லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி-67 படத்தில் விஜய்க்கு ராசியான நடிகை

லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி-67 படத்தில் விஜய்க்கு ராசியான நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கணவரும் நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின்னர் சினிமாவில் பிஸியாகி விட்டார் நடிகை சமந்தா.

தற்போது சமந்தா கைவசம் குஷி, சாகுந்தலம், யசோதா உள்ளிட்ட படங்கள் உள்ளன.

தற்போது சகுந்தலம் பட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் மீண்டும் விஜய்யுடன் ஒரு படத்தில் சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

‘விக்ரம்’ படத்தை முடித்து விட்ட லோகேஷ் கனகராஜ் விரைவில் விஜய்யின் 67வது படத்தை இயக்கவிருக்கிறார் லோகேஷ்.

இந்த படத்தில் தான் நாயகியாக நடிக்க சமந்தாவிடத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

ஏற்கனவே கத்தி, தெறி, மெர்சல் போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படங்களில் விஜய் சமந்தா ரொமான்டிக் கெமிஸ்ட்ரி செமயாய் ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

எனவே இந்த ஜோடி மீண்டும் மீண்டும் இணைந்தால் ரசிகர்களுக்கும் குஷிதானே.

Vijay Samantha

This is the actress to work with Vijay again?

IIFA Rocks : கதிர் ஐஸ்வர்யா நடித்த ‘சுழல்’ படத்திற்கு கைகொடுத்த அபிஷேக் பச்சன்

IIFA Rocks : கதிர் ஐஸ்வர்யா நடித்த ‘சுழல்’ படத்திற்கு கைகொடுத்த அபிஷேக் பச்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அபுதாபியில் நடைபெற்று வரும் ஐ ஐ எஃப் ஏ விழாவில் அமேசான் ப்ரைம் வீடியோவின் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ எனும் தமிழ் க்ரைம் தொடரின் ஸ்னீக் பிக்கை பாலிவுட்டின் முன்னணி நடிகர் அபிசேக் பச்சன் வழங்கினார்.

இந்த விழாவில் முதன்முறையாக ‘சுழல்= தி வோர்டெக்ஸ்‘ எனும் தமிழ் க்ரைம் தொடர் முக்கிய இடத்தைப் பிடித்தது.

இவ்விழாவிற்கு வருகைத் தந்திருந்த அனைவரையும் இந்த தொடர் மற்றும், இதில் நடித்திருக்கும் நடிகர்கள், தங்களின் துடிப்பான நடிப்பால் கவனத்தை ஈர்த்தனர்.

இதன் மூலம் இந்த தொடரைப் பற்றிய உலகளாவிய கவனத்தையும் தூண்டியிருக்கிறார்கள்.

ஐ ஐ எஃப் ஏ ராக்ஸ் இரவில் நடைபெற்ற நிகழ்வில் இந்த சூழல்= தி வோர்டெக்ஸ் என்ற தொடரை பார்வையாளர்களுக்காக பாலிவுட் நடிகர் அபிசேக் பச்சன் வழங்கினார்.

இந்த நிகழ்விற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில் இந்த தொடரில் நடித்த நடிகர்களுடன், அபிசேக் பச்சன் மற்றும் அமேசான் ஒரிஜினல்ஸில் இந்திய தலைவர் அபர்ணா புரோஹித், தலைவர் கௌரவ் காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பார்வையாளர்களுடன் இவர்களும் ‘சுழல் தி வோர்டெக்ஸி’ன் ஸ்னீக் பிக்கை திரையிடுவதைக் காண ஆர்வமாக காத்திருந்தனர்.

பின்னர் தமிழில் உருவான புலனாய்வு நாடகமான ‘சுழல் தி வோர்டெக்ஸி’ன் ஸ்னீக் பிக் திரையிட்டப்பட்டவுடன் உற்சாகமாக கரவொலி எழுப்பி, தங்களின் மகிழ்ச்சியையும், வெற்றியையும் பகிர்ந்து கொண்டனர்.

ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஜப்பானிய மொழி, போலீஷ், போர்த்துகிசீயம், ஸ்பானிஷ், அரபு, துருக்கி உள்ளிட்ட முப்பதிற்கும் மேற்பட்ட மொழிகளில், ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ எனும் விசாரணை பாணியிலான தொடரின் பிரிமீயர் ஜுன் 17 ஆம் தேதியன்று உலகளவில் வெளியிடப்படுகிறது.

‘விக்ரம் வேதா’ எனும் வெற்றிப்படத்தை வழங்கிய இயக்குநர்கள் புஷ்கர்=காயத்ரி ஆகியோரின் படைப்பு சிந்தனை, இயக்குநர்கள் பிரம்மா மற்றும் எம். அனுசரண் ஆகியோரின் திறமையான இயக்கத்தில், உருவாகியிருக்கும் இந்த ‘சுழல்= தி வோர்டெக்ஸில்’ நடிகர்கள் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி மற்றும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Abhishek Bachchan presents Prime Videos Suzhal – The Vortex at IIFA Rocks

ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரூ ஆண்டவரூ.; 7 வருடத்திற்கு பிறகு கமலுக்கு லோகேஷ் கொடுத்த வெற்றி

ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரூ ஆண்டவரூ.; 7 வருடத்திற்கு பிறகு கமலுக்கு லோகேஷ் கொடுத்த வெற்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் ஏன்… இந்திய சினிமாவில் என்றும் கூட சொல்லலாம்… பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து எண்ணற்ற சாதனைகளை படைத்தவர் கமலஹாசன்.

பல துறைகளில் இவர் வித்தகர் என்பதால்தான் இவரை உலகநாயகன் என்று அன்போடு ரசிகர்கள் அழைக்கின்றனர்.

ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக கமல் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதுபோல கமல் நடித்து கடைசியாக வெற்றி பெற்ற படம் ‘பாபநாசம்’ தான்.

இது ரிலீசாகி 7 ஆண்டுகள் ஆகிவிட்டது.

இதன்பின்னர் கமல்ஹாசன் நடிப்பில் ‘தூங்காவனம், & விஸ்வரூபம் 2’ ஆகிய படங்கள் ரிலீசானாலும் இவை இரண்டும் படு தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில் கமல் தயாரித்து நடித்த ‘விக்ரம்’ படம் நேற்று ஜூன் 3ல் ரிலீசானது.

லோகேஷ் இயக்கிய இந்த படத்தில் பகத்பாசில், விஜய்சேதுபதி, நரேன், காளிதாஸ், சூர்யா ஆகியோர் நடித்திருந்தனர்.

ரசிகர்கள் & விமர்சகர்கள் இடையே சிறப்பான பாராட்டுகளை இப்படம் பெற்றுள்ளது.

கமல் படத்திற்கு முதன்முறையாக இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இதில் ஆக்ஷன் அப்பா மகன் சென்டிமென்ட், தாத்தா பேரன் சென்டிமென்ட் ஆகியவை கலந்து இருப்பதால் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்துள்ளது.

ஓரிரு நாட்களில் ரூ 100 கோடி வசூலை கடந்துவிடும் ‘விக்ரம்’ என எதிர்பார்க்கலாம்.

கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளார் அவரது தீவிர ரசிகர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

The Lord who started the game; Lokesh’s victory for Kamal after 7 years

ஆரம்பிக்கலாங்களா.? லோகேஷ் கனகராஜிடம் ‘கைதி’ புரொடியூசர் கேள்வி

ஆரம்பிக்கலாங்களா.? லோகேஷ் கனகராஜிடம் ‘கைதி’ புரொடியூசர் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றி கண்டவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

தற்போது கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கி அதனை நேற்று வெளியிட்டனர். இதில் பகத் பாசில், விஜய்சேதுபதி, சூர்யா, நரேன் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.

இந்த படமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

‘விக்ரம்’ படத்தில் ‘கைதி’ பட தொடர்பான சில காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

எனவே தான் ‘கைதி’ படத்தை பார்த்துவிட்டு ‘விக்ரம்’ படத்தை பார்க்க வாருங்கள் என ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளும் வைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.

இந்த செய்தியை நம் FILMISTREET தளத்தில் ஏற்கெனவே பார்த்தோம்.

மேலும் ரூ. 100 கோடி வசூலித்த ‘கைதி’ படத்தின் 2ம் பாகம் படத்திற்கு ஏற்கெனவே ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கார்த்தி நடித்த ‘கைதி’ படத்தை தயாரித்த எஸ்.ஆர்.பிரபு, ‛கைதி-2 படத்தை ஆரம்பிக்கலாமா?’ என பதிவிட்டு கேட்டுள்ளார்.

எனவே கைதி-2 படத்தை உடனே லோகேஷ் இயக்க வேண்டும் என கார்த்தி ரசிகர்கள் வேண்டுகோள் வைக்க தொடங்கிவிட்டனர்.

இதனிடையில் விஜய்யின் ‘தளபதி 67’ படத்தையும் கமலின் அடுத்த படத்தையும் லோகேஷ் இயக்கவுள்ளார் என்பதும் இங்கே நினைவில் கொள்வது நல்லது.

Let’s get started.? ‘Kaithi’ producer questions Lokesh Kanagaraj

‘அடடே சுந்தரா’ ஆஹா ஓஹோன்னு இருக்கும்.; நானி – நஸ்ரியா கியாரண்டி

‘அடடே சுந்தரா’ ஆஹா ஓஹோன்னு இருக்கும்.; நானி – நஸ்ரியா கியாரண்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கின் முன்னணி நடிகர் நானி கதையின் நாயகனாகவும், மலையாள நடிகை நஸ்ரியா கதையின் நாயகியாகவும் நடித்திருக்கும் ‘அடடே சுந்தரா’ திரைப்படத்தின் முனனோட்டம் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.‌

இதில் படத்தின் நாயகன் நானி, நாயகி நஸ்ரியா, இயக்குநரும், நடிகருமான அழகம்பெருமாள், நடிகை ரோகிணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நடிகர் நானி பேசுகையில்…

”அடடே சுந்தரா படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஷ்யாம் சிங்கார ராய் போன்ற ஆக்சன் படங்களில் நடித்துவிட்டு, ‘அடடே சுந்தரா’ போன்ற நகைச்சுவையும், காதலும் கலந்த திரைக்கதையில் நடிப்பது பொருத்தமான தேர்வு என நினைக்கிறேன்.

ரசிகர்களுக்கும் நிச்சயம் இது பிடிக்கும். படத்தின் கதை, தெலுங்கு, தமிழ், மலையாளம் என மொழி கடந்து அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. படத்தின் உணர்வுபூர்வமான திரைக்கதை, அனைத்துவித ரசிகர்களையும் கவரும். எங்களுடைய ஒட்டுமொத்த படக்குழுவினரும் கடின உழைப்பை அளித்திருக்கிறோம்.

‘அடடே சுந்தரா’ நல்லதொரு திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும். ஜூன் 10ஆம் தேதியன்று வெளியாகும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்ற ஆவலுடன் காத்திருக்கிறோம். ஜூன் மாத தொடக்கத்தில், பள்ளி, கல்லூரிகள் திறந்துவிடும் என்பதாலும், குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று காண வேண்டிய அற்புதமான காதலும், நகைச்சுவையும் கலந்து திரைப்படம்தான் அடடே சுந்தரா ” என்றார்.

படத்தின் நாயகி நஸ்ரியா பேசுகையில்..

‘ தமிழில் பேசி நீண்ட நாட்களாகிவிட்டது. அதனால் ஏதேனும் தவறு வந்து விடுமோ..! என்ற அச்சம் காரணமாக ஆங்கிலத்திலேயே பேசுகிறேன்.. இந்தப் படத்தில் நானி உடன் இணைந்து பணியாற்றியது மகிழ்வான அனுபவமாக இருந்தது.

காதல் கதைக்கு ஊக்கமும், ஆதரவும் அளித்து வரும் தமிழ் ரசிகர்கள் ‘அடடே சுந்தரா’ படத்திற்கும் ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பொழுதுபோக்கு அம்சங்களுடன் காதலும் நகைச்சுவையும் கலந்து உருவாகியிருக்கும் ‘அடடே சுந்தரா’ படத்திற்கு ஆதரவு தாருங்கள்.” என்றார்.

நடிகர் அழகம் பெருமாள் பேசுகையில்…

” எனக்கு இது முக்கியமான திரைப்படம். நான் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகும் முதல் திரைப்படம் இது. தமிழைத் தவிர வேறு மொழி படங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. ஏனெனில் ஒவ்வொரு மொழி திரைப்படங்களில் பணியாற்றும்போது ஒவ்வொரு வகையான கலாச்சாரத்தையும், வித்தியாசமான சிந்தனை கொண்ட படைப்பாளிகளையும் காணலாம். பழகலாம். அவர்களிடமிருந்து பல நுட்பமான விசயங்களை கற்றுக் கொள்ளலாம்.

வேறு மொழிப் படங்களில் நடிக்கும்போது கிடைக்கும் புத்துணர்ச்சி மிக மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. நிறைய தமிழ் படங்களில் நடித்தாலும், வேறு மொழி படங்களில் நடிக்கும் போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது.

அந்தவகையில் ‘அடடே சுந்தரா’ அற்புதமான அனுபவத்தை வழங்கிய திரைப்படம். படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா. இளம் திறமைசாலி. ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என திறமையான தொழில்நுட்ப குழுவினருடன், திறமைவாய்ந்த நடிகர் நானி, நஸ்ரியா, ரோகிணி, நதியா போன்றோருடன் நடித்தது மறக்க இயலாதது.

இந்தப்படத்தில் நானும், நதியாவும் ஜோடிகளாக நடித்திருக்கிறோம். ஆனால் என்னுடைய கல்லூரி காலகட்டங்களில் நதியா மீது எனக்கு கிரஷ் இருந்தது. தெலுங்கில் முக்கியமான குணச்சித்திர நடிகரான நரேஷ் நல்லதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

திறமையான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன், தயாரிப்பு நிறுவனமும் என்னைப் போன்ற கலைஞர்களுக்கு இருந்த சங்கடங்களை புரிந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். படப்பிடிப்பு அனுபவம் முழுவதும் நான் எதிர்பார்த்ததை விட நேர்த்தியாக அமைந்தது. இதற்காக உளமார மகிழ்ச்சியடைந்து நன்றி கூறுகிறேன்.” என்றார்.

நடிகை ரோகிணி பேசுகையில்...

” தொடர்ந்து நல்ல படங்களில் நடித்துக்கொண்டே ரசிகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ‘அடடே சுந்தரா’ எனக்கு மிகவும் ஸ்பெஷலான தனித்துவமான திரைப்படம். ஆக்ஷன் படங்களில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதுபோன்ற நேரத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், உற்சாகத்துடனும் சிரித்துக்கொண்டே கண்டு ரசிக்கக் கூடிய படமாக ‘அடடே சுந்தரா’ தயாராகியிருக்கிறது. நகைச்சுவையுடன் மட்டுமல்லாமல் மனதில் தங்கும் காதல் கதையும் இதில் இருக்கிறது.

இந்தப்படத்தில் நடிப்பதற்கு முன் நானும், நானியும் ஏராளமான திரைப்படங்களில் தாய் -மகன் வேடங்களில் நடித்திருக்கிறோம். எனக்கும், ரசிகர்களுக்கும் பிடித்த நடிகர் நானி. படப்பிடிப்பு தளத்தில் நானும், நானியும் பணியாற்றும்போது நிஜமாகவே தாயும் மகனையும் போலவே பழகுவோம். நடந்துகொள்வோம்.

இந்தப் படத்திலும் நானிக்கு தாயாக நடித்திருந்தாலும், அந்த கதாபாத்திரத்திற்கென தனித்தன்மை இருக்கிறது. அதை ரசிகர்களுக்கு திரையில் சொல்லும் விதம் அனைவருக்கும் பிடிக்கும். இந்த படத்தில் கதைதான் ஹீரோ என சொல்லலாம்.

இயக்குநர் விவேக் இந்தப் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தனித்தன்மையை முன்கூட்டியே தீர்மானித்து, அதனை அவருடைய கற்பனை கண்களில் கண்டு ரசித்து, அதை மட்டுமே திரையில் கொண்டுவந்திருக்கிறார். இது படத்திற்கு பின்னணி பேசும்போது உணர முடிந்தது. தொடர்ந்து வெற்றிப் படங்களில் நான் இடம்பெறுவதற்கு விவேக்கை போன்ற இயக்குநர்கள் தான் காரணம் என்பதையும் இங்கே நான் கூற விரும்புகிறேன்.

ஜூன் 10ஆம் தேதி ‘அடடே சுந்தரா’ வெளியான பிறகு, ரசிகர்கள் அனைவரும் எங்களையும், எங்களது கதாபாத்திரங்களையும் கொண்டாடுவார்கள். .
தொடர்ந்து எனக்கு நல்ல கதாபாத்திரங்களை வழங்கிவரும் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகினருக்கு நன்றி தெரிவிப்பதுடன், நான் இன்று நல்லதொரு நிலையில் திரையுலகில் பயணிக்கிறேன் என்றால், இதற்கு காரணமாக இருந்த அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

மைத்திரி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனத்தின் சார்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழிகளில் ஜூன் 10-ஆம் தேதியன்று ‘அடடே சுந்தரா’ வெளியாகிறது.

தெலுங்கு இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் நானி, நஸ்ரியா, நரேஷ், அழகம்பெருமாள், நதியா, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விவேக் சாஹர் இசையமைத்திருக்கிறார்.

நகைச்சுவைக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தயாராகியிருக்கும் ‘அடடே சுந்தரா’ படத்தின் தமிழ் பதிப்பின் முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது.

Adade Sundara will be awesome .; Nani – Nasria Guarantee

எட்டு வருடங்களில் மூன்றே படம் இயக்கி இந்தியளவில் பிரகாசிக்கும் பிரஷாந்த் நீல்

எட்டு வருடங்களில் மூன்றே படம் இயக்கி இந்தியளவில் பிரகாசிக்கும் பிரஷாந்த் நீல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்றைய தேதிக்கு இந்திய சினிமாவின் டாப் டென் இயக்குநர்களில் தவிர்க்க முடியாத பெயர் பிரஷாந்த் நீல்.

இந்த ஒரே காரணத்துக்காக இன்றைய அவரது 41வது பிறந்த நாளை சமூக வலைதளங்களில் மக்கள் வாழ்த்து மழைகளால் பொழிந்துகொண்டிருக்கின்றனர்.

1980 ஜூன் 4ம் தேதி பிறந்த பிரஷாந்த் நீல் இன்று எட்டிப் பிடித்திருக்கும் வெறுமனே மூன்றே படங்களில் நிகழ்ந்தது என்றால் நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும்.

அவரது முதல் படமான ‘உக்கிரம்’ வெளியான ஆண்டு 2014. அதுவே மாபெரும் ஹிட் அடித்த நிலையில்தான் அவரை இந்தியா முழுக்க பேச வைத்த ‘கேஜிஎஃப்’ படத்தை 2018ல் இயக்கினார்.

அடுத்து சுமார் 50 தினங்களுக்கு முன்பு வெளியாகி அகில உலகத்தையும் அதிர வைத்த ‘கேஜி எஃப்’ 2’வின் வெற்றியும் அது ஈட்டிய 1200 கோடி தாண்டிய வசூலையும் இன்னும் வியந்துகொண்டே இருக்கிறோம்.

அடுத்து அவரது இயக்கத்தில் தயாராகும் ‘சலார்’படத்துக்கும் விண்ணைத் தொடும் எதிர்பார்ப்பு உள்ளது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

பிரபாஸ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு நடிக்கும் இந்த படமும் பெரும் பொருட்செலவில் தயாராகிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் டீஸர் இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகவிருக்கிறது.

இவரது முதல் மூன்று படங்களையும் தாண்டிய சவாலான படமாக இப்படத்தை இயக்கி வருவதாக படக்குழுவினர் பெருமையுடன் தெரிவிக்கின்றனர்.

Prashant Neil who has directed three films in eight years is shining in India

More Articles
Follows