ரசிகரை நேரில் அழைத்த நிவேதா..; இப்படியொரு வெறித்தனமா? விட்டா கோயில் கட்டிடுவாரோ?

ரசிகரை நேரில் அழைத்த நிவேதா..; இப்படியொரு வெறித்தனமா? விட்டா கோயில் கட்டிடுவாரோ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவான அழகே அடியே.. அடியே அழகே.. என்ற பாடலை பாடாத தமிழர்களே இல்லை எனலாம்.

அந்த பாடல் ஒரு நாள் கூத்து என்ற படத்தில் இடம் பெற்றது. இதில் நாயகியாக நிவேதா பெத்துராஜ் அறிமுகமானார்.

இதன்பின்னர் டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் கவர்ந்தார்.

தற்போது தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

இவரின் தீவிர ரசிகர் பிரபு என்பவர் நிவேதா பெத்துராஜ் என்ற பெயரை தனை கையில் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.

இதனை கேள்விப்பட்ட நிவேதா அந்த ரசிகரை பாண்டிச்சேரிக்கு அழைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அவருடன் சிறிது நேரம் பேசி அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார் நிவேதா.

A die-hard fan of Nivetha Pethuraj has tattooed her name on his forearm

2020-11-30 (1)

2020-11-30

இந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ தயாரிப்பு நிறுவனம் நிகழ்த்தவுள்ள சாதனை

இந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ தயாரிப்பு நிறுவனம் நிகழ்த்தவுள்ள சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்கள் எடுக்கும் நிறுவனங்கள் மிகவும் குறைவே. அதிலும் அனைத்து மொழிகளிலும் வெளியிடுவது போன்ற படங்களைத் தயாரிப்பது அரிதினும் அரிதே.

‘கே.ஜி.எஃப் சேப்டர் 1′ (KGF : Chapter 1’) படத்தைத் தயாரித்து, அதை அனைத்து மொழிகளிலும் வெளியிட்டு பிரம்மாண்ட வெற்றி கண்ட நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films).
கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டார்களான புனித் ராஜ்குமார் (Puneeth Rajkumar) நடித்த ‘நின்னிந்தலே’ (Ninnindale), ‘ராஜ்குமாரா’ (Raajakumara) மற்றும் யஷ் (Yash) நடித்த ‘மாஸ்டர் பீஸ்’ (Masterpiece) உள்ளிட்ட படங்களைத் தயாரித்தது ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films).

இதில் கன்னட திரையுலகில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையைப் புரிந்தது ‘ராஜ்குமாரா’ (Raajakumara) திரைப்படம்.

இதனைத் தொடர்ந்து இந்திய அளவில் தன்னுடைய நிறுவனத்தை வளர்க்க முடிவு செய்தார் ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films) நிறுவனர் விஜய் கிரகண்தூர் ( Vijay Kiragandur )
இதற்காக ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films) தயாரித்த படம் தான் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1′ (KGF : Chapter : 1’ ) பிரஷான்த் நீலின் (Prashanth Neel) அட்டகாசமான இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் யஷ் (Yash) நடித்த ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1′ (KGF : Chapter 1’) வசூல் இந்தியத் திரையுலகில் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, கதை, வசனம் என அனைத்து பிரிவுகளிலும் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டது ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1′ (KGF : Chapter 1’)

இப்படம் வெளியான 4 நாட்களிலேயே அதிக வசூல் செய்த கன்னடப் படம் என்ற மாபெரும் சாதனையையும் நிகழ்த்தியது. இந்திய அளவில் பரிச்சயமான தயாரிப்பு நிறுவனமாகவும் வளர்ந்தது ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films)
தற்போது ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films) நிறுவனம் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது.

தொடர்ச்சியாக 3 படங்களின் தயாரிப்பில் பணிபுரிந்து வருகிறது.

கன்னடம் மற்றும் தெலுங்கில் புனித் ராஜ்குமார் ( Puneeth Rajkumar) நடித்து வரும் ‘யுவரத்னா’ (Yuvarathnaa), ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2′ ( KGF: Chapter 2’) மற்றும் இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குனரும் இணையும் படம் ஆகியவை தயாரிப்பில் உள்ளன.
இந்தியத் திரையுலகில் ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடர்ச்சியாக, அனைத்து மொழிகளிலும் தயாராகும் 3 படங்களைத் தயாரித்ததில்லை. அந்த சாதனையை இப்போது ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films) நிகழ்த்தியுள்ளது.

அனைத்து மொழிகளிலும் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1′ ( KGF : Chapter 1’) படத்தை வெளியிட்டு வெற்றி கண்டதைத் தொடர்ந்து, ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2′ ( KGF: Chapter 2’) படத்தையும் அனைத்து மொழிகளிலும் பிரம்மாண்டமாக வெளியிடத் தயாராகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குனரும் இணையும் படத்தை அனைத்து மொழிகளிலும் தயாரித்து வெளியிடவுள்ளது.

இது தொடர்பாக அதிகாரபூர்வமான அறிவிப்பு டிசம்பர் 2-ம் தேதி அன்று மதியம் 2 மணியளவில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு கண்டிப்பாக அனைவரையும் ஆச்சரியமூட்டும் என்பதில் சந்தேகமில்லை.

தொடர்ச்சியாக அனைத்து மொழி மக்களை ஆச்சரியமூட்டும் வித்தியாச கதைக்களங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வெளியிட ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films) நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Hombale films next film announcement on 2nd december

Hombale Films 7

BIG NEWS டிச.7-ல் கல்லூரி… கொரோனா ஊரடங்கு டிசம்பர் 31வரை நீடிப்பு.. தளர்வுகள் என்ன?

BIG NEWS டிச.7-ல் கல்லூரி… கொரோனா ஊரடங்கு டிசம்பர் 31வரை நீடிப்பு.. தளர்வுகள் என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

college reopenகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் பொது ஊரடங்கு அமலில் இருக்கிறது.

இதனையடுத்து ஒவ்வொரு மாதமும் மக்களின் வசதிக்காக சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

தற்போது நவம்பர் மாதம் இன்றோடு நிறைவு பெறவுள் நிலையில் டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகளையும் முதல்வர் பழனிசாமி
அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

30.11.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், 31.12.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது :

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் / பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 7.12.2020 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் (இளநிலை, முதுநிலை 7.12.2020 முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது.எனினும், 2020-2021 கல்வியாண்டில் சேரும் புதிய மாணாக்கர்களுக்கான வகுப்புகள் 1.2.2021 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும்,அவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நீச்சல் குளங்கள்,விளையாட்டுப் பயிற்சிக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 14.12.2020 முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும்.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, சுற்றுலாத் தலங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் 1.12.2020 முதல் 31.12.2020 வரை நடத்த அனுமதிக்கப்படுகிறது.

இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல் துறை ஆணையர் அவர்களிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம். வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, திறந்த வெளியில் கூட்டங்கள் நடத்த தளர்வுகள் அளிப்பது பற்றி உரிய முடிவு செய்யப்படும்.

வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களிலிருந்து தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு முறை, தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:-

மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.

தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.

எனவே, பொது மக்களின் நலன் கருதி, உங்கள் அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கொள்வதாக, முதலமைச்சர் பழனிசாமி தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

TN govt extends lockdown till Dec 31 with several relaxations

BREAKING எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பு – ரஜினி

BREAKING எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பு – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini statement about politics after his fans meetசென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார் ரஜினிகாந்த்.

அதன்பின்னர் அவர் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசியதாவது…

அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மாவட்ட நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். நான் எடுக்கும் எந்த முடிவுக்கு அவர்கள் கட்டுப்படுவதாக தெரிவித்தனர்.

அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரையில் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விரைவில் அறிவிப்பேன்” என ரஜினி பேசினார்.

ரஜினிகாந்தின் எந்த முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம் என மக்கள் மன்ற நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini statement about politics after his fans meet

BREAKING கட்சி தொடங்குவது எப்போது? யார் முதல்வர் வேட்பாளர்? ரஜினி மீட்டிங் அப்டேட்

BREAKING கட்சி தொடங்குவது எப்போது? யார் முதல்வர் வேட்பாளர்? ரஜினி மீட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Makkal Mandram meeting updates When he will launch Political partyவிரைவில் கட்சி தொடங்குவார் நடிகர் ரஜினிகாந்த் என அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில் இன்று சற்றுமுன் கட்சி தொடங்குவது குறித்து தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் நடிகர் ரஜினி.

இந்த சந்திப்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

போயஸ் கார்டன் முதல் ராகவேந்திரா மண்டபம் வரை ரஜினி ரசிகர்கள் ஆங்காங்கே நின்றுகொண்டு தலைவா வாழ்க.. வருங்கால முதல்வர் ரஜினி என கோஷம் போட்டனர்.

இந்த சந்திப்பின் போது நடந்தது என்ன? என்ற சில தகவல்கள் கிடைத்துள்ளன.

கட்சி தொடங்குவது எப்போது என்பதை தெரிவிக்கவில்லையாம். ஆனால் 2021 ஜனவரியில் கட்சி தொடங்க வாய்ப்புள்ளது என தெரிய வந்துள்ளது.

ஆனால் கட்சி தொடங்குவது குறித்து நான் முடிவெடுப்பேன். பொறுமையுடன் காத்திருங்கள் என்று ரஜினி சொன்னதாக தெரிகிறது.
மேலும் கட்சி தொடங்கினால் உருவாகும் சாதக பாதககங்கள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தாராம் ரஜினி.

மேலும் சில நிர்வாகிகளை எச்சரித்தும் அவர்களின் செயல்பாடுகளில் திருப்தியில்லை என ரஜினி பேசினாராம்.
பணம் சம்பாதிக்கும் வேண்டும் என்ற எண்ணத்தில் யாரும் கட்சியில் இருக்க வேண்டாம் என்று சொன்னதாக கூறப்படுகிறது.

கட்சி ஆரம்பித்தால் ரஜினிதான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என கலந்துக் கொண்ட நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ரஜினி தரப்பில் அதிகாரப்பூர்வமாக செய்தி எதுவும் வெளியாகவில்லை. எனவே இந்த தகவல்கள் எந்தளவு உறுதி என்பதை சொல்ல முடியாது.

இறுதியாக ஆலோசனை முடிந்தபின் மாடியில் நின்று சாலைகளில் நின்றிருந்த ரசிகர்களை பார்த்து கையசைத்தார் ரஜினிகாந்த்.

தன் போயஸ் கார்டன் இல்ல வாசலில் செய்தியாளர்களை ரஜினி சந்திப்பார் எனவும் கூறப்படுகிறது.

கட்சி ஆரம்பிப்பது எப்போது என்பது ரஜினிக்கு மட்டுமே வெளிச்சம். எனவே காத்திருப்போம் காவலர்களே…

Rajini Makkal Mandram meeting updates When he will launch Political party

தலைவர் & தளபதியின் சக்சஸ் சீக்ரெட் சொல்லும் மக்கள் செல்வன்

தலைவர் & தளபதியின் சக்சஸ் சீக்ரெட் சொல்லும் மக்கள் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay sethupathi rajini vijayமுன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் போதே தன் இமேஜ் பற்றி கவலைப்படாமல் வில்லனாக நடித்து வருபவர் விஜய்சேதுபதி.

ரஜினியின் ‘பேட்ட’ படத்திலும் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.

இருவருடன் நடித்த அனுபவம் பற்றி அவரது அண்மை பேட்டியில் கூறியுள்ளதாவது…

இருவரிடமும் எந்தவித பந்தா இல்லை. சூட்டிங்குக்கு வந்து விட்டால் கேரக்டர் தவிர, வேறு எதைப் பற்றியும் அவர்கள் சிந்திப்பதே இல்லை.

அவர்கள் வெற்றியின் ரகசியம் இதுதான்.

அவர்களுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆசை உள்ளது” என கூறியுள்ளார்.

Vijay Sethupathi talks about Rajini and Vijay

More Articles
Follows