பாலிவுட் சூப்பர் கான்-களை மீண்டும் ஒரே படத்தில் இணைக்க முருகதாஸ் திட்டம்

பாலிவுட் சூப்பர் கான்-களை மீண்டும் ஒரே படத்தில் இணைக்க முருகதாஸ் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கத்தி – துப்பாக்கி – சர்க்கார்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களை விஜய்க்கு கொடுத்தவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.

ரஜினிக்கு ‘தர்பார்’ அஜித்துக்கு ‘தீனா’ உள்ளிட்ட படங்களையும் கொடுத்துள்ளார்.

ரஜினியின் ‘தர்பார்’ படத்திற்கு பிறகு ஏ ஆர் முருகதாஸுக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லை.

இதன் பின்னர் விஜய்யை இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த படம் கைவிடப்பட்டது.

பிறகு தெலுங்கு சினிமாவில் முருகதாஸ் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வந்தன. ஆனால் அது பற்றி அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ஏ ஆர் முருகதாஸின் அடுத்த படம் எது? ஹீரோ யார்? என்ற சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் நடிகர்கள் சல்மான்கான் மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவரையும் இணைத்து ஒரு படத்தில் இயக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தற்போது இது ஆரம்ப கட்டப் பேச்சு வார்த்தையில் மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே 1995ல் ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் ‘கரண் அர்ஜூன்’ படத்தில் ஷாருக்கான் சல்மான் கான் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

மேலும் ‘குச் குச் ஹோதா ஹை’, ‘ஹம் தும்ஹாரே ஹை சனம்’ ஆகிய படங்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தனர்.

கூடுதல் தகவல்கள்..

15 வருடங்களிக்கு முன்பு அமீர்கானை வைத்து தமிழில் சூப்பர் ஹிட்டான ‘கஜினி’ படத்தை ஹிந்தியில் இயக்கி இருந்தார் முருகதாஸ்.

தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகும் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார் ஷாருக்கான்.

அதுபோல பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். லான்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ளார்.

இந்த வரிசையில் பாலிவுட் நடிகர்கள் தமிழ் இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

AR Murugadoss plans to reunite Bollywood Super Khans in one film

சேரி மக்கள்.. கெட்ட வார்த்தைகள்.. சினிமாவுக்காக மாற்ற முடியாது.; பார்த்திபன்-பிரிகிடா மன்னிப்பு கேட்டனர்

சேரி மக்கள்.. கெட்ட வார்த்தைகள்.. சினிமாவுக்காக மாற்ற முடியாது.; பார்த்திபன்-பிரிகிடா மன்னிப்பு கேட்டனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த 15-ம் தேதி வெளியானது.

இது நான் லீனியர் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் பிரிகிடா, வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகிறது. ஒரு நல்ல படைப்பை கொடுக்கும்போது அதில் ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள் தேவையா ? என்று நம் FILMISTREET விமர்சனத்தில் தெரிவித்திருந்தோம்.

ரிலீஸ் ஆன பின்னும் இந்த படத்தை பிரமோட் செய்யும் பணியில் பார்த்திபன் ப்ரீகிடா உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாநகரில் முக்கியமான வீதிகளில் தங்கள் கார்களில் நின்றபடியே இந்த படத்தை பற்றி இவர்கள் பேசும் வீடியோவும் வைரலாகி வருகின்றது.

இதனிடையில்ஒரு பேட்டியில் நடிகை பிரகிடா… ”இரவின் நிழல் படம் ஒரு தனிமனிதன் பற்றிய கதை.

நாயகனின் வாழ்க்கையில் வெறும் கெட்டது மட்டுமே நடந்துள்ளது. அதை ராவாகத்தான் சொல்ல முடியும்.

குடிசைவாழ் பகுதிக்குச் சென்றால், அந்த மாதிரியான கெட்ட வார்த்தைகளை மட்டும்தான் கேட்க முடியும். அவர்கள் அப்படிதான் பேசுவார்கள் அதை சினிமாவுக்காக “மாற்ற முடியாது” எனப் பேசியிருந்தார்.

பிரிகிடாவின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைத்தங்களில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இதனையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்…

”நான் கூறிய வார்த்தைகளுக்கு இதயபூர்வமாக மன்னிப்புக் கேட்டுகொள்கிறேன்.

ஒரு இடத்தை பொறுத்து மொழி மாறுபடும் என்றுதான் கூற வந்தேன், ஆனால் அது இப்படி தவறாக மாறி புரிந்துக் கொள்ளப்பட்டது. என்னை மன்னித்து விடுங்கள்” என பதிவிட்டிருந்தார்.

My hearty sorry for telling those words!
I just tried to convey that… As the location changes, the language also changes in iravin nizhal film.I took a wrong example which I’m feeling so bad for saying that!
#acceptmyappologies.
Just a normal girl who’s trying to acheive infilm.

Brigida சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம்.1989-ல் நடக்கும் கதையிது.2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம்,கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால்.என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை hero ஆக்குவதே!

இவ்வாறு பார்த்திபனும் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Slum people.. Bad words.. Can’t be changed for cinema.; Parthiban-Brigida apologized

‘ஜெய்பீம்’ பட விவகாரம் : சூர்யா மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஐகோர்ட் உத்தரவு

‘ஜெய்பீம்’ பட விவகாரம் : சூர்யா மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஐகோர்ட் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் தயாரித்து சூர்யா நடித்து, ஞானவேல் இயக்கிய படம் ‘ஜெய்பீம்’.

இந்தப் படத்தில் நீதி அரசர் சந்துரு கேரக்டரில் நடித்திருந்தார் சூர்யா.

தியேட்டர்களில் வெளியாகாமல் இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.

1990களில் கடலூரில் வாழ்ந்த ராசா கண்ணு – பார்வதி அம்மாள் ஆகியோரின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தை படமாக்கி இருந்தனர்.

பொய் வழக்கு போடும் போலீசாருக்கு நீமிமன்றம் கொடுத்த சாட்டையடி படமாக இந்த படம் அமைந்திருந்தது.

ஆனால் படத்தில் இந்து வன்னியர் சமூகமக்களின் மனதை புண்படுத்தும் வகையில், அவர்களை இழிவுபடுத்தியும், பிறமக்களின் மனதில் வெறுப்பை
உருவாக்கும் வகையிலும் அவர்கள் வழிபடும் அக்கினி குண்டத்தையும்;
மகாலட்சுமியையும்; அவர்கள் வணங்கும் குருவின் பெயரை இழிவுபடுத்தியும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 8ல் அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் வேளச்சேரி போலீசார், நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.

அந்த மனுவில், இந்த புகாரை தாக்கல் செய்யும் முன்பே படத்தில் காலண்டர் இடம் பெற்றுள்ள சர்ச்சை காட்சி நீக்கப்பட்டுள்ளதாகவும், வன்னிய சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது…

புகார்தாரர் தரப்பில், வழக்கை ரத்து செய்ய ஆட்சேபம் தெரிவித்து இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த இடையீட்டு மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இதை ஏற்று சூர்யா மற்றும் ஞானவேல் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூலை 21ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை இந்த வழக்கில் கடும் நடவடிக்கை எதுவும் எடுக்க கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

‘Jaibhim’ film issue: Court orders not to take strict action against Actor Suriya

லைலா-வை கொன்றது யார்.? ‘கொலை’ விசாரணையில் துப்பறியும் விநாயக் & அப்ரண்டிஸ் சந்தியா

லைலா-வை கொன்றது யார்.? ‘கொலை’ விசாரணையில் துப்பறியும் விநாயக் & அப்ரண்டிஸ் சந்தியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைலா-வை கொன்றது யார் எனும் ஹேஸ்டேக் சமூக வலை தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

கொலை படம் குறித்து பரவும் இந்த செய்தி திரைப்பட ஆர்வம் இல்லா பொது ரசிகர்களுக்கும், படத்தின் மீது பெரும் ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது.

Infiniti Film Ventures நிறுவனம் Lotus Pictures உடன் இணைந்து தயாரிக்க,
பாலாஜி K குமார் எழுதி இயக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.

‘கொலை’ திரைப்படம் கடந்த ஒரு வாரமாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. இந்த ‘கொலை’ சஸ்பென்ஸ் மர்ம திரைப்படத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய கதாபாத்திரங்களை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர்களின் புதுமையான முயற்சிக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.

கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் இந்த புதுமையான முயற்சி மீனாட்சி சவுத்ரி நடித்த ‘லீலா’ கதாபாத்திரத்தின் அறிமுகத்துடன் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து, பான்-இந்திய பரபரப்பான நடிகர் முரளி சர்மா ‘தி ஏஜென்ட் ஆதித்யா பாத்திரத்திலும், ‘தி பாய்பிரண்ட், சதீஷ் பாத்திரத்தில் சித்தார்த்த ஷங்கர், ‘தி பாஸ், ரேகா’ பாத்திரத்தில் ராதிகா சரத்குமார் அவர்களும், ‘புகைப்படக்காரர் அர்ஜுன்’ பாத்திரத்தில் அர்ஜுன் சிதம்பரம், ‘மேனேஜர் பப்லு’ பாத்திரத்தில் கிஷோர் குமார் , ‘பக்கத்து வீட்டுக்காரர் வினோத் பாத்திரத்தில் சம்கித் போஹ்ரா, ‘தி காப் – மன்சூர் அலி கான்’ பாத்திரத்தில் ஜான் விஜய், ‘அப்ரண்டிஸ் சந்தியா’ பாத்திரத்தில் ரித்திகா சிங் ஆகியோருடன் ‘துப்பறியும் விநாயக்’ பாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.

கதாபாத்திரங்களைப் பற்றிய சரியான தெளிவை பார்வையாளர்களுக்கு அளிக்கும் வகையில், தயாரிப்பாளர்கள் ‘கொலை’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இது அதன் உயர்தர காட்சிகள், கதாபாத்திரங்களின் புதுமையான அறிமுகம், ஒரு அற்புதமான இசையில் பழைய எவர்க்ரீன் பாடலான . ‘புதிய பறவை’யிலிருந்து ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாடலோடு, நம்மை கட்டிப்போடும் அளவு ஆரவத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

தொழில்நுட்பக் குழு

எழுதி இயக்கியவர்: பாலாஜி K குமார்
பேனர்: Infiniti Film Ventures & Lotus Pictures
தயாரிப்பாளர்கள்: கமல் போஹ்ரா, G.தனஞ்சயன், பிரதீப் P, பங்கஜ் போஹ்ரா, டான்ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை, சித்தார்த்தா சங்கர் & RVS அசோக் குமார்
ஒளிப்பதிவு இயக்குனர்: சிவகுமார் விஜயன் இசையமைப்பாளர்: கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
எடிட்டர்: செல்வா R.K
கலை இயக்குனர்: K ஆறுசாமி
VFX மேற்பார்வையாளர்: ரமேஷ் ஆச்சார்யா ஒலி வடிவமைப்பு: விஜய் ரத்தினம் மறுபதிவு கலவை: A M ரஹ்மத்துல்லா
ஆடை வடிவமைப்பாளர்: ஷிமோனா ஸ்டாலின் ஸ்டண்ட் இயக்குனர்: மகேஷ் மேத்யூ
நடன இயக்குனர்கள்: சுரேஷ், மில்டன் ஒபதியா, சிராக் ரங்கா
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா-ரேகா (D’One)

Who killed Laila? Detective Vinayak & Apprentice Sandhya in ‘murder’ investigation

விஜய் டிவியில் பிரபலமான ரக்‌ஷன் சினிமாவில் ஹீரோவாகிறார்

விஜய் டிவியில் பிரபலமான ரக்‌ஷன் சினிமாவில் ஹீரோவாகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் பிரபலமான பல கலைஞர்கள் இன்று வெள்ளித்திரையில் உயர்ந்த இடத்தில் உள்ளனர்.

நடிகர்கள் சிவகார்த்திகேயன், சந்தானம் உள்ளிட்டோர் ஹீரோவாக உயர்ந்துள்ளனர். ரோபோ சங்கர், ஜெகன், புகழ் உள்ளிட்டோர் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் டிவி பிரபலமான ரக்சன் தற்போது நாயகனாக நடிக்கிறார்.. அந்த படத்தின் விவரம் வருமாறு..

பிலியா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் குவியம் மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்க,
இரா கோ யோகேந்திரன் இயக்கத்தில், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படப்புகழ் நடிகர் ரக்‌ஷன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் தனது தனித்த, நகைச்சுவை நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்த நடிகர் ரக்‌ஷன், நாயகனாக புதிய படத்தில் அறிமுகமாகிறார்.

உணர்வுபூர்வமான காதல், நட்பு, உறவுகளை மையமாக கொண்டு, அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகிறது.

கலக்கப்போவது யாரு தீனா, விஷாகா திமான், பிராங்க் ஸ்டார் ராகுல், மற்றும் பலர் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு, மலையாளத்தின் பிரபல இசையமைப்பாளர் சச்சின் வாரியர் இசையமைக்கிறார்.

தாமரை பாடல் வரிகளை எழுதுகிறார். கோபி துரைசாமி ஒளிப்பதிவு செய்ய, ‘அர்ஜூன் ரெட்டி’ படப்புகழ் செஷாங் மாலி படத்தொகுப்பு பணிகளை செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.

The shooting of actor Rakshan’s debut in the lead role is progressing at a brisk pace!

சூப்பர் ஹிட்டான 24 படத்தின் 2ம் பாகம் அப்டேட்: சூர்யா-விக்ரம் மீண்டும் கூட்டணி

சூப்பர் ஹிட்டான 24 படத்தின் 2ம் பாகம் அப்டேட்: சூர்யா-விக்ரம் மீண்டும் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மூன்று வேடங்களில் சூர்யா முதன்முறையாக நடித்த படம் ’24’. இதில் சூர்யாவே நாயகனாகவும் வில்லனாகவும் நடித்திருந்தார்.

நாயகிகளாக சமந்தா மற்றும் நித்யா மேனன் நடித்திருந்தனர்.

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை விக்ரம் குமார் இயக்க தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்திருந்தார் சூர்யா.

டைம் டிராவல் முறையில் உருவான இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருப்பதாக படத்தின் இயக்குநர் விக்ரம் குமார் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தற்போது தற்போது சூர்யா கைவசம்… வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல்.. சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜாவிற்காக ஒரு படம்.. பாலா இயக்கத்தில் வணங்கான்.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் 2, ஹிந்தி ரீமேக்கான சூரரைப் போற்று ஆகிய படங்கள் கைவசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya-Vikram team up again for 24 the movie sequel

More Articles
Follows