சங்கத்தமிழன் பின் வாங்கினார்; தீபாவளிக்கு பிகில் & கைதி மோதல் !

சங்கத்தமிழன் பின் வாங்கினார்; தீபாவளிக்கு பிகில் & கைதி மோதல் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sanga thamizhanவிஜய் சந்தர் இயக்கும் சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதி இரு வேடங்களில் நடித்துள்ளார்.

இவருடன் ராசி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ், நாசர், சூரி, ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தீபாவளியன்று ரிலீசாகவிருந்த சங்கத் தமிழன் படத்தை தள்ளி வைப்பதாக லிப்ரா புரடெக்க்ஷன்ஸ் ரவீந்திரன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இப்படம் நவம்பர் 8 அல்லது 15ந் தேதி ரிலீசாக கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தீபாவளிக்கு விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹர்ஷிதா ஷெட்டியை மணக்கும் கிரிக்கெட் வீர்ர் மணிஷ் பாண்டே

ஹர்ஷிதா ஷெட்டியை மணக்கும் கிரிக்கெட் வீர்ர் மணிஷ் பாண்டே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ashrita shetyஇந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மணிஷ் பாண்டே.

பெங்களூரைச் சேர்ந்த இவர், இந்தியாவுக்காக 23 ஒரு நாள் போட்டிகளிலும் 31 டி-20 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.

இப்போது நடிகை ஹர்ஷிதா ஷெட்டியை மணக்க இருக்கிறாராம்.

தமிழில் ’உதயம் என்.ஹெச். 4’, ’ஒரு கன்னியும் மூணு களவானிகளும்’, ’இந்திரஜித்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் ஹர்ஷிதா.

இவர்கள் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். அதை இருவரும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் டிசம்பர் 2 ஆம் தேதி இவர்கள் திருமணம் மும்பையில் நடக்கிறது என்று கூறப்படுகிறது.

ஹீரோயிசம் கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா

ஹீரோயிசம் கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hansikaவிஜயசாந்தி , நயன்தாரா , டாப்சி போன்றோர் ஹீரோக்களை போன்று தனித்தன்மையுள்ள ஹீரோயிசம் கதையில் நடித்து பிரபலமானர்கள். மக்கள் மனதில் அதிகம் இடம்பிடித்து வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ளனர். இப்பொழுது ஹன்சிகாவும் அதேபோன்றதொரு கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படம் இது.
இப்படத்தை , யோகிபாபு நடித்து சமீபத்தில் வெற்றி பெற்ற ‘தர்மபிரபு’ படத்தை தயாரித்த ஸ்ரீவாரி பிலிம்ஸ் P.ரங்கநாதன் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.
ஹாரர் , காமெடி ,பேய்ப்படமாக அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இக்கதையை அமைத்துள்ளார்கள்.
இதில் இன்னொரு சிறப்பம்சமாக முக்கிய வேடத்தில் -நெகடிவ் கேரக்டரில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார்.
இப்படத்தை இரட்டையர்களான
ஹரி -ஹரிஷ் இயக்குகிறார்கள் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களான இவர்கள் ஏற்கனவே ‘அம்புலி’ , ‘ ‘ ‘அ ‘ (AAAH ), ‘ஜம்புலிங்கம்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார்கள் .
டிசம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்கும் இப்படத்தை 2020 கோடை விடுமுறை நாட்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் .

ரசிகனுக்கு கைகொடுத்த பின் டெட்டாலில் கை கழுவும் விஜய்.. – சாமி (Video)

ரசிகனுக்கு கைகொடுத்த பின் டெட்டாலில் கை கழுவும் விஜய்.. – சாமி (Video)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Saamy slams Vijays acting in real life with his fansசிந்து சமவெளி, மிருகம், உயிர் உள்ளிட்ட சர்ச்சையான படங்களை இயக்கியவர் சாமி.

இவர் நடிகர் விஜய் மீது பகிரங்க குற்றச்சாட்டை கூறி ஒரு வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

அதில்….

முன்னாள் இளைய தளபதியே என்னை நியாபகம் இருக்கா.? 2000 ஆம் ஆண்டில் உங்களிடம் ஒரு கதை சொன்ன வந்தேன்.

நீங்கள் மேடையில் பேசுவது சரியல்லை. படத்தை பற்றி பேசுங்கள். உங்களின் சாயம் விரைவில் வெளுத்து போகும்.

நீங்கள் ரசிகனிடம் கை குலுக்கி பேசிவிட்டு டெட்டால் போட்டு கை கழுவியிருக்கிறீர்கள். அதை நானே பார்த்து இருக்கிறேன். இதான் உங்கள் நிஜமான நடிப்பு.

சினிமாவை விட நிஜத்தில் நீங்கள் சிறந்த நடிகர்.

60 நாட்கள் சூட்டிங் போறீங்க. ரூ. 50 கோடி சம்பளம் வாங்குறீங்க. அதுவும் கறுப்பு பணம். ஆனால் மேடையில் பொய்யாக கருத்து பேசுகிறீர்கள். எத்தனை நாட்கள் தமிழகத்தை ஏமாத்துவீங்க.

உங்களை விட பெரிய பெரிய ஆட்கள் சினிமாவில் அரசியலில் இருக்கிறார்கள். எனவே சினிமாவில் மட்டும் நடிங்க. என அதிரடியான குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார்.

Director Saamy slams Vijays acting in real life with his fans

‘மிக மிக அவசரம்’ மட்டும் தள்ளிப்போனது; 3 படங்கள் இன்று ரிலீஸ்

‘மிக மிக அவசரம்’ மட்டும் தள்ளிப்போனது; 3 படங்கள் இன்று ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sripriyankas Miga Miga Avasaram movie again postponedதயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’.

புதுச்சேரியை சேர்ந்த ஸ்ரீபிரியங்கா என்பவர் நாயகியாக நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் நாம் தமிழர் சீமான் நடித்துள்ளார்.

விஐபியின் பாதுகாப்பு பணிக்காக ஒரு நாள் முழுவதும் உச்சி வெயிலில் நிற்கும் ஒரு பெண் போலீஸ் கான்ஸ்டபிள் கதைதான் இந்த படம்.

இந்த படத்தை பார்த்த அனைவரும் பாராட்டி வரும் நிலையில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் வாங்கியிருந்தார்.

அதன்படி இப்படம் இன்றைக்கு (அக்டோபர் 11ல்) ரிலீஸ் ஆகும் என முன்பே அறிவித்து இருந்தனர்.

ஆனால், போதுமான தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் படத்தை ஒரு வாரம் தள்ளி வைத்துள்ளதாக அறிவித்துள்ளார்கள். அதனால், படம் அடுத்த வெள்ளி அக்டோபர் 18ம் தேதி வெளியாகிறது.

ஆனால் ‘அருவம், பப்பி, பெட்ரோமாக்ஸ்’ ஆகிய மூன்று படங்கள் இன்று சொன்னப்படியே இன்று அக். 11ல் வெளியாகிறது.

Sripriyankas Miga Miga Avasaram movie again postponed

விமல் படத்தில் பிரபல தெலுங்கு நடிகை கார்ரொன்யா கேத்ரின்

விமல் படத்தில் பிரபல தெலுங்கு நடிகை கார்ரொன்யா கேத்ரின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chozha nattan heroineகளவாணி வெற்றியை தொடர்ந்து விமல் நடிக்கும் புதிய படம் “சோழ நாட்டான்” இதினை பட்டுக்கோட்டை “ரஞ்சித் கண்ணா” இயக்குகிறார் கதாநாயகி கார்ரொன்யா கேத்ரின் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. இவர் நாயகியாக “Bangari Balaraju” என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் அதை தொடர்ந்து தெலுங்கில் “SD”, ” Itlu Mee SriMathi” மற்றும் “Uttara”, போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

அது போக சிறந்த நடிகை மற்றும் நடனத்திற்கான தேசிய விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படம் பற்றி நாயகியிடம் கேட்ட போது எனக்கு தமிழ்நாடு மற்றும் தமிழ் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும், இயக்குனர் கதை சொல்லும் போதே எனக்கு படம் பிடித்துவிட்டது கதை ரொம்ப நல்ல இருக்கு சார் நான் தான் பண்ணுவேன் என்று உடனே ஒப்புக்கொண்டேன் இந்த படம் எனக்கு நல்ல வரவேற்ப்பை தரும் தமிழில் சிறந்த நாயகியாக வருவேன் என்று நம்புகிறேன் என்று கூறினார்..

ஒளிப்பதிவு “பிரகாஷ்”. பாடல்கள். “கலைக்குமார்”, “மணி அமுதவன்”, “சபரீஷ்”, ஹரிஷ் பிலிம் ப்ரோடுக்ஷன் சார்பாக “பாரிவள்ளல்” தயாரிக்கிறார்.எழுதி இயக்குகிறார் பட்டுக்கோட்டை “ரஞ்சித் கண்ணா””

More Articles
Follows