தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நாயகி அனு இம்மானுவேல் பேசும்போது…
“25 படங்கள் நடித்த கார்த்தியின் மிகப்பெரிய வெற்றிக்காக நான் அவரை வாழ்த்துகிறேன். இதற்கு முன்பு அவர் நடித்த படங்களிலிருந்து ஜப்பான் திரைப்படம் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். நிமிடத்திற்கு நிமிடம் மாறும் மேனரிசங்கள் மற்றும் உடல் மொழியுடன் அவர் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான வசன உச்சரிப்பை வழங்கி இருக்கிறார்.
படப்பிடிப்பின் போது எனக்கு உடல்நிலை சரியில்லாத சூழலில் அவர் என்னை அக்கறையுடன் கவனித்துக் கொண்டார். இந்த வாய்ப்பை கொடுத்ததற்காக இயக்குனர் ராஜூ முருகனுக்கு நன்றி” என்று கூறினார்.
இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் பேசும்போது….
“கார்த்தி சாருடன் என்னுடைய முதல் படமாக ஆயிரத்தில் ஒருவன் இருந்தது. அதன்பிறகு கொம்பன், சர்தார் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றி இருந்தோம். தற்போது மீண்டும் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளதில் தான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தில் அருமையான மெலோடி பாடல்களிலும் பின்னணி இசையிலும் சற்று தனித்தன்மை கொண்டதாக இருக்கும் வகையில் சில விஷயங்களை முயற்சித்திருக்கிறோம்.
சூரரைப்போற்று படத்திற்கு பிறகு புறநானூறு படத்தில் சூர்யா சாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்ததற்காக மொத்த படக்குழுவுக்கும் எனது நன்றி” என்று கூறினார்.
Karthi took care of me during my illness says Anu immanuel