அழகான வாய்ப்புகள் கிடைப்பதில்லைன்னு ரஜினி சொன்னார்.; டில்லிக்கு அப்புறம் ரோலக்ஸ்.. – சூர்யா

அழகான வாய்ப்புகள் கிடைப்பதில்லைன்னு ரஜினி சொன்னார்.; டில்லிக்கு அப்புறம் ரோலக்ஸ்.. – சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் சூர்யா பேசும்போது…

“ஒட்டுமொத்த தமிழர் உலகமும் கார்த்தியின் பயணத்தை அவ்வளவு அழகாக மாற்றி கொடுத்திருக்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த தருணத்தில் நான் இருபது வருடங்களுக்கு பின்னோக்கிச் சென்று திரும்பி பார்க்க வேண்டி இருக்கிறது.

ஒவ்வொருவருக்கும் அழகான வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை என்று ரஜினி சார் சொல்லுவார். அந்த வகையில் கார்த்தி தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக நன்றாகவே பயன்படுத்தி இருக்கிறார்.

மணிரத்னம் சாருக்கு இந்த பயணத்தில் நான் நன்றி சொல்கிறேன். ஞானவேல் ராஜா கார்த்தியின் தூணாகவே இருந்திருக்கிறார். பருத்திவீரன் போன்ற ஒரு அழகான காவியத்தை இயக்குனர் அமீர் உருவாக்கிக் கொடுத்தார்.

நாங்கள் இருவருமே சில நேரங்களில் தளர்ந்து போய் இவற்றையெல்லாம் விட்டு விடலாமா என்று நினைக்கும் போதெல்லாம் எங்களுக்கு உற்சாகம் கொடுத்து எல்லைகளைக் கடந்து ஓட உந்துசக்தியாக ரசிகர்கள் நீங்கள் இருந்துள்ளனர்.

நீங்கள் அனைவரும் எங்களுக்கு நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறீர்கள். என்னைவிட கார்த்திக்கு தான் நாங்கள் ரசிகர்கள் என்று பலபேர் சொல்வதுண்டு.

நான் சினிமாவில் நுழைவதற்கு முன்பு எனக்கு வேறு பல வாய்ப்புகள் இருந்தன. ஆனால் கார்த்தி தன்னுடைய பாதையை தேர்வு செய்வதில் ரொம்பவே கவனமாக இருந்தார். நான் கார்த்தியை பார்த்து பொறாமையும் வியப்பும் கொண்டிருப்பேன்.

அவர் குடும்பத்திற்கும் வேலைகளுக்கும் சமமான நேரம் ஒதுக்குவதுடன் வருடத்திற்கு இரண்டு முறையாவது பெற்றோர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் உறுதியாக இருக்கிறார். அவரது 25வது படத்தை கொண்டாடுவதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டில்லிக்கு பிறகு ரோலக்ஸ் என்பதை நானும் கூட கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்” என்று கூறினார்.

Dilli followed by Rolex Character says Suriya

தமன்னா தந்த சர்ப்ரைஸ்..; விஷால் – ஆர்யா – ஜெயம்ரவி பற்றி கார்த்தி

தமன்னா தந்த சர்ப்ரைஸ்..; விஷால் – ஆர்யா – ஜெயம்ரவி பற்றி கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜப்பான்’ இசை விழாவுக்கு வருகை தந்த சக நட்சத்திரங்கள் பற்றி அவ்வப்போது கார்த்தி பேசுகையில்…

“விஷாலின் தூண்டுதன் காரணமாகத்தான் நான் நடிகர் சங்கத்திற்குள் இழுத்து வரப்பட்டேன். அந்த வகையில் எனக்கு ஒரு நல்ல குடும்பம் கிடைத்தது. ஜெயம் ரவி பிறக்கும்போதே ஒரு ஹீரோ ஆகவே பிறந்தவர். ஆர்யா ஒரு நல்ல சிகிச்சையாளர். கூலான மனிதர்.. நல்ல அதிர்வுகளை ஏற்படுத்துவதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்..

இந்த நிகழ்வில் தமன்னா கலந்து கொண்டது எனக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ். மும்பையில் இருந்து இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இங்கே வருவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை.

நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியபோது ஒரு குழுவாக மகதீரா படம் பார்ப்பதற்கு சென்றோம். அதுபோன்ற ஒரு நல்ல கதாபாத்திரத்திற்காக அவர் ஏங்கிக் கொண்டிருந்தார். ஆனால் சில வருடங்களுக்கு பிறகு பாகுபலி படத்தில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்திலேயே நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

நாங்கள் மூன்று படங்களில் இணைந்து நடித்திருக்கிறோம்.. மூன்றுமே பிளாக்பஸ்டர் வெற்றி..

இயக்குநர் ரஞ்சித்தை பொறுத்தவரை அவர் என்னிடம் மெட்ராஸ் படத்தின் ஸ்கிரிப்ட்டை படிக்க கொடுத்தபோது அதில் நான் ஒரு பாகமாக இருக்கவில்லை. ஆனால் அந்த ஸ்கிரிப்ட்டை படித்தவுடன் அது ஈரானிய படங்களைப் போல சர்வதேச தரத்தில் இருந்தது” என்றார்.

.
Karthi speech about Vishal Arya Ravi and Tamannah

நிபந்தனையற்ற அன்பு..; 1 கோடி கொடுத்து சமூக நன்றிக்கடன் செலுத்திய கார்த்தி

நிபந்தனையற்ற அன்பு..; 1 கோடி கொடுத்து சமூக நன்றிக்கடன் செலுத்திய கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலக பயணத்தில் இருபது வருடங்களை கடந்து வந்திருக்கிறார். இந்த இருபதாவது வருடத்தில் அவரது 25வது படமாக ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது.

கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்க நடிகர் சுனில், வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், விஜய் மில்டன் மற்றும் மலையாள நடிகர் சணல் அமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் ரவிவர்மன் ஒளிப்பதிவில், பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘ஜப்பான்’ வரும் தீபாவளி பண்டிகை வெளியீடாக ரிலீஸாக இருக்கிறது.

இதை தொடர்ந்து இந்தப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவையும் கார்த்தி25 என இரண்டு திரையுலக பயணத்தையும் ஒரு சேர கொண்டாடும் வகையில் சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்ட விழா நடைபெற்றது.

இந்தநிகழ்வில் ஜப்பான் படக்குழுவினருடன் நடிகர்கள் சூர்யா, விஷால், ஆர்யா, ஜெயம் ரவி, அனு இம்மானுவேல், கே.எஸ்.ரவிகுமார், ராஜ்கிரண், அர்ஜுன் தாஸ், மாஸ்டர் ரித்விக், தமன்னா, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர்கள் பா.ரஞ்சித், சிவா, லோகேஷ் கனகராஜ், பி.எஸ்.மித்ரன், ஹெச்.வினோத், சுராஜ், சத்யராஜ், சிபிராஜ், இயக்குனர் சதீஷ், ஜித்தன் ரமேஷ், சக்திவேலன், தயாரிப்பாளர்கள் லட்சுமன், கே.ஈ.ஞானவேல்ராஜா, இயக்குநர் ராஜேஷ், பொன்வண்ணன், பவா செல்லத்துரை, அனல் அரசு, பாண்டியன் மாஸ்டர், திலீப் சுப்பராயன், நடன இயக்குனர் ஸ்ரீதர், தயாரிப்பாளர் டி.சிவா, நடிகர் நந்தா, இயக்குனர் R. ரவிக்குமார், தயாரிப்பாளார் T. G தியாகராஜன், இயக்குனர் தமிழ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் இந்த 20 வருடங்களில் கார்த்தியுடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர்கள், சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசும்போது….

“இன்று எனக்கு ஸ்பெஷலான ஒரு நாள். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் மொத்த குழுவினரும் இப்படி ஒரு அற்புதமான தருணத்தை எனக்காக உருவாக்கிக் கொடுத்திருக்கின்றனர். நான் எதையும் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் இந்த தருணம் நான் சரியான பாதையில் தான் செல்கிறேன் என்கிற ஒரு பலமான தன்னம்பிக்கையை எனக்கு கொடுத்திருக்கிறது.

முதல் அன்பு என்பது நம் எல்லோருக்கும் பெற்றோர்களிடமிருந்து கிடைக்கிறது. அதன்பிறகு நண்பர்கள், பின்னர் மனைவியிடம் இருந்து.. ஆனால் அதை எல்லாம் விட ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பு எந்தவித நிபந்தனையும் இல்லாதது.

இவர்கள் அன்பு அனைத்தையும் நான் எனது முதல் படத்திலேயே பெற்று விட்டேன். அவர்களுடைய அன்பு தான் என்னை நீண்ட தூரம் ஓட வைக்கும் உந்து சக்தியாக இருக்கிறது.

இயக்குநர் மணிரத்னம் சாருக்கு நன்றி சொல்கிறேன்.. இந்த திரையுலகில் அவரைப் போன்ற ஒரு அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட நபரை நான் பார்த்ததே இல்லை.. நடிப்பு பற்றி என்னவென்றே தெரியாத என்னைப் போன்ற ஒரு புதிய நபரான எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியவர் அமீர் அண்ணா.

என்னை முதன் முதலாக ஊக்கப்படுத்திய மனிதர் ஞானவேல் ராஜா தான்.

கைதி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட என்னுடைய படங்களில் சண்டை காட்சிகளில் எனக்கு தூணாக பின்னணியில் இருந்தவர் பாண்டியன் மாஸ்டர். சண்டைக் காட்சிகளின்போது ரிஸ்க்கான சூழ்நிலைகளில் அவர் கற்றுக் கொடுத்தது தான் என்னை பலமுறை காப்பாற்றி இருக்கிறது.

ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு நாட்களில் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த தயாரிப்பாளர் ரவீந்திரன் சாருக்கு நன்றி.

நேர்மறையின் ஒட்டுமொத்த உருவம் சிவா சார். பலரும் தாடி இல்லாமல் என்னால் எதையும் செய்ய முடியாது என்று நினைத்தபோது பையா படத்தின் மூலம் என்னை வித்தியாசப்படுத்தி வெளிச்சம் போட்டு காட்டினார் இயக்குநர் லிங்குசாமி.

என்னுடைய இசையமைப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஒப்பனை குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் வினோத் ரொம்பவே அரிதான மனிதர். சில வார்த்தைகள் மட்டும் பேசினாலும் தெளிவான சிந்தனை கொண்டவர். காஷ்மோரா போன்ற சிறந்த படத்தை கோகுல் எனக்காக கொடுத்திருக்கிறார்.

திரையரங்குகளில் அந்த படம் சரியாக போகாவிட்டாலும் கூட ஆன்லைனில் வெளியானபோது நல்ல வரவேற்பை பெற்றது. எப்போதுமே நல்ல விமர்சனங்களுடன் எனது திரையுலக பயணத்தை செம்மைப்படுத்தி கொடுத்ததற்காக பத்திரிகை நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

மக்கள் கொடுத்த இந்த வெற்றியை மக்களோடு சேர்ந்து கொண்டாட வேண்டும்.. வாழ்க்கையில் இந்த உயரத்தை தந்த மக்களின் வாழ்க்கையில் சுக துக்கங்களில் பங்கெடுக்க வேண்டும் என நம் நாயகன் கார்த்தி அவர்கள் 25 சமூக செயற்பாட்டாளர்களுக்கு ஒரு லட்சம் வீதம் ரூபாய் 25 லட்சம் நிதி உதவியும் தேவைப்படும் பள்ளிகளுக்கு தலா ஒரு லட்சம் வீதம் ரூபாய் 25 லட்சம், மக்களுக்குப் பயன்படும் மருத்துவமனைகளுக்கு ஒரு லட்சம் வீதம் ரூபாய் 25 லட்சம், மேலும் 25 நாட்களுக்கு சுமார் 25,000 பேர் பசியாற ரூபாய் 25 லட்சம் என சுமார் ஒரு கோடி வழங்க இருக்கிறேன்.

இது ஒரு நடிகன் செய்யும் உதவி அல்ல.. தன்னை வளர்த்த சமூகத்திற்கு ஒரு மனிதன் செலுத்தும் நன்றிக்கடன். இந்த சமூக செயற்பாட்டாளர்களை கண்டறிந்து உதவிய இ.ரா சரவணன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்

Karthi donated 1 crore to society as Human

JUST IN ‘லியோ’ வெற்றி விழா.; ரத்தான இடத்திலேயே ரவுண்டு கட்ட ரெடியாகும் விஜய்

JUST IN ‘லியோ’ வெற்றி விழா.; ரத்தான இடத்திலேயே ரவுண்டு கட்ட ரெடியாகும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் படங்களைப் போலவே அவரது படங்களின் இசை வெளியீட்டு விழாவிற்கும் எதிர்பார்ப்பு எப்போதும் இருக்கும். அதற்கு காரணம் விழா மேடைகளில் விஜய் பேசும் குட்டி கதையும் அரசியல் சார்ந்த விஷயங்களும் பரபரப்பாக பேசப்படும்.

ஆனால் சமீபத்தில் வெளியான ‘லியோ’ படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. அதிகமான போலி டிக்கெட் விற்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் திடீரென விழாவை தயாரிப்பு நிறுவனர் ரத்து செய்தது.

இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. லியோ படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு கொடுக்கவில்லை என்பதால் ஆளுங்கட்சி இந்த சதியை செய்வதாகவும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்திருந்தனர்.

மேலும் கோட்டைக்கும் ரெடி வேட்டைக்கும் ரெடி என்பது போல பல வாசகங்கள் கொண்ட போஸ்டர்களை ரசிகர்கள் ஒட்டி வந்தனர்.

இதன் பின்னர் அக்டோபர் 19ஆம் தேதி ‘லியோ’ படம் உலகமெங்கும் வெளியானது. அதிகாலை 4 மணி சிறப்பு காட்சி கொடுக்கப்படவில்லை என்பதால் அதற்கும் ஆளுங்கட்சியை ரசிகர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

தற்போது 10 நாட்களைக் கடந்துள்ள நிலையில் ரூ. 500+ கோடி வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நவம்பர் 1ம் தேதி லியோ படத்தின் வெற்றி விழாவை மிக பிரம்மாண்டமாக கொண்டாட செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளனர.

அதன்படி சென்னை நேரு ஸ்டேடியத்தில் விழாவினை நடத்த சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விழாவில் எத்தனை பேர் பங்கு பெறுவார்கள்? எத்தனை பிரபலங்கள் வருவார்கள்? ரசிகர்களுக்கு அனுமதி உண்டா? என பல்வேறு கேள்விகளை போலீசார் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகவல்களை அடுத்து லியோ வெற்றி விழாவிற்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இசை விழா ரத்தான இடத்திலேயே வெற்றி விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leo team plan to celebrate its success in grand level

இளையராஜா இசையமைத்த பாடலை வெளியிட்ட கௌதம் வாசுதேவ் & ஐஸ்வர்யா

இளையராஜா இசையமைத்த பாடலை வெளியிட்ட கௌதம் வாசுதேவ் & ஐஸ்வர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வருகிறது “நினைவெல்லாம் நீயடா”.

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு, சிலந்தி, ரணதந்த்ரா, சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட “அருவா சண்ட” படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை திரைக்கதை வசனங்களை எழுதி இயக்கியிருக்கிறார்.

பள்ளிப் பருவத்தில் உருவாகும் முதல் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு இதயம் வருடும் 5 பாடல்களை இசைத்துக் கொடுத்திருக்கிறார் இசைஞானி.

அந்த பாடல்களை ஆதிராஜன் மிகுந்த ரசனையுடன் படமாக்கி இருக்கிறார்.

பாடல் காட்சிகளை பார்த்து ரசித்த ஜீ மியூசிக் நிறுவனம் பாடல்களின் தரத்தையும் எடுக்கப்பட்ட விதத்தையும் பாராட்டியதுடன் இசை உரிமையையும் வாங்கி இருக்கிறது.

பழனி பாரதியின் வார்த்தை ஜாலங்களில் கார்த்திக்கின் மயக்கும் குரலில் உருவான “மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்…” என்ற முதல் பாடல் ஜீ மியூசிக் சவுத் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. பிரபல இயக்குநரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன், பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரிலீஸ் செய்தனர். நன்றி அவர்களுக்கு. பாடல் எல்லோராலும் விரும்பப்படுகிறது என்பதை பின்னூட்டங்களில் பார்க்க முடிகிறது. அருமையான ஒரு மெலடியாக அப்பாடல் அமைந்து இணையத்தைக் கலக்கி வருகிறது.

தீனா நடன வடிவமைப்பில் உருவான இந்த பாடல் காட்சியில் ரோகித், யுவலட்சுமி ஜோடி நடித்துள்ளனர். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிரஜன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மனீஷா யாதவ் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார்.

முக்கிய கதாப்பாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, அபிநட்சத்திரா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

Gautham vasudev and Aishwarya launched song from ilaiyaraaja music

தீபாவளிக்கு விசிலடித்து மூச்சுத் திணற சத்தமிடுவீர்கள்.. அதான் 1% கூட காட்டல.; ‘டைகர் 3’ குறித்து மனீஷ் சர்மா

தீபாவளிக்கு விசிலடித்து மூச்சுத் திணற சத்தமிடுவீர்கள்.. அதான் 1% கூட காட்டல.; ‘டைகர் 3’ குறித்து மனீஷ் சர்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘டைகர் 3’யின் டீசர் மற்றும் டிரைலரின் நம்பமுடியாத வெற்றி, அதை பார்த்து ரசிப்பதற்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் கண்கவர் ஆக்சன் படமாக மாற்றியுள்ளது என்கிற இயக்குநர் மனீஷ் சர்மா, யஷ்ராஜ் பிலிம்ஸ் ‘டைகர் 3’யின் ஒவ்வொரு விஷயத்தையும் ரகசியமாக அதேசமயம் புத்திசாலித்தனமாக நடத்தி வருகிறது” என்கிறார்..

மனீஷ் கூறும்போது…

“டைகரின் கதை எப்படி நகரும் என்பதை காட்டும் விதமாக’டைகர் 3’யின் டீசரையும் டிரைலரையும் நாங்கள் உருவாக்கினாலும், அதனுள்ளே பெரிய திரையில் மிகச்சிறந்ததாக காட்டுவதற்காக என்ன வைத்திருக்கிறோம் என்பதில் 1 % கூட நீங்கள் பார்த்திருக்க முடியாது” என்கிறார்.

யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸில் இருந்து லேட்டஸ்ட்டாக வெளியான ‘டைகர் 3’யின் டீசர் மற்றும் டிரைலர் இரண்டுமே, இந்த பண்டிகை காலத்தில் திரையரங்குகளில் படம் பார்க்கும் ரசிகர்களின் அட்ரிலினை அதிகம் சுரக்கவைக்கும் ஆக்சன் கொண்டாட்டமாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இந்திய சினிமாவின் மெகா ஸ்டார்களான சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் இருவரும் தங்களது சூப்பர் உளவாளி கதாபாத்திரங்களான டைகர் மற்றும் சோயா என்கிற அடையாள கதாபாத்திரங்களுக்கு திரும்பியுள்ளனர்.

மனீஷ் மேலும் கூறுகையில்,…

“படத்தின் 50 முதல் 60 சதவீதம் வரை மிக பிரமாண்டமான ஆக்சன் காட்சிகளை கொண்டதாக இருக்கும். மேலும் நீங்கள் இதில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதற்கான ஒரு சிறிய பார்வையை உங்களுக்கு தருவதற்கு நாங்கள் விரும்பினோம்..

நீங்கள் இந்தப்படத்தை பார்க்கும்போது உணரும் ஆச்சரியமும் பரவசமும் நீங்கள் கொஞ்சமும் எதிர்பாராததாக இருக்கவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

டைகர் 3 போல ஒரு படத்தை பார்க்கிறீர்கள் என்றால் நீங்கள் பொறுமையாக இருப்பதுடன் எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்வதும் ரொம்பவே முக்கியமானது.

எல்லாவற்றையும் முன்கூட்டியே கொடுத்துவிட்டோம் என்றால்.. ? நீங்களே கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.. அதனால் தான் மிகுந்த உற்சாகம் தரும் எங்கள் படத்தின் சில காட்சிகளை ‘டைகர் 3’யின் டிரைலரில் கூட காட்டவில்லை.

எனவே தியேட்டரில் ரசிகர்கள் படத்தை பார்க்கும்போது விசிலடித்தும் மூச்சுத்திணறும் அளவுக்கு சத்தமிட்டும் உற்சாகத்துடன் படத்தை பார்க்க முடியும்” என்கிறார்.

மனீஷ் மேலும் கூறும்போது…

“’டைகர் 3’ பெரிய திரைக்கான கண்கவர் காட்சி என்பதால் மக்கள் திரையரங்கின் உள்ளே அமர்ந்து ஆச்சர்யத்துடன் பார்த்து ரசிக்கவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

திரையரங்குளில் உறுமலுடன் வரப்போகும் ‘டைகர் 3’ அவர்களுக்கான இந்த வருடத்தின் தீபாவளி கொண்டாட்டமாக இருக்கவேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். அதை நாங்கள் செய்யமுடியும் என்றால் ‘டைகர் 3’ குழுவினருக்கு அதுதான் மிகுந்த மகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கும்” என்கிறார்.

வரும் நவ-12ல் தீபவாளி வெளியீடாக ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ‘டைகர் 3’ வெளியாகிறது.

டைகர் 3

You never seen even 1% in Tiger 3 says Maneesh sharma

More Articles
Follows