சிவகார்த்திகேயன் – உதயநிதி பட இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி

சிவகார்த்திகேயன் – உதயநிதி பட இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் & ஹன்சிகா இணைந்து நடித்த படம் ‘மான் கராத்தே’.

உதயநிதி & எமி ஜாக்சன் இணைந்த படம் ‘கெத்து’.

இந்த இரு படங்களையும் இயக்கியவர் திருக்குமரன்.

இவர் தற்போமு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் மனைவிக்கும் தொற்று இருப்பதால் அவர் தன் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Sivakarthikeyan and Udhayanidhi film director admitted in hospital

‘சலார்’ படத்தில் கேஜிஎஃப் கூட்டணி.; பிரபாஸுக்கு வில்லனாக ‘அண்ணாத்த’ வில்லனும் இணைந்தார்

‘சலார்’ படத்தில் கேஜிஎஃப் கூட்டணி.; பிரபாஸுக்கு வில்லனாக ‘அண்ணாத்த’ வில்லனும் இணைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹோம்பாலே பிலிம்ஸ் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கும் ‘சலார்’ படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர் ஜெகபதி பாபு ஏற்றிருக்கும் ராஜமன்னார் என்ற கதாபாத்திரத்தின் போஸ்டரை அப்பட நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

‘கே ஜி எஃப் சாப்டர் ஒன்’ மற்றும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் ‘சலார்’.

நடிகர் பிரபாஸ், நடிகை சுருதிஹாசன் நடிப்பில் மாஸான ஆக்சன் அட்வென்ச்சர் திரைப்படமாக ‘சலார்’ உருவாகிறது.

இன்று ‘சலார்’ படக்குழுவினர், புதிய அப்டேட்டை வெளியிட்டனர். இதில் தெலுங்கின் முன்னணி நடிகரான ஜெகபதிபாபு ‘ராஜமன்னார்’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர் ‘அண்ணாத்த’ படத்திலும் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் மிரட்டலான லுக், போஸ்டராக வெளியிடப்பட்டிருக்கிறது.

‘சலார்’ படத்தில் இடம்பெறும் ராஜமன்னார் கதாபாத்திரம், கதையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதனை போஸ்டர் மூலம் வெளிப்படுத்துவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரிக்கும்.

அத்துடன் இந்த கேரக்டர் லுக் போஸ்டர், ‘சலார்’ படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தும்.
‘கே ஜி எஃப்’ படத்தின் முதல் இரண்டு பாகங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்திருக்கும் படத்தின் இயக்குனர் பிரசாத் நீல் மற்றும் பட நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ், இப்படத்தின் 20 சதவீத படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பதாகவும், மீதமுள்ள படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும்’என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

மேலும் இப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு, இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
ராஜமன்னாரின் போஸ்டர் குறித்து தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பேசுகையில்,’ சலார் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இன்று வெளியிடப்பட்டிருக்கும் ‘சலார்’ படத்தின் புதிய போஸ்டரில், நடிகர் ஜெகபதிபாபு ஏற்றிருக்கும் ராஜமன்னார் என்ற கதாபாத்திரத்தின் தோற்றம் மிரட்டலாக அமைந்திருக்கிறது.

இது ரசிகர்களுக்கு ராஜமன்னார் கதாபாத்திரம் குறித்த கற்பனை கலந்த எதிர்பார்ப்பை உருவாக்கும். இப்படத்தின் திரைக்கதையில் பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும் இந்த கதாபாத்திரம் குறித்த அறிவிப்பை போஸ்டராக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.’ என்றார்.

இதுதொடர்பாக இயக்குனர் பிரசாந்த் நீல் பேசுகையில்,…

‘ சலார் படத்தில் இடம்பெற்றுள்ள மேலும் சில கதாபாத்திரங்களை பற்றிய லுக், படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் தருணங்களில் வெளியிடப்படும்.’ என்றார்.

Hombale Films’ ‘SALAAR’ poster reveal: Jagapathi Babu to feature in the mass action adventure as Rajamanaar

SALAAR

நட்டி நடிக்கும் ‘வெப்’ பட சூட்டிங் ஸ்பாட்டில் தயாரிப்பாளரின் பர்த் டே பார்ட்டி

நட்டி நடிக்கும் ‘வெப்’ பட சூட்டிங் ஸ்பாட்டில் தயாரிப்பாளரின் பர்த் டே பார்ட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்திற்கு ‘வெப்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார். ‘வேலன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் வி.எம். முனிவேலன் அவர்களின் பிறந்தநாள் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடப்பட்டது.

4 நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் ‘காளி’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படங்களில் நாயகியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் முதன்மை நாயகியாக நடிக்கிறார்.

‘எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்’ படத்தில் நடித்த ஷாஸ்வி பாலா, ‘முந்திரி காடு’ & ‘கண்ணை நம்பாதே’ படங்களில் நடித்த சுபப்ரியா மலர் மற்றும் விஜே அனன்யா மணி ஆகியோர் மற்ற 3 நாயகிகளாக நடிக்கிறார்கள்.

படத்தின் முக்கிய வேடங்களில் ‘பிளாக் ஷீப்’ நந்தினி, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார்.

கலை இயக்குனர் பொறுப்பை அருண் ஏற்க, இந்த படத்தின் நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் பணியாற்றுகிறார்.

சண்டைப்பயிற்சி: ஃபயர் கார்த்திக்
ஆடை வடிவமைப்பு : டோரத்தி ஜெய்
நிர்வாக தயாரிப்பு: நசீர் & கே.எஸ்.கே செல்வா

Producer VM Muni velan birthday celebration at Web shooting spot

அர்ஜூன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் & தேதி இதோ..

அர்ஜூன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் & தேதி இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய டிவி நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி படு பிரபலமான ஒன்று. இது அனைத்து மொழிகளிலும் ஒளிப்பரப்பாகி வருகிறது.

எனவே இதற்கு இணையாக ‘சர்வைவர்’ என்ற புதிய நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக உள்ளது.

இந்த ‘சர்வைவர்’ நிகழ்ச்சி விரைவில் ஜீ டிவியில் செப்டம்பர் 12 இரவு 9.30 மணியளவில் ஆரம்பமாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார்.

இதில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் ஒரு தனித்தீவில் விடப்படுவார்கள்.

அங்கு பலவிதமான சவால்கள் இருக்கும். அதில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் 8 பேர் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 3 நடிகர்கள், 3 நடிகைகள் மற்றும் ஒரு நடன இயக்குனர், ஒரு டிவி தொகுப்பாளர் என கலந்துக் கொள்கின்றனர்.

‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் விவரம் இதோ…

1. நடிகர் விக்ராந்த்

2. நடிகர் நந்தா

3. நடிகர் உமாபதி (நடிகர் தம்பி ராமையா மகன்)

4. நடன இயக்குனர் பெசண்ட் ரவி

5. யூடியுப் தொகுப்பாளினி பார்வதி

6. நடிகை காயத்ரி ரெட்டி (பிகில் நடிகை)

7. நடிகை விஜயலட்சுமி

8. நடிகை ஸ்ருஷ்டி டாங்கே

International Survivor reality show in Tamil Host and Telecast updates

After Bigg Boss and Masterchef, the reality show Survivor, which became a huge hit in several countries, is coming to Tamil. The show, which will premiere on Zee Tamil, will be hosted by actor Arjun.

உலகநாயகன் கமல்ஹாசனுடன் முதன்முறையாக இணையும் சூர்யா

உலகநாயகன் கமல்ஹாசனுடன் முதன்முறையாக இணையும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகநாயகன் கமல்ஹாசனும், சூர்யாவும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான அமல் நீரத் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அண்மையில் அமல் நீரத் அளித்துள்ள பேட்டியில்…

“கமல்ஹாசனையும், சூர்யாவையும் மனதில் வைத்து கதை எழுதி இருக்கிறேன்.

இருவரிடமும் கதை சொல்லி விட்டேன்.

இருவரும் இணைந்து நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

எனவே தற்போது திரைக்கதைக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

Kamal and Suriya joins hands together for the first time

அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போனது யாஷ் நடித்துள்ள ‘கே.ஜி.எஃப் 2’ பட ரிலீஸ்

அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போனது யாஷ் நடித்துள்ள ‘கே.ஜி.எஃப் 2’ பட ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னட நடிகரான யஷ் நடித்து வரும் படம் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’.

இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் ‘கே.ஜி.எஃப் 2’ வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் 2022 அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி கே.ஜி.எஃப்2 திரைப்படம் ரிலீசாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை கவனித்துக் கொண்டே, பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்தையும் இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கே.ஜி.எப் சேப்டர் 1 படமானது டிசம்பர் 2018ல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

KGF Chapter 2 release date announcement

More Articles
Follows