கலாச்சாரத்தை சீரழிக்கும் ‘இரண்டாம் குத்து’ படத்திற்கு தமிழக அரசு தடை

கலாச்சாரத்தை சீரழிக்கும் ‘இரண்டாம் குத்து’ படத்திற்கு தமிழக அரசு தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

irandam kuthu posterசந்தோஷ் பி.ஜெயக்குமார் நடித்து அவரே இயக்கியுள்ள படம் இரண்டாம் குத்து. இந்த படம் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் ஆகியவை இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

எனவே தன் அறிக்கை மூலம் இயக்குனர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

கல்வியை போதிக்கின்ற இடத்தில் காமத்தை போதிக்கவா வந்தோம். இயக்குனர் வீட்டில் பெண்களே இல்லையா? அவர்கள் கேள்வி கேட்காவிட்டாலும் நான் கேள்வி கேட்பேன் என ஆவேசமாக பதிவிட்டு இருந்தார்.

ஆனால் இதை நக்கலடித்து.. 1981ல் டிக் டிக் டிக் என்ற படத்தில் நீங்கள் மாதவியை கவர்ச்சியாக காட்டலையா? அப்போ கண் கூசவில்லையா? என கேள்வி கேட்டிருந்தார்.

அதன்பின் அதற்கு மன்னிப்பும் கேட்டிருந்தார். இது தொடர்பான அனைத்து செய்திகளையும் நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் இரண்டாம் குத்து பட சர்ச்சை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அவர்கள்.. “‘இரண்டாம் குத்து’ படத்துக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

சென்சார் போர்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஆபாச காட்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தும்.

தமிழர்களின் பண்பாடு, கலச்சாரம் ஆகியவற்றை சீரழிக்கும் எந்தப் படங்களாக இருந்தாலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்கள் மக்களுக்கு நல்ல கருத்துக்களை கூறும் சாதனங்களாக இருக்க வேண்டும்.

கலாச்சாரத்தை சீரழிக்கும் எந்தப் படம் வந்தாலும், யாருடைய படமாக இருந்தாலும் அதனைத் தடுக்கும் வகையில் அரசு முழு கவனத்துடன் சென்சார் போர்டு மூலமாக தடைவிதிக்க தமிழக அரசு ஆவணம் செய்யும்”

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.

TN government will take steps to end obscenity in films – Kadambur Raju

தேசிய விருது பெற்ற நடிகர் கிங்காங்கிடம் மன்னிப்பு கேட்ட ரஜினி

தேசிய விருது பெற்ற நடிகர் கிங்காங்கிடம் மன்னிப்பு கேட்ட ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் கிங்காங்.

இவர ரஜினிகாந்த், ஷோபனா நடித்த சிவா படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் கிங்காங் போடும் குட்டி டான்ஸ் பலரையும் கவர்ந்திருந்தது.

இவர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

மேலும் வடிவேலுடன் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். அந்த காம்போவில் நடித்த காமெடி காட்சிகள் ஹிட் அடித்துள்ளன.

இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருது பெற்றது குறித்து நேற்று முன் தினம் யூட்யூப் வீடியோ ஒன்றில் பேட்டியளித்திருந்தார்.

கடந்த 2009ல் தான் விருது பெற்றதற்காக நடிகர் ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற வேண்டும் என முயற்சி செய்தேன். ஆனால் தற்பொழுது வரை அவரிடம் வாழ்த்து பெற முடியவில்லை என பதிவு செய்திருந்தார்.

ரஜினி ரசிகர்கள் இந்த செய்தியை அதிகமாக பகிரவே இது ரஜினிகாந்துக்கு தெரிய வந்துள்ளது.

சுமார் 10 ஆண்டுகள் கழித்து இன்று நடிகர் ரஜினிகாந்த் கிங்காங்கை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசி வாழ்த்தியுள்ளார்.

பத்தாண்டுகளுக்கு முன்பு உங்களைச் சந்தித்திருப்பேன்; ஆனால் இந்தத் தகவல் எனக்கு தெரியவில்லை மன்னித்துவிடுங்கள் என தெரிவித்துள்ளார்.

நீங்கள் விருது பெற்றதற்கு வாழ்த்துகள். நிச்சயமாக ஒரு நாள் நாம் சந்திக்கலாம். உங்களை அழைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

நடிகர் கிங் காங்கிற்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

actor kingkong rajini (1)

Actor Rajinikanth fulfills the wish of comedian king kong

ஸ்வேதா குரலில் ரெண்டு பாட்டு..; கணேஷ்குமார் எழுதிய பாடல்கள் வெளியீடு

ஸ்வேதா குரலில் ரெண்டு பாட்டு..; கணேஷ்குமார் எழுதிய பாடல்கள் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lyricist ganesh kumarநாகை மாவட்டம் கீழையூரில் கோயில் கொண்டிருக்கிற காத்தாயி அம்மனைப் போற்றும் விதத்தில் பத்திரிகையாளரும் கவிஞருமான சு. கணேஷ்குமார் எழுதிய இரண்டு பாடல்கள், பிரபல கர்நாடக இசைமேதை திரு. நெய்வேலி சந்தானகோபாலன் அவர்களிடம் சங்கீதம் கற்றுத் தேர்ந்த திருமிகு. ஸ்வேதா பாலசுப்ரமணியன் அவர்களால் இசையமைத்துப் பாடப்பட்டு வெளியாகியிருக்கிறது.

‘சாந்த சொரூபி காத்தாயி’ என்று தொடங்கும் பாடல், கர்நாடக இசை மேடைகளில் கீர்த்தனைகள் பாடப்படுவது போன்று, இனிமையான இசைக் கோர்ப்பில் உருக்கும் குரலில் பாடப்பட்டுள்ளது.

பாடலை கேட்கும் போது உள்ளுக்குள் ஒருவித சிலிர்ப்பு ஏற்படுவதை உணரலாம்.

‘எங்கும் எப்போதும் காத்தாயி காத்திருப்பாள்’ என்று தொடங்கும் பாடல், பம்பை – உடுக்கை வாத்தியங்கள் இதமாய் முழங்க கிராமிய இசைமணத்தோடு பாடப்பட்டுள்ளது.

‘சாந்த சொரூபி காத்தாயி’ என்ற பாடலைக் கேட்டுவிட்டு, இந்த பாடலைக் கேட்கும்போது இரண்டையும் ஒருவரே பாடினார் என்று சொன்னால் நம்ப முடியாது. அந்தளவுக்கு பாடகி ஸ்வேதா குரலில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

நெய்வேலி சந்தான கோபாலனின் சிஷ்யையான ஸ்வேதா, கர்நாடக இசை மேடைகளில் பாடிவருகிறார். கெளரவமிக்க விருதுகளைப் பெற்று வருகிறார்.

பாடல்களை https://youtu.be/dOWLahpwuFw இந்த இணைப்பின் மூலம் யூ டியூபில் கேட்கலாம்.

Lyricist Ganesh Kumar tribute to Lord Kathayi Amman

ஏன் இப்படி படம் எடுத்தீங்க என கேள்வி கேட்கும் அருகதை இல்லை.. இனிமே அப்படி நடிக்கல.. – சாம்ஸ்

ஏன் இப்படி படம் எடுத்தீங்க என கேள்வி கேட்கும் அருகதை இல்லை.. இனிமே அப்படி நடிக்கல.. – சாம்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விரைவில் வெளியாகவுள்ள “இரண்டாம் குத்து” என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் சாம்ஸ். அவரின் பதிவு இதோ…

இந்த படம் சம்பந்தமாக என்னை தெளிவுபடுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு என்னுடைய சில சந்தேகங்கள் குழப்பங்களை வெளிப்படுத்தி இருந்தேன்… (இந்த செய்தியை நம் தளத்தில் பதிவிட்டு இருந்தோம். பார்த்தீர்களா..?)

அந்தப் பதிவிற்கு ஆதரவு எதிர்ப்பு என இரண்டும் இருந்தது. பலரும் சொன்ன கருத்துக்கள் என் நல விரும்பிகள் சொன்ன அட்வைஸ்களை வைத்து தற்போது என் கருத்தை என் முடிவை சொல்லவே இந்த பதிவு.

என் கருத்து

———————–

இதுபோன்ற அடல்ஸ் ஒன்லி சமாச்சாரங்கள் பாலிவுட் படங்களில் ஹாலிவுட் படங்களில் டிவிகளில் செல்களில் கம்ப்யூட்டர்களில் OTT தளங்களில் என தாராளமாக வந்து கொண்டிருக்கின்ற நிலையில் அதே போன்று ஒரு விஷயத்தை படமெடுத்து சென்சாரின் அனுமதியோடு வெளியிடுகிறேன். மற்றதையெல்லாம் பார்த்து அனுமதித்த, சிலநேரம் கண்டும் காணாமல் போகிற நீங்கள் என் படத்திற்கு மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்பு காட்டுகிறீர்கள் என்று இந்த படத்தை இயக்கி இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் கேட்டிருந்தார்.

அவன் செஞ்சா நீ செய்வீயா ? என்று மற்றவர்கள் போல் கேட்டுவிட்டு என்னால் போக முடியவில்லை… அவர் கைகாட்டும் காரணங்களும் திருந்த வேண்டும் என்று தான் நினைக்கிறேன்.

ஆனால் அதையெல்லாம் சரி செய்யும் பொருட்டு இதுவரை அதற்காக எந்த முயற்சியும் எடுத்ததில்லை. குரலும் கொடுத்ததில்லை. குறைந்தபட்ச ஒரு எதிர்ப்பு பதிவு கூட நான் போட்டதில்லை. மற்றவர்கள் செய்த தவறை இயக்குனர் சொல்வது போல் கண்டும் காணாமல் தான் போயிருக்கிறேன். அதை தாண்டி இவர் படத்தில் நடித்து வேறு இருக்கிறேன். அப்படி இருக்கையில் இவரை ஏன் இப்படி ஒரு படம் எடுத்தீர்கள் ? என்று கேள்வி கேட்கும் தகுதி அருகதை நேர்மை எனக்கில்லை என்றே நினைக்கிறேன்.

என் முடிவு

——————–

இதுவரை நான் நடித்த படங்களில் கண்ணியமாகவே நடித்திருக்கிறேன் . அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய ஒரு நடிகனாகவே இதுவரை இருக்கிறேன்.

இந்த மாதிரியான ஜானர் படங்கள் இப்பொழுது சகஜமாக தான் வருகிறதே அந்த வயது இளைஞர்களுக்கு தெரிந்த ஒரு விஷயத்தை ஜாலியாக காமெடியா செய்யப்போகிறோம்..

‘A’ படம் என்று சென்சார் சர்டிபிகேட்டோடு வரப் போகிறது இதில் என்ன இருக்கிறது? நடித்தால் என்ன ? என்று தான் இந்த படத்தில் நடித்தேன்.

ஆனால் இந்தப் படத்திற்கு இருக்கின்ற எதிர்ப்பை மனதில் கொண்டும் என் கண்ணியத்தை காப்பாற்றும் பொருட்டும், இதுபோன்ற படங்களுக்கு ஆதரவு இருக்கிறது என்றாலும் இனி “இரண்டாம் குத்து” போன்ற நேரடி அடல்ஸ் ஒன்லி படங்களில் நடிப்பதை தவிர்ப்பது என்று முடிவு எடுத்திருக்கிறேன்.

முதலில் என்னை மாற்றிக் கொள்கிறேன்…

தனிமனித ஒழுக்கமே சிறந்தது என்பது என் கருத்து .

அன்புடன்

சாம்ஸ்

I wont act in adult only films says comedy actor chaams

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி தொடர் தோல்வி..; தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல்..; திருந்தவே மாட்டீங்களா?

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி தொடர் தோல்வி..; தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல்..; திருந்தவே மாட்டீங்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ziva Dhoniஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த தொடர் தொடங்கியது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரியாக விளையாடவில்லை.

அதாவது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது.

நடைபெற்ற பல ஆட்டங்களில் மோசமான தோல்விகளை பெற்றது.

கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் மீண்டும் தோல்வியைத் தழுவியது.

தோனியும் இப்போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் சிலர், தோனி சரியாக விளையாடவில்லை என்றால் அவரின் சிறு வயது மகள் ஷிவா தோனியை பாலியல் கொடுமை செய்துவோம் என அசிங்கமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

டேய் நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா?

Sexual harassment threat for MS Dhoni’s daughter

‘டிக்டாக்’ பிரபலம் ஜி.பி முத்து தற்கொலை முயற்சி..; என்ன பிரச்சனையாம்.?

‘டிக்டாக்’ பிரபலம் ஜி.பி முத்து தற்கொலை முயற்சி..; என்ன பிரச்சனையாம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GP Muthuடிக்டாக் செயலி மூலம் இந்தியாவில் பல பிரபலங்கள் உருவாகினர். அவர்களில் ஒருவர்தான் ஜி.பி முத்து.

டிக்டாக்க்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட போது மனம் உடைந்த அவர், பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.

தற்போது டிக்டாக் தடை காரணமாக இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அண்மையில் குடும்ப பிரச்சனை காரணமாக வீடியோக்களை பதிவிட முடியவில்லை என வருத்தத்துடன் வீடியோ வெளியிட்டார் ஜி.பி முத்து.

இந்த நிலையில் திடீரென அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதால் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தான் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் படத்தையும், பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜிபி. முத்து.

Tik Tok fame GP Muthu shocks by suicide attempt

More Articles
Follows