டபுள் ரோலில் நடித்து படம் தயாரித்த தனுஷ் பட வில்லன்.; வைரலாகும் டிரைலர்

டபுள் ரோலில் நடித்து படம் தயாரித்த தனுஷ் பட வில்லன்.; வைரலாகும் டிரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் ஜோஜு ஜார்ஜ்.

இவர் மலையாளத்தில் பிரபலமான நடிகராவார். இவர் நாயகனாக நடித்த படத்தை தான் ‘விசித்திரன்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தார் ஆர்.கே.சுரேஷ்.

தற்போது மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் “இரட்டா”.

ஜோஜு ஜார்ஜ்

இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் ஜோஜு ஜார்ஜ் இரட்டை சகோதரர்களான வினோத் மற்றும் பிரமோத் ஆக நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ரோஹித் எம்.ஜி.கிருஷ்ணன் இப்படத்தை இயக்கி உள்ளார்.

இப்படத்தில் தமிழ் – மலையாள நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார். ஜோஜு ஜார்ஜுக்கு சொந்தமான அப்பு பாத்து பப்பு புரொடக்ஷன்ஸ், மார்ட்டின் பிரகாட் பிலிம்ஸ் மற்றும் சிஜோ வடகன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இரட்டா

ஏற்கனவே மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்றுள்ள ஜோஜு ஜார்ஜ் தனது கேரியரில் இன்னொரு திருப்புமுனையாக அமையும் என்பதை ட்ரைலர் உறுதிப்படுத்துகிறது.

பல படங்களில் போலீஸ் வேடங்களில் நடித்திருக்கும் ஜோஜுவின் கேரியரில் இன்னொரு பவர்ஃபுல் போலீஸ் ரோலாக இருக்கும் என்பதை சந்தேகமே இல்லாமல் சொல்லலாம்.

‘இரட்டா’ படத்தில் ஜோஜு ஜார்ஜ், அஞ்சலி தவிர, ஸ்ரிந்தா, ஆர்யா சலீம், ஸ்ரீகாந்த் முரளி, சாபுமோன், அபிராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சமீர் தாஹிர், ஷைஜு காலித், கிரீஷ் கங்காதரன் ஆகியோருடன் ஒளிப்பதிவு செய்ய. அன்வர் அலியின் மற்றும் முஹாசின் பராரி பாடல் வரிகள் எழுத மலையாளத்தில் பல ஹிட் பாடல்களை கொடுத்த ஜேக்ஸ் பிஜோவின் இசை அமைக்கிறார்.

மனு ஆண்டனி படத்தின் எடிட்டர் ஆக உள்ளார். ஆர்ட் ஒர்க் திலீப் நாத், ஆடை வடிவமைப்பு சமீரா சனீஷ், ஒப்பனை ரோனெக்ஸ், சண்டை காட்சிகளை கே.ராஜசேகரின் இயக்கி உள்ளார்.

விரைவில் திரைக்கு வருகிறது இரட்டா.

இரட்டா

Joju George in dual role Iratta trailer goes viral

ஹாலிவுட்டில் படமெடுக்க ராஜமௌலியை அழைக்கும் ‘அவதார்’ டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்

ஹாலிவுட்டில் படமெடுக்க ராஜமௌலியை அழைக்கும் ‘அவதார்’ டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக சினிமா அரங்கில் ஆஸ்கருக்கு அடுத்தபடியாக கருதப்படும் விருது கோல்டன் குளோப் விருது.

அந்த கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சியில் ஆர்.ஆர்.ஆர். டைரக்டர் ராஜமவுலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

ஆர்.ஆர்.ஆர்

இந்த விருது கோல்டன் குளோப் பாடல் பிரிவில் சிறந்த பாடலாக ‘நாட்டு.. நாட்டு..’ பாடல் விருதை வென்றது.

இப்பாடலுக்கு இசையமைத்த எம்.எம். கீரவாணி நிகழ்ச்சியில் விருதை பெற்றுக்கொண்டார்.

ஹாலிவுட் சினிமாவின் பிரபல டைரக்டர் ‘அவதார்’ புகழ் ஜேம்ஸ் கேமரூனை அப்போது ராஜமௌலியை சந்தித்தார்.

இந்த சந்திப்பில்… “நீங்கள் ஹாலிவுட்டில் படம் எடுக்க விரும்பினால் சொல்லுங்கள்.. நாம் அது குறித்து பேசுவோம் என ராஜமௌலியிடம் ஜேம்ஸ் கேமரூன் கூறியபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜேம்ஸ் கேமரூன்

JamesCameron invite Rajamouli to direct Hollywood movies

#Rajamouli #JamesCameron

@JimCameron @ssrajamouli @RRRMovie #RRRMovie #GoldenGlobes2023

OFFICIAL ரஜினியை தொடர்ந்து விஷாலுடன் இணையும் பான் இந்தியா நடிகர்

OFFICIAL ரஜினியை தொடர்ந்து விஷாலுடன் இணையும் பான் இந்தியா நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் சமீபத்தில் இணைந்தார்.

இது பற்றிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

இவர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து தமிழக ரசிகர்களிடையே புகழ்பெற்றவர்.

இந்த நிலையில் தற்போது விஷால் நடித்து வரும் ‘மார்க் ஆண்டனி’ என்ற படத்திலும் இணைந்திருக்கிறார் என சற்றுமுன் அறிவித்தனர்.

இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க வினோத்குமார் தயாரித்து வருகிறார்.

நாயகியாக ரித்து வருமா நடிக்க வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்து வருகிறார்.

ஜி வி பிரகாஷ் இசை அமைப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

சுனில்

Sunil join Vishal starring ‘Mark Antony’

‘காந்தாரா 2’ பட அப்டேட் தந்த புரொடியூசர்.; லொக்கேசன் ரிசச் பணியில் ரிஷப் ஷெட்டி

‘காந்தாரா 2’ பட அப்டேட் தந்த புரொடியூசர்.; லொக்கேசன் ரிசச் பணியில் ரிஷப் ஷெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி அவரே நாயகனாக நடித்த படம் ‘காந்தாரா’.

இப்படத்தை தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருந்தார்.

கன்னடத்தில் உருவான இந்த படம் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு கடந்தாண்டு 2022-ல் வெளியாகி ரூ.410 கோடியை அள்ளியது.

இந்த நிலையில் ‘காந்தாரா’ 2ஆம் பாகம் உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விஜய் கிரகந்தூர்

“காந்தாரா முதல் பாகத்தை விட கூடுதலான செலவில் இரண்டாம் பாகத்தை தயாரிக்க உள்ளோம்.

‘காந்தாரா 2’ பட லோகேசன் பணிகளுக்காக கர்நாடகா கடற்கரைப் பகுதிக்கு டைரக்டர் ரிஷப் சென்றுள்ளார்.

மழைக் காலத்தில் இதன் சூட்டிங் நடைபெற உள்ளது. 2024 கோடைக் காலத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

காந்தாரா 2

‘kantara 2’ film update given by the producer Vijay Kirgandur

கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ அடுத்த ஷெட்யூல் அப்டேட்…

கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ அடுத்த ஷெட்யூல் அப்டேட்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் படம் ‘இந்தியன் 2’.

இந்தப் படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த் மற்றும் பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் மிகப் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு, அடுத்த கட்ட படப்பிடிப்பு திருப்பதியில் இன்று (ஜனவரி 21) தொடங்கியது.

இந்த ஷூட்டிங் ஷெட்யூலில் கமல்ஹாசனுடன் நடிகர் சித்தார்த் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் முக்கியப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், வரும் நாட்களில் பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு மட்டும் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Kamal starrer ‘Indian 2’ next schedule update

நடிகர் ஆர்.கே.சுரேஷ் – மது தம்பதியருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது..!

நடிகர் ஆர்.கே.சுரேஷ் – மது தம்பதியருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், வினியோகஸ்தராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஆர்.கே.சுரேஷ்.

இயக்குனர் பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

நடிகர் ஆர்.கே.சுரேஷ் அவர்கள் சினிமா பைனான்சியர் மது என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

ஆர்.கே.சுரேஷ் – மது தம்பதியருக்கு 2021 ஆம் ஆண்டு ஸ்ரேயா என்ற ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஆர்.கே.சுரேஷின் மனைவி மது இரண்டாம் முறை கர்ப்பமாகி வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆர்.கே.சுரேஷ் மற்றும் மது தம்பதிக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஆர்.கே.சுரேஷ் மற்றும் அவரது மனைவிக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஆர்.கே.சுரேஷ் - மது

actor rk.suresh wife madhu second child was born

More Articles
Follows