28 Years Of Vijay… கோயில்களில் அர்ச்சனை.. ஏழைகளுக்கு உதவிகள் செய்த தளபதி ரசிகர்கள்

28 Years Of Vijay… கோயில்களில் அர்ச்சனை.. ஏழைகளுக்கு உதவிகள் செய்த தளபதி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

28 years of Vijay1984-ஆம் ஆண்டில் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய ‘வெற்றி’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்தார்.

சில வருடங்களுக்கு பின் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் தன் மகனை ஹீரோவாக்கினார்.

இதனையடுத்து மாண்புமிகு மாணவன், செந்தூரப் பாண்டியன், தேவா, ரசிகன் என மசாலா படங்களில் நடித்து வந்தார் விஜய்.

இதன்பின்னர் விக்ரமன் இயக்கிய ‘பூவே உனக்காக’ படம் விஜய்க்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இதன்பின்னர் சில வருடங்களுக்கு பிறகு வெளியான ‘திருமலை’ விஜய்யை ஆக்சன் ஹீரோவாக மாற்றியது.

அவருக்கான ரசிகர்கள் கூட்டமும் பெருகியது.

கடந்த 10 வருடங்களில் மட்டும் திருப்பாச்சி, கத்தி, துப்பாக்கி, ஜில்லா, தெறி, சர்கார் என தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார்.

பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் விஜய்யின் ‘மாஸ்டர்’ விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் விஜய் 1992-ஆம் ஆண்டு முதன்முறையாக ஹீரோவாக நடிக்க தொடங்கிய நாளான டிசம்பர் 4ல் 28 ஆண்டுகள் நிறைவு செய்கிறார்.

இதனையொட்டி அவரது ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

காஞ்சிபுரம், தேனி, திருச்சி, நாமக்கல், கரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கோவில்களில் விஜய் பெயரில் சிறப்பு பூஜை செய்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

Vijay fans are engaged in special prayers on Vijay completing 28 years in the industry

புலி‌ வருது.. புலி வருதுனு சொன்னாங்க .. இப்போ சிங்கமே வந்துருச்சு… ரஜினி கட்சிக்கு லிங்குசாமி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாழ்த்து

புலி‌ வருது.. புலி வருதுனு சொன்னாங்க .. இப்போ சிங்கமே வந்துருச்சு… ரஜினி கட்சிக்கு லிங்குசாமி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth lingusamyநடிகர் ரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை 2017 டிசம்பரில் தான் அறிவித்தார்.

ஆனால் கடந்த 25 வருடங்களாகவே அரசியலுக்கு அவர் வருவாரா? எப்போது வருவார்? என கேள்வி கேட்டனர்.

பின்னர் நாளடைவில் அவர் வரவே மாட்டார். புலி வருது… புலி வருது சொல்வாங்க.. அந்த கதை தான்.. ரஜினி வரவே மாட்டார் என கிண்டலடித்தனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தன் அரசியல் நிலைப்பாட்டை இன்று உறுதிப்படுத்தினார்.

அடுத்தாண்டு 2021 ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும் இதே ஆண்டில் டிசம்பர் 31-ம் தேதி கட்சி அறிவிப்பு வெளியாகும் எனவும் ட்விட்டரில் அறிவித்தார் ரஜினிகாந்த்.

“மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என கூறியிருந்தார்.

அப்போது… “தமிழக மக்கள் நலனுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை.

நான் வென்றால் அது மக்களின் வெற்றி, நான் தோற்றால் அது மக்களின் தோல்வி“ என்றார்.

இதனையடுத்து ரசிகர்கள் & பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

அனிருத், கார்த்திக் சுப்பராஜ், தேசிங்கு பெரியசாமி உள்ளிட்ட பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர்.

லிங்குசாமி தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது….

புலி‌ வருது .. புலி வருதுனு சொன்னாங்க ..
ஆனா இப்போ சிங்கமே வந்துருச்சு.
வாழ்த்துக்கள் சார்.
#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல

என பதிவிட்டுள்ளார் லிங்குசாமி.

Director lingusamy tweets about Rajinikanth’s political entry

#தமிழர்_நாட்டை_தமிழர்_ஆள்வோம்… ரஜினிக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்ட்..; யார் பார்த்த வேலை இது..?

#தமிழர்_நாட்டை_தமிழர்_ஆள்வோம்… ரஜினிக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்ட்..; யார் பார்த்த வேலை இது..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthபொதுவாக ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கடுமையாக விமர்சிப்பவர் சீமான்.

இன்று நடிகர் ரஜினிகாந்த் தன் அரசியல் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார்.

அடுத்தாண்டு 2021 ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும் இதே ஆண்டில் டிசம்பர் 31-ம் தேதி கட்சி அறிவிப்பு வெளியாகும் எனவும் ட்விட்டரில் அறிவித்தார் ரஜினிகாந்த்.

“மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என கூறியிருந்தார்.

அப்போது… “தமிழக மக்கள் நலனுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை.

நான் வென்றால் அது மக்களின் வெற்றி, நான் தோற்றால் அது மக்களின் தோல்வி“ என்றார்.

இதனையடுத்து தமிழக அரசியல் களம் பரபரப்பானது.

இந்த நிலையில் சற்றுமுன்.. ரஜினிக்கு எதிராக சீமானின் நாம் தமிழர் கட்சியினர் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

#தமிழர்_நாட்டை_தமிழர்_ஆள்வோம் என பதிவிட்டு வருகின்றனர்.

NTK party twerts againt Rajinikant political entry ?

‘கன்னிராசி’ படத்தின் தடை நீங்கியது.; டிசம்பர் 4 முதல் தியேட்டர்களில் ரிலீஸ்.!

‘கன்னிராசி’ படத்தின் தடை நீங்கியது.; டிசம்பர் 4 முதல் தியேட்டர்களில் ரிலீஸ்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kanni Raasiகிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’.

இதில் விமல் கதாநாயகனாகவும், வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.

காதல், காமெடி, மற்றும் குடும்ப பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படம் கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாகவே வெளியாக இருந்தது.

தியேட்டர்கள் திறந்தவுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் ‘மீடியா டைம்ஸ்’ நிறுவனத்திற்கும், கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனர் ஷமீன் இப்ராஹிமுக்கும் விநியோக உரிமையில் பிரச்சனை ஏற்பட்டு தடை வழங்கப்பட்டது.

தற்போது மீடியா டைம்ஸ் நிறுவனத்திற்கும், கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனர் ஷமீன் இப்ராஹிமுக்கும் இடையே சுமூக முடிவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கன்னிராசி திரைப்படம் டிசம்பர் 4ம்தேதி (நாளை) தியேட்டரில் வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

Official : Family drama Kanni Rasi to hit the screens tomorrow

JUST IN ரஜினி கட்சியில் முக்கிய பொறுப்புகள்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

JUST IN ரஜினி கட்சியில் முக்கிய பொறுப்புகள்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arjuna Murthyஅடுத்தாண்டு 2021 ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும் இதே ஆண்டில் டிசம்பர் 31-ம் தேதி கட்சி அறிவிப்பு வெளியாகும் எனவும் ட்விட்டரில் அறிவித்தார் ரஜினிகாந்த்.

“மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என கூறியிருந்தார்.

போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது… “தமிழக மக்கள் நலனுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை.

நான் வென்றால் அது மக்களின் வெற்றி, நான் தோற்றால் அது மக்களின் தோல்வி“ என்றார்.

இதனையடுத்து தமிழக அரசியல் களம் பரபரப்பானது.

இந்த நிலையில் சற்றுமுன்..
அதிகாரப்பூர்வ அறிவிப்பு என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பை ரஜினிகாந்த் சற்றுமுன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

யார் இந்த அர்ஜுனமூர்த்தி..?

அர்ஜூன மூர்த்தி திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் குடும்பத்திற்கு நெருக்கமான உறவினர் ஆவார்.

ஆரம்ப காலத்தில் திமுக எம்.பி தயாநிதிமாறன் உடன் பணியாற்றி வந்தார்.

அதன்பின் பாஜகவின் அறிவுச்சார்பு தலைவராக இருந்தார்.

தற்போது ரஜினியுடன் சேர்ந்ததால், அர்ஜூன மூர்த்தியை பாஜக கட்சியிலிருந்து நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Arjuna Murthy appointed as chief coordinator for Rajinikanth’s party

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸின் அடுத்த படைப்பு ‘ரூபம்’

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸின் அடுத்த படைப்பு ‘ரூபம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்றைய வேகமான உலகில் அடுத்து என்ன என்று ஓடிக் கொண்டே இருக்கிறோம்.

அப்படியான வேகமான வாழ்க்கையால், பார்க்கும் கதையிலும் த்ரில்லர் வகை படங்களையே அதிகம் எதிர்நோக்குகிறோம்.

அதனாலே வித்தியாசமான த்ரில்லர் வகை படங்கள் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது

அந்த வரிசையில் இணைகிறது ‘ரூபம்’. எப்போதுமே கதைக்கு முக்கியத்துவம் அளித்து, அது கேட்கும் பிரம்மாண்டத்தை வழங்கி வரும் நிறுவனம் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ்.

அறம் தொடங்கி சமீபத்திய க/பெ ரணசிங்கம் வரையில் அந்நிறுவனம் தொடர்ச்சியாக வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் தாமரை செல்வன் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, உடனே தயாரிப்பில் இறங்கியுள்ளது.

அடுத்த காட்சியை யூகிக்க முடியாத அளவுக்கு சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் பாணியில் ‘ரூபம்’ தயாராகவுள்ளது.

இதில் பார்வதி நாயர் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

த்ரில்லர் படங்கள் என்றாலே தொழில்நுட்பக் கலைஞர்கள் பிரதானமாக இருக்க வேண்டும். ‘ரூபம்’ கதைக்கு அழகு சேர்க்க ஒளிப்பதிவாளராக சுதர்சன் ஸ்ரீனிவாசன், இசையமைப்பாளராக ஜிப்ரான், சண்டைக் காட்சிகளுக்கு இயக்குநராக பீட்டர் ஹெய்ன், எடிட்டராக சரத்குமார், கலை இயக்குநராக கோபி ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

‘ரூபம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளில் படக்குழு பணிபுரிந்து வருகிறது. இதில் பார்வதி நாயருடன் முன்னணி இந்தி நடிகர் ஃப்ரெடி டாருவாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

அவர் தமிழில் ஒப்பந்தமாகியுள்ள முதல் படம் இதுவாகும். இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

2021ம் ஆண்டில் த்ரில்லர் ரசிகர்களுக்கு ஒரு அறுசுவை விருந்துக் காத்திருக்கிறது என்று உறுதியாக நம்பலாம்.

KJR studios next film is titled Rubam

Rubam

More Articles
Follows