வெங்கட் பிரபு தரும் *பார்ட்டி*யில் எல்லோரும் கலந்துக்கலாம்; என்ஜாய் பண்ணலாம் !

வெங்கட் பிரபு தரும் *பார்ட்டி*யில் எல்லோரும் கலந்துக்கலாம்; என்ஜாய் பண்ணலாம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DuD5i1fVYAANKgFநிச்சயமாக, வெங்கட் பிரபுவின் ஒவ்வொரு படமும், அது எந்த வகை படமாக இருந்தாலும் சரி, அது ஒரு பார்ட்டி உணர்வை வழங்கும். தற்போது அவருடைய படத்தின் பெயரே ‘பார்ட்டி’ என்பதால் அது மிகப்பெரிய பொழுதுபோக்கை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. வழக்கமாக குழந்தைகளை யாரும் ‘பார்ட்டி’க்கு அழைக்க மாட்டார்கள். ஆனால் வெங்கட் பிரபு அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார். ஆம், வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்த்து மகிழும் ஒரு அழகான பொழுதுபோக்கு விழாவாக இருக்கும்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ளும் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா கூறும்போது, “வெங்கட் பிரபு பெரியவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்று நினைத்து மிகைப்படுத்தி எந்த படத்தையும் எடுத்ததில்லை. அவரது முந்தைய திரைப்படங்களை பார்த்தாலே மிகவும் தெளிவாக தெரியும், அவரின் இலக்கு எப்போதும் அனைத்து தரப்பு மக்களுக்குமான படத்தை தருவது தான். நிச்சயமாக, பார்ட்டி படத்தின் கதை நடக்கும் பின்னணியால் படம் கிளாமர் விஷயங்களை கொண்டிருக்கும். சிபிஎஃப்சி உறுப்பினர்கள் எங்கள் படத்தின் முதல் பார்வையாளர்களாக இருந்து படத்தை சரியாக மதிப்பிட்டிருப்பது எங்கள் குழுவுக்கே மகிழ்ச்சியளிக்கிறது.

படத்தின் கதையை பற்றி தயாரிப்பாளர் டி சிவா கூறும்போது, “கதையை பற்றிய எதையும் இப்போது வெளிப்படையாக கூறமுடியாது. ஆனால், ஒரு புத்தாண்டு கொண்டாத்தின் போது கதை நடக்கிறது. அதில் நிறைய கதாபாத்திரங்கள், ட்ராமா, ஆக்‌ஷன், காமெடி மற்றும் வெங்கட் பிரபுவின் பேக்கேஜ் நிச்சயமாக இருக்கும்” என்றார்.

பார்ட்டி படத்தில் சத்யராஜ், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், ஜெய், ஷாம், சிவா, சந்திரன், சம்பத் ராஜ், ரெஜினா கஸாண்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரேம்ஜி அமரனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஒரு முழுமையான பார்ட்டி உணர்வை உருவாக்கியுள்ளது. ஃபிஜி தீவுகளை ராஜேஷ் யாதவ் தனது ஒளிப்பதிவால் மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். பிரவீன் KLன் சிறப்பான எடிட்டிங் படத்தை சரியான வேகத்தில் கொண்டு செல்லும்.

200 பேர் உழைப்பில் 2 கோடி செலவில் உருவாகும் எமலோகம்

200 பேர் உழைப்பில் 2 கோடி செலவில் உருவாகும் எமலோகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yogi babu in dharma prabhuஎமலோகத்தைப் பற்றிய நகைச்சுவை கலந்த படம். தற்போது, இப்படத்திற்காக AVM ஸ்டூடியோவில் ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு தளம் போடப்பட்டுள்ளது.
சுமார் 1 ½ லட்சம் வருடங்கள் பழமையான எமலோகம் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், சொர்க்கம் மற்றும் நரகம் என்று தனித்தனியாக படப்பிடிப்பு தளம் அமைக்கப்படவுள்ளது.

மேலும், இந்த தளம் அமைப்பதற்கு கலை இயக்குநர் பாலசந்தர் தலைமையில் ஏறக்குறைய 200 பேர் கொண்ட குழு கடந்த ஒரு மாதமாக இரவு பகல் பாராமால் உழைத்து வருகிறார்கள்.

வருகிற டிசம்பர் 14ம் தேதி இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், மகன் எமனாக யோகிபாபு நடிக்க, அவருக்கு அப்பா எமனாக ராதாரவி நடிக்கிறார். சித்ரகுப்தனாக ரமேஷ் திலக் நடிக்கிறார். இவர்களுடன் அழகம் பெருமாள், ‘போஸ்’ வெங்கட், சோனியா போஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் ஒரு பாடலுக்கு மேக்னா நாயுடு நடனமாடுகிறார். அதற்காக பிரம்மாண்ட தளம் அமைக்கப்படுகிறது. மேலும், அவருக்கென்று பிரத்யேகமான உடைகளும், ஆபரணங்களும் தயாராகி வருகிறது.

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, படத்தொகுப்பு – சான் லோகேஷ், கலை இயக்குநர் – பாலசந்தர், பாடல்கள் – யுகபாரதி, இசை – ஜஸ்டின் பிரபாகரன், தயாரிப்பு – P. ரங்கநாதன், தயாரிப்பு மேற்பார்வை – ராஜா செந்தில். இயக்கம் – முத்துகுமரன்.

ஹன்சிகாவுக்கு 50. ஜிப்ரானுக்கு 25. இருவரும் இணையும் மஹா

ஹன்சிகாவுக்கு 50. ஜிப்ரானுக்கு 25. இருவரும் இணையும் மஹா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ghibranவிக்ரம் பிரபுவுடன் ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ள `துப்பாக்கி முனை’ படம் வருகிற டிசம்பர் 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இதனையடுத்து `மஹா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

யு.ஆர்.ஜமீல் என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

அந்த போஸ்டரில் சாமியார் தோற்றத்தில் தம் அடிப்பது போல ஹன்சிகா போட்டோ இடம் பெற்றுள்ளது.

மற்றொரு போஸ்டரில் ஹன்சிகா கையில் பல்வேறு முகமூடிகளை வைத்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைப்பது குறித்து ஜிப்ரான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

இது நான் இசையமைக்கும் 25-வது படம் என்றும், ஹன்சிகாவுக்கு 50-வது படம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2 வாரத்தில் 20 படங்கள் ரிலீஸ்..: தாங்குமா தமிழ் சினிமா..?

2 வாரத்தில் 20 படங்கள் ரிலீஸ்..: தாங்குமா தமிழ் சினிமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mari 2 seethakathiதமிழ் சினிமா படங்களின் ரிலீஸ் தேதியை முறைப்படுத்த விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் ஒரு கமிட்டி அமைத்து அவர்கள் சொல்லும் தேதிகளில் படத்தை வெளியிட சொல்கின்றனர்.

ஆனால் இடையில் ஏற்பட்ட (தனுஷ், விஜய்சேதுபதி படங்கள்) சில பிரச்சினைகளால், வருகிற கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் தினத்தில் எத்தனை படங்களை வேண்டுமானாலும் ரிலீஸ் செய்துக் கொள்ளுங்கள் என கூறி சங்கம் விலகி விட்டது.

இதனால் அதிக எண்ணிக்கையில் படங்கள் திரைக்கு வருகின்றன.

வருகிற 14-ந் தேதி பிரசாந்தின் ஜானி, விக்ரம் பிரபு நடித்த துப்பாக்கி முனை, நுங்கம்பாக்கம், தேவகோட்டை காதல், பயங்கரமான ஆளு, துலாம், பிரபு, திரு, மோகன்லால் நடித்துள்ள மலையாள படம் ஒடியன், சமுத்திர புத்திரன், ஸ்பைடர்மேன் புதிய பிரபஞ்சம் ஆகிய 11 படங்களை திரைக்கு கொண்டு வரவுள்ளது.

இதனையடுத்து அடுத்த வாரம் 20-ந் தேதி விஜய்சேதுபதியின் சீதக்காதி, 21-ந் தேதி ஜெயம் ரவியின் அடங்க மறு, தனுஷின் மாரி-2, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா, சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜீரோ, விஷால் வெளியிடும் கேஜிஎப், அந்தரிக்‌ஷம், படி படி லெச்சே மனசு ஆகிய 9 படங்கள் திரைக்கு வருகின்றன.

ஆக மொத்தம் 10 நாட்கள் இடைவெளியில் கிட்டதட்ட 20 படங்கள் திரைக்கு வருகிறது.

இதனால் தியேட்டர்கள் பிடிப்பதில் இந்த படங்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இவர்கள் இத்தனை படங்களை ரிலீஸ் செய்தால் எல்லா படத்தையும் ரசிகர்கள் எப்படி பார்ப்பார்கள்? என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்தான்.

ஐஸ்வர்யா தத்தாவின் ஆசையை நிறைவேற்றுவாரா சிம்பு..?

ஐஸ்வர்யா தத்தாவின் ஆசையை நிறைவேற்றுவாரா சிம்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and aishwarya duttaபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக ரசிகர்களிடையே பேவரைட் ஆனவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

இவரது அண்மை பேட்டியில் சிம்புவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

அவர் கூறியதாவது…

என்னுடைய ஆல் டைம் பேவரைட் எப்பவும் சிம்புதான். சினிமா வர்றதுக்கு முன்னாடியே எனக்கு சிம்புவைப் பிடிக்கும்.

ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு ஆசையிருக்கு.

இது வரைக்கும் அவர்கிட்ட இதைச் சொன்னது இல்லை.

பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கவும் ஆசையிருக்கு. அது சீக்கிரமே நிறைவேறும்’ என கூறினார்.

அதிக கட்டணத்திற்கு எதிராக நடிகர்கள் குரல் கொடுக்க வேண்டும்.. மன்சூர் அலிகான்

அதிக கட்டணத்திற்கு எதிராக நடிகர்கள் குரல் கொடுக்க வேண்டும்.. மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mansoor ali khanலெனா (நடிகை)

ஹாசிம் எனக்கு கொடுத்த கதாபாத்திரம் மிகவும் சவாலாக இருந்தது. நான்கு வித்தியாசமான பாத்திரமாக இருக்கும். அதிலும் புகைபிடிக்கும் காட்சிகள் கடினமாக இருந்தது. இருப்பினும், என்னுடைய கதாபாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

நான் தற்போது விக்ரமுடன் ‘கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கி றேன்.

மபுள் சல்மான் (மற்றொரு கதாநாயகன்)

தமிழ் கொஞ்சம் தான் தெரியும். மலையாளத்தில் 15 படங்கள் நடித்திருக்கிறேன். தமிழ் படங்கள் நிறைய பார்ப்பேன். எனக்கும் என் பெரியப்பா மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான் மாதிரி தமிழ் படத்தில் நடிக்க ஆவலாக இருந்தேன். அப்போது தான் ஆசிப் இந்த வாய்ப்பை கொடுத்தார். தமிழில் முதல் படம். எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

சந்திரிகா (கதாநாயகி)

இது எனக்கு மூன்றாவது படம். ஆனால் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். இருட்டு அறையில் முரட்டு குத்து மாதிரியான கதாபாத்திரம் அல்ல.

காயத்ரி (நடிகை)

நல்ல கதாபாத்திரத்தில் நடித்ததற்கு மகிழ்ச்சி. ரியாஸ்கானும், மபுலும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். ஸ்ரீகாந்துடன் நடிக்க வாய்ப்பு அமையவில்லை.

மிதுன்

இந்த வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருக்கிறது.

ஹாசிம் மரிக்கர் (இயக்குநர்)

அபிராமி ராமநாதன் அவர்களின் பேட்டியை பார்த்தேன். ஒரு படம் நன்றாக ஓடுவதற்கு கதை தான் தேவை என்று சொன்னார். இப்படத்தில் அது இருக்கும். இப்படத்தின் பெயர் தான் காதல் சம்பந்தப்படுத்தி இருக்கும். ஆனால் படத்தில் காதல் பற்றி ஒன்றும் இருக்காது. உச்சபட்ச த்ரில்லர் படமாக இருக்கும். இந்த படத்தில் ஒரே ஒரு கதாநாயகன் தான். அது ரியாஸ்கான் மட்டும் தான். அவரை தவிர மற்ற அனைவரும் வில்லன்கள் தான்.

இப்படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது. படம் பார்ப்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். புதுமையான முயற்சிகளை கையாண்டிருக்கிறோம்.

எல்லோரும் கேட்கலாம் ஏன் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தீர்கள் என்று. ஏனென்றால், தமிழ் படங்களை நான் மிகவும் நேசிக்கிறேன். இந்த மேடையிலேயே எனது அடுத்த படத்தின் பெயரையும் அறிவிக்க இருக்கிறேன்.

நடிகர் ரியாஸ்கான்

நாம் எல்லோரும் ஒவ்வொரு படம் நடிக்கும் போதும் இந்த படத்தில் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரம் என்று சொல்வது இயற்கை தான். அதேபோல் தான் நானும் இதுவரை 300 படங்கள் நடித்திருக்கிறேன். அதில் 150 படங்கள் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறேன். ஆனாலும், இந்த படத்தில் உண்மையாகவே வித்தியாசமான கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறேன். என் மேல் நம்பிக்கை வைத்து இக்கதாபாத்திரத்தைக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி.

சினிமாவிற்கென்று ஒரு விதிமுறை எப்போதும் உண்டு. ஒருவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால், அடுத்த படத்திலும் அதே கதாபாத்திரம் தான் கொடுப்பார்கள். ஆனால், நாம் தான் விடாமுயற்சியால் மாற்றியமைக்க வேண்டும். அப்போது தான் நம்முடைய முழு திறமையும் வெளிவரும்.

ஆகையால், இப்படமும் சரி, என்னுடைய கதாபாத்திரமும் சரி நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.

என்னைப் போலவே இப்படத்தில் நடித்த ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான கதாபாத்திரமும், வித்தியாசமான அனுபவமும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். லெனாவிற்கு வாழ்த்துக்கள்.

ஸ்ரீகாந்த் (கதாநாயகன்)

இந்த படத்தில் இறுதியாக தான் வந்து சேர்ந்தேன். ஹாசிம் எனக்கு நல்ல நண்பர். என்னிடம் கதை கூறியதுமே நீங்கள் என்ன கூறினீர்களோ படத்திலும் அப்படியே வந்தால் நன்றாக இருக்கும் என்றேன். மிகப்பெரிய தயாரிப்பாளர் குடும்பத்தில் இருந்து வந்தவர். பெரிய படங்களை கொடுத்த நிறுவனம். இவரும் தயாரிப்பில் தான் ஈடுபடுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இயக்குநராக வந்துவிட்டார். மலையாளத்தில் தான் இப்படத்தை எடுப்பார் என்று நினைத்தேன். ஆனால் தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் இயக்கியிருக்கிறார். நல்ல உழைப்பைக் கொடுத்திருக்கிறார். இப்படம் சைகாலாஜிக்கல் திரில்லர் படம். திரைக்கதையில் நிறைய சவால்கள் இருக்கிறது. அதை திறமையாக கையாண்டிருக்கிறார்.

ஆனால் நான் நடித்த பாடல் இப்படத்திற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாமல் இருக்கும். லெனா மிகச்சிறந்த நடிகை. பிற மொழிகளில் அவர் நடித்த படங்களை பார்த்திருக்கிறேன். தமிழில் அனேகனுக்கு பிறகு ஏன் நிறைய படங்கள் நடிக்கவில்லை என்ற எண்ணம் இருந்தது. சிறந்த நடிகரான விக்ரமுடன் இணைந்து நடிக்கப் போகிறார் என்பதை கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். தமிழில் இன்னும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும். எல்லோரிடமும் கற்றுக் கொள்ள ஏதோவொன்று இருக்கும். அதுபோல் லெனாவிடமும் நான் நிறைய கற்றுக் கொண்டேன்.

இப்படத்தில் எல்லோரிடமும் பணியாற்றியது மகிழ்ச்சி. மன்சூர் நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கிறார். அவருடைய முதல் ஆல்பம் ஆன்லைனில் பிரபலமானது. அவர் நல்ல பாடகரும் கூட. ரியாஸ் இன்னும் உடலை நன்றாக வைத்திருக்கிறார். இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மன்சூர் அஹமது (இசையமைப்பாளர்)

சினிமாவிற்கு மலையாளம், தமிழ், ஹிந்தியென்றோ மொழி ஒன்றும் பேதமில்லை. இப்படத்தின் கதையை புரிந்து கொண்டு அதற்கேற்ப இசை அமைத்திருக்கிறேன். இந்த வாய்ப்பு கொடுத்து ஹாசிம் மரிகருக்கு நன்றி.

மன்சூர் அலிகான் (சிறப்பு விருந்தினர்)

மலையாளத்தில் இருந்து தமிழ் திரையுலகத்திற்கு வந்து இரு மொழிகளிலும் தயாரித்து இயக்கியிருக்கிறார் ஹாசிம் மரிகர். மம்முட்டி குடும்பத்திலிருந்து அவரது மகனும் மற்றும் தம்பி மகனும் சினிமாவிற்கு வந்துவிட்டார்கள். அதுபோல் அனைத்துத் துறைகளில் இருப்பவர்களும் சினிமாவிற்கு வரவேண்டும். விவசாயம் செய்பவர்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மம்முட்டியுடன் நடிப்பது என் லட்சியம். தமிழில் அவருடன் மூன்று படங்கள் நடித்துவிட்டேன். அனைத்தும் நூறு நாட்கள் படம். மலையாளத்தில் அவருடன் நடிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பது மிகப் பெரிய ஏக்கமாக உள்ளது.

சினிமா என்பது மொழி, இலக்கியம், நாடு ஆகியவற்றைக் கடந்த ஒன்று. அந்த வகையில் கோடி கணக்கில் பணம் செலவழித்து ஒரு படம் எடுக்கிறார்கள். அதற்கு ‘கில்ட்’ல் இருப்பவர்கள் வரவேண்டும். ஒருவரும் வராமல் இருப்பது மனக் குறைவாக இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான பெரிய படம் சரியான வசூலில்லை. ஏனென்றால் மக்களின் பணம் சூறையாடப்படுகிறது. இருந்தும் மக்களுக்கு சினிமா மீது இருக்கும் மோகத்தால் படங்களை பார்க்கத் தொடர்ந்து வருகிறார்கள். இரண்டு வருடங்களாக தங்களிடம் இருக்கும் பணத்தைப் போட்டு படம் எடுக்கிறார்கள் என்றால் அதற்கு ஈடுசெய்யும் வகையில் வருமானம் வரவேண்டும். ஆனால் பெரிய படங்களுக்கு விடியற்காலை 4 மணி காட்சி, 5 மணி காட்சி என்று எதற்கு போடுகிறார்கள். அதிலும் ரூ.1000 முதல் ரூ.5000 வரை டிக்கெட் விற்கப்படுகிறது. அரசாங்கம் நிர்ணயித்த விலை என்ன?

எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் சரி, எத்தனை கோடி செலவழித்து எடுத்த படமாக இருந்தாலும் சரி ஒரு டிக்கெட்டின் விலை ரூ.60 முதல் ரூ.160 க்கும் மேல் யார் விற்கிறார்களோ, அவர்களை நேராக சென்று அடிப்பேன். என் ஏழை மக்களின் கோவணத்தை அவிழ்த்து டிக்கெட்டிற்கு பணம் வசூலிப்பவரை சும்மாவிட மாட்டேன்.

அதேபோல், ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்வதற்காக வசூலித்துக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தையும் எதிர்க்கிறேன். ரூ.10க்கு மேல் வசூலிக்கக்கூடாது. அரசியல் அரியாசனத்தில் அமர்ந்திருப்பவர்களின் தேவையைத் தீர்ப்பதல்ல சினிமா. சாமான்ய மக்களின் சட்டை பையில் இருக்கும் சிறிய தொகையில் சந்தோஷத்தைக் கொடுப்பதுதான் சினிமா.

இன்று டாஸ்மாக் இல்லாமல் அரசாங்கம் இல்லை. அந்த டாஸ்மாக்கில் ரூ.115க்கு விற்கப்படும் சரக்கை ரூ.200க்கு விற்றால் சும்மா விடுவார்களா? அதேபோல் டிக்கெட் விலையும் ரூ.160க்கு மேல் விற்கக்கூடாது. எந்தத் திரையரங்கமாக இருந்தாலும் சரி இதை மீறி வசூலித்தால் என்னிடம் கூறுங்கள், நான் அவர்களை தண்டிக்கிறேன். உச்சத்தில் இருக்கும் ரஜினி, கமல், விஜய், விஷால், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களும் இதற்கு கோரிக்கைவிடுக்க வேண்டும்.

ஏனென்றால், ஈழத்தமிழர்கள் 40 நாடுகளில் 20 லட்சம் பேர் வாழ்கிறார்கள். அவர்கள் எவ்வளவோக கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் படங்களைப் பார்ப்பதால் தான் இன்று பத்து கோடிக்கு மேல் வசூல் வருகிறது. ஆகையால், யாரெல்லாம் அதிக விலைக்கு விற்கிறார்களோ அவர்கள் என் மீது FIR போட்டாலும் பரவாயில்லை. அவர்களை அடிப்பேன் என்று சவால் விடுகிறேன், அடி உதவுவது போல் யாரும் உதவமாட்டார்கள்.

தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தி மக்களுக்கு சினிமா மீது போதையை உண்டாக்குகிறார்கள். மக்களும் எப்போது படம் வெளியாகும் என்று பணம் கையில் இல்லாமல் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

இன்றைக்கு இந்த நாடு முதல்வரை கொலை செய்துள்ளது. பிரதமரால் மார்வாடிக்கும் குஜராத்திக்கும் நாட்டை விற்று விட்டார். 2000 தென்னம்பிள்ளைகள் இழந்து நிற்கிறோம். என் மக்களுக்காக நான் எதையும் செய்வேன்.

இறுதியாக, ‘உன் காதல் இருந்தால்’ படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஹாசிம் மரிகரின் அடுத்த படத்தின் பெயர் (4K) ‘கனவில் கண்ட காதல் கவிதை’ வெளியிடப்பட்டது.

More Articles
Follows