்யப்படுத்தி உள்ளதாம்.
பின் குறிப்பு: மினிமம் கியாரண்டி பற்றிய ஒரு பார்வை…
ஒரு குறிப்பிட்ட ஏரியாவின் விநியோக உரிமை ரூ. 1 கோடிக்கு பெறப்படுகிறது என்றால் அந்த ஏரியாவில் உள்ள திரையரங்குகளுக்கு படம் பிரித்து கொடுக்கப்படும்.
படத்தின் வசூல் ரூ. 1 கோடியை நெருங்கும் வரை அனைத்துமே அதை வாங்கிய விநியோகஸ்தருக்கே சொந்தம்.
அதன் பிறகு வரும் லாபத்தை தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும் சதவீத அடிப்படையில் பகிர்ந்து கொள்வார்கள்.
மேலும் நாட்கள் செல்ல செல்ல லாபத்தின் பங்கு மாறிக் கொண்டே வரும்.