லதா ரஜினி மீது எப்ஐஆர்…? பதிலளிக்க கோர்ட் நோட்டீஸ்.!

லதா ரஜினி மீது எப்ஐஆர்…? பதிலளிக்க கோர்ட் நோட்டீஸ்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kochadaiiyaanரஜினிகாந்த் லதா தம்பதியரின் இளைய மகள் சௌந்தர்யா, கோச்சடையான் படத்தை இயக்கியிருந்தார்.

மோசன் கேப்சரிங் முறையில் தயாரான இப்படம் கடந்த 2014 ஆண்டு வெளியானது.

இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்று இப்படம் தொடர்பாக லதா ரஜினி மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

தங்களுடன் ஒப்பந்தம் செய்துவிட்டு, ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து கோச்சடையான் படத்தை வெளியிட்டனர்.

எனவே தங்கள் நிறுவனத்தை ஏமாற்றிய லதா ரஜினி மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

இம்மனுவை ஏற்றுக் கொண்ட கோர்ட், இன்னும் 4 வாரங்களில் லதா ரஜினிகாந்த் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

சமந்தா விலகல்…? மீண்டும் தனுஷுடன் அமலா பால்.!

சமந்தா விலகல்…? மீண்டும் தனுஷுடன் அமலா பால்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

samanthaதனுஷின் வுண்டர்பார் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் வடசென்னை.

வெற்றிமாறன் இயக்கத்தில் மூன்று பாகங்களாக இப்படம் உருவாகிறது.

முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

இதில் தனுஷுடன் சமந்தா, ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சமீபத்தில் பிரமாண்டமான ஜெயில் செட் ஒன்றில் தனுஷ் மற்றும் கிஷோர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்திலிருந்து சமந்தா வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது.

இவருக்கு பதிலாக அமலா பால் நடிக்கவிருக்கிறாராம். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த ஜோடி இதற்கு முன்பே வேலையில்லா பட்டதாரி படத்தில் இணைந்து நடித்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

‘ஒரே சீன்; ரெண்டு ஹீரோ; ரொம்ம்ம்ப கஷ்டம்…’ – மஞ்சிமா மோகன்

‘ஒரே சீன்; ரெண்டு ஹீரோ; ரொம்ம்ம்ப கஷ்டம்…’ – மஞ்சிமா மோகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Manjima-Mohan-Tamil-Actress-கெளதம் மேனன் இயக்கி வரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்புவின் ஜோடியாக நடித்து வருகிறார் மஞ்சிமா மோகன்.

அதே நேரத்தில் இப்படம் தெலுங்கிலும் தயாராகி வருகிறது. தெலுங்கு பதிப்பிலும் இவரேதான நாயகியாக நடித்து வருகிறார்.

ஆனால் ஹீரோவாக நாக சைதன்யா நடித்து வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் படம் குறித்து மஞ்சிமா மோகன் பேசியதாவது…

“என் அப்பா ஒரு ஒளிப்பதிவாளர். எனவே, மலையாளத்தில் நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளேன்.

‘மதுரனோம்பார கட்டு’ என்ற படத்தில் நடித்தமைக்காக கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதை 9 வயதில் பெற்றேன்.

‘ஒரு வடக்கன் செல்ஃபி ‘ படத்தில் நாயகியாக அறிமுகமானேன். தற்போது கெளதம் சார் படத்தில் நடித்து வருகிறேன்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளும் தெரியும் என்பதால் நடிப்பதில் பிரச்சினை இல்லை..

ஆனால் ஒரு காட்சியை ஒரு நாயகனுடன் எடுத்துவிட்டு,  சில மணி நேரம் கழித்து அடுத்த நாயகனுடன் எடுப்பார்கள்.

முதல் ஹீரோவுடன் எப்படி செய்திருந்தேனோ அப்படியே இவரிடமும் செய்ய வேண்டும். அதனால் ரொம்பவே கஷ்டப்பட்டேன். பின்னர் பழகிவிட்டது.

நாயகி வேடம்தான் வேண்டும் என்பதில்லை. சில சீன்ஸ்தான் என்றாலும், ரசிகர்களுக்கு பிடிக்குமா? என்பதை பார்ப்பேன். பிடித்தால் ஓகே சொல்லிடுவேன்.”

இவ்வாறு மஞ்சிமா தெரிவித்துள்ளார்.

கே.எஸ். ரவிக்குமாருடன் இணையும் கமல்ஹாசன்.!

கே.எஸ். ரவிக்குமாருடன் இணையும் கமல்ஹாசன்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ksr and kamalலிங்கா படத்தை தொடர்ந்து கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ள படம் முடிஞ்சா இவன புடி.

இப்படத்தையும் லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார். இவருடன் இணைந்து எம்.பி.பாபுவும் தயாரித்துள்ளார்.

இதில் சுதீப் மற்றும் நித்யா மேனன் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.

இவர்களுடன் நாசர், பிரகாஷ்ராஜ், முகேஷ் திவாரி, சரத் லோகித்ஸ்வா, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை இமான்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை கமல்ஹாசன் அவர்கள் வருகிற ஜீலை 20ஆம் தேதியன்று வெளியிட உள்ளார்.

அஜித் படத்தை இயக்க போகிறாரா தெறி இயக்குனர்.?

அஜித் படத்தை இயக்க போகிறாரா தெறி இயக்குனர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

atleeராஜா ராணி படத்தை தொடர்ந்து, விஜய்யின் தெறி படத்தை இயக்கினார் அட்லி.

இவை இரண்டும் வெற்றிப் பெறவே இவரது அடுத்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

தற்போது ஜீவா நடிக்கும் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தை தயாரித்து வருகிறார் அட்லி.

இந்நிலையில் அட்லி சொன்ன கதையை கேட்ட அஜித் ஓகே சொல்லிவிட்டாராம்.

தல 57 படத்தை முடித்துவிட்டு இவர்கள் இணையக்கூடும் என கூறப்படுகிறது.

அதுபோல் விஜய் 60 படத்தை முடித்துவிட்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்றும் ஒரு பக்கம் தகவல்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று சூர்யா ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்து.!

இன்று சூர்யா ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்து.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

surya amalaஇவ்வருடம் சூர்யா நடித்த 24 படம் மட்டுமே வெளியானது.

இப்படம் தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மீண்டும் தெலுங்கு ரசிகர்களுக்கு மற்றொரு விருந்தை இன்று கொடுக்கிறார் சூர்யா.

கடந்தாண்டு இவர் நடித்து பெரும் ஹிட்டடித்த பசங்க 2 படத்தின் தெலுங்கு பதிப்பை இன்று வெளியிடுகின்றனர்.

இப்படத்திற்கு தெலுங்கில் மெமு (MEMU) என பெயரிட்டுள்ளனர்.

பாண்டிராஜ் இயக்கிய இப்படத்தில் சூர்யாவின் மனைவியாக அமலா பால் நடித்திருந்தார். இசை அரோல் கரோலி.

More Articles
Follows