பிரபு சாலமன் இயக்கும் *கும்கி 2* படத்தில் நிவேதா பெத்துராஜ்..?

பிரபு சாலமன் இயக்கும் *கும்கி 2* படத்தில் நிவேதா பெத்துராஜ்..?

nivetha pethurajகும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாவது பாகத்தையும் இயக்கி வருகிறார் பிரபு சாலமன்.

தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். வில்லனாக ஹரிஷ் பேராடியும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்.ஜே.பாலாஜி, சூசன், கோலங்கள் திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கிறார்கள்.

டைட்டில் கதாப்பாத்திரமாக உன்னிகிருஷ்ணன் என்ற யானை நடிக்கிறது.

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்தை பென் இந்தியா லிமிடெட் சார்பில் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் பிரபுசாலமன் கூறியதாவது..

படப்பிடிப்பு தற்போது மைசூர் அருகே உள்ள சிவ சமுத்திரம் அருவியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த இதயக்கனி படப்பிடிப்பிற்கு பிறகு கும்கி 2 படப்பிடிப்பு தான் அங்கு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்காக இரண்டு விஷயங்களில் சிரமப்பட்டோம். ஒன்று யானை.. அது கிடைத்து விட்டது.

மற்றொன்று படத்தின் நாயகி. இன்னும் கிடைக்கவில்லை. தேடிக்கொண்டிருக்கிறோம்.

நாயகி இல்லாத காட்சிகளை மட்டுமே தற்போது படமாக்கி வருகிறோம் என்றார் பிரபுசாலமன்.

இந்த படத்தில் நடிக்க நிவேதா பெத்துராஜுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

என் ரசிகர்கள் புத்திசாலிகள்; அவர்களை ஏமாத்த முடியாது… : கமல்

என் ரசிகர்கள் புத்திசாலிகள்; அவர்களை ஏமாத்த முடியாது… : கமல்

kamal haasanகமல்ஹாசன் தன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்து நடித்துள்ள படம் விஸ்வரூபம் 2.

இப்படத்தை ஆஸ்கர் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

இது தொடர்பான புரோமோசன் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார் கமல்ஹாசன்.

அப்போது அவர் அளித்து பேட்டியில் கூறியதாவது…

’சில வருடங்களுக்கு முன் நேபாள நடிகர்களை நடிக்க வைத்து விட்டு சீனர்கள் என சொன்னால் நம்பிவிடுவார்கள் ஆனால் இப்போது அப்படி இல்லை.

தஜிகிஸ்தானில் சூட்டிங் நடத்தியபோது ஒரு பிளாக் ஹாக் வகை ஹெலிகாப்டர்கள் தேவைப்பட்டது. எனவே ஒரிஜினலாக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தினோம்.

வேறு வகையான ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தினால் என் புத்திசாலியான ரசிகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.” என்றார்.

மேலும் நாட்டை விட்டு ஓட தயாரானவன் இன்று நாட்டை காப்பாற்ற போகிறானா என சிலர் கிண்டல் செய்கிறார்கள்.

ஆனால் நான் நாட்டை விட்டுப் போகிறேன் எனச் சொன்னது என்னுடைய பணியை செய்ய விடாமல் தடுத்ததற்காகத் தான. மற்றபடி நான் பயந்து போய் அப்படி சொல்லவில்லை’ எனவும் கூறினார் கமல்.

பைக் ரேஸர் ஜிவி. பிரகாஷ்; போலீஸ் சித்தார்த்.. சசி போட்ட திட்டம்

பைக் ரேஸர் ஜிவி. பிரகாஷ்; போலீஸ் சித்தார்த்.. சசி போட்ட திட்டம்

siddharth and gv prakashபிச்சைக்காரன் படத்தை தொடர்ந்து சசி இயக்கவுள்ள படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், சித்தார்த் என இரண்டு நாயகர்கள் நடிக்கவுள்ளனர்.

இருவரும் இந்த படத்தில் உறவுக்காரர்களாக நடிக்கிறார்களாம். அதாவது மாமன் மச்சான்னாக நடிக்கிறார்களாம்.

அதில் ஜி.வி.பிரகாஷ் பைக் ரேஸராகவும், டிராபின் போலீஸாக சித்தார்த்தும் நடிக்கிறார்களாம்.

இது குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ஒரு பக்காவான பேமிலி டிராமாவாக எடுக்க திட்டமிட்டுள்ளாராம் சசி.

பொதுவாகவே சசியின் படங்கள் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பதில் நமக்கு சந்தேகமில்லை.

மம்முட்டி படத்தில் ஆர்.கே.சுரேஷுக்கு இப்படியொரு கேரக்டர்..?

மம்முட்டி படத்தில் ஆர்.கே.சுரேஷுக்கு இப்படியொரு கேரக்டர்..?

rk suresh and mammoottyதமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி தற்போது வில்லன், ஹீரோ என அசத்தி வருபவர் ஆர்.கே.சுரேஷ்.

தற்போது மலையாள சினிமாவிலும் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

குஞ்சாக்கோ போபன் நடித்த ‘சிகாரி சாம்பு’ என்கிற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார்.

அதில் இளைஞர் வயதான தாத்தா என இரண்டு வேடங்களில் நடித்து அசத்தினார்.

அதன் பின்னர் மஞ்சித் திவாகரன் என்பவர் இயக்கும் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ என்கிற படத்தில் நாயகர்களில் ஒருவராக போலீஸ் அதிகாரி வேடத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மம்முட்டி நடிக்கவுள்ள மதுர ராஜா படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஆர்.கே.சுரேஷ்.

இதில் மம்முட்டியின் வலது கையாக இவர் நடிக்கிறாராம்.

மீண்டும் இணையும் கலைப்புலி தாணு–தனுஷ்; டைரக்டர் யார்?

மீண்டும் இணையும் கலைப்புலி தாணு–தனுஷ்; டைரக்டர் யார்?

After VIP2 again Dhanush act in Kalaipuli Thanus productionதனுஷ் நடிப்பில் சௌந்தர்யா ரஜினி இயக்கிய படம் வேலையில்லா பட்டதாரி 2.

இதில் அமலாபால், சமுத்திரக்கனி, பாலிவுட் நடிகை கஜோல் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார்.

தற்போது மீண்டும் தனுஷ் நடிக்கவுள்ள ஒரு படத்தை தயாரிக்கவுள்ளராம்.

இப்படத்தை இயக்க போவது யார்? என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

After VIP2 again Dhanush act in Kalaipuli Thanus production

கதைக்குள் என்னை பிட் பண்ணிக்கிறேன்; கார்த்திக் நரேனிடம் அரவிந்த்சாமி வாக்குறுதி

கதைக்குள் என்னை பிட் பண்ணிக்கிறேன்; கார்த்திக் நரேனிடம் அரவிந்த்சாமி வாக்குறுதி

I will fit into my character says Arvindsamy to Karthick Narenதுருவங்கள் 16 என்ற மாபெரும் வெற்றிப் படத்தை அடுத்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் நரகாசூரன்.

இதில் அரவிந்த்சாமி, சந்தீப்கிஷன், இந்திரஜித், கிட்டி, ஸ்ரேயா, ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

சஸ்பென்ஸ் திரில்லர் நிறைந்த இப்படத்தை ஆகஸ்ட் 31-ந்தேதி வெளியிடுகின்றனர்.

இந்த படத்தின் டிலைர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது நாயகன் அரவிந்த்சாமி பேசுகையில்,

இந்த படத்தில் நடிப்பதற்கு கார்த்திக் நரேன் என்னை சந்தித்தார்.

நான் அப்போதே அவரிடம் எனக்காக கதையில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். உங்கள் கதைக்குள் நான் என்னை பிட் செய்துக் கொள்கிறேன் என சொல்லிவிட்டேன்.

ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் கதையை நன்றாக படமாக்கியுள்ளார். அவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பரிசு” என பேசினார்.

I will fit into my character says Arvindsamy to Karthick Naren

More Articles
Follows