நடிகை நிவேதாவுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான்.; உணவகத்தை மூட அதிகாரிகள் உத்தரவு

நடிகை நிவேதாவுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான்.; உணவகத்தை மூட அதிகாரிகள் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத் தமிழன், பொதுவாக எம்மனசு தங்கம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ்.

அவ்வப்போது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இவரும் பிரபுதேவாவும் இணைந்து நடித்துள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் இவருக்கு டெலிவரி செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

அதில், ஸ்விகி ஆன்லைன் உணவு டெலிவரி செயலி மூலம் உணவகம் ஒன்றில் சாப்பாடு ஆர்டர் செய்துள்ளார்.

அதை திறந்தபோது கரப்பான்பூச்சி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஆதாரமாக புகைப்படத்தையும் நிவேதா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக நிவேதா பெத்துராஜ் கூறியிருப்பதாவது..

“உணவு டெலிவரி நிறுவனம் மற்றும் உணவகங்கள் என்ன தரத்தை பின்பற்றுகின்றன.

எனக்கு இரண்டு முறை உணவில் கரப்பான் பூச்சி வந்துள்ளது.

அந்த உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் அளித்தும் நிவேதா பெத்துராஜ் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இதனையடுத்து நடிகை நிவேதா பெத்துராஜ் அளித்த புகாரின் பேரில் பெருங்குடியில் உணவகம் செயல்பட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

3 நாட்களுக்குள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சுட்டிக் காட்டிய குறைகளை நிவர்த்தி செய்ய அந்த உணவகத்திற்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

Actress Nivetha Pethuraj complains food delivery company

nivetha pethuraj

லாரன்ஸை இயக்கும் தனுஷ்- சிவகார்த்திகேயன் பட இயக்குநர்.; கதிரேசன்- வெற்றிமாறனுடன் கூட்டணி.!

லாரன்ஸை இயக்கும் தனுஷ்- சிவகார்த்திகேயன் பட இயக்குநர்.; கதிரேசன்- வெற்றிமாறனுடன் கூட்டணி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

adhigaramவெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’ , ‘ஆடுகளம்’ படங்களை ஃபை ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்தவர் S.கதிரேசன்.

இதில் ‘ஆடுகளம்’ படம் 6 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றது.

இதேபோல், டைரக்டர் வெற்றிமாறன், ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனம் சார்பில், ‘உதயம்’, ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘வட சென்னை’ போன்ற நல்ல படங்களைத் தயாரித்தார்.

‘காக்கா முட்டை’ தேசிய விருது உள்பட பல விருதுகளைப் பெற்றது. ‘விசாரணை’ தேசிய விருது பெற்றதுடன் அகடமி விருதுக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்படும் படமாகத் தேர்வானது.

இப்போது இந்த ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸும் – கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கின்றனர்.

இப்படத்திற்கு “அதிகாரம்” என்று பெயரிட்டுள்ளார்கள். இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை , திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார்.

இப்படம் மூலம் ஃபைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் – வெற்றிமாறன் இருவரும் சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளார்கள்.

பிரமாண்ட படைப்பாக பான்-இந்தியா படமாக தயாராகும் இப்படத்தில் பான்-இந்தியா ஸ்டார் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஏற்கனவே இவர் இதே ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், S.கதிரேசன் இயக்கத்தில் ‘ருத்ரன்’ நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

‘அதிகாரம்’ படத்தின் இயக்குநர் பொறுப்பை, வெற்றிமாறன் உதவியாளர் R.S.துரை செந்தில்குமார் இயக்குநர் ஏற்றுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர் நீச்சல், காக்கிசட்டை’, & தனுஷ் நடித்த ‘கொடி, பட்டாசு’ போன்ற வெற்றி படங்களை இயக்கியவர்.

இவர் முதல்முறையாக இப்படம் மூலம் ராகவா லாரன்ஸ் உடன் இணைகிறார்.

இதன் படபிடிப்பு இந்த வருடம் இறுதியில் ஆரம்பமாகும். மலேசியாவில் சுமார் 50 நாட்களும், இந்தியாவில் பல இடங்களிலும் படபிடிப்பு நடைபெறும்.

சினிமாவில் எதிர்பார்ப்புக்குரிய நல்ல திரைப்படங்களை கொடுத்துவரும் ராகவா லாரன்ஸ், S.கதிரேசன், வெற்றிமாறன்

R.S.துரை செந்தில்குமார் இந்த நால்வர் கூட்டணியால் இந்த பிரமாண்டமான படம் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

PRO:ஜான்சன்

தயாரிப்பு: S.கதிரேசன், இயக்குநர் வெற்றிமாறன்.

Raghava Lawrence next film with Director Durai Senthil Kumar

இணையத்தில் பற்றி எரியும் ‘தல 61’ அப்டேட்ஸ்..; அஜித் ரசிகர்கள் ஹாப்பி

இணையத்தில் பற்றி எரியும் ‘தல 61’ அப்டேட்ஸ்..; அஜித் ரசிகர்கள் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thala 61‘பிங்க்’ படத்தின் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் போனிகபூர் மற்றும் வினோத் ஆகியோரது கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இவர்கள் 2வது முறையாக ‘வலிமை’ படத்திற்காக இணைந்துள்ளனர்.

இந்த திரைப்படம் இன்னும் ஒரு சில மாதங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்ட உடன் தியேட்டர்களில் வெளியாகும் என தெரகிறது.

இந்நிலையில் தல அஜித்தின் 61 வது படம் குறித்த தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க வினோத் இயக்க உள்ளதாகவும் சொல்லப்படிகிறது.

இம்முறை வந்த தகவல்கள் உறுதியாகியுள்ளது.

அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை 7 மாதங்களில் முடித்துவிட திட்டமிட்டுள்ளனர்.

இவ்வருடத்தில் சூட்டிங் தொடங்கி 2022ல் நவம்பர் மாதம் ரிலீஸ் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

Thala 61 exclusive update here

சந்தோஷ் சிவனின் தந்தையும் 3 தேசிய விருது பெற்றவருமான ஒளிப்பதிவாளர் சிவன் மரணம்

சந்தோஷ் சிவனின் தந்தையும் 3 தேசிய விருது பெற்றவருமான ஒளிப்பதிவாளர் சிவன் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

santhosh sivan fatherதளபதி, இருவர், துப்பாக்கி, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் சந்தோஷ் சிவன்.

சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படத்திற்கும் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இவரின் தந்தை சிவன் என்பவரும் பிரபல ஒளிப்பதிவாளர்தான்.

பல மலையாளத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் அபயம், யாகம், கொச்சு கொச்சு மோகங்கள் உள்ளிட்ட மலையாள படங்களையும் இயக்கியுள்ளார்.

மூன்று முறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் ஒளிப்பதிவாளர் சிவன் இன்று மாரடைப்பு காரணமாக திருவனந்தபுரத்தில் காலமானார்.

இதனையடுத்து சந்தோஷ் சிவன் குடும்பத்தினர்களுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Famous cinematographer Santhosh Sivan father passed away

விஜய் பர்த் டே டான்ஸ்.: கீர்த்தி மாளவிகாவை அடுத்து சூப்பர் ஸ்டார் மகளும் செம ஆட்டம்

விஜய் பர்த் டே டான்ஸ்.: கீர்த்தி மாளவிகாவை அடுத்து சூப்பர் ஸ்டார் மகளும் செம ஆட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜய் தன் 47வது பிறந்த நாளை கொண்டாடினார்.

இதனை முன்னிட்டு ரசிகர்கள் பிரபலங்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இத்துடன் விஜய்யுடன் நடித்த நடிகைகள் கீர்த்தி சுரேஷ், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் விஜய் ஆடிய பாடலுக்கு நடனம் ஆடி வீடியோக்கள் வெளியிட்டனர்.

இவை சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சுவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் ’மாஸ்டர்’ பட பாடலான ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.

இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

Actress Lakshmi Manchu’s vaathi coming dance goes viral

ஆன்லைன் வகுப்புகளுக்கு 2GB FREE DATA வழங்க தமிழக அரசுக்கு கமல் கோரிக்கை

ஆன்லைன் வகுப்புகளுக்கு 2GB FREE DATA வழங்க தமிழக அரசுக்கு கமல் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் பெரும்பாலான தனியார் & அரசுப் பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே பாடம் நடத்தி வருகின்றனர்.

செல்போன் & லேப்டாப் வாங்கிட வசதியில்லாத மாணவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆன்லைன் வகுப்புகளில் கூட சில ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதால் சமீபத்தில் தமிழக அரசு விதிமுறைகள் விதித்து அறிக்கை வெளியிட்டது.

பள்ளி ஆன்லைன் வகுப்புகளில் கண்ணியமாக உடை அணிய வேண்டும். ஆன்லைன் வகுப்பு நிகழ்வை முழுமையாக பதிவு செய்து, ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டி அமைக்கப்படும்.

பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்கப்பட வேண்டும். இக்குழுவில், தலைமை ஆசிரியர், ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் தலா இருவர், ஆசிரியரல்லாத பணியாளர் ஒருவர் மற்றும் பள்ளி சாரா வெளிநபர் ஒருவரும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசன் ஆன்லைன் வகுப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில்…

“வகுப்புகள் இணைய வழியிலே நடக்கும் சூழல் இருப்பதால், 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் செயல்படுத்த வேண்டும் எனும் மாணவர்களின் கோரிக்கை நியாயமானது. கல்வி நிலையங்கள் திறக்கும் வரை தமிழக அரசு இலவச டேட்டா வழங்க வேண்டும்.

2 GB free data scheme should be implemented says Kamal Haasan

More Articles
Follows