டிக் டிக் டிக் வெற்றி விழாவில் ஆரவ் பிறந்தநாளை கொண்டாடிய ஜெயம்ரவி

jayam raviசக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் ஜெயம்ரவி – நிவேதா பெத்துராஜ் நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம் டிக் டிக் டிக்.

இந்த படத்தில் ஜெயம் ரவியின் மகனாக அவரது சொந்த மகன் ஆரவ் ரவியே நடித்திருந்தார்.

இந்நிலையில் டிக் டிக் டிக் படத்தின் சக்சஸ் பிரஸ் மீட் நிகழ்ச்சியில் ஆரவ் ரவியின் பிறந்த நாளும் சேர்த்து கொண்டாடப்பட்டது.

ஜெயம்ரவி பேசுகையில்…

டிக் டிக் டிக் படத்தின் கதை வித்தியாசமான கதை என்பதால் துணிந்து நடித்தேன். இன்றைக்கு ரசிகர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.

இந்த படத்தில் முதலில் படமாக்கியபோது செட் போடவில்லை. அதில் தான் நானும், நிவேதா பெத்துராஜூம் நடித்தோம்.

பிறகு செட் போட்ட பிறகு அதை பார்த்த பிறகு தான் இந்த படம் ஓடுங்கிற நம்பிக்கையே எனக்கு வந்திருக்கு என்று சொன்னவர் நிவேதா. அந்த அளவுக்கு அந்த செட் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தது.

மிருதன் படத்தில் நடித்தபோது முதுகில் பலத்த அடிபட்டு சிகிச்சை எடுத்தேன். அதையடுத்து இந்த படத்திற்காக ரோப்பில் தொங்கியபடியே நடிக்க வேண்டியிருந்ததால் வலி இருந்தது. என்றாலும், அதை பொறுத்துக்கொண்டு நடித்தேன்.

இன்றைக்கு ஆடியன்ஸ் ஹிட் படமாக்கி விட்டதால் அந்த வலி காணாமல் போய் விட்டது.

இந்த படத்தில் டெக்னீசியன்கள் ஒவ்வொருவருமே சிறப்பாக செயல்பட்டனர். இது அவர்களுக்கான கதை.

அவர்கள் ஒருவர் தவறு செய்திருந்தாலும் படம் தோல்வியடைந்திருக்கும். ஆனால் அனைவருமே சிறப்பாக செயல்பட்டு படத்தை வெற்றிப்படமாக்கி விட்டனர்.” என்று பேசினார்.

Overall Rating : Not available

Latest Post