நட்பு டூ காதல்.. அடுத்த லெவலுக்கு போகத் தெரியாத சதீஷ்

நட்பு டூ காதல்.. அடுத்த லெவலுக்கு போகத் தெரியாத சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor sathishசிவகார்த்திகேயன் நடித்த ‘மெரினா’, ‘எதிர் நீச்சல்’, ‘மான் கராத்தே’, ரெமோ, விஜய் நடித்த ‘கத்தி’, பைரவா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சதீஷ்.

இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு ‘இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்’ என தன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

அத்துடன்… ம்ம்ம்ம் இதுக்கு அடுத்த லவலுக்கு தான் நமக்கு போகத் தெரியலயே’ என்றும் பதிவிட்டுள்ளார்.

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் சதீஷ் வெறும் நட்பையே கொண்டாட போறீங்க..

Sathish‏Verified account @actorsathish Feb 14

Happy friendship day…… (Hmmmmmmm idhukku aduththa level ku dhan namakku poga theriyalaye

விஸ்வாசம் படத்தில் இமான் இசையில் அஜித் பாடுகிறாரா..?

விஸ்வாசம் படத்தில் இமான் இசையில் அஜித் பாடுகிறாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith and DImman‘விவேகம்’ படத்தை தொடர்ந்து விஸ்வாசம் படத்திற்காக அதே கூட்டணி இணைகிறது.

சிவா இயக்கும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க அஜித் நடிக்கவிருக்கிறார்.

இதில் அஜித் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இசையமைப்பாளராக டி.இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இமான் இசையில் அஜித் தன்னுடைய சொந்த குரலில் ஒரு பாடலை பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் அஜித் பாடல் எதுவும் பாட மாட்டார் என தற்போது படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கும்பகோணத்தில் மும்பை நடிகர்களுடன் பிரபுதேவா மோதல்

கும்பகோணத்தில் மும்பை நடிகர்களுடன் பிரபுதேவா மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Prabhu Deva`பார்ட்டி’ படத்தை தொடர்ந்து அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்து வரும் படம் ‘சார்லி சாப்ளின்-2’.

கடந்த 2002-ஆம் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘சார்லி சாப்ளின்’ படத்தின் அடுத்த பாகமாக இந்த படம் உருவாகி வருகிறது.

இதில் பிரபுதேவா, பிரபு, நிக்கி கல்ராணி, அடா சர்மா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரவிமரியா, செந்தில், ஆகாஷ், விவேக் பிரசன்னா, சாம்ஸ், சாந்தா, காவ்யா, மகதீரா வில்லன் தேவ்கில், மும்பை வில்லன் சமீர் கோச், கோமல் சர்மா, அமீத் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தில் வைபவ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

முதல் பாகத்தை இயக்கிய சக்தி சிதம்பரம் இந்த பாகத்தையும் இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர் கூறும்போது,

முழுக்க முழுக்க கமர்ஷியல் காமெடி படமாக சார்லி சாப்ளின் உருவாகி வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்றது.

அதில் பிரபுதேவா, மகதீரா வில்லன் தேவ்கில் இருவரும் மோதும் பயங்கர சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.

அத்துடன் பிரபுதேவா – சமீர் கோச் இருவரும் மோதும் சூட்கேஸ் சண்டைக் காட்சி ஒன்றும் அங்கேயே பிரமாண்டமாக படமாக்கப்பட்டது என்றார்.

அம்ரிஷ் இசையமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை செளந்தர்ராஜன் மேற்கொள்கிறார்.

பிரபல நடிகரும், எழுத்தாளருமான கிரேசி மோகன் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் ஆனார் ராஜுமகாலிங்கம்

ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் ஆனார் ராஜுமகாலிங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raju Mahalingam appointed as the state secretary of Rajini Makkal Mandramநடிகர் ரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்த உடன் பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ரஜினி நடிப்பில் வளர்ந்துள்ள 2.ஓ படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் ஆக பணியாற்றியவர் ராஜு மகாலிங்கம் இந்த அறிவிப்பை தொடர்ந்து தன் பணியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் அவருக்கு தற்போது ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அவர் ரஜினி மக்கள் மன்ற மாநிலச் செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

ரஜினி மக்கள் மன்றத்தில் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் பணியில் முக்கிய பங்கு வகுத்து வருகிறார் ராஜுமகாலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியை அவரது நண்பரான தமிழருவி மணியன் சந்தித்து பேசினார்.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

விரைவில் தமிழகம் முழுவதும் ரஜினிகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Raju Mahalingam appointed as the state secretary of Rajini Makkal Mandram

சம்பளத்தை தயாரிப்பாளர் நிர்ணயிக்கட்டும்; பிரகாஷ்ராஜ் போல் நடிக்க ஆசை.. : ராஜ்கமல்

சம்பளத்தை தயாரிப்பாளர் நிர்ணயிக்கட்டும்; பிரகாஷ்ராஜ் போல் நடிக்க ஆசை.. : ராஜ்கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I would like to act like Prakash Raj says Actor Rajkamalசின்னத்திரையில் பிரபலமான பல சீரியல்களில் நடித்துள்ளவர் ராஜ்கமல்.

மேலும் பல மேடை நிகழ்ச்சிகள், டிவி ஷோக்கள் என அனைத்தையும் தொகுத்து வழங்கியும் வருகிறார்.

இப்படியான திறமைகள் இருந்தபோதிலும் கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து வருகிறார்.

இவர் சீரியல் நடிகர் என்பதால் சினிமா வாய்ப்புகள் இவருக்கு பெரும்பாலும் மறுக்கப்பட்டு வருகின்றன.

இவர் நாயகனாக நடித்த சண்டி குதிரை படம் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள மேல்நாட்டு மருமகன் என்ற படம் நாளை வெளியாகவுள்ளது.

இதனையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது…

டிவி சீரியல்கள் அனுபவம் இருந்தாலும் னிமாவில் நடிக்கவேண்டும் என்பது என் ஆசை.

கில்லியில் த்ரிஷாவுக்கு வில்லன், அதே த்ரிஷாவுக்கு அபியும் நானும் படத்தில் அப்பாவாக நடித்தவர் பிரகாஷ்ராஜ். அவரைப் போன்று விதவிதமாக நடிக்கவே எனக்கு ஆசை.

இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டதால் கேரக்டர் ரோலில் நடிக்க என்னை யாரும் அழைப்பதில்லை.

மேலும் நான் நிறைய சம்பளம் கேட்பேன் என நினைக்கிறார்கள்.

ஒரு தயாரிப்பாளர் இந்த கேரக்டருக்கு இந்த சம்பளம் போதும் என நினைத்து அவர் எதை கொடுக்கிறாரோ? அதுவே எனக்கு போதும்.

என் சம்பளத்தை அவரே நிர்ணயிக்கட்டும். நான் என் சம்பளம் பற்றி பேசமாட்டேன்” என நெகிழ்ச்சியாக பேசினார்.

I would like to act like Prakash Raj says Actor Rajkamal

பிரியா வாரியரை மயக்கிய அந்த இளைஞர் யார் தெரியுமா..?

பிரியா வாரியரை மயக்கிய அந்த இளைஞர் யார் தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Roshan abdulப்ரேமம் சாய் பல்லவி, ஜிமிக்கி கம்மல் ஷெரில் பட்டியலில் அடுத்ததாக தற்போது கேரளாவை கலக்கியவர் பிரியா வாரியர்.

ஒரு பாடலின் ஒரு சில நொடி காட்சிகளில் காட்டிய எக்ஸ்பிரஷினிலேயே இளைஞர்களைத் தவிக்க விட்டுள்ளார் இவர்.

பிரியா வாரியரின் முகநூல், இன்ஸ்ட்கிராம், ட்விட்டர் எல்லாமும் லைக்ஸ்களாலும், பாலோயர்ஸ்களாலும் நிரம்பி வழிகிறது.

பிரியா வாரியரை பார்த்து கண்ணடித்த அந்த புதுமுக நடிகர் யார் என்கிற கேள்விக்கு இப்போது எல்லோரும் விடை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

ரோஷன் அப்துல் ரஹூஃப் என்பவர் தான் அந்த இளைஞர். பிரியா வாரியரைத் தொடர்ந்து தற்போது ரோஷனும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றார்.

கேரளா, திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ரோஷன் அப்துல் ரஹூஃப்பிற்கு வயது 20. இவர் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலமாக திரை உலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.

இதையடுத்து, ரோஷன் அப்துல் ரஹூஃப் தனது, இளங்கலை பட்டத்தை தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இவருக்கு நடன கலையில் ஆர்வம் அதிகம் இருந்ததினால் முறையான பயிற்சியினை மேற்கொண்டு, D3-D4 சிசன்3 என்ற நடன நிகழ்ச்சியில் தன்னுடன் பிறந்த அண்ணனோடு கலந்து கொண்டு ஜோடி நம்பர் ஒன் டைட்டில் பெற்றிருக்கிறார்.

நடன கலைஞராக வலம் வந்த நிலையில் இவரை தேடி வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

More Articles
Follows