விஜய்க்காக வயலின் வாசித்த பெண்குயின்; குத்து பாட்டு ஆடிய சதீஷ்

விஜய்க்காக வயலின் வாசித்த பெண்குயின்; குத்து பாட்டு ஆடிய சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay birthdayநடிகர் விஜய் நேற்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவருக்கு சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

நடிகர் சதீஷும், டிவி தொகுப்பாளினி பாவனாவும் விஜய்யின் 5 பாடல்களுக்கு 5 விதமான காஸ்ட்யூம்களுடன் செம ஆட்டம் போட்டுள்ளனர். இறுதியாக ஹாப்பி பர்த்டே விஜய் சார் என வாழ்த்தியுள்ளனர்.

இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அதுபோல் அண்மையில் பெண்குயின் படத்தில் நடித்திருந்த கீர்த்தி சுரேஷ், குட்டி ஸ்டோரி பாடலை வயலின் வாசித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

விஜய் சதீஷ் கீர்த்தி சுரேஷ் ஆகிய மூவரும் பைரவா படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/bhavnabalakrishnan/

கபாலி பட நடிகைக்கு கிடைத்த சிறந்த மிட்நைட் குறும்பட விருது

கபாலி பட நடிகைக்கு கிடைத்த சிறந்த மிட்நைட் குறும்பட விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

radhika apteபாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே.

இவர் ரஜினிக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்திருந்தார்.

இவர் அண்மையில் ‘தி ஸ்லீப்வாக்கர்ஸ்’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். தூக்கத்தில் நடப்பவர்களை பற்றிய கதை இது.

இதில் சஹானா கோஸ்வாமி, குல்ஷன் தேவ்யா உள்ளிட்டோர் நடிக்க ராதிகா ஆப்தேவின் கணவர் பெனிடிக்ட் டெய்லர் இசையமைத்திருந்தார்.

இவரது குறும்படம் பாம் ஸ்பிரிங்ஸ் சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த மிட்நைட் குறும்படத்துக்கான விருதினை பெற்றுள்ளதாக ராதிகா ஆப்தே தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Flixdaa totally FREEdaa… தமிழில் ஒரு புதிய ஓடிடி டிஜிட்டல் தளம்

Flixdaa totally FREEdaa… தமிழில் ஒரு புதிய ஓடிடி டிஜிட்டல் தளம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

flixdaaFlixdaa தமிழில் புதிதாக துவங்கப்பட்டிருக்கும் இணைய வீடியோ ஓடிடி தளம். எண்ணற்ற புதிய தமிழ் வீடியோக்கள் இந்த தளத்தில் உள்ளது.

உலகத்தரமான சீரிஸ்கள், திரைப்படங்கள், குறும்படங்கள், ஸ்டேண்டப் காமெடி எனும் இடைவிடாத நகைச்சுவை நிகழ்ச்சி, இசை ஆல்பங்கள், குறு நகைச்சுவை துணுக்கு வீடியோக்கள், சமையல் வீடியோக்கள் என கணக்கிலடங்கா எண்ணற்ற வீடியோக்களை கொண்டிருக்கிறது இந்த புதிய தளம். இணையத்தின் எந்த ஒரு இயங்குதளத்தின் மூலமும் www.flixdaa.com முகவரி வழியே இந்த தளத்தை காணலாம்.

அல்லது மொபைல் வழியே ஆண்ட்ராய்ட் ஆப் மற்றும் தொலைக்காட்சி/ Amazon Fire Tv ஆப் மூலமும் காணலாம். முற்றிலும் புதுமைகளை புகுத்தியுள்ள புரட்சிகரமான இந்த புதிய தளம் உலகம் முழுதுமான இந்திய ரசிகர்கர்களுக்கும் சுயாதீன கலைஞர்களுக்கு ஏற்றதொரு தளமாக உள்ளது.

Covid -19 சர்வதேச பரவல் உலகையே பாதித்திருக்கிறது.

பல நாடுகள் இன்னும் பொதுமுடக்கத்தில் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் பார்த்த இணைய தொடர்கள் மற்றும் படங்கள் மூலம் சலிப்படைந்துள்ள பார்வையாளர்களுக்கு Flixdaa ஒரு அற்புதமான புதிய அனுபவத்தை வழங்குகிறது.

எண்ணிலடங்கா புதிய கதைகளை Flixdaa வில் பாருங்கள். இந்த சூழலில் வீட்டிலிருங்கள், பாதுகாப்பாக இருந்து Flixdaa வில் புத்தம் புதிய தமிழ் தொடர்கள், திரைப்படங்களை கண்டுகளியுங்கள்.

இத்தளத்தில் உள்ள நிகழ்ச்சிகள், தொடர்கள், படங்கள் இந்த தளத்தில் மட்டுமே ப்ரத்யேகமாக கிடைக்க கூடியவை. வேறு எந்த ஒரு தளத்திலும் அதனை நீங்கள் காண முடியாது. கிட்டதட்ட இத்தளத்திலுள்ள அனைத்துமே நீங்கள் வேறெங்குமே கண்டிராத புதிதான கதைகளே. உங்கள் மொபைலில் வீட்டில் இடம்பிடிக்கும் அடுத்த மிகப்பெரும் பொழுதுபோக்கு ஆப் இந்த Flixdaa .

Flixdaa is FREEdaa !. Flixdaa தளத்தை முழுதும் இலவசமாகவே அணுகலாம்.

இத்தளத்தில் உங்கள் மெயில் ஐடியை பகிர்ந்து உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ரகசிய குறியீட்டு எண்ணை உள்ளிடுவதன் மூலம் நீங்கள் முழுமையாக இத்தளத்தை இலவசமாக அணுகலாம். இத்தளத்தின் அனைத்து தொடர்கள், திரைப்படங்கள் அனைத்தும் இலவசமே.

இத்தளத்தில் அனைத்து வயதினருக்கும் ஏற்ற நிகழ்ச்சிகள் உள்ளன. அதே நேர்த்தில் மற்ற ஓடிடி தளங்களில் வயது வரம்பு கடைப்பிடிக்கப்படுவது போலவே இதிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆனால் Flixdaa வில் ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது இத்தளத்தில் குழந்தைகளுக்கென்றே உருவாக்கப்பட்ட புதிய நிகழ்ச்சிகள், தொடர்கள் ப்ரத்யேகமான விளையாட்டு நிகழச்சிகள் இருக்கிறது.

உங்கள் விருப்பமான, பிரபலங்களின் நேரடி நிகழச்சிகளை மிகவிரைவில் Flixdaa Live வழியே நேரடியாவே காணலாம்.

Flixdaa தற்போது Google play store, Android Tv, Fire Tv, Apple store ஆகியவற்றில் கிடைக்கிறது. தரவிறக்க வசதியுடன் இணையமற்ற நேரத்தில் கண்டுகளிக்கும் வசதியும் இதில் உள்ளது.

எனவே நீங்கள் இப்போது எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் Flixdaa வுடன் பொழுதை கழிக்கலாம். Flixdaa is FREEdaa !!

மகேஷ் பாபு-கீர்த்தி சுரேஷ் ஜோடிக்கு வில்லனாக அரவிந்த் சாமி..?

மகேஷ் பாபு-கீர்த்தி சுரேஷ் ஜோடிக்கு வில்லனாக அரவிந்த் சாமி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mahesh babu and arvind swamy20 வருடங்களுக்கு முன்பு அழகான ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் அரவிந்த் சாமி.

சில ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார்.

தற்போது வில்லனாக சில படங்களிலும் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதற்கு முன்பே தனி ஒருவன் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருந்தார்.

தற்போது மகேஷ் பாபுவின் தெலுங்கு படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

பரசுராம் இயக்கவுள்ள சர்காரு வாரி பாட்டா எனும் படத்தில் மகேஷ் பாபு நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்த ஜோடிக்கு வில்லனாக அரவிந்த் சுவாமி நடிக்க தான் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

போலீஸ் லாக்அப்பில் தந்தை-மகன் கொலை.; அதிகார துஷ்பிரயோகம் என கமல் கண்டனம்

போலீஸ் லாக்அப்பில் தந்தை-மகன் கொலை.; அதிகார துஷ்பிரயோகம் என கமல் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Father son die in judicial custody in Sattankulam Kamal Condemns TN Policeதூத்துக்குடி, சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை ஒன்றை நிர்வகித்து வந்துள்ளார்.

கடந்த 19ஆம் தேதி (கொரோனா ஊரடங்கு சமயத்தில்) கடையை கூடுதல் நேரமாக திறந்து வைத்துள்ளதாக அங்கு சென்ற போலீஸ் அவரை திட்டியுள்ளனர்.

மாலை 7.30 மணிக்கு சாத்தான்குளம் 2 எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோர் அப்போது அங்கு இருந்துள்ளனர்.

ஜெயராஜ்க்கும் போலீசுக்கும் வாக்குவாதம் தொடர “ஸ்டேஷனுக்கு வா” என ஜீப்பில் அழைத்து சென்றுள்ளனர்.

இந்த விஷயம் ஜெயராஜ் மகன் பென்னிஸ்க்கு தெரிய வரவே அவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளார்.

“என் அப்பாவை ஏன் கூட்டிட்டு வந்தீங்க” என 2 எஸ்ஐ-க்களிடமும் கேள்வி கேட்டுள்ளார்.

இதனையடுத்து முன்பே ஜெயராஜை போலீஸார் தாக்கியதாக தெரிகிறது.

இதனால் கடுப்பான பென்னிக் போலீசாரிடம் மீண்டும் கேள்வி கேட்க அவரையும் லத்தியால் அடித்துள்ளனர்.
இதனையடுத்து 21ஆம் தேதி தந்தை – மகன் இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டு கோவில்பட்டி ஜெயிலில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று நெஞ்சுவலிப்பதாக பென்னிக்ஸ் கூற கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் வழியிலேயே பென்னிக்ஸ் உயிரிழந்துள்ளார். அடுத்து நாள் அதாவது இன்று காலை தந்தை ஜெயராஜும் உயிரிழந்தார்.

அப்பா மகன் என இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளத்தில் போலீஸாரைக் கண்டித்து வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சாத்தான்குளம் போலீசார் மீது நடவடிக்கை என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
s
இந்த நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

உயிரிழப்புகளைத் தடுக்க ஊரடங்கு, அதன் விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம். மனித உரிமை மீறல், அதிகார துஷ்பிரயோகம், மன அழுத்தம் என காவல் துறையின் சட்டமீறல்கள் பல உள்ளன. சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம்.

இவ்வாறு கமல் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் வெளியிட்ட அறிக்கையில்…

‘பெனிக்ஸ் என்பவரும், அவரது தந்தை ஜெயராஜ் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த படுகொலையை கண்டித்து நாளை ஒரு நாள் தமிழகம் முழுவதும் வியாபாரிகள் கடையடைத்து நம்முடைய எதிர்ப்பை தெரியப்படுத்த வேண்டும்.

Father son die in judicial custody in Sattankulam Kamal Condemns TN Police

A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியல.; கமல் ஆதங்கம்

A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியல.; கமல் ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanதமிழ்நாட்டை உலுக்கிய சம்பவங்கள் பல உண்டு. அதில் உடுமலைபேட்டை சங்கர் ஆணவக் கொலையும் ஒன்று,

இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டுள்ளார். மற்ற 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட 3 பேரின் விடுதலையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

விடுதலையை எதிர்த்து காவல் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதுமட்டுமில்லாமல், ஒருவருக்கு விதித்த ஆயுள் தண்டனை, மற்றொருவருக்கு விதித்த 5 ஆண்டு சிறை தண்டனையும் ரத்து செய்துள்ளது.

இது குறித்து கமல் கூறியுள்ளதாவது.. “ஆணவக் கொலைகள் நம் சமுதாயத்தில் புரையோடியிருக்கும் நச்சுகளின் அடையாளம். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது அரசின் கடமை. தமிழகத்தையே உலுக்கிய கொலையில் A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லை என்பது யார் தவறு?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

More Articles
Follows