உங்களுக்குன்னா ரத்தம்.. அடுத்தவங்களுக்குன்னா தக்காளி சட்னியா தனுஷ்.? நீங்க ஏன் இதை செய்யல..?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’.

இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் (சசிகாந்த்) தயாரித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தை திரையரங்கில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர்.

இயக்குனர் கார்த்தி்க்கும் நடிகர் தனுஷூம் தியேட்டர் வெளியீட்டையே எதிர்பார்ப்பதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தனர்.

ஆனால் கொரோனா ஊரடங்கால் இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது. ஆனால் தயாரிப்பாளர் தன் முடிவில் உறுதியாக இருந்தார். முதலீடு செய்தவர் அவராச்சே..

அதன்படி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18-ம் தேதி ரிலீசாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை ஜூன் 1-ம் தேதி காலை 10 மணிக்கு யூடிப்பில் வெளியானது.

இந்த டிரைலரை வெளியிட்ட தனுஷ் தன் ட்விட்டரில்..

“சிறப்பான திரை அனுபவமாக இருக்க வேண்டியது நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

இருந்தாலும் ஜகமே தந்திரத்தையும், சுருளியையும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்’ என் ட்வீட் செய்து இருந்தார்.

இவ்வாறாக ஓடிடி தள ரிலீசில் தனக்கு விருப்பமில்லை. ஜகமே தந்திரம் படம் தியேட்டர்களில் கொண்டாடப்பட வேண்டிய படம் என்பதை மறைமுகமாக தந்திரமாக தெரிவித்து இருந்தார் தனுஷ்.

பொதுவாக தனுஷ் எப்போதும் ட்விட்டரில் ஆக்டிவ்வாக இருப்பவர். ஆனால் ‘ஜகமே தந்திரம்’ பட தகவல்களை பதிவிடுவதில் தனுஷ் ஆர்வம் காட்டவில்லை.

அதற்கு காரணம் தயாரிப்பாளரின் ஓடிடி முடிவுதான். தனுஷும் ஒரு தயாரிப்பாளர் தானே. அவர் அடுத்த தயாரிப்பாளரின் வலியை புரிந்து கொள்ளவில்லையே.

தற்போது கொரோனா ஊரடங்கு இல்லை என்றால் நிச்சயம் ‘ஜகமே தந்திரம்’ படத்தை தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்திருப்பார் தயாரிப்பாளர்.

படம் ரிலீசுக்கு ரெடியாகி பல மாதங்கள் ஆகிவிட்டதாலும் தயாரிப்பு செலவு வட்டி ஏறிவிட்டதாலும் வேறு வழியில்லாமல் நெட்பிளிக்ஸ் ஓடிடிக்கு படத்தை விற்றுள்ளார்.

ஆனால் ஆரம்பம் முதலே ‘ஜகமே தந்திரம்,’ தயாரிப்பாளரை தனுஷ் மறைமுகமாக சாடி வந்துள்ளார்.

எந்தவொரு தயாரிப்பாளரும் தன் படத்தின் லாபத்தை தான் பார்ப்பார்கள்.

தனுஷ் நினைத்திருந்தால் ‘ஜகமே தந்திரம்’ படத்தை நல்ல விலைக்கு வாங்கி தியேட்டர்கள் திறக்கும் வரை காத்திருந்து ரிலீஸ் செய்திருக்கலாமே.

தனக்காகவும் தன் ரசிகர்களுக்காக தனுஷ் இதை கூட செய்ய மாட்டாரா..?

தனக்கு வந்தா ரத்தம்.. அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா தனுஷ்..?

Actor Dhanush double standard on Jagame Thanthiram release

Overall Rating : Not available

Related News

இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை…
...Read More
பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ்…
...Read More
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட்…
...Read More

Latest Post