விஜய்சேதுபதியுடன் இணையும் ராஷி கண்ணா-நிவேதா பெத்துராஜ்

விஜய்சேதுபதியுடன் இணையும் ராஷி கண்ணா-நிவேதா பெத்துராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rashi Khanna and Nivetha to pair with Vijay Sethupathi in VVV projectவிஜய்சேதுபதி வில்லனாக நடித்த பேட்ட திரைப்படம் அண்மையில் வெளியானது. இதனையடுத்து அவரது நடிப்பில் உருவாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளியாகவுள்ளது.

தற்போது வாலு, ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்சந்தர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

விஜயா புரொடக்‌‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

விஜயா, விஜய்சந்தர், விஜய்சேதுபதி என்ற மூன்று வி எழுத்துக்கள் இணைந்துள்ளதால் தற்காலிகமாக விவிவி என்று பெயரிட்டுள்ளனர்.

இதில் ராஷி கண்ணா நாயகியாக நடிக்கவுள்ளார்.

தற்போது மற்றொரு நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.

விவேக், மெர்வின் இணைந்து இசையமைக்கவுள்ள இப்படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

Rashi Khanna and Nivetha to pair with Vijay Sethupathi in VVV project

மார்ச் 1-ல் திருமணம், 90ML, தடம், தாதா87 உள்ளிட்ட 7 படங்கள் ரிலீஸ்

மார்ச் 1-ல் திருமணம், 90ML, தடம், தாதா87 உள்ளிட்ட 7 படங்கள் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

On 1st March Thadam Thirumanam 90ML and few movies releasesவருகிற மார்ச் 1ம் தேதி கிட்டதட்ட 7 தமிழ் படங்கள் வெளியாகவுள்ளன.

அவை பற்றிய சிறு தகவல்கள்…

சேரன் இயக்கி நடித்துள்ள திருமணம், அருண்விஜய் நடித்துள்ள தடம், சிம்பு இசையில் ஓவியா நடித்துள்ள 90 எம்எல், சாருஹாசன் நடித்துள்ள தாதா 87 உள்ளிட்ட நான்கு படங்கள் வெளியாகவுள்ளது.

இத்துடன் புதுமுகங்கள் நடித்துள்ள 3 படங்களும் வெளியாகின்றன.

அவை பிரிவதில்லை, மானசி, விளம்பரம்” உள்ளிட்ட 3 படங்கள் தான்.

இவற்றில் ’90எம்எல்’ படத்திற்கு அதிகாலை காட்சிகள் கூட உள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அதிக விமர்சனத்துள்ளாகியுள்ளது.

இந்த 90எம்எல் படம் ரிலீசுக்கு பிறகு மகளிர் சங்கங்கள் போராட்டம் நடத்தினாலும் ஆச்சரியமில்லை.

On 1st March Thadam Thirumanam 90ML and few movies releases

Breaking டாஸ்மாக் அரசுடன் கூட்டணி; பாமக-விலிருந்து விலகினார் ரஞ்சித்

Breaking டாஸ்மாக் அரசுடன் கூட்டணி; பாமக-விலிருந்து விலகினார் ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Ranjith quits from PMK and slams ADMK alliance for electionபொன்விலங்கு என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரஞ்சித்.

அதனைத் தொடர்ந்து மறுமலர்ச்சி, பசுபதி ராசக்காபாளையம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் இவர்.

சில மாதங்களுக்கு முன்னர் பா.ம.க., கட்சியில் இணையவே அவருக்கு அந்த கட்சியின் மாநில கட்சியின் துணை தலைவர் பதவி கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று சற்றுமுன் பா.ம., கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ரஞ்சித்.

அவர் கூறுகையில்…

பாமக மாநில துணை தலைவர் பதவியில் இருந்தும், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுகிறேன்.

அதிமுக அரசு மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் கூறிவிட்டு, இப்படி கூட்டணி வைக்கலாமா.? மதுவுக்கு எதிராக போராடிவிட்டு மதுக்கடை நடத்துவோர் உடன் கூட்டணி வைப்பது ஏற்புடையதல்ல.

கூட்டணி தொடர்பாக பாமக தலைமை தொண்டர்களிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை, ஆனால் தொண்டர்களிடம் கருத்து கேட்கப்படும் என பொதுக்குழுவில் அறிவித்தார்கள்.

கூட்டணிக்காக 10 அம்ச கோரிக்கை என பா.ம.க., வைத்திருப்பது இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை.

நாலு பேருக்கு கூஜா தூக்கிக்கொண்டு என்னால் வாழ முடியாது. பாமக ஏமாற்றிவிட்டது. இக்கட்சியில் இணைந்ததற்கு வேதனைப்படுகிறேன்.” என கூறினார் ரஞ்சித்.

Actor Ranjith quits from PMK and slams ADMK alliance for election

பாக். தீவிரவாதிகள் மீது இந்தியா அதிரடி தாக்குதல்; ரஜினி-கமல் பாராட்டு

பாக். தீவிரவாதிகள் மீது இந்தியா அதிரடி தாக்குதல்; ரஜினி-கமல் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and Kamal lauds Surgical Strike 2 on Pakistanகடந்த பிப்ரவரி 14ஆம் தேதி இந்தியாவின் கருப்பு நாள் எனலாம். அன்றைய தினம் 44 ராணுவ வீரர்களை கொன்று குவித்தான் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஒரு தீவிரவாதி.

இந்த புல்வாமா தாக்குதலை அடுத்து, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் இன்று காலை 3.30 மணி நுழைந்த இந்திய விமானப்படை விமானம் அதிரடி தாக்குதலை நடத்தியது.
12 மிராஜ் ரக விமானங்கள் மூலம் 1000 கிலோ வெடிகுண்டு தீவிரவாதிகள் முகாம் மீது வீசப்பட்டு அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில், 350 தீவிரவாதிகள் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் தகர்க்கப்பட்டுள்ளது.

விமானப்படைக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், இது தொடர்பாக வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையில், “புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 41 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு காரணமான மசூத் அஸார் தலைமையிலான ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு தூதரக ரீதியாக அழுத்தம் கொடுக்கப்பட்டது.

ஐநா அமைப்பால் தடை செய்யப்பட்ட அந்த அமைப்பு ஏற்கனவே இந்தியாவில் பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.

உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 3 பகுதிகளில் உள்ள ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத்தின் முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படை இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இயக்கத்தின் தீவிரவாதிகள், பயிற்றுனர்கள், மூத்த தளபதிகள் மற்றும் தற்கொலைப்படையினர் அழிக்கப்பட்டுள்ளனர். மசூத் அஸாரின் உறவினர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.

இந்தியா வலியுறுத்தியும் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், மற்றொரு தீவிரவாத தாக்குதலை தடுக்கவே, விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது” என்று விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படை அதிரடியாக கொடுத்த பதிலடியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இந்திய விமானப்படையை பாராட்டியுள்ளனர்.

பின் குறிப்பு : புல்வாமாவில் தாக்குதல் நடத்திய உடனேயே பதிலடி இருக்கும் என்று ஜெய் ஷே முகமது எதிர்பார்ததது. அதனால் கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில் இருந்த முகாம்களை 100 கிலோ மீட்டர் உள்ளே, அதாவது பாகிஸ்தான் எல்லைக்குள் மாற்றியது.

அது பத்திரமான மலைப்பகுதி.எவ்வளவு பத்திரமானது என்றால் அமெரிக்காவிற்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டு ஒசாமா பின் லேடன் ஒளிந்திருந்த இடம் அது. அது 5 நட்சத்திர ஓட்டலின் வசதிகளோடு கூடிய இடம்.

தீவிரவாதிகள் அந்த இடத்தை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அது பாகிஸ்தானில் இருக்கிறது. இந்தியா எல்லை தாண்டி வந்து தாக்காது என்று நினைத்தது. ஏனென்றால் 1971க்குப் பிறகு, 48வருடங்களாக இந்தியா எல்லை தாண்டி சென்று தாக்கியதில்லை

Rajini and Kamal lauds Surgical Strike 2 on Pakistan

தமிழரசன் படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன்

தமிழரசன் படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thamizharasanஎஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ” தமிழரசன் ”

இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

மற்றும் சோனு சூட் முக்கிய வில்லன் வேடம் ஏற்கிறார்.

பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர்

இசை – இளையராஜா

பாடல்கள் – பழனிபாரதி, ஜெய்ராம்

கலை – மிலன்

ஸ்டண்ட் – அனல் அரசு

எடிட்டிங் – புவன் சந்திரசேகர்

நடனம் – பிருந்தா சதீஷ்

தயாரிப்பு மேற்பார்வை – ராஜா ஸ்ரீதர்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் – பாபு யோகேஸ்வரன்

தயாரிப்பு – கெளசல்யா ராணி

இப்படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் சென்னையில் நடைபெற்றது.

விஜய் ஆண்டனி – ரம்யா நம்பீசன் சம்மந்தப் பட்ட காட்சிகள் மற்றும் விஜய் ஆண்டனி வில்லன் சோனு சூட் மோதும் ஆக்‌ஷன் காட்சிகள் படமானது.

அத்துடன் 1000 கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டக் காட்சிகளை 4 காமிராக்களை கொண்டு ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கினார். இந்த காட்சிகள் திரையில் மிகப் பெரிய பிரமிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

மக்களுடைய மிகப்பெரிய கேள்வி நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு

மக்களுடைய மிகப்பெரிய கேள்வி நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor mahendranபல அரசியல் குழப்பங்கள், பொருளாதார சிக்கல்கள், வாழ்வாதாரத்துக்கான போராட்டங்கள் என தொடர்ந்து தமிழ்நாடு சிக்கல்களை சந்தித்து வரும் வேளையில், இதனை பிரதிபலிக்கும் வகையில் “நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு” என்ற திரைப்படம் தயாராகி வருகிறது.. இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி நல்.செந்தில்குமார் இயக்கி வருகிறார்.

அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு கிராமத்தில் இதுவரை எந்த தலை முறையும் சந்திக்காத, பார்க்காத பல்வேறு மர்மமான சம்பவங்களும், பிரச்சனைகளும் அடுத்தடுத்து தொடர்ந்து நடக்கின்றது. ஒரு கட்டத்தில் பிரச்சனைகள் தீவிரமடைந்து மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களுக்கு என்ன காரணம் என்பதை கதாநாயகன் கண்டு பிடித்து தனது கிராமத்தையும் மக்களையும் எப்படி காப்பாற்றினார் என்பதை சஸ்பென்ஸ், திரில்லர் கலந்து விறுவிறுப்பான திரைக் கதையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் கூறுகிறார்.. ஜி.எஸ். ஆர்ட்ஸ் சார்பில் பூக்கடை ஜி.சேட்டு தயாரிக்கும் இத்திரைப்படத்தில் கதை நாயகனாக மகேந்திரன் ஊர் மக்களுக்கு உதவி செய்வதையே முழு நேர வேலையாக கொண்டு பணம் சம்பாதிக்கும் இளைஞனாக புதிய தோற்றத்தில் நடித்திருக்க்கிறார். இப்படம் மகேந்திரனுக்கு திருப்புமுனையாக இருக்கும் என இயக்குனர் கூறுகிறார்.

அவருக்கு ஜோடியாக மியாஸ்ரீ நடித்திருக்கிறார். இவர்களுடன் R.சுந்தர்ராஜன், மனோஜ் குமார், பசங்க சிவக்குமார், அப்புக் குட்டி, தவசி, பெஞ்சமின், லொள்ளு சபா உதயா, மீரா கிருஷ்ணன்,ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு ஜெ.ஆர்.கே,, படத்தொகுப்பு கம்பம் மூர்த்தி கவனிக்க, தினா மற்றும் ரமேஷ் நடன இயக்குனராகவும், மிரட்டல் செல்வா ஸ்டண்ட் இயக்குனராகவும் பணி புரிந்துள்ளனர். பாடல்களை ஜீவன் மயில், மோகன்ராஜ் எழுத, விஜய் டி.வி. புகழ் செந்தில்கணேஷ், ராஜ லெட்சுமி மற்றும் ஆத்தங்குடி இளையராஜா, சித்தின், நமீதா இவர்களுடன் சேர்ந்து தேனிசைத் தென்றல் தேவாவும் பாடல்களைப் பாட, ஸ்ரீகாந்த்தேவா இசை அமைத்துள்ளார்.

More Articles
Follows