ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய விதிமுறைகள்; ரஜினி கட்டளை!

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய விதிமுறைகள்; ரஜினி கட்டளை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth created a new rules and regulations for Rajini Makkal Mandramகடந்த ஆண்டு இறுதியில் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.

ஆனால் தனது கட்சியின் பெயரையோ, கொள்கையையோ, மற்ற விபரங்களையோ அவர் வெளியிடவில்லை.
அதன் பின்னர் தனது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றம் அமைப்பாக மாற்றினார்.

அதில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு மாநில பொதுச்செயலாளராக ராஜு மகாலிங்கம், தலைவராக சுதாகர் நியமிக்கப்பட்டனர்.

மற்றபடி கட்சி கொள்கைகள் விவரங்களை வெளியிடாத ரஜினி தனது அரசியல் ஓர் ஆன்மிக அரசியல் என்றும் எம்ஜிஆர் கொடுத்த நல்லாட்சியை தருவேன் எனவும் உறுதியளித்தார்.

இந்நிலையில் இன்று ரஜினி மக்கள் மன்றத்திற்கு என்று தனி விதிகளை உருவாக்கி நிர்வாகிகளுக்கு புத்தகமாக வழங்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

அதில் குறிப்பிட்ட சில விதிகள் இதோ உங்கள் பார்வைக்கு:

1. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோ, உறுப்பினர்களோ தங்களின் வாகனங்களில் மன்ற கொடியை நிரத்திரமாக பொருத்தக்கூடாது.

2. மன்ற கொடியை மன்ற நிகழ்ச்சிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடக்கும் போது மன்ற உறுப்பினர்கள் பிரச்சாரத்திற்காக வாகனங்களில் பயன்படுத்தலாம். ஆனால் நிகழ்ச்சி முடிந்த பிறகு மன்றக் கொடிகளை வாகனங்களில் இருந்து அகற்றப்பட வேண்டும்.

3. இளைஞர் அணியில் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகளே இருக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைக்களுக்கு ஆக்கப்பூர்வ தீர்வு காண இளைஞர் அணி, மன்றத்திற்கு துணை புரிய வேண்டும். மாற்றத்தை விரும்பும், சேவை மனப்பான்மை கொண்ட இளைஞர் சமூதாயத்தின் சக்தியை ஒன்று திரட்டி ஒருங்கிணைக்க வேண்டும்.

4. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் ரஜினி மக்கள் மன்றத்தில் இணையலாம்.

5. ஜாதி மத சம்பந்தப்பட்ட சங்கங்களிலோ அமைப்புகளிலோ உறுப்பினராக உள்ளவர்கள் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினராக சேர அனுமதியில்லை.

6. மன்றக் கொடி துணியால் மட்டுமே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ப்ளாஸ்டிக், பாலிதீன் ஆகிய பொருட்களால் செய்யப்பட்டிருக்க கூடாது.

7. மன்றப் பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு, நியமனம், நீக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலைமையின் முடிவே இறுதியானது.

8. ஏற்கனவே மன்ற நிர்வாக பொறுப்புகள் ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தால் அந்தக் குடும்பத்தில் உள்ள பிற நேரடி உறவினர்களுக்கு மன்றத்தில் வேறு பதவிகள்/ பொறுப்புகள் ஏதும் வழங்கப்பட மாட்டாது. அதாவது ஒரு குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு மட்டுமே பொறுப்புகள் பதவிகள் வழங்கப்படும்.

9. பொதுமக்களிடம் குறிப்பாக முதியவர்களிடமும், பெண்களிடமும் மிகுந்த மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.

10. நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.

11. மன்ற உறுப்பினர்களிடையே ஒற்றுமை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தை வளர்க்க வேண்டும்

12. தீய பழக்கங்கலுக்கு அடிமையாக இருக்கக்கூடாது.

13. மன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் ஒருபோதும் நடக்கக்கூடாது.

14. நம் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்பவரின் கருத்தை மட்டுமே விமர்சிக்கலாமே தவிர தனி நபர் விமர்சனம் எதுவும் செய்யக்கூடாது.

15. ஏனைய உறுப்பினர்களுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும்.

16. கண்ணியம் தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.

17. தலைமையகத்தின் எழுத்துப்பூர்வமான அனுமதி இன்றி பொது மக்களிடமிருந்து மன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதியோ அல்லது பிற பொருளுதவியோ ஒருபோதும் திரட்டக்கூடாது.

18. தங்களால் இயன்ற நிதி உதவிகளைத் தந்து நடத்தும் நிகழ்ச்சிகளை எளிமையான முறையில் நடத்த வேண்டும்.

19. அந்தந்த பகுதியில் தொடர்ந்து மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளை எளிமையான முறையில் நடத்த வேண்டும்.

20. சட்டவிரோத செயல்களில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது.

21. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தச் செயலையும் செய்யக்கூடாது.

22. சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிடும் போது கண்ணியம் காக்க வேண்டும்.

23. மன்றத்தின் பெயரில் எந்தத் தனி நபரையும் கேலியாக சித்தரிக்கவோ அல்லது விமர்சிக்கவோ கூடாது.

24. சமூக வலைத்தளங்களில் சொந்த கருத்தை வெளியிடும்போது மன்றத்தின் பெயரை பயன்படுத்தக்கூடாது.

Rajinikanth created a new rules and regulations for Rajini Makkal Mandram

சர்கார் ஒர்க்கிங் ஸ்டில்ஸை வெளியிட்டு திட்டு வாங்கும் சன் பிக்சர்ஸ்

சர்கார் ஒர்க்கிங் ஸ்டில்ஸை வெளியிட்டு திட்டு வாங்கும் சன் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Fans reaction towards Sarkar movie working stillsஇளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார்.

கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தின் பாடல்களை காந்தி ஜெயந்தியன்று வெளியிட உள்ளனர்.

முன்னதாக செப்டம்பர் 19ஆம் தேதி சிங்கிள் ட்ராக்கை வெளியிட உள்ளனர்.

தற்போது ஓரிரு நாட்களாக சர்கார் படத்தை ஒர்க்கிங் ஸ்டில்ஸை வெளியிட்டு வருகின்றனர்.

இது ஒரு பக்கம் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், மற்றொரு பக்கம், சன் பிக்சர்ஸ் வாட்டர் மார்க் அதில் இடம் பெறுவதால், ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தற்போது கூட 3வது படத்தை வெளியிட்டுள்ளனர். ஆனால் அந்த படங்களை தங்களால் மாற்றம் செய்து டிசைன் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதை சர்கார் டீம் கவனத்தில் கொள்ளுமோ?

Vijay Fans reaction towards Sarkar movie working stills

இளம் கலைஞர்களுக்கு மேடை அமைத்து கொடுக்கும் *லிப்ரா ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்*

இளம் கலைஞர்களுக்கு மேடை அமைத்து கொடுக்கும் *லிப்ரா ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Libra House of Arts Inauguration and Kumari Shruthis Bharatanatyam Recitalலிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், இப்பொழுது தனது கரங்களை சினிமாவுக்கு வெளியே பிற கலைகளுக்குமாக நீட்டியிருக்கிறார்.

இதற்காகவே பிரத்யேகமாக ‘லிப்ரா ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ எனும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ள அவர், இளம் பரத நாட்டிய கலைஞர் ஸ்ருதி சேகருக்கு முதல் மேடையை அமைத்துக் கொடுத்துள்ளார்.

நிருத்ய சுதா நடனம் மற்றும் இசைப்பள்ளியை நடத்திவரும் சுதா விஜயகுமாரின் மாணவியான ஸ்ருதி சேகரின் நடனம் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது என்றால் அது மிகையல்ல.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட கலைமாமணி ஷோபனா ரமேஷ், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பத்திரிக்கையாளர் டி எஸ் ஆர் சுபாஷ், நடிகர் ராகவ் அவரது மனைவி பிரிதா ஆகியோர் கலந்து கொண்டு ஸ்ருதி சேகரின் நடனத்தை வெகுவாகப் பாராட்டினார்கள்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் அவர்களின் பெற்றோர் சந்திரசேகர் மற்றும் வனிதா சந்திரசேகர், நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினர்.

Libra House of Arts Inauguration and Kumari Shruthis Bharatanatyam Recital

Libra House of Arts Inauguration and Kumari Shruthis Bharatanatyam Recital

திமுக தலைவரான சின்னக் கலைஞர் ஸ்டாலின்; பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாழ்த்து

திமுக தலைவரான சின்னக் கலைஞர் ஸ்டாலின்; பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Public Star Durai Sudhakar wishes DMK Leader MK Stalinதிமுக-வின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

நாம் வாழும் இந்த மாநிலத்திற்கே ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டிய பெருமை திமுக என்ற கட்சிக்குத்தான் உண்டு. அத்துடன் நம் தாய்மொழியை பின்னுக்கு தள்ள வந்த இந்தியை ஓட ஓட விரட்டிய வீரமும் திமுகவிடம்தான் இருந்தது.

மேலும் கைம்பெண் மறுமணம் தொடங்கி சுய மரியாதையும், சீர்திருத்தமும் கொண்ட சிந்தனையும், செயல்களும் திமுகவிடம்தான் இருந்தது. இது மட்டுமின்றி எத்தனையோ புரட்சிகளும், சாதனைகளும் படைத்த திராவிட முன்னேற்ற கழகம் என்னும் தமிழர்களின் கலங்கரை விளக்கின் தலைமை பொறுப்புக்கு வரும் ”சின்னக் கலைஞர்” தளபதி மு.க. ஸ்டாலினுக்கு இந்த எளியோன் பப்ளிக் ஸ்டார் துரை.

சுதாகர் தன் நெஞ்சார்ந்த வணக்கத்தையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

தலைவர் மு.க. ஸ்டாலின் திமுக தலைவராக இருந்த கலைஞரின் மகன் என்பதால் இந்த உயர்ந்த பொறுப்பு அவருக்கு கிடைத்திடவில்லை.

தற்போது உள்ளங்கையில் வந்து விட்ட இணைய உலகில் சஞ்சரிக்கும் இளைய தலைமுறையினர் பலருக்கு இந்த சின்ன கலைஞர் கடந்து வந்த போராட்டங்கள், நெருப்பாறு, பிரச்னைகள் பலவும் தெரியாது என்பதால் அவற்றை இச்சுழலில் நினைவுப்படுத்தி பெருமைப்பட ஆசை கொள்கிறேன்.

1953ம் ஆண்டு கருணாநிதி-தயாளு அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ஸ்டாலின்.3வது மகனாக பிறந்த இவருக்கு ரஷ்யாவின் அதிபர் ஜோசப் ஸ்டாலினின் நினைவாகவே கலைஞர் கருணாநிதி ஸ்டாலின் எனப் பெயர் சூட்டினார். தலைவர் மு.க.ஸ்டாலினின் போராட்ட வாழ்க்கை பள்ளிப் பருவத்திலிருந்தே தொடங்கி விட்டது.

சென்னை அண்ணா சாலையிலுள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில் அவரைச் சேர்க்க விரும்பியபோது, பள்ளி அதிகாரிகள் புரட்சியாளரின் பெயரைக் கண்டு நடுக்கமுற்று அப்பள்ளியில் பையனைச் சேர்க்க வேண்டுமெனில் அவனுடைய பெயரை மாற்ற வேண்டுமென்று வலியுறுத்தினர்.

இந்த நிபந்தனையைக் கேள்விப்பட்ட கலைஞர் அவரகள்,ஹூம்.. இனி பள்ளியைத் தான் மாற்ற வேண்டுமே தவிர ஸ்டாலினின் பெயரை மாற்றவே முடியாது என்று கூறி சென்று விட்டார். இதையடுத்து சேத்துப்பட்டிலுள்ள சென்னை கிறித்துவக் கல்லூரி பள்ளியில் சேர்ந்தார்.

தந்தை கலைஞரின் அரசியல் பணிகள் காரணமாக இளம் வயதிலேயே ஸ்டாலினுக்கும் அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தால் திமுக உறுப்பினரானார். அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

1967-1968ம் ஆண்டுகள் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராக படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தினார்.

கோபாலபுரம் இளைஞர் திமுக அமைப்பின் மூலமாக அந்த பகுதியில் இருக்கக் கூடிய மக்களுக்கு பொதுக் காரியங்களை ஆற்றினார்கள்.

இதை படிப்படியாக இளைஞரணி என்ற பெயரிலான அமைப்பாக வளர்த்து அதை அமைப்புரீதியாகவும் 1980ம் ஆண்டு இளைஞரணி மதுரையிலே ஜான்சிராணி பூங்காவிலே தொடங்கப்பட்டு அதற்குப்பிறகு 1980ம் ஆண்டு திருச்சியிலே 2ம் ஆண்டு விழாவிலே 7 பேரை கொண்ட ஒரு அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது.

அந்த அமைப்புக் குழுவில் மு.க.ஸ்டாலின் ஒரு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புகுழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணிக்கென்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியை கட்டியமைத்தார். இதனால் அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது. மு.க.ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் பலமுறை கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்துள்ளார்.

1975ம் ஆண்டு மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு பயங்கர அடி உதை விழுந்து இப்போதும் தழும்புகள் உள்ளது.

சென்னை அண்ணா சாலையில் 28.1.1964ல் திமுகவுக்கென ஒரு இடம் வாங்கப்பட்டது. 15.6.1964 அன்று அது திமுக தலைமையகமாக அன்பகம் என்ற பெயரில் திறக்கப்பட்டது.

நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் அண்ணா அதனை திறந்து வைத்தார். தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகம் அண்ணா சாலையில் அமைந்துள்ள பிரம்மாண்டமான அறிவாலயத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், இளைஞர் அணியின் அலுவலகம் செயல்பட ஒரு இடம் தேவைப்பட்டது. அறிவகத்தை ஒதுக்கித் தரும்படி தலைமைக் கழகத்திடம் இளைஞரணி கோரியது.

இதுபோல திமுக தொழிலாளர் அணியும் தனது அலுவலகத்திற்காக அன்பகத்தைக் கோரியது. அப்போது பொதுச் செயலாளர் அன்பழகன் ஒரு போட்டி வைத்தார்.

அதாவது புராணத்தில் ஒரு பழத்திற்காக போட்டியிட்ட பிள்ளையார் முருகனைப் போல ஒரு அலுவலகத்துக்கு இரண்டு அணிகளும் போட்டியிட்டதால் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், யார் முதலில் 10 லட்சம் ரூபாய் கட்சிக்கு நிதி தருகிறார்களோ அவர்களுக்குத்தான் அன்பகம் என ஒரு போட்டி வைத்தார்.

இதையடுத்து திமுக இளைஞரணிச் செயலாளரான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும், சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்.

காலை, மாலை கொடி கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சிகளிலும், இரவில் பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்று ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு 100 ரூபாய், 200 ரூபாய் என வசூல் செய்து அதன் மூலம் 11 லட்ச ரூபாய் நிதி திரட்டினார்.

கட்சி மேலிடம் கேட்ட 10 லட்சத்திற்கும் மேலாக 1 லட்சத்தை வசூலித்து அதனை தலைமைக் கழகத்திடம் ஒப்படைத்து அன்பகத்தை இளைஞரணிக்கு பெற்றார்.

02.6.1988 அன்று அன்பகத்தில் இளைஞரணியின் தலைமை அலுவலகத்தை பேராசிரியர் அன்பழகன் தலைமையில் தலைவர் கருணாநிதி திறந்து வைத்தார்.

1990ல் நடந்த ஐம்பெரும்விழா பேரணியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இளைஞரணியினர் ஒரு ராணுவம் போல் நடைபோட்டு வந்ததைக் கண்ட அன்றைய பிரதமர் வி.பி.சிங், இந்த இளைஞரனின் தலைமையில் இவ்வளவு பேர் கட்டுக்கோப்புடன் நடை போட்டு வருகிறார்களே என அருகிலிருந்த கருணாநிதியிடம் கேட்க, திமுக இளைஞரணி செயலாளர்-என் மகன் ஸ்டாலின் என கலைஞர் கருணாநிதி பதிலளித்தார்.

இப்படி அரசியலில் பல காலமாக ஈடுபட்டு வந்த போதிலும் கூட எடுத்த எடுப்பிலேயே பெரிய பதவி ஸ்டாலினைத் தேடி வந்து விடவில்லை. இளைஞர் அணியின் செயலாளராக தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு ‘ஆசிட் டெஸ்ட்’ வைப்பது போல சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான வாய்ப்பை வழங்கினார் தலைவர் கலைஞர்.

அதிலும் ஸ்டாலின் மேயராவதற்கு முன்பு வரை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் மேயர் பதவி இல்லை. கவுன்சிலர்கள்தான் மேயரைத் தேர்ந்தெடுத்தனர்.

ஆனால் முதல் முறையாக 1996ம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார். மேயர் பதவியில் இருந்தபோது ஸ்டாலினுக்கு சென்னை மக்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்தது.

துப்புரவுப் பணிக்கு முன்னுரிமை அளித்தார். சிங்கப்பூரில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள பிரெஞ்சு நிறுவனமான ஓனிக்ஸ் நவீன முறைகளைப் பயன்படுத்தி குப்பைகளை அகற்றி வந்தது. சென்னையில் மூன்று மண்டலங்களில் துப்புரவுப் பணியை மேற்கொள்வதற்காக பகிரங்க ஒப்பந்த புள்ளி மூலம் இந்நிறுவனம் தெரிந்தெடுக்கப்பட்டது.
இவ்வாறு சென்னை மாநகராட்சியே குப்பைகளை அகற்றுவதில் நவீன முறைகளைப் பயன்படுத்திய முதல் மாநகராட்சியாகும்.

மேயராக இருந்து ஸ்டாலின் செய்த மிகப் பெரிய சாதனை சென்னை நகரில் சிறு சிறு மேம்பாலங்களைக் கட்டியதுதான். பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக முறையாகத் திட்டமிட்ட பின்னர் தமிழ்நாடு அரசிடமிருந்து அனுமதி பெற்று 9 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன.

இதுதவிர 18 முக்கிய சந்திப்புகளில் பூங்காக்களும், நீரூற்றுகளும் அமைக்கப்பட்டன. 81 பூங்காக்கள் சுத்தப்படுத்தப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட்டன. ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய கடற்கரையான சென்னை மெரீனாவில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

பெரம்பூரிலுள்ள ஆடு-மாடு இறைச்சிக்கூடம் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் நவீன முறையில் பராமரிக்கப்பட்டது. இத்தகைய சாதனைகளின் பலனாக 2001ம் ஆண்டு 2வது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் சின்னக் கலைஞர் ஸ்டாலினின் வளர்ச்சியை பொறுக்காத அப்போதைய அரசு 2002ம் ஆண்டு ஸ்டாலினின் பதவியைப் பறிக்கும் வகையில் சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தது.

ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்று அந்த சட்டத் திருத்தம் கூறியது. இதன் காரணமாக, தனது எம்.எல்.ஏ. பதவியை வைத்துக் கொண்டு மேயர் பதவியிலிருந்து விலகினார் ஸ்டாலின்.

பின்னர் கலைஞர் கருணாநிதி தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்று கருணாநிதி, ஐந்தாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்க, தமிழகத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சரானார் மு.க.ஸ்டாலின். இதுதான் முதன் முதலாக ஸ்டாலின் ஏற்ற அமைச்சர் பதவி. ஆரம்பத்திலிருந்தே சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில்தான் போட்டியிட்டு வந்தார் ஸ்டாலின்.

இந்தத் தொகுதியை அதிமுகவிடமிருந்து தட்டிப் பறித்தவர் ஸ்டாலின். நான்கு முறை இங்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1984ம் ஆண்டு முதல் முறையாக இங்கு அவர் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார் ஸ்டாலின்.

தந்தை கலைஞரைப் போலவே ஸ்டாலினுக்கும் ஆரம்ப காலத்தில் நாடகங்களின் மீது ஈடுபாடு பிறந்தது. இதனால் நாடகத்திலும் நடித்தார். ஸ்டாலின் நடித்த முதல் நாடகம் திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் அஞ்சுகம் நாடக மன்றம் நடத்திய “முரசே முழங்கு” என்ற நாடகமாகும்.

இந்நாடகம் கலைஞர் முன்னிலையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்தது. இந்நாடகம் பல இடங்களிலும் நடத்தப்பட்டது. நான்கு ஆண்டுகள் கழித்து அதன் வெற்றிவிழா திருவல்லிக்கேணியில் அதே மேடையில் நடத்தப்பட்டது.

இதேபோல, திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன் மயங்குகிறான், நாளை நமதே என பல நாடகங்களில் நடித்துள்ளார் ஸ்டாலின். அத்தனையும் திராவிட இயக்கத்தின் கொள்கை விளக்க நாடங்கள் ஆகும். இந்த அனுபவமே சின்னக் கலைஞரைப் பின்னாளில் குறிஞ்சி மலர், சூர்யா என டிவி நாடங்களிலும், ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால் என இரு திரைப்படங்களிலும் நடிக்க தூண்டியது.

1993ம் ஆண்டில் இளைய சூரியன் என்ற தமிழ் வார இதழைத் தொடங்கி ஆசிரியருமானார். பல்வேறு தலைப்புகளில் அரசியல், திரைப்படச் செய்திகள், கதைகள் , கவிதைகள், வினா விடைகள் என அனைத்தும் அதில் இடம் பெற்றிருந்தன.

1994 ம் ஆண்டு வரை இளைய சூரியன் வெளிவந்தது. தந்தையைப் போலவே எழுத்திலும் ஆர்வம் கொண்டவர் ஸ்டாலின். இதன் பயனாக முரசொலியில் ‘உங்களில் ஒருவன்’ எனும் தலைப்பில் கட்டுரைகளை எழுதி வந்தார். நெல்லையில் இளைஞரணி யின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதுதான் ஸ்டாலினின் அரசியல் மணி மகுடத்திற்கான முதல் அடிக்கல் எனலாம்.

ஆக, சாதாரண உறுப்பினராக சேர்ந்து களப்பணியாற்றி வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என முறைப்படி தேர்வு பெற்று களப்பணிகள் வாயிலாக கட்சியின் பொறுப்பு படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், செயல் தலைவர் என்று உயர்ந்த ஸ்டாலின் அவர்கள் தற்போது திமுக தலைவராக பொறுப்பேற்பதை மனதார வாழ்த்தி அவர் நினைப்பது நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Actor Public Star Durai Sudhakar wishes DMK Leader MK Stalin

மிக மிக அவசரம் படத்திற்கு யு சர்ட்டிபிகேட்; ஸ்ரீபிரியங்காவை பாராட்டிய சென்சார்

மிக மிக அவசரம் படத்திற்கு யு சர்ட்டிபிகேட்; ஸ்ரீபிரியங்காவை பாராட்டிய சென்சார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suresh Kamatchis Miga Miga Avasaram movie censored Uவிஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள 3-வது படம் ‘மிக மிக அவசரம்’.

இப்படத்தின் மூலம் முதன்முறையாக இயக்குனர் ஆகியிருக்கிறார் சுரேஷ் காமாட்சி.

நாயகியாக ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ளார். ஹரீஷ்குமார் கதாநாயகனாகவும், இயக்குநர் சீமான் காவல்துறை உயரதிகாரியாகவும் நடித்துள்ளனர்.

முத்துராமன், இயக்குநர் ஈ ராமதாஸ், அரவிந்த், லிங்கா, சாரதி, இயக்குநர் சரவண சக்தி, வெற்றிக்குமரன், வி கே சுந்தர், குணசீலன், மாஸ்டர் சாமுண்டி உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

இன்று சமூகத்தில் பெரும்பாலும் பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர்.

இப்படி சூழல் மாறினாலும், வேலைக்கு செல்லும் பெண்களின் அவல நிலை மட்டும் மாறவே இல்லை. ஆம். ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு விதமான பிரச்னைகளை அவர்கள் எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது.

அந்தவகையில் ‘மிக மிக அவசரம்’ படத்தில் காவல்துறையில் சாதாரண பொறுப்பில் பணியாற்றும் ஒரு இளம் பெண் போலீஸ், அந்த துறையில் சந்திக்கும் மிக நுட்பமான பிரச்சனைகளை இப்படத்தில் விரிவாகவும் பட்டவர்த்தனமாகவும் அலசியிருக்கிறார் இயக்குனர் சுரேஷ் காமாட்சி.

இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று சென்சார் அதிகாரிகளுக்கு இந்தப்படம் திரையிடப்பட்டது.

படத்தை பார்த்த அதிகாரிகள் படத்தில் எந்தவித திருத்தங்களும் சொல்லாமல் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் விதமாக ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

மேலும் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஸ்ரீபிரியங்காவின் அற்புதமான நடிப்பிற்கு தங்களது தனிப்பட்ட பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

Suresh Kamatchis Miga Miga Avasaram movie censored U

தனி ஒருவன்-2 பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா-ஜெயம் ரவி

தனி ஒருவன்-2 பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா-ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thani oruvan stillsரீமேக் படங்களை மட்டுமே இயக்குவார் என ஒரு கருத்து நிலவி வந்த நிலையில் தனி ஒருவன் என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்து தன் தனித் திறமையை நிரூபித்தவர் மோகன் ராஜா.

இப்படத்தில் இவரது தம்பி ஜெயம் ரவி நாயகனாக நடிக்க, நாயகியாக நயன்தாரா, வில்லனாக அரவிந்த்சாமி நடித்திருந்தனர்.

இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார்.

இப்படம் 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி ஓணம் திருநாளில் வெளியானது.

மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முக்கிய அறிவிப்பை தற்போது மோகன் ராஜா வெளியிட்டுள்ளார்.

மீண்டும் ஜெயம் ரவியை வைத்து ‘தனி ஒருவன் 2’ படத்தை இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

படத்தின் மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பை அவர்கள் வெளியிடவில்லை.

Thani Oruvan 2 officially announced by Mohan Raja and Jayam Ravi

More Articles
Follows